சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Khan11

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

5 posters

Go down

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Empty திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

Post by சிபான் Wed 22 Feb 2012 - 9:34

தேன் பற்றி திருமறை வசனங்கள்.

அருள்மறைக் குர் ஆனில் அல்லாஹ், தேனீக்களைச் சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சி எனக் குறிப்பிடுகிறான். அத்தோடு நாம் அதனை அல்லாஹ்வின் அத்தாட்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறான். அருள்மறை குர் ஆனின் 16-வது அத்தியாயத்தில்,

உம் இறைவன் தேனீக்கு, அதன் உள்ளுணர்வை அளித்தான். நீ மலைகளிலும்,மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்(என்றும்)பின்,நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி, உன் இறைவன் (காட்டிக்)தரும் எளிதான வழிகளில்(உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல் (என்றும்உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்) அதன் வயிற்றிலிருந்து பலவிதநிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது, அதில் மனிதர்களுக்கு(ப்பிணீ தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. நிச்சியமாக, இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(திருக்குர் ஆன்-16:68,69)

என்று தேனீக்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தேனீக்கள் நமக்காகத் தேனை உருவாக்குகின்றன என்பதும், அந்தத் தேனை உருவாக்குவது எப்படி என்றும் வல்ல அல்லாஹ் தேனீக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றான் என்றும், மேற்படி வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான்“நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (69) “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன்இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவிதநிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணிதீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர்அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் (16:68)

மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Z
தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் சுத்தமான தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், எந்த வியாதியும் நமக்கு வராது.

புண்களின் வலியைக் குணமாக்கும் தேன்.

புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைந்து புதிய ஆராக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.

புண் குணமாகியதும் விரைவில் ஆராக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன. இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும்.

எவ்வாறு குணமாக்குகிறது

புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
1. தேனில் உள்ள கூடியளவு சீனியின் அதிக செறிவும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.
2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid) உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன .
கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.
3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.

புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை

புண் மேல் இடும் தேனின் அளவு உலர்ந்து போகாத அளவிற்கு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான கருத்தாகும்.

தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.

நெருப்புச் சுட்ட புண்கள்
நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்டும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.

வாய்ப் புண்கள்
வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியுசீலந்தில் வளரும் மனுக்கா (Manuka plant) என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.

தேனின் சிறப்பு அம்சங்கள் என்ன?
சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.
மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. .
தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் (Fructose) வகையைச் சார்ந்தது. இதனால் நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.

தேனின் போஷனை
ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது.
மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.
கொழுப்புச்சத்து, கொலஸடரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும் ((fructose 38.5%). குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.

பக்கவிளைவுகள்
தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படாலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.
ஆதாரமற்ற நம்பிக்கை
“தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலியுமாமே” என கேட்டால் அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான
பூர்வமாகவும், தர்க்க ரீதியாகும் சிந்தித்தால் இதில் எந்தவித உண்மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Images?q=tbn:ANd9GcT-Py6hopzq2-_CfVC8JoWYUK9U7bf2g4FmHn-DMVImWsBa65g&t=1&h=157&w=237&usg=__WLU4wg6xRK9pddMvozSZn-Bh0R0=
தேனின் பல்வேறு மருத்துவ குணங்கள்

01 உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.
02 தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

03 தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

04 தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

05 இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

06 தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

07 உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.


08 தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

09 மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

10 கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11 வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

12 தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

13 அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

14 அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15 முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

16 தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

17 ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

18 அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

19 நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

20 என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

21 சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

22 நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
23 ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்ஷா அல்லாஹ், நிச்சயம் குணம் காண்பார்கள்.

24 மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது


25 படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

26 ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.


28 நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.
29 சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை,

அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள்,

இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள்,

இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி,

தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல்,

மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு,

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள்,

ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

30 ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

31 இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

32 காதில் ஞொய் என்று சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதா? மருந்து கடையில் கடுகு எண்ணெய் விற்கிறார்கள். இதைஒரு பாட்டில் வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை, ஒரு கரண்டியில் எடுத்துக் கொண்டு சூடாக்குங்கள். இலேசான சூடுபோதும். இரைச்சல் கேட்கும் காதில் இரண்டு சொட்டு விடுங்கள். சப்தம் வருவது நின்றுவிடும்.

33 குழந்தை அடிக்கடி பால் கக்குகிறதே, இது நோயா? இல்லை. வயிற்றுப் பொருமலினால் குழந்தை பால் கக்குகிறது. குழந்தைக்கு இதனால் கெடுதல் இல்லை. குழந்தைக்குக் கொடுக்கும் ஆகாரத்தைத் திரவ ரூபத்தில் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சம் கெட்டியாகக் கூழ் போல் கொடுங்கள்; பால் கக்காது.

34 குழந்தை இல்லாத பெண்கள், தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்கும். தேன் ஓர் அற்புதமான மருந்து, பெண்களிடத்திலுள்ள மலட்டுத்தனத்தைத் தேன் போக்கி விடுகிறது.

35 தோல் தோய்ந்து போய் சீக்கிரம் வயதான தோற்றம் வந்து விட்டது என்ற கவலை உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். அதற்கான அட்டகாசமான நிவாரணம் உள்ளது.

இரண்டு முட்டைகளை உடைத்து அடித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் பால், கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் சிறிய குளியல் சவற்கார துண்டுகளை போடவும்.

ஷாம்பு மாதிரி நுரை வரும். இந்த எண்ணெயை உடம்பு முழுவதும் தேய்த்து அலசுங்கள். வாரம் இருமுறை செய்தாலே போதுமானது. தோல் சுருக்கம் ஓடிப்போவதுடன் தோலுக்குத் தேவையான புரத சத்துக்களும் கிடைக்கும்.

மேலும், சவற்கார உடலை சுத்தமாக்கும், எண்ணெய்கள் தோலை இறுக வைக்கும். மேனி மிளிரும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இதன்படி செய்தாலே போதுமானது உங்கள் நிறத்தில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் உணர முடியும்.

அல்லாஹ் வழங்கிய மாபெரும் இனிப்பான அருட்கொடை தேன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Empty Re: திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

Post by ahmad78 Wed 22 Feb 2012 - 13:20

தகவல் அறியத்தந்தமைக்கு :”@:


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Empty Re: திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

Post by அப்துல்லாஹ் Wed 22 Feb 2012 - 14:15

தேன் அதுவே இயல்பில் ஒரு மருந்து தானே... சிறிய பிராயத்தில் நாடி பிடித்து வைத்தியம் செய்யும் வைத்தியர்கள் காய்ச்சலுக்கு கொஞ்சம் செந்தூரப் பொடியும் தேனும் தான் மருந்தாகத் தருவர் அதை உட்கொண்டு காய்ச்சலில் இருந்து விடுபட்டிருக்கிறேன். எந்த பக்க விளைவும் இல்லாத அந்த அருமருந்துகளை கொண்டு வாழ்ந்த அற்புதமான பால்ய கால நினைவுகள் வந்தது....
தேனின் சிறப்பு பற்றிய தங்களின் விரிவான் கட்டுரைப் பகிர்வுக்கு மிக்க நன்றி உறவே...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Empty Re: திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

Post by jasmin Wed 22 Feb 2012 - 15:09

தேனைப்பற்றி இவ்வளவு தெளிவான விஷயங்களை தேடிப் பிடித்து தந்த சகோதரருக்கு நன்றி அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைத்தன
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Empty Re: திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

Post by சிபான் Wed 22 Feb 2012 - 20:40

jasmin wrote:தேனைப்பற்றி இவ்வளவு தெளிவான விஷயங்களை தேடிப் பிடித்து தந்த சகோதரருக்கு நன்றி அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைத்தன
:];: :];: :];:
சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Empty Re: திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

Post by mufees Thu 23 Feb 2012 - 21:21

தகவல் அறியத்தந்தமைக்கு :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள் Empty Re: திருமறை கூறும் தேனின் மருத்துவக் குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum