Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மரங்கள் : சந்தனம்...
Page 1 of 1
மரங்கள் : சந்தனம்...
மரம், செடி, கொடி, புல், பூண்டு இவையனைத்தும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. இவைதான் மனிதர்கள் உயிர் வாழ ஆதாரமாக இருப்பவை. இயற்கை இவற்றின் மூலமே அதிகளவு மனிதர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இவற்றை மனிதன் தன் சுயலாபத்திற்காக அழித்ததன் விளைவுதான். புயல், மழை, பூகம்பம் என பல இயற்கை சீற்றங்கள்.
“மரம் வளர்ப்போம். மழை பெருவோம்” என்ற வாசகம் விளம்பரப் பலகையில் தான் உள்ளது. மனிதர்களின் மனதில் இல்லை. இப்படி மனிதர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் மரங்களுக்கு மருத்துவக் குணங்களும் உண்டு. இதை அன்றே சித்தர்கள் கண்டறிந்து பல நூல்களில் எழுதி வைத்தனர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களுள் சந்தன மரமும் ஒன்று. சந்தன மரத்தின் தூள் சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. நறுமணம் கொண்டது. நம் முன்னோர்கள் சந்தனத்தூளை நீரில் கரைத்து மேனியெங்கும் பூசிக் கொள்வார்கள்.
தற்போது நறுமனப் பொருட்களில் சந்தனத்தூள், சந்தனத் தைலம் முக்கிய இடம் பெறுகிறது.
சந்தன மரம் மாற்றடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்டது. உலர்ந்த கட்டை நறுமணம் கொண்டது. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதிகலிலும் அதிகம் வளர்கிறது. மலைப்பாங்கான பகுதியில் நன்கு வளரும். 20 வருடங்களுக்கு மேல் பழமையான மரமே பயன்படுத்தப்படுகிறது. சந்தன மரம் உயிருடன் இருக்கும்போது மணப்பதில்லை, வெட்டிய கட்டைகளே அதிகம் மணம் பரப்பும்.
Tamil - Chandanam
English - Sandal wood
Sanskrit - Shri gandha, chandanam
Telugu - Gandeapu - chikka
Kanada - Gadnhad chehke
Malayalam - Chandana
Botanical Name - Santalum album
நற்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து
- பதார்த்த குணபாடம் - பாடல் (209)
பொருள் : நல்ல சந்தன மரக்கட்டையை முறைப்படி பயன்படுத்துவோருக்கு அறிவும், மனமகிழ்ச்சியும், உடல் அழகும் கூடும், பெண்களுக்கு வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்கும்.
சந்தன மரத்தில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகள் உள்ளன. இவை மூன்றும் மருத்துவப் பயன் கொண்டவை.
மருத்துவப் பயன்கள்
சரும நோய் நீங்க:
அகச் சூழ்நிலையாலும், புறச் சூழ்நிலையாலும் மனித உடலில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு சருமம் தான். சருமத்தில் சொறி, சிரங்கு, அக்கி, படர்தாமரை, தேமல், வெண்குட்டம், கருமேகம், வீக்கம், முகப்பரு, தழும்பு, முகக் கறுப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகி பலர் வேதனைப்படுவார்கள். இவர்கள் சந்தன மரக்கட்டையை எலுமிச்சப் பழச்சாறு விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.
வெட்டைச் சூடு தணிய:
சந்தனத்தை பசும் பால் விட்டு அரைத்து 5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் புண் போன்றவை தீரும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைப் போக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும், சந்தனத்தூள் உபயோகப்படுகிறது.
சந்தனத்தூளை இளநீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அருந்தி வந்தால் உடல்சூடு தணியும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய:
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
மார்புத் துடிப்பு நீங்க
சந்தனத்தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி. நீரிலிட்டுக் காய்ச்சி 150 மி.லி.யானவுடன் வடிக்கட்டி வேளைக்கு 50 மி.லி. என காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத்துடிப்பு மந்தம், இதயவலி போன்றவை நீங்கும்.
சந்தனத்தூளைப் புகைத்து நறுமணம் வீசச் செய்தால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளைப் போக்கி சுவாசத்தைச் சீராக்கும். மனதிற்கு சாந்தத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுக்கும்.
சந்தனத் தைலம்:
சந்தனத் தைலத்தை சருமத்தின் மீது தடவினால் சரும நோய்கள் ஏதும் அணுகாமல் சருமத்தைப் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
சந்தனத்தின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum