சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா? Khan11

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?

Go down

நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா? Empty நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?

Post by ahmad78 Mon 21 May 2012 - 13:30










நீங்கள் ஒரு நல்ல பெற்றோரா?




அக்பர் அலி :


உலகத்தில் எல்லா பெற்றோர்களும் தம் குழந்தைகள் மீது பாசம், அன்பு, நேசம், அக்கறை கொண்டிருப்பார்கள். இது இயற்கையான ஒன்று, இந்த அன்பில், அக்கறையில் எந்த கலப்படமும், வேறுபாடும் இருக்காது. ஆனால் எல்லா பெற்றோர்களுக்கும் கருத்துக்கள், எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், கனவுகள், பண்பாடுகள், யுக்திகள் இப்படி எல்லாமே வித்தியாசப்படும். அவரவர் விருப்பப்படி தம் குழந்தைகளை வளர்ப்பார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் பலவித யுக்திகளை கையாள்வார்கள். இப்படி குழந்தைகளின் வளர்ப்பில் பல வித்தியாசங்கள் காணப்படும். இதில் சரியான முறையில் வளர்ப்பவர்கள் யார்? யார்? இதனால் பெற்றோருக்கு என்ன லாபம், தொடர்பு இவைகளை நாம் காணலாம்.

என்னைப் பொருத்தவரையில் எனது கருத்துப்படி எல்லா பெற்றோர்களுக்கும் சில தகுதிகள் அவசியம் தேவை. அது முதலில் அவரவர் தத்தம் குழந்தைகளின் மனதை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டறிந்து ஊக்கமளித்து வழிநடத்தி செல்ல முடியும். அதுபோன்ற ஊக்கமும், ஒத்துழைப்புகளும்தான் அவர்களை வாழ்க்கையில் மென்மேலும் உயரச்செய்யும். இது போன்ற நற்காரியங்கள்தான் ஒரு பெற்றோரை நல்லவர்கள் என அடையாளங் காட்டும்.

தகுதிகள்

ஒரு நல்ல பெற்றோருக்கு அவசியம் சில தகுதிகள் வேண்டும். அது போன்ற தகுதிகள் தான் அவர்கள், குழந்தைகளை வளர்த்து பெரிய மனிதர்களாகச் செய்வதுடன் நல்ல குடும்ப தலைவர்களாகவும் நல்ல கணவன், மனைவியாகவும் இருக்கச் செய்யும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்போதும் தனது குழந்தைகளை அடுத்தவர் முன்பு தரம் தாழ்த்தி பேச மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. மற்றவர் முன்பு தம் குழந்தைகளை குறைத்து மதிப்பிடுவது தரம் தாழ்த்தி பேசுவது மரியாதைக் குறைவாக பேசுவது, குற்றம் சொல்வது, கிண்டல், கேலி இதுபோன்ற காரியங்கள் குழந்தைகளின் மனநிலையை பாதிப்பதுடன் பெற்றோர்கள் மீது வெறுப்பையும், இடைவெளியையும் உண்டாக்கும். அதுபோல் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவதும் கூடாது.

மேலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பங்கள், ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது, அவ்வாறு கட்டாயப்படுத்துவதால் அவர்களால் எதையும் ஒழுங்காக செய்ய இயலாமல் போய்விடும். எனவே குழந்தைகளின் மனதை நன்கு அறிந்து அவர்கள் விருப்பத்தை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும். சிலர் குழந்தைகளிடம் சரிசமமாக ‘இந்த சிறு வயதில் உனக்கு இவ்வளவு பிடிவாதமா?’ ‘உனக்கு என்ன தைரியம் எங்களைவிட நீ பெரிய மனுஷனா’ என்று வாதம் செய்வதுண்டு. இது மிகவும் நல்லதல்ல குழந்தைகளின் அறிவையும் முடக்கிவிடும். குழந்தைகள் தானே என்று குறைவாக எண்ணாமல் அவர்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட விடவேண்டும். அவர்களையும் மதித்து சிறுவயதில் அவர்களை மரியாதையோடு நடத்தினால் அதற்கான பெருமைகள் அனைத்தும் பெற்றோரையே சாரும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்கள் பற்றியும் மனம் விட்டு பேசுவது, நல்லது மற்றும் கெட்டது போன்றவற்றை விவாதிப்பது போன்ற காரியங்கள் குடும்பத்தில் நன்மையை உண்டாக்கும். அதுமட்டுமல்லாமல் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளியை விட்டு நெருக்கத்தை உண்டாக்குவது மட்டுமல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும். மேலும் குழந்தைகள் முன் பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வது தவறாகப் பேசிக்கொள்வதும் கூடாது, இதுவும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது போன்றவைகளும் பெற்றோர்களின் முக்கியமான தகுதிகள் ஆகும்.


பெற்றோர்களின் முக்கியமானகடமைகள்
பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாவது, தாம் பெற்ற குழந்தைகளுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்குவதற்கு இடம், அறிவு, கல்வி, ஆதரவு, அன்பு மற்றும் பாசம் போன்றவைகளை அளிப்பது மிக முக்கியமான கடமைகளாகும். எத்தனையோ பெற்றோர்கள் எவ்வளவு பெரிய கஷ்டத்திலும், தாங்கள் கஷ்டப்பட்டாலும் தங்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று அவர்களுக்கு கஷ்டம் தெரியாமல் நல்லபடியாக படிக்க வைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்தி பெரிய மனிதர்களாகவும் நல்ல மனிதர்களாகவும், செய்வதுண்டு. இது பெற்றோர்களின் தியாகம் மட்டுமல்ல இதுவும் கடமைகளில் ஒன்று என்பது எனது கருத்து.

மேலும், ஒருவருக்கு இரண்டு குழந்தைகளோ அதற்கு மேற்பட்டோ இருப்பின் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில் பாகுபாடு காட்டக்கூடாது. இது மனித இயல்பு நம்மில் எல்லோர்க்குமே ஒன்றின் மீது மட்டுமே ஆசையும், கவனமும் அதிகம் இருக்கும் அவ்வாறு ஒரு குழந்தையின் மீது மட்டும் நாம் அதிக பாசம், அன்பு கொள்ளலாம் அவ்வாறு இருப்பினும் நாம் அதை அதிகம் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லோரையும் ஒரே சமமாக நடத்தவேண்டும் அது அவர்களின் மனநிலையை அதிகம் பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.

நாம் நம் குழந்தையை கண்டிப்பாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்புவதால் மட்டுமே குழந்தைகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆதலால் நாம் அவசியம் அவர்களை படிக்கின்ற இடம், விளையாடுகின்ற இடம், பழகுகின்ற இடம், பழகும் நண்பர்களையும் கண்கானித்து வரவேண்டும்.நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று. பெற்றோர்கள் முடிந்தவரை பெற்றோராக, தாயாக, தந்தையாக, அவர்களே சகோதர, சகோதரிகளாக, நண்பர்களாக, நல்ல ஆலோசகராக, ஆசிரியர்களாக, வழிகாட்டியாக, சில நேரங்களில் குழந்தையாக நடந்து கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும்.

இஸ்லாமியப் பார்வையில் ஒரு நல்லபெற்றோர்
எல்லா மதமும் அன்பையே போதிக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் எல்லாவற்றிற்கும் நேர் மாறானது. உண்மையும்கூட, உலகத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் மனிதர்களால் மனிதர்களுக்காக உண்டாக்கியது. ஆனால் இஸ்லாமிய சட்டதிட்டங்களோ இறைவனால் மக்களுக்காக இறக்கி வைக்கப்பட்டது. மற்ற மதங்களைப்போல இஸ்லாமியர்கள் அவரவர் விருப்பத்திற்கு வாழமுடியாது. இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களின் வழியே நடக்க வேண்டியது கட்டாயமாகும்.

ஒரு நல்ல பெற்றோர் எப்படி இருக்கவேண்டும். உண்மையான, அன்பான, முறையான கணவன் மனைவியாக இறைவனை ஜந்து வேளை தொழுது குழந்தைகளையும் சிறு வயது முதலே தொழவும், ஓதவும், இறை(தீன்) வழியில் ஈடுபடவும் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் கடமைகளை பெற்றோர்களும் பின்பற்றி பிள்ளைகளையும் கட்டாயமாக பின்பற்றச் செய்ய வேண்டும். இஸ்லாத்தின் மார்க்க விஷயங்களை பிள்ளைகளுக்கு போதித்து அதை முறையாக பின்பற்ற செய்யவைப்பது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை மார்க்க விஷயங்களைக் கற்று அதைப் பின்பற்றச் செய்வதில் பிள்ளைகளை ஆர்வம் காட்ட வேண்டும்.

நாமும் நல்ல கணவன்-மனைவியாக நல்ல பெற்றோராக பிள்ளைகளிடம் இருப்பதுடன் இஸ்லாத்தின் மார்க்க வழிப்படி பிள்ளைகளை வளர்ப்பதுடன் அதுபோல வாழவும் செய்ய வேண்டும். மறுமை நாளில் பெற்றோரின்; கடமையாக இறைவன் எதை எதிர்ப்பார்க்கின்றானோ அதை சரிவர அறிந்து செய்ய வேண்டும். இஸ்லாம் என்ற போர்வையில் பிள்ளைகளை சமுதாயத்தின் வெளியே தெரியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வைப்பதும் தவறு. இஸ்லாத்தின் முறைப்படி முஸ்லிம்கள் எல்லாத் துறையிலும் படித்து வளர்த்து எல்லோரும் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், சமுதாயத்தில் நியாயமான, முறையான, உண்மையான முறையில் நல்ல அந்தஸ்தில் முஸ்லிம்களும் வளர்ந்து வர வேண்டும். முடங்கிக் கிடக்காமல் முஸ்லிம்கள் முன்னேறி வர வேண்டும்.


உலகத்தில் எல்லோரும் நல்ல பெற்றோரே! இருப்பினும் எல்லோருக்கும் ஒரு மதிப்பீடு உண்டு. நூறு சதவிகிதம் யாரையும் மதிப்பிட முடியாது எல்லா பெற்றோரும் ஒரு சில தவறு செய்வதுண்டு நூறு சதவிகிதம் சரியாக இருப்பது ஒரு சில பெற்றோர்களே! பாசம், நேசம், அன்பு, அக்கறை, எண்ணங்கள், விருப்பம், கனவு, திட்டம், ஆசைகள், இப்படி எல்லோருக்கும் பலவிதமான கருத்துக்கள் பலவாறு வித்தியாசப்படும். அவ்வாறு அவரவர்கள் யுக்திப்படி தங்களின் குழந்தைகளை வளர்ப்பதுண்டு இதில் முறையாக பின்பற்றி வெற்றி பெறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. தவறான வழிகாட்டல்களை கொடுக்கும் பெற்றோரை பின்பற்றி தோல்வியுறும் பிள்ளைகளும் உண்டு. பின்பற்றாமல் வெற்றி பெறும் பிள்ளைளும் உண்டு. அது அவரவர் சூழ்நிலைக்கேற்ப உண்டாகும்.

ஒருவர் நல்ல பெற்றோரா இல்லையா என்பது அந்த பிள்ளைகளை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.பிள்ளைகள் செய்யும் நற்காரியங்கள், புகழ், பதவி, பணம், உதவி இவைகளும் பெறறோரை நல்லவர்களாக்கலாம். பெற்றோர்களின் உண்மையான வாழ்க்கை, தாம்பத்தியம், நல்ல குழந்தைகளை பெற்று வளர்ப்பது, உதவி செய்தல், தர்மம் செய்தல் இஸ்லாத்தை முறையாக பின்பற்றுவதும் கூட நல்ல பெறறோருக்கு அடையாளமாகும். குழந்தைகள் செய்யும் சில தவறுகள் கூட பெற்றோருக்கு கெட்ட பெயர் வாங்கித் தரும்.

எனது பெற்றோர்கள் என்னை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கி, எனக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்ததுடன், அவர்களும் நல்லமுறையில் நல்லவர்களாக, இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றி என்னையும் பின்பற்ற செய்தார்களே, அதேபோல் நானும் எனது பிள்ளைகளையும் நல்லமுறையில் இஸ்லாத்தின் சட்டதிட்டம் நெறிமுறைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழியிலும் தீன் வழியினை போதித்து பின்பற்ற செய்வதுடன் என் எண்ணம், கனவு, ஆசைகள் விருப்பப்படி சமுதாயத்தில் எனது பிள்ளைகளின் திறமைகளை உணர்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நியாயமான முறையான, உண்மையானவர்களாக சமுதாயத்தில் நல்ல பொறுப்பில் அமர்த்தி, நல்ல பெற்றோருக்கான கடமையை எனது பெற்றோர்களைப் போல இன்ஷா அல்லாஹ் நான் சரியாக செய்வேன் என நம்புகிறேன்.

(சுவனப்பாதை நடத்திய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum