சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  Khan11

உலக அழிவின் சாத்தியக்கூறுகள்

2 posters

Go down

உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  Empty உலக அழிவின் சாத்தியக்கூறுகள்

Post by ahmad78 Tue 14 Feb 2012 - 15:30











உலக அழிவின் சாத்தியக்கூறுகள்











உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  DOOMS_DAY



















இன்று உலகம் விஞ்ஞானம், தொழிநுட்பம், மருத்துவம், கலை, இலக்கியம் என பல்துறைகளிலும் அபரிமித வேகத்தில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் மனித அறிவு மேற்கொள்ளும்
ஆழமான ஆய்வுகளே இதற்கு வித்திட்டுள்ளது எனலாம். எனினும் இத்துனை வேகமான முன்னேற்றம் அதன் ஆயுளின் தொடர்ச்சியான குறைவைக்
காட்டுகின்றது. இல்லாமையிலிருந்து உருவானவொன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் அது இல்லாமலேயே போவதுதான் இயற்கையின் நியதி. இல்லாமையிலிருந்து தோன்றிய மனிதன் இறுதியில் மரணித்து எவ்வாறு இவ்வுலகில் பூச்சியமாகிப்
போகின்றானோ அதுபோன்றுதான் பிரபஞ்சமும். அது எவ்வாறு இல்லாமையிலிருந்து தோன்றியதோ அவ்வாறே அது அழிவதும் நிச்சயமானது.





பெரும்பாலானோர் உலகம் அழியக் கூடியதென நம்பினாலும் மற்றும் சிலர் இதனை நம்புவதில்லை. இக்கொள்கை அவர்களது இவ்வுலக வாழ்வின் போக்கையே மாற்றிவிடுகின்றது. இது முற்றிலும் இஸ்லாமிய அகீதாவுக்கு முரண்பட்டுப்போவதைக் காணலம். முஸ்லிம்கள் கூட
உலக அழிவை நம்பினாலும் அவர்களது நடத்தைக் கோலங்கள் அதனைப் பிரதிபலிப்பதாக இல்லை. இஸ்லாமிய மார்க்கமானது இப் பிரபஞ்சம்
ஒரு நாள் அழிக்கப்பட்டுவிடும் என்று ஆணித்தரமாக முழங்கிக்க்கொண்டிருக்கிறன்து.
இஸ்லாம் மார்க்கத்தின் இக் கூற்று அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகிறது. நடைமுறை வாழ்வில் மனிதன் எதிர்கொள்ளும்
பல சவால்கள் இவ்வுலக அழிவை நிதர்சனப்படுத்துகின்றன. வளி மாசடைதல், ஓஷோன் படையில் ஓட்டை, புவி வெப்பமடைதல், நச்சு
வாயுக்களின் தாக்கம், மண் சரிவு, வெள்ள அபாயம், விண்கற்களால் பாதிப்பு... என இவ்வாறு மனிதன் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சமகால இச்சவால்கள் எவ்வாறு இறைதேமான அல்குர்ஆனின் கூற்றை உண்மைப்படுத்துகின்றன என்று நாம் பார்ப்போம்.





புவி வெப்பமடைதல்




உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  Global_Warming




இன்று விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ள பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் புவியின் வெப்பம் அதிகரித்தலாகும். இதுபுவி வெப்பமடைதல் - Globle Worming என்று அழைக்கப்படுகிறது. புவிவெப்பமடைதலால் எதிர் காலத்தில் புவியின் நிலைபற்றியும், புவியில் உயிர் வாழ்க்கை பற்றியும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். இதன் முடிவுகளை அவர்கள் பின்வருமாறு வெளியிட்டுள்ளனர்;. “மனிதசெயற்பாடுகளினால் வெளியிடப்படும் சில வாயுக்கள் காரணமாக ஓசோன் படையில் ஏற்படும் துளை காரணமாக புவியின் வெப்பநிலை
அதிகரிக்கிறது. பச்சைவிட்டு வாயுக்களின் (Green house gas) வெளியேற்றம் புவிவெப்பமடைதலில் பங்களிப்புச் செய்கிறது. பச்சை
வீட்டு விளைவை காபனீரொட்சைட்டு (Co2)> மெதேன் (CH4)> நைதரொட்சைட்டு (NO2) என்ற வாயுக்களே நிர்ணயிக்கின்றன.





இவ்வெப்ப அதிகரிப்பானது 2020ஆம் ஆண்டில் 1.50C ஆக உயரும். “மேலும் காலநிலை பற்றிய ஆய்வொன்றை மெற்கொண்டஅட்லெடிக் கவுன்சில்என்ற அமைப்பின் 250 விஞ்ஞானிகள் சுமார் 4வருடங்கள் தீவிரமாக ஆராய்ந்ததன் பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையை நாம் இங்கு அவதானிப்பது பொருத்தமானதாகும். இவ் அறிக்கையினது சுருக்கம் வருமாறு. “புவியின் ஏனைய பகுதிகளை விட வடதுருவம் இரு மடங்கு அதிகமாக வெப்பமடைகிறது. இதனால் 20% ஆன பனிக்கட்டிகள் உருகிவிட்டன. 2100ஆம் ஆண்டளவில் அங்கு வாழும் துருவக்கரடிகள், கடல்சீல்கள், பென்குயின் பறவைகள் போன்ற உயிரினங்கள் முற்றாக
அழிந்து விடும். அது மட்டுமின்றி துருவப்பகுதியின் பனிக்கட்டிகள் உருகி மத்திய பகுதிகளை நோக்கி வடிவதனால் இப்பகுதியிலுள்ள கடல் நீரின் மட்டம் அதிகரித்து புவியின் பெரும் பகுதி கடலினால் காவு கொள்ளப்படும்.” என்கின்றனர். இதனைத்தான் அல்குர்ஆன் சூசகமாக இவ்வாறு குறிப்பிடுகின்றது.





நிச்சயமாக பூமியை அதன் ஓரங்களிலிருந்து (படிப்படியாக) நாம் குறைந்து வருவதை அவர்கள்
காணவில்லையா?” (அல்குர்ஆன்)




சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தின் காரணமாக புவி வெப்பமடைந்து எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் புவி அழியப்போகின்றது என்ற பீதி அண்மையில்
உலகெங்கும் ஒலித்ததையும் அவதானிக்க முடிந்தது. புவி சிதைந்து அழிவதனை அண்மையில் வெளியான 2012, 2020, Tsunami, The Day After Tommorow என்ற திரைப்படங்கள் மிகத்
தத்ரூபமாகச் சித்தரிக்கின்றன. இந்நிகழ்வுகள் யாவும் புவியின் அழிவு நிச்சயம் என்பதனையே உணர்த்தி நிற்கின்றன.





ஓஷோன் படை தேய்வடைதல்.




புவியின் அழிவிற்கான மற்றுமோர் சாத்தியக் கூறுதான் ஓஷோன் படையின் தேய்வு. மனிதன் புரியும் பல்வேறு காரணிகளால் இன்று ஓஷோன்
படை தேய்வடைந்து வருகின்றது. இதன் காரணமாக சூரியனிலிருந்து வெளியேறும் நச்சுக்கதிர்களான கலியூதாக் கதிர்களின் தாக்கத்தினால் தாவரங்கள் அழிந்து அதனால் புவியில் உயிர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். மேலும் தோல் புற்றுநோய், தோலில் கரும்புள்ளிகள் தோன்றுதல், தோல்
இறந்து சுருங்குதல், கண்ணில் வெண்மை படருதல், பார்வை பாதிப்படைதல், சுவாசநோய்கள் ஏற்படல் என இதுபோன்று பல்வேறு நோய்களினால் உயிர் ஜீவிகள் பாதிக்கப்பட்டு அவை மறிக்கநேரிடும்.





சூழல் மாசடைதல்




உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  End-of-the-world


















சூழல் மாசடைதலும் பூமியின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யும் மற்றுமொரு காரணி என இன்றைய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். இதில் அதிகளவு தாக்கம் செலுத்துவது நவீன இலத்திரனியல் சாதனங்கள் என்றால் ஆச்சரியப் படுவீர்கள். இன்று அதிகளவு
பயன்பாட்டில் உள்ள கணிணி, கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி என்பன அதிகமதிகம் உற்பத்திசெய்யப்பட்டு நுகரப்படும் பொருட்களாகும். இச் சாதனங்களில் பல இரசாயன மூலங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்த முடியாதுபோகும் சந்தர்ப்பத்தில் நாம்
எமது சுற்றுப்புறச் சூழலுக்கு இவற்றை விட்டு விடுகின்றோம். காலப்போக்கில் இச்சாதனங்களிலுள்ள இரசாயன மூலங்கள் சூழலுக்கும் மனிதனுக்கும்
பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. இவ்வாறு குப்பையாக்கப்படும் இலத்திரனியல்
கழிவுகள் e-waste இன அழைக்கப்படுகின்றன. இச்சாதனங்களில் உள்ள இரசாயனக் கலவைகள்,
பார உலோகங்கள் சூழலுடன் சேர்ந்து மண், நீர் என்பவற்றை பாதிப்படையச் செய்து தாவர வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் அவற்றை உணவாகக் கொள்ளும் உயிரினங்கள் பல
நோய்களுக்கு ஆளாகி இறக்க நேரிடும்.





உலகளவில் வருடாந்தம் 20 – 50 மெட்ரிக்தொன் இலத்திரணியல் கழிவுகள் e-waste சூழலுக்கு விடப்படுகின்றன. அமெரிக்காவில் மாத்திரம் வருடாந்தம் 12 - 20 மில்லியன் கணிணிகளும் ஜெர்மனியில் 35
இலட்சம் தொலைக்காட்சிகளும் வருடாந்தம் பழுதடைந்து கழிவாக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் தற்போது அதிகமாக கையடக்கத் தொலைபேசிகளே இலத்திரணியல் கழிவுகளாக சூழலில் சேர்க்கப்படுகின்றன எனக் கணிக்கப்பட்டுள்ளது.





இன்று ஒரு கணிணியை உற்பத்தி செய்கையில் 90Kg கழிவுப்பொருட்கள் உண்டாவதாகவும் 33,000 லீற்றர் நீர் மாசடைவதாகவும் அதிகமானளவு வளி
மாசடைவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஓர் கணிணியே இந்த அளவு சூழலை மாசடையச் செய்யுமெனில் வருடாந்தம் கழிவாக்கப்படும் தொன்கணக்கான கணிணிகளால் ஏற்படும் பாதிப்பைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இவற்றில் உள்ள Cadmium Arsenic Astronium> ஈயம், தகரம் என்பனவே
கழிவுகளாக மாறுகின்றன. இக்கழிவுகள் பூமியை துரிதகதியில் அழிவுக்குள்ளாக்குவதாக
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.





நீர் மாசடைதல்





உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  8503-org-gift-for-tomorrow-milevay


















உயிர் வாழ்க்கைக்கு நீர் மிக மிக அத்தியவசியமானதொன்றாகும். உலகில் 79% நீரால் அமைந்திருப்பது இதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. அந்த நீர் இன்று மனிதனால் மாசுபடுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான
தொன் கழிவுகள் கடலிலும் இதர நீர்ப் பரப்புகளிலும் கொட்டப்பட்டு வருகின்றன. கழிவு நீர்களும் குப்பை கூழங்களும் தொழிட்சாலைகளின் உற்பத்தியில்
கழிவான பொருட்களும் பலவிதமான அமிலங்கள் சேர்ந்த இரசாயனக் கழிவு நீர்களும் நீர் நிலைகளில் விடப்பட்டு மாசடையச் செய்யப்படுகின்றன. மேலும் கடலில் செல்கின்ற ஆயிரக்கணக்கான கப்பல்களிலிருந்து விடப்படுகின்ற அழுக்கு எண்ணைகள், ஏவுகனைப் பரிசோதனைகள் என்பவற்றாலும் நீர் மாசடைகின்றது. இவ்வாறு கடலிலும் கரையிலும் நீர் நிலைகளிலும் சேர்க்கப்படுகின்ற கழிவுகளின் விசத்தன்மையால் அவற்றில் வாழும் உயிரினங்களும்
தாவரங்களும் அழிந்து விடுகின்றன. இந்நீரைப் பயன்படுத்தும் மனிதனும் இதனால் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றான்.






விண் கழிவுகள்




புவியில் தான் மனிதன் குப்பைகளை நிரப்பியுள்ளான் என்றால் இல்லை, விண்ணிலும் மனிதன் குப்பைகளைப் பெருக்கி வருகிறான். இது புவியின் இருப்புக்கு இன்னுமொரு பாரிய சவாலாகும். புவியைச் சூழ விண்ணில் கொட்டப்பட்டிருக்கும் இக் கழிவுகள் space debris என
அழைக்கப்படுகின்றன. விண்வெளி ஆராய்ச்சிக்காக ரொக்கெட்களையும், செய்மதிகளையும் விண்ணுக்கு ஏவவதில் இன்று நாடுகளுக்கிடையே பலத்த போட்டி நிகழ்ந்து வருகின்றது. இச்சாதனங்கள் விண்ணில் சேதமடையும் போது அங்கேயே அவை கைவிடப்பட்டு கழிவாக்கப்படுகின்றன. சுமார் 4000 இற்கும் அதிகமான விண்வெளி
வாகனங்கள் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. நாஸா நிறுவனத்தின் புள்ளிவிபரப்படி இதுவரை விண்ணில் புவியைச் சூழ 7 - 10 சென்றிமீற்றர் அகலமான 1300 குப்பைகள் space debris உள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புவியின் இருப்புக்கு பாரிய அச்சுருத்தலாகும்.





விண்கற்கள்




உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  ImagesCA3XTS3L
















புவியின் இருப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இன்னுமொரு காரணிதான் விண்கற்களாகும். பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் பாரியதொரு விண்கல்
பூமியில் வீழ்ந்ததனாலேயே உலகில் வாழ்ந்த டைனோஸர்கள் அழிந்ததாகக் கருதப்படுகின்றது. விண்கற்கள் பூமியுடன் மோதுவதுதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளதாக விண்ணியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2019ஆம் ஆண்டில் ஒரு
விண்கல் புவியுடன் மோதும் அபாயம் உள்ளதென நாஸா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 1.24 மைல் நீளமான பாரிய விண்கல் ஒன்று புவியின் சுற்றுப் பாதையை நோக்கி வந்துகொண்டிருப்பதாக இவர்கள் கூறுகின்றார்கள். இக்கல் 2002NT7 எனப் பெயர்டப்பட்டுள்ளது. இது கடலில் வீழ்ந்தால் பல கிலோமீற்றர்களுக்கப்பால் அலைகள் உயர்ந்து பல நாடுகள் முற்றாக மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், நிலத்தில் வீழ்ந்தால் பல வருடங்களுக்கு பூமியானது தூசு துகள்களால் மூடப்பட்டு சூரிய ஒளி மறைக்கப்பட்டு பூமி இருளுக்குள் மூழ்கி தாவர வளர்ச்சி பாதிப்படைந்து அதனால் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். புவியோடுகளும் சிதைந்து புவியும் அழியும் என விஞ்ஞானிகள்
எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.





சூரிய எரிசக்தி தீர்ந்துபொதல்




புவியின் அழிவை உறுதிப்படுத்தும் மற்றுமொரு சாத்தியப்பாட்டை அவதானிப்போம்.
சூரிய மண்டலத்தின் சீரான
இயக்கத்திற்குப் பிரதான காரணம் சூரியனின் சீரான இயக்கமாகும். சூரியனின் இயக்கச் சக்திக்குக் காரணம் அதிலுள்ள ஐதரசன் (Hydrgen) வாயுவும் இன்னும் சில துணைக் காரணிகளுமாகும். சூரியன் தனது சக்தியை இழந்தால், புவியும் ஏனைய கோள்களும் சூரியனின் ஈர்ப்புச் சக்தியிலிருந்து விடுபட்டு தமது பாதைகளிலிருந்து விலகி ஒன்றோடு ஒன்று மோதி சின்னாபின்னமாகி விடும். சூரியன் அழிந்துவிடும் என்பது யூகமான கூற்றல்ல. அதனை ஆராய்ச்சி செய்துள்ள தற்போதைய விஞ்ஞானிகள், சூரியனில் கருப்புப் புள்ளிகள் காணப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். இது சூரியன் தனது சக்தியை இழந்து வருவதனைக் காட்டுகிறது.





சூரியனின் எரிபொருளான ஹைட்ரஜன் தீர்ந்து வருவதனாலே இந்தக் கரும் புள்ளிகள் தோன்றியுள்ளன. இன்னும் பல வருடங்களில் சூரியன் முழுவதும்
கரும்புள்ளிகள் தோன்றி இருண்டு அது ஒரு கருந்துளையாக (Black hole) செயற்பட ஆரம்பிக்கும். கருந்துளைகளுக்கு தமக்கு அண்மையிலுள்ள பிற பொருட்களை
உளளீர்த்துக்கொள்ளும் சக்தி காணப்படுகின்றது. எனவே சூரியன் ஒளி இழந்து கருந்துளையாக மாறினால் அதன் அருகிலுள்ள இதர கோள்கள், சந்திரன்,
ஒளி, ஒலி போன்ற அனைத்து விண்பொருட்களையும் தன்னுள் ஈர்த்து ஒன்றோடு ஒன்றாகி விடும். இச்செயற்பாட்டினையே பின்வரும் குர்ஆனிய வசனம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. “சூரியன் (ஒளியிழந்து) சுருட்டப்படும் போது” (அல்குர்ஆன் 81:1) “சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்படும் (அல்குர்ஆன் 75:9) இவ்வாறு விண்ணில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒளியழந்து கருந்துளையாகிவிடும். அல்லாஹ் கூறுகின்றான். “நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது” (81:2)





உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  Black-hole-galaxy
























இவ்வாறு புவியின் இருப்பு அபாயகரமான பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. நாம் இதுவரை ஆராய்ந்தவையல்லாத இன்னும் எத்தனையோ
ஆபத்துக்கள் இந்த பூவுலகின் அழிவிற்குக் காரணமாயுள்ளன. இதுபோன்ற பல காரணிகளை முன்வைத்து இப்புவி நிச்சயமாக அழிந்துவிடும் என்பதை விஞ்ஞானிகள் சந்தேகமின்றி எடுத்துக்கூறுகின்றனர். அது மட்டுமன்றி மனித
வாழ்வுக்கு ஏனைய கோள்கள், சந்திரன் என்பன பொருந்துமா என ஆராய்ந்து அங்கு மக்களை குடியமர்த்தும் முயற்சிகளிலும் விஞ்ஞானிகள்
களமிறங்கியுள்ளனர். எனவே உலகம் ஏன் பிரபஞ்சமே அழியும் என்ற அல்குர்ஆனின் கூற்று மிகமிக நிதர்சனம் என்பது யாவரும் அறிந்த உண்மை. இதுவே அல்குர்ஆன் ஓர் இறை வேதம்
என்று கூற சிறந்த சான்றுமாகும்.





அப்படியெனில் புவியும் அதிலுள்ள உயிரினங்களும் அழிந்ததன்
பின்னர் இப்பிரபஞ்சமே சூனியமாகி
இல்லாமல் சென்று விடுமா? அதேபோன்று படைப்புக்களிலேயே மிக உயர்ந்த படைப்பாகிய மனிதனுடைய வாழ்வு முகவரியற்று அர்த்தமற்றதாகி விடுமா? சாதாரண புழு பூச்சிகள் போன்று அறிவு ஜீவியான
மனிதனும் மரித்ததன் பின்னர் மண்ணோடு மண்ணாகிச் சென்றுவிடுவானா? உண்மையிலே இது நியாயம்தானா?” என்று இதுபோன்ற பல கேள்விகள் எம்முள்ளத்தில் எழுவது இயல்பானதே! எனவே மனிதனது வாழ்க்கை குறித்து ஆழமாகச் சிந்திக்கும் ஒருவர் நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை போலியானது அழிந்துபோகக் கூடியது என்று சிந்திக்கும் அதேவேளை அர்த்தமுள்ள வாழ்க்கையொன்று இதற்குப் பின்னால் இருக்கவேண்டும் என்ற திடமான முடிவுக்கு வருவார். அதுவே
இஸ்லாம் கூறும் மறுமையின் நிரந்தரமான வாழ்வாகும். இவ்வுலகம் அழிவதும் மறுமை நிதர்சனம் என்றும் 14 நூற்றாண்டுகளாகக் கூறி வரும் அல்குர்ஆன் இறைவேதம் என்பது உண்மையிலும் உண்மை என்பதுதான் நிதர்சனம்.






நன்றி:naharvu.blogs



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலக அழிவின் சாத்தியக்கூறுகள்  Empty Re: உலக அழிவின் சாத்தியக்கூறுகள்

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 15:40

##* :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum