சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Khan11

பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு

2 posters

Go down

பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Empty பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு

Post by ahmad78 Mon 12 Mar 2012 - 14:23

பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Images1rb
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியகுமரி மாவட்டத்தின் தக்களை க்கு அருகில் பத்மநாபபுரம் என் னும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்தில் இருந்து தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்திற்குச் செல்லும் வழி யில் அமைந்துள்ளது . தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலு ம் கேரள தொல்பொருள் துறை யினரால் பராமரிக்கப்பட்டு வரு கிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி. மீ. அளவிற்கு கிரா னைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின்ஒரு பகுதியான வெள்ளி மலை அடி வாரத் தில் அமைந்துள்ளது.
அரண்மனை வரலாறு
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  800pxpadamanabhapurampa
இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592 -1609 என்பவரால் கட்டப்பட்ட து. முதலில் தாய்க்கொட் டாரம் மட்டும் 1550 களில் இருந்ததாகத் தெரிகிறது. பின்கி.பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என் பவர் இந்த அரண்மனை யை விரிவு படுத்தினார். அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட வர்மா தங்கள் பரம்பரையினரை பத்மனாப புரத்தில் கோவில் கொண் டுள்ள விஷ்னுவின் சேவர்கள் என பிரகடனம் செய்தார்.1795 வரை பத்மநாபபபுரமே திருவிதாங் கூர் சமஸ்தானத்தின் தலை நக ரமாக விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்த புரத்திற்கு மாற்றப்பட்டது. இந் த அரண்மனைகேரளக் கட்டட க்கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Images3cr
இவ் வரண்மனையில் உள்ள முக்கி யமான கட்டிடங்கள் பின்வரு மாறு:
மந்திர சாலை
தாய்க் கொட்டாரம்
நாடக சாலை
நான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)
தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)

பத்மநாபபுரம் அரண்மனையானது, பத்மநாபபுரக் கோட்டைக்குள் ளே, மேற்கு தொடர்ச்சி மலையான வெள்ளி மலை யடி வாரத்தில் அமைந்துள் ளது. அதனை மாளிகை என்று குறிப்பிடுவதை வி ட, மாளிகைத் தொகுதி யென்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக அமை யும். ஏறத்தாழ 14 மாளிகை களைக் கொண்ட தொகுதி யாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது.
அரண்மனையின் முகப்பு
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Images4aaq
காண்போரைக் கொள்ளை கொள்ளும் விதத்திலே எளிமையான கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்ம னை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தி ல் சிறிய மாளிகையாக விருந் து, காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரி க்கப்பட்டு இன்று காட்சிய ளிக்கும் நிலையை 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி யில் இவ்வரண்மனை அடைந் ததாக வரலாறு கூறுகிறது. நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காண லாம்.. பிரமாண்டமான அரங்குகளையும் தகதகக்கும் அலங்கா ரங்களையும் பத்மநாபபுர அரண்மனையில் கிடையாது. ஆனால், அரண்மனைக்கே யுரித்தான செல்வச் செழிப்பை, அரண்மனையின் உள்ளக, வெளியக வடிவமைப்பில் உள்ளது.
பூமுகத்து வாசல்
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  250pxfrontentrancedoorp
அரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதன மை வாசல் பிரமாண்டமானது, மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடை யது. கேரளப்பாரம்பரியத்துக்கே யுரித்தான கலைநயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும். ஒன்றிலொன்று வே றுபட்ட 90 வகைத்தாமரைப் பூக்கள் செதுக்கப்பட்ட மரக் கூரை மிகவும் பிரசி த்தமானது.
பொதுமக்களின் பார்வைக்கென, சீனர்களால் அன்பளிப்புச் செய் யப்பட்ட சிம்மாசனம், முற்று முழுதாக கருங்கல்லாலான சாய் மனைக் கதிரை, உள்ளூர் பிரதானிகளால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த் தாக வழங்கப்பட்ட ஒணவில்லு போன்றவை பூமுகத்தில் வைக்கப் பட்டிருக்கின்றன.
மந்திரசாலை
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  450pxclocktowerpadmanab
பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது. தனியே மரத்தால் ஆனது.அந்தப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும். பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திர சாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மந்திரசா லையின் சுவரும் கூரையும் மரங் களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. எந்தவித செயற்கை விளக்குகளு மின்றி, சூரிய ஒளியின் உச்சப் பய னைப் பெறக்கூடிய வகையிலே சலாகைகள் மூலமும் மைக்கா கண் ணாடி மூலமும் சுவர்கள் அமைக் கப் பட்டிருக்கின்றன.
மணிமாளிகை
மந்திரசாலையைக் கடந்து படிகளா ல் கீழே இறங்கினால் வருவது மணி மாளிகை ஆகும். கிராமத்தவர் ஒரு வரால் வடிவமைக்கப்பட்ட மணிக் கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டு களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இம் மணிக் கூட்டின் பின்னனியிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூட்டின் மணி யோசையை 3 கிமீ சுற்றுவட்டாரத்திற்குள்ளிருக்கும் அனைவ ராலும் கேட்க முடியும்.
அன்னதானக் கூடம்
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Dsc00550fz
மணிமாளிகையைத் தாண்டிச் செல்ல வருவது, ஒரு மாடியையு டைய அன்னதான மண்டபமாகும். கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். ஊறுகாயை பேணுவதற்குப் பாவிக் கப்படும் சீனச்சாடிகளும் இம் மண்டபத்தி லேயே காட்சிக்கு வைக்கப்பட்டு ள்ளன. மன்னர்கள் அன்ன தானத்து க்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அன் னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்து கிறது.
தாய்க்கொட்டாரம்
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  800pxgranitebedinpadman
அன்னதான மண்டபத்தைக் கடந்தால் தெரிவது தாய்க்கொட்டாரம். இந்த தாய்க்கொட்டாரமே மாளிகைத் தொகுதியில் மிகவும் பழை மையான மாளிகையாகும். இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி இரவி வர்மா குலசேகர பெருமாளினால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்த மண் டபம் சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத் தூண்களையுடை யது. இந்தத் தாய்க் கொட் டாரம், பாரம்பரிய நாற் சார் வீடமைப்பில் கட்டப் பட்டது. முதலாவது மாடி யில் செதுக்கப்பட்ட மரப் பலகைகளால் பிரிக்கப் பட்ட படுக்கையறைகள் காணப்படு கின்றன.
ஹோமபுரம், சரஸ்வதி கோவில்
தாய்க் கொட்டாரத்தின் வட பகுதியிலே ஹோமபுரம் காணப்படு கிறது. இங்குதான் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது. அதன் கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோவிலொன்று காணப்படுகின்றது. இன்றும் கூட நவராத்திரி கால ங்களில், இக்கோவிலிலுள்ள சரஸ்வதி திருவுருவம் திருவனந்த புரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுகிறது.
உப்பரிகை
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Dsc00583o
அடுத்துக் காணப்படும் உப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனா ல் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட் டதால் மிகவும் புனிதமா னதாகக் கருதப்பட்டதா கக் கூறப்படுகிறது. மூன் று மாடிகளையுடைய இந் த மாளிகையில், கீழ்ப் பகுதி அரச திறை சேரியா கக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் மாடியில் மருத் துவக் குணமுடைய மரத் தாலான மருத்துவக் கட்டி லொன்று காணப்படுகிறது. இரண்டாவது மாடி, மன்னனின் ஓய் வெடுக்கும் பகுதியாகக் காணப்படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம் மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவ ங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன. உப்பரிகை யின் முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்து க்குச் செல்ல முடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல் களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன. அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபமா கும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடை யனவாகக் காணப்படுகின்றன.
இந்திர விலாசம்
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  800pxpadmanabhapurampal
மண்டபத்தின் வழியே சென்றால் இந்திர விலாசத்திற்குச் செல்ல முடியும். மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்திலே, விருந்தி னர்களுக்கென அமைக்கப்பட்ட மாளிகையே இந்திர விலாசமா கும். அரண்மனையின் மற்ற பகுதிகளைப்போ லன்றி இது மேனாட்டு பாணியில் அமைக்கப் பட்டுள்ளது. அதன் கதவுக ளும் சன்னல்களும் பெரி யவை. கூரை உயரமா னது. விருந்தினர் மாளி கையின் சன்னல்கள், அந்தப் புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கி யதாக அமைந்திருந்தமை மனதை வருடியது.
நவராத்திரி மண்டபம்
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  800pxpadamanabhapurampa
இந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். தற்போது காணப்படும் கருங்கல் மண்டபமும், அதனையொட்டிய சரஸ்வதி ஆலயமும், கி.பி. 1744 இல் மன்னன் மார்த்தாண்ட வர் மாவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லினாலானது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கென இந்த நவராத்திரி மண்டபம் பயன்பட்டது. மன்னர் முதலானோர் மண் டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென் கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியி லிருந்தும் கலை நிகழ்ச்சி களைப் பார்வையிடலா ம். எளிமையான மர வே லைப்பாடுடைய அரண்ம னையின் கட்டமைப்பு க்கு மாறாக விஜய நகரக் கட்டட பாணியை உடை யதாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ள தெனக் கூறப்படுகிறது.
தெற்குக் கொட்டாரம்
அந்தப்புரப் பெண்களின் பாவனைக்கான நீர்த்தடா கத்தைத் தாண்டிச் செல் ல வருவது தெற்குக் கொ ட்டாரம் ஆகும். இது அர ண்மனைத் தொகுதியை விட்டு விலக்கிக் காண ப்படினும், அத்தொகுதி யின் ஒரு பகுதியாகும். தெற்குக் கொட்டாரம் மூன்று சிறிய கட்டடங் களைக்கொண்டது. அவை மூன்றுமே, மிகவும் கவர்ச்சிகரமான மரச் செதுக்கல் வே லைப்பாடுகளுடன் அழகான தோற்றத்தை யுடைய பகுதிகளாகும்.
பாதுக்காப்பு அமைப்பு
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  800pxpadamanabhapurampa
பத்மநாபபுரம் அரண்மனையின் வாசல்களும் பாதைகளும் மிக வும் ஒடுக்கமானவை. அவற்றினூடு செல்கையில் ஒருவர் பின் ஒருவராகவே செல்லமுடியும். பல உள்நாட்டு, வெளிநாட்டுக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன என்று வரலாறு கூறுவதால், கிளச்சியாளர்களைச் சுலபமாக எதிர்கொள்ளும் வழி முறைதான் இந்த ஒடுக் கமான வடிவமைப்போ எனவும் எண்ணத் தோன் றுகிறது. பிரதான கட்ட டத் தொகுதியில் காணப் படும் சுரங்கப்பாதைக்கா ன வழியும்கூட அதனை யே பறைசாற்றுகிறது. வெளியிலிருந்து அரண் மனை சன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப் பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த் தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய வித மாக சன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப்பட்டிரு க்கின்றன.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.
இயற்கை ஒளி
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Dsc00626h
ஏறத்தாழ 400 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று ம் கூட மின் விளக்குக ளைக் காண முடியாது. இயற்கை ஒளி முதலா கிய சூரியனின் ஒளியே போதிய ளவான வெளிச் சத்தை வழங்குகிறது. ஆகையால் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரையே அரண் மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரண்மனையின் கட்டுமானம்
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  800pxtoiletsystemin1400
இந்த அரண்மனையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவுமே உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மரப் பலகை கள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் ஆகியனவாகும். எரிக்கப்பட்ட தேங்காய்ச் சிரட்டை, எலுமிச்சை, முட்டைவெண்கரு மற் றும் மரக்கறிகள் சிலவ ற்றிலிருந்து பெறப்பட்ட சாறு ஆகியவற்றைக் கொண்டுதான் பளிச்சி டும் கரிய நிறத்தரை உரு வாக்கப் பட்டிருக்கிறது.
மலசல கூடங்கள் முத லாம் மாடியிலேயே காணப்படுகின்றன. கழிவு கள், மூடப்பட்ட கற்கால்வாய்களின் வழியே கடத்தப்படும் வகையி ல், அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. இரவுகளில் ஒளி யூட்டுவத ற்காகக் கலைநயம் மிக்க விளக்குகள் வகை வகையாகக் காணப் படுகின்றன.
நூதன சாலை
பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  800pxpadamanabhapurampa
இந்த அரண்மனையும் அருகிலுள்ள நூதன சாலையும் தமிழ் நாட்டி லே காணப்பட்டாலும் கேரள அரசினாலேயே பராமரிக்கப் படுகிறது. தொல்லியல் துறை யில் ஆர்வமுடைய எவரை யும் சட்டென ஈர்க்கும் வல்ல மை படைத்த பத்மநாபபுரம் அரண்மனை திருவனந்தபுரத் திலிருந்து 55 கி.மீ தொலை விலும் கன்னியாகுமரியிலி ருந்து 35 கி. மீ தொலைவிலும் காணப்படுகிறது. செவ்வாய் முதல் ஞாயிறு வரையான நாட்களில் இவ்வரண் மனையைப் பொதுமக்கள் பார்வையிட முடியும். அரண்மனையின் வெளிச் சூழ லிலே, சுற்றுலாப் பயணிகளுக்காகவே அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. அங்கே கேரளப் பாணியை பிரதி பலிக்கும் மரம், புல், ஓலைகளினாலான கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

http://vidhai2virutcham.wordpress.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு  Empty Re: பத்மநாபபுரம் அரண்மனை வரலாறு

Post by முனாஸ் சுலைமான் Tue 13 Mar 2012 - 19:56

://:-: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum