Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...
Page 1 of 1
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...
உயிரை பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்...
மீண்டும் ஒரு குழந்தையின் உயிரை பறித்திருக்கிறது அஜாக்கிரதை. நாடெங்கிலும் வருஷத்திற்கு சராசரியாக ஒன்று, இரண்டு குழந்தைகளின் உயிரை பறித்துவிடுகிறது ஆழ்துளை கிணறுகள். மலிவாகி போனது இந்தியாவில் மனித உயிர்கள் மட்டுமே. இத்தகைய சம்பவம் நிகழும் போது -
நாடு முழுவதும், மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, உடனடியாக இதுபோன்ற பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுகிறது.
பிறகு மறந்து விடுகிறோம். செய்தி தொலைக்காட்சி ஒன்றில் - தமிழக அரசும் இது குறித்து ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. இத்தகைய அலட்சிய போக்குக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். மஹி என்கிற அந்த குழந்தையின் மரணத்திற்கு காரணமான ஆழ்துளை கிணறு கூட அனுமதியின்றி தோண்டப்பட்டுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை தவறுதலாக உள்ளே விழுந்துள்ளது.
குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் போது - குழந்தைகளை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. மூடப்படாத சாக்கடைகள், எதற்காவது தோண்டப்பட்ட குழிகள் என்றுள்ள சுற்றப்புறம் நம்முடையது. அதை பெற்றோர்கள் அவதானிக்க வேண்டும். சில தினங்களுக்கு முன் தினசரியில் வாசித்த செய்தி. தொலைக்காட்சி பார்க்கிற ஆர்வத்தில் - தம் வீட்டு குழந்தையை ஒரு பெண் பழி கொடுத்திருக்கிறார். குழந்தை சாக்கடைக்குள் விழுந்து இறந்திருக்கிறது. நம் அஜாக்கிரதை - குழந்தைகள் இறக்க காரணமாகலாமா?
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த - மஹி என்கிற அந்த குழந்தைக்கு, கடந்த 20ம் தேதி, ஐந்தாவது பிறந்த நாள். அன்று மாலை, சிறுமியின் பெற்றோர், தங்களது வீட்டிலேயே பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.குழந்தை மஹிக்கு புத்தாடை அணிவித்து, அருகில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து, கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடினர். மஹியும், மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். கேக் சாப்பிட்டு முடித்ததும், இரவு 11 மணி அளவில், வீட்டுக்கு அருகே, மஹி பிறந்தநாள் குதூகலத்துடன் விளையாட சென்றாள்.
விளையாட சென்ற அந்த குழந்தைக்கு காலனாக அமைந்தது ஆழ்துளை கிணறு. விழுந்த குழந்தையை காப்பாற்ற, உயிருடன் மீட்க எத்தனை எத்தனை போராட்டம். சிறிய அஜாக்கிரதைக்கு பிறகு எத்தனை போராடியும் குழந்தை மஹியை காப்பாற்ற முடியவில்லை. மஹி விழுந்த கிணற்றுக்கு அருகில், மிகப் பெரிய பள்ளம் தோண்டி, அங்கிருந்து சிறுமி இருக்கும் இடத்தை அடைவதற்கு, சுரங்கப் பாதை அமைக்கும் முயற்சி, இரவு, பகலாக மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் குழுவினரும், தயார் நிலையில் இருந்தனர்.,
மீட்புப் படையினர் மேற்கொண்ட, 85 மணி நேர போராட்டம் வீணானது. கிணற்றுக்குள் விழுந்த அடுத்த சில மணி நேரத்திலேயே, மஹி இறந்து விட்டதாகவும், இறந்து நான்கு நாள் ஆகிவிட்டதால், மஹியின் உடல் அழுகி விட்டதாகவும், டாக்டர்கள் தெரிவித்தனர். "குழந்தைக்கு சரி வர ஆக்ஸிஜன் கிடைக்காததால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்பி.பி. அகர்வால், டாக்டர் தீபக் மாத்துர் ஆகியோர் ஈடுபட்டனர். பரிசோதனைக்குப் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தை குழிக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டது என்று குர்காவ்ன் மாவட்ட மாஜிஸ்திரேட் பி.சி. மீனா பின்னர் அறிவித்தார். எல்லாவற்றையும் சட்டப்படி செய்து முடித்தனர். சில அடிப்படை ஒழுங்குகளை ஒழுங்காக செய்யாமல் - குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டு. எந்த ஒரு செயல் செய்வதாக இருந்தாலும் - அதை சரி வர செய்யுங்கள். அரைகுறையாக ஒரு வேலை செய்து - அதனால் பிறருக்கு பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்துவிடாதீர்கள். நாளை உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ கூட அதனால் பாதிப்பு ஏற்படலாம்.
"யாருக்கோ நிகழ்ந்தால் நமக்கென்ன என்று இருக்காதீர்கள்" சிறுமி மஹியை இழந்து தவிக்கும் அந்த பெற்றேருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியாவில் உள்ள ஆபத்தான, பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுமாறு, 2010ல், சுப்ரீம் கோர்ட் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதை கடைபிடித்திருந்தால், பல குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். இதுவரை நடந்த முக்கிய ஆழ்துளைக் கிணறு விபத்துகள்:
2006 ஜூலை: அரியானாவில், குருக்ஷேத்ரா என்ற இடத்தில், பிரின்ஸ் என்ற ஐந்து வயது சிறுவன், 60 அடி ஆழ்துளைக் கிணற்றில், தவறி விழுந்தான். 48 மணி நேர போராட்டத்துக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டான்.
2008 அக்., 10: உ.பி., ஆக்ரா அருகே, டோக்ரா கிராமத்தில், சோனு என்ற இரண்டரை வயது குழந்தை, 150 அடி ஆழ கிணற்றில் விழுந்தாள். 98 மணி நேரத்துக்கு பின், இறந்த நிலையில் மீட்பு.
2009 ஜூன்: ராஜஸ்தானில், 4 வயதான அஞ்சு குஜரார், 70 அடி கிணற்றில் விழுந்தாள். 19 மணி நேரத்துக்குப் பின், உயிருடன் மீட்பு.
2010 ஜன.,: வாரங்கல்லில், தராவத் மகேஷ் என்ற, 18 மாத குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.
2011 மே: நாசிக்கில், ஓம் சந்தோஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பலி.
2011 செப்.,: தமிழகத்தின் நெல்லையில், சுதர்சன் என்ற சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.
2012 மார்ச்: இந்தூரில், பயால் என்ற குழந்தை, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலி.
2012 ஜூன் 24: அரியானாவில், குர்கான் அருகே, கோ என்ற இடத்தில், ஐந்து வயது சிறுமி மஹி, 70 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாள். 85 மணி நேர போராட்டத்துக்கு பின், சடலமாக மீட்கப்பட்டாள்.(நன்றி : தினமலர்)
இனி ஒரு ஆழ்துளை கிணறு மரணம் கூட நிகழாமல் பார்த்து கொள்வோம்.
http://oosssai.blogspot.com/2012/06/blog-post_25.html

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum