Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கால்சியம் கார்பைடும் பழவியாபாரமும்
2 posters
Page 1 of 1
கால்சியம் கார்பைடும் பழவியாபாரமும்
கால்சியம் கார்பைடும் பழவியாபாரமும்
அருமை நண்பர்களே !!!
கால்ஷியம் கார்பைடு கற்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?,!!!அது ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டை,நோய்களைப் பற்றி அறிவீர்களா?!!! இன்றைய சமூகத்தில் பேராசை பிடித்த வியாபாரிகளின் பணம் சம்பாதிக்கும் வெறிக்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கண்கூடாயிருக்கிறது, நம் நாட்டில் தான் படிக்காதவர்கள் கூட கேடுவிளைவிக்கும் ரசாயனங்களையும், கனிமங்களையும் கையாள்வது வாடிக்கையாகியுள்ளது. நம் நாட்டில் தான் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நிலை நிலவிவருகிறது. இது அவசர யுகம், எல்லாவற்றிற்குமே அவசரம் தான்,விதைப்பதற்கும் அவசரம், விளைச்சலுக்கும் அவசரம், அறுவடைக்கும் அவசரம், அதை பழுக்க வைப்பதற்கும் அவசரம், இதன் பின்னால் இருப்பது அருவருக்கத்தக்க பணம் சம்பாதிக்கும் வெறியன்றி வேறில்லை.இன்றைய ஏனைய பழ வியாபாரிகள் ஈசி மனி செய்ய நாடுவது கால்சியம் கார்பைட் கற்களைத்தான்.
பழவியாபாரிகளது மண்டிகள் அல்லது கிடங்குகளில் வாழை, பலா,பப்பாளி, கொய்யா,சீதாப்பழம்,மாங்காய்களை குவியல் குவியலாக கொட்டி வைத்து , அந்த குவியலுக்குள்ளே சின்னத் துளையிட்ட பாலித்தீன் பைகளில் இந்த கால்சியம் கார்பைடு கற்களைப் போட்டு வைத்து விடுவார்கள் . கால்சியம் கார்பைடில் ஆர்சனிக் , பாஸ்பரஸ் இரண்டும் கலந்திருக்கும் . இது மிகவும் நச்சுத் தன்மை உடையது . இதிலிருந்து வெளிவருகிற அசெட்டிலின் வாயு காய்களின் மீது பரவி , பழுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும் . ஆனால் , உண்மையில் உள்ளூக்குள் பழுத்திருக்காது . நூறு கிலோ காய்களைப் பழுக்க வைக்க நாற்பது கிராம் கால்சியம் கார்பைடு கல்லே போதுமானது என்றால் எவ்வளவு பெரிய கொடிய நச்சுவை நாம் இது வரை உட்கொண்டிருக்கிறோம் என விளங்கும். . In the ripening of fruit, calcium carbide is used as source of acetylene gas, which is a ripening agent. (similar to ethylene which has the IUPAC name of ethene and the chemical formula of C2H4)[ஆதாரம்-விக்கிபீடியா]
செயற்கையாக பழுக்க வைத்த பழங்களை ஒருவர் பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், அதை வாங்கும் பொதுமக்களாகிய நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு ருசித்து பார்த்து பழுத்ததற்கேற்ற இனிப்பு இருந்தால் மட்டுமே வீட்டு உபயோகத்துக்கு வாங்கலாம், அல்லது வீட்டில் நேரடியாக விளைவதை வாங்கி சாப்பிடலாம். தமிழகம் முழுக்கவே சில வருடங்களாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த வாழைப்பழம், மாம்பழங்களையும் கொய்யா,பப்பாளி திராட்சைகளையும் கூட பரவலாக விறபனை செய்து வருவது கண்கூடு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது!!!,அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!!!.ஆனால் நடவடிக்கைகள் தான் கடுமையாக இல்லை என்பேன், வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்கத்தக்கது,இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.ஏழைகளின் பழம் என்றும் சொல்லுவர்,ஆனால் இதைக்கூட சதிகாரர்கள் கார்பைட் கற்கள் கொண்டே பழுக்க வைக்கின்றனர்.
இப்பழத்தை உண்போருக்கு வயிற்றுப்போக்கு, பேதி, கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இந்த பழங்கள் மிக விஷமானவை. பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கடினமான காரியம்.
கால்சியம் கார்பைடு வெளியிடும் அசெட்டிலின் வாயுவை சுவாசித்தாலே உடல் நலம் பாதிக்கும் . இதனால் முதுமைத் தோற்றம் , இதய நோய் , புற்று நோய் கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . வெல்டிங் செய்ய உபயோகிக்கும் கால்சியம் கார்பைடு , தடை செய்யப்பட்ட ரசாயனம் .ஆனாலும் மனசாட்சியே இல்லாத சில ரசாயன வியாபாரிகள் கள்ளச்சந்தையில் இது போன்ற பழவியாபாரிகளுக்கு கால்சியம் கார்பைடை சப்ளை செய்கின்றனர்.இவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத கடுமையான சட்டங்களில் சிறையினால் தள்ளினாலே ஒழிய ,இது தொடந்து கொண்டுதான் இருக்கும்,இது போல சில பணத்தாசை பிடித்த வியாபாரிகளால் சமூகத்தில் இருக்கும் சில நல்ல வியாபாரிகளுக்கும் கெட்ட பெயர்.நீங்கள் எந்த பழ வியாபாரியிடமாவது இதுபோல கார்பைட் கற்களால் பழுக்கச்செய்யப்பட்ட பழங்கள் வாங்கி ஏமாந்திருந்தால் உடனே சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு 1913 என்னும் எண்ணில் புகார் தெரிவிக்கவும்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கால்சியம் கார்பைடும் பழவியாபாரமும்
நல்ல தகவல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கால்சியம் சத்து...
» கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்!!!
» பெண்களுக்கு கால்சியம் சத்து அவசியம்
» கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்!!!
» கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum