Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாவ மன்னிப்பு! – மு.அ. அபுல்அமீன்
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பாவ மன்னிப்பு! – மு.அ. அபுல்அமீன்
வீட்டில், நாட்டில் நடக்கும் குறைகள், கோணல்கள், மாற்றங்கள், ஏமாற்றங்கள், அபாயங்கள், ஆபத்துகள், அகால நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் அவரவர் செய்யும் தவறுகள், அக்கிரமங்கள், அநியாயங்கள், அநீதிகள்தான் என்பதை நாம் கண்ணால் காண்கிறோம். எனவே நீதி நூல்கள், நேர்மையாக, முறையாக, நெறியோடு வாழ அறிவுறுத்துகின்றன. அவ்வாறு வாழ்வதே அறவாழ்வு. நிறை மனத்தோடு இறைவனிடம், செய்த தவறுகளுக்கு மன்னிப்பு தேடி மீண்டும் அந்தத் தவறுகளை செய்யாமல் உறுதியாக நடந்தால் குறையில்லா நிறை வாழ்வு வாழலாம்.
ஹஜ்ரத் ஹசன் பஸ்ரி என்ற பெரியவரிடம் ஒருநாள் ஒருவர், “”நாட்டில் பஞ்சம் நிலவுகிறதே! பஞ்சம் தீர பரிகாரம் என்ன?” என்று கேட்டார். பெரியவர் ஹஜ்ரத் ஹஸன் பஸ்ரி பாவ மன்னிப்பு தேடுமாறு பதில் சொன்னார். அடுத்து வந்தவர் வறுமை நீங்க வழிகாட்ட வேண்டினார். பெரியவரோ, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி பாவ மன்னிப்பு கோர கூறினார். மூன்றாவதாக வந்தவர் குழந்தைப் பேறு இல்லை என்று குறைபட்டார். “”மக்கள் செல்வம் பெற தக்க பரிகாரம், மிக்க பணிந்து பாப மன்னிப்பு தேடுவதே” என்றார் பெரியவர். நான்காவதாக வந்தவர், “”நாளும் நிலத்தில் விளைச்சல் குறைகிறதே” என்று விசனப்பட்டார். ஹசன் பஸ்ரியோ “‘விளைச்சல் பெருக அல்லாஹ்விடம் அனைத்து பாபங்களையும் நினைத்து நெக்குருகி பாவ மன்னிப்பு கேளுங்கள்” என்று நவின்றார்.
அந்தப் பெரியவரின் அருகிலிருந்த ரபீவு பின் ஸுபைஹ் என்பவர், “”நால்வரும் ஆளுக்கொரு குறையைக் கூறி நிறைவு எய்திட இறையருள் பெறும் வழிகாட்ட வேண்டினர். அனைவருக்கும் பாப மன்னிப்பே பரிகாரம் என்ற ஒரு பதிலில் பொதிந்துள்ள பொருளைப் புரிய முடியவில்லையே” என்றார்.
ஹஜ்ரத் ஹஸன் பஸ்ரி அவர்கள் அல்குர்ஆனின் அத்யாயம் 71ல் நூஹ் நபி போதித்த 10 முதல் 12 வரை உள்ள வசனங்களை ஓதினார்கள்.
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا
يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا
وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا #
[ALQURAN 71;10-12]
“”உங்கள் ரட்சகனிடம் மன்னிப்பு தேடுங்கள். நிச்சயம் அல்லாஹ் மன்னிப்பான். அவனே வானிலிருந்து மழை பொழியச் செய்வான். ஆறுகளில் நீரோடச் செய்து தோட்டங்களை உண்டாக்குவான். பொருட் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் வழங்குவான்” என்று நவின்றார்கள். நாமும் அறிந்தோ அறியாமலோ உண்மைக்கு மாறாய் நடந்திருந்தால் அதனால் பாதிக்கப்பட்டிருப்பவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கோருவோம். நன்னிலை எய்துவோம்.
தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)
இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),
நூல் : புகாரி ஹதீஸ் எண்: 6306
நன்றி:- தினமணி 13-July-2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
தலைவர்:- பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
http://azeezahmed.wordpress.com/

azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum