சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் Khan11

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள்

2 posters

Go down

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் Empty உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள்

Post by mufees Fri 9 Mar 2012 - 11:50

இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே ஆபத்தாக விளைகின்றதாம்.

கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு பயன்படுத்தப்படும் நகப்பூச்சுகள் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே: இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம்.

அதில் சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், பாரோபிளின், கிளைசால் போன்றவை ஆபத்தானவை என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயனங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயனங்கள் மிகவும் ஆபத்தானவை.

அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹோர்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்: கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.

இது புற்றுநோய், குழந்தையின்மை, ஹோர்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

கன்னக் கதுப்பு: கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹோர்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்: முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில் மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

வாசனை திரவியங்கள்: கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி விடும். இதில் 15 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது, தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.

உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹோர்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள் நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் Basic-makeup
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் Empty Re: உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள்

Post by முனாஸ் சுலைமான் Fri 9 Mar 2012 - 13:29

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் 480414 உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள் 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள்!!!
» அதிக கொழுப்பு மூளைக்கு ஆபத்தை விளைவிக்கும்: ஆய்வில் தகவல்
» தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள்: இறக்குமதி, விற்பனைக்கு இன்றுமுதல் தடை
» நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!
» அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum