சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" Khan11

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை"

3 posters

Go down

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" Empty "இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை"

Post by ahmad78 Fri 27 Jul 2012 - 13:49

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" 406096_381294108604503_1402613529_n



புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...
கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" - இம்மாதிரி...யான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி ஃபிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு முதலில் அறிமுகமானது சகோதரி ஃபிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர் தான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர். மைசூரில் இருந்து இவரது குடும்பம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்தபோது, கூடுதல் வருமானத்திற்காக சையத் கலீம் என்பவரது துணிக்கடையில் முதலீடு செய்தனர் இவரது குடும்பத்தினர். வரும் லாபத்தில், முதலீட்டிற்கு ஏற்ற பங்கை உமரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட வேண்டுமென்பது ஒப்பந்தம்.

சையத் கலீம் அவர்களின் நேர்மையான வியாபாரத்தால் கவரப்பட்ட உமரின் பெற்றோர், தாங்களும் அந்த கடையில் முதலீடு செய்திருப்பதால், சையத் கலீமுடன் சேர்ந்து பணியாற்றுமாறு உமரை கேட்டுக்கொண்டனர். ஆனால் முஸ்லிம்களுடன் பணியாற்ற மறுத்து விட்டார் உமர். நாளடைவில் பெற்றோர்களின் வற்புறுத்தல் அதிகமாக வேண்டா வெறுப்பாக அந்த கடையில் பணியாற்ற ஆரம்பித்தார் (அப்போது டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தால் பகுதி நேரமாகவே பணியாற்றினார் உமர்).

சையத் கலீம் அவர்களின் துணிக்கடை வாயிலாக உமருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினான் இறைவன். அங்கே அவருக்கு குர்ஆன் கொடுக்கப்பட, மாற்றங்கள் மிக வேகமாக நடந்தேற ஆரம்பித்தன.

முஸ்லிம்கள் மீதான வெறுப்பு முற்றிலும் மறைந்து, இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் உமர். தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய மார்க்கத்தை தன் குடும்பத்தினருக்கும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். உமரின் இறைப்பணி வெற்றியளிக்க ஆரம்பிக்க, அவரின் சகோதரி பிர்தவ்ஸ்சும் இஸ்லாத்தை பின்பற்றுவதென முடிவெடுத்தார்.

இறைவனின் கடுமையான சோதனைகள் ஆரம்பித்தன. எவ்வாறான சோதனைகள் அவை? இறைவனின் சோதனைகளை எப்படி கையாண்டனர் உமரும், சகோதரி ஃபிர்தவ்ஸும்?

சகோதரியின் வார்த்தைகளில் இருந்து....
"கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். நான் (ஆஷா), என் சகோதரி வீணா மற்றும் எங்கள் அண்ணன் நாகராஜ் என்று நாங்கள் மூன்று பேர். கடைசிப் பிள்ளை என்பதால் என் மீது செல்லம் அதிகம். என் அண்ணன் ஆன்மீக விஷயத்தில் மிகவும் தீவிரமானவர். தினமும் காலை மாலையென பூஜைகளை மேற்கொள்வார். முரட்டுத்தனமும் அதிகம். சமயங்களில் அவரிடம் அடி கூட வாங்கியிருக்கின்றோம்.

சையத் கலீம் என்பவரின் துணிக்கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்து பூஜைகள் செய்வதை நிறுத்திவிட்டார் என் சகோதரர். இதனால் என் அம்மாவிற்கும், அவருக்குமிடையே பெரிய அளவிலான வாக்குவாதங்கள் நடைபெறும். அவருடைய நடவடிக்கைகளும் மாற ஆரம்பித்திருந்தன. என் சகோதரர் இப்போது அதிக பொறுப்பானவராக மாறியிருந்தார். மென்மையாக பேசவும் செய்தார். நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய இந்த திடீர் மாற்றம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. தினமும் என் அம்மாவிடம் விவாதிப்பார். ஈஸ்வரனுக்கு எதற்கு மனைவி?, சர்வ வல்லமை படைத்த ஈஸ்வரனுக்கு எதற்கு குடும்பம், மகன்கள்?, இறைவன் அவ்வளவு வலிமையானவன் என்றால், விநாயகரின் தலையை ஏன் ஈஸ்வரனால் திரும்ப கொண்டுவர முடியவில்லை?...

இப்படியான அவருடைய கேள்விகளால் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

என் அண்ணனது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். தினமும், சில நிமிடங்கள் தன் அறைக்குள் நுழைந்து பூட்டிக்கொள்வார். உள்ளே என்ன செய்துக்கொண்டிருக்கின்றார் என்பதை அறிய விரும்பினேன். ஒருநாள், அவர் வெளியே சென்றிருந்த நேரம், அவரது அறைக்குள் சென்று, எதையாவது மறைத்து வைத்திருக்கின்றாரா என்று தேட ஆரம்பித்தேன். அப்போது கையில் அகப்பட்டது ஒரு டைரி. அதனைத் திறந்தேன். உள்ளே இருந்த எந்த வார்த்தையும் எனக்கு புரியவில்லை, ஒரே ஒரு வார்த்தையை தவிர. அது நமாஸ் (தொழுகை) என்ற வார்த்தை.

அன்று மாலை இது குறித்து என் சகோதரரிடம் கேட்க நினைத்தேன். அதற்கேற்ப, என் அம்மாவும் சகோதரியும் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த டைரி குறித்தும், அவருடைய இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்தும் கேட்டேன்.

என் சகோதரர் கூற ஆரம்பித்தார். ஆதாம், ஏவாள், இப்லீஸ் என்று விளக்க ஆரம்பித்தார். இந்த சிலை வணக்கங்கள் தவறென்றார். இவை மனிதனை நேரான பாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கின்றன என்று கூறினார்.

இப்போது நான் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். எப்படி மனிதனால் இறைவனின் உருவத்தை கற்பனை செய்யமுடியும்? வெற்று கண்களால் நம்மால் ஒரு குறிப்பிடத்தக்க தூரம் வரை வானத்தை பார்க்க முடியும். அதற்கு மேலாக பார்க்க நம்மால் முடியாது. நம் கண்களுக்கு அவ்வளவுதான் வரையறை. அது போல, நம் மனதிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க எல்லை இருக்க வேண்டும். நம்மால் அந்த வரையறையை வைத்துக்கொண்டு இறைவனின் உருவத்தை கற்பனை செய்ய முடியாது.

என்னுடைய ஆய்வுக்கு பிறகு, இறைவனுக்கான இந்த உருவங்கள், மனிதர்களின் கற்பனையால் உருவானவை என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒருநாள், என் சகோதரர் வேலை செய்துக்கொண்டிருந்த சையத் கலீம் அவர்களின் கடைக்கு சென்றேன். அங்கே கலீம் அவர்களின் சகோதரர் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார். அது அப்துல்லாஹ் யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு. அல்-கஹ்ப்f என்ற அத்தியாயத்தில் இருந்து நான் வாசித்த வசனம் என்னை யோசிக்க வைத்தது. 'கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும், இறைவனின் வார்த்தைகளை எழுதி முடிக்க முடியாது' என்று கூறியது அந்த வசனம்.

இறைவன் அவ்வளவு போற்றுதலுக்கு உரியவனா? இந்த வசனத்தை பிரதிபலிக்க ஆரம்பித்தேன். மனிதனின் படைப்பு, உயிரினங்கள், இந்த பூமி என்று இவை அனைத்து குறித்தும் பிரதிபலிக்க ஆரம்பித்தேன். ஆம், அந்த வசனம் கூறுவது உண்மைதான். எனக்குள் தெளிவு பிறக்க ஆரம்பித்தது.

இஸ்லாத்தை பின்வற்றுவதென முடிவெடுத்தேன். இதனை என் குடும்பத்தில் யாரிடமும் கூறவில்லை. இந்த இடைநேரத்தில், இஸ்லாம் குறித்த சரியான புரிதலை என் குடும்பத்தாரிடம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார் என் சகோதரர். அவர்களிடம் இஸ்லாம் குறித்து பல தலைப்புகளில் பேசுவார், விளக்க முயற்சிப்பார். அவருடைய உரையாடல்களை உற்று கவனிப்பேன். எனக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்தது. டிப்ளமா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, இனி என்னுடைய வாழ்வை ஒரு முஸ்லிமாக தொடர வேண்டுமென்று முடிவெடுத்தேன். வீட்டில் நடந்த பூஜைகளை புறக்கணிக்க ஆரம்பித்தேன்.

'ஒரு பெண்ணாக எப்படி வீட்டிலிருந்து வெளியேறுவது?'
'ஒரு பெண் என்பதால், உண்மையை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், பின்பற்றுவதிலிருந்தும் பின்வாங்க வேண்டுமா?.
...கூடாது' - இதுப்போன்ற எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.
இந்த கால கட்டத்தில் என்னுடைய சகோதரியும் இஸ்லாம் குறித்து தெளிவுபெற ஆரம்பித்தார். ஒரு விநாயகர் சதுர்த்தியின் போது, நாங்கள் மூவரும் வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களை எதிர்க்க ஆரம்பித்தோம். எங்களுடைய நடவடிக்கைகளை என் தாய் கண்டித்தார். கடுமையான வாக்குவாதங்களுக்கு பிறகு எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார்.

நாங்கள் வெளியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார் எங்கள் சகோதரர். சையத் கலீம் அவர்களின் கடையில் வேலை செய்த குர்ஷித் பாய் என்பவர் நாங்கள் தங்கிக்கொள்ள அவருடைய ஸ்டோர் ரூமை சில நாட்களுக்கு கொடுத்துதவ முன்வந்தார். என்னுடைய சகோதரி கடைசி நேரத்தில் எங்களுடன் வருவதில் இருந்து பின்வாங்கினார். ஆனால் நான் உறுதியாக இருந்தேன், அல்ஹம்துலில்லாஹ். என்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் அம்மா. தங்க நகைகளும், சிறந்த வரன் பார்த்து திருமணம் செய்து தருவதாகவும் கூறினார். எனக்கு இவையெல்லாம் தேவையில்லை என்று உறுதிப்பட தெரிவித்துவிட்டேன்.

அன்று மாலை, நானும் என் சகோதரரும் வீட்டிலிருந்து வெளியேறினோம். என் அண்ணனிடம் அப்போது இருந்ததோ நூறு ரூபாய் மட்டுமே. அல்ஹம்துலில்லாஹ், ஆனாலும் எங்களுக்கு அப்படியொரு துணிச்சலை இறைவன் கொடுத்திருந்தான். வீட்டிலிருந்து வெளியேறிய போது நான் இறுதியாண்டு டிப்ளோமா படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரியில் என்னை சந்தித்த என் அம்மா, பாட்டியை சந்திக்க சொல்லி கேட்டுக்கொண்டார். பாட்டி வீட்டிற்கு சென்றேன்.

'நீ முஸ்லிமாகி விட்டாயல்லவா?', என் பாட்டி கேட்டார்.
'ஆம்', பதிலளித்தேன்.
'நீ கிருத்துவராகவோ அல்லது வேறு எந்த மதத்தையும் வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள். ஆனால் முஸ்லிமாக வேண்டாம். அவர்கள் மோசமாவர்கள்'.
'உங்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியவில்லை, அதனால் தான் இப்படி பேசுகின்றீர்கள்'.
என்னை ஒரு அறையில் அடைத்து வைக்க முயற்சித்தார்கள். 'என்னால் உங்களுடன் வாழ முடியாது' என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தப்பிவந்துவிட்டேன். அன்றைய தினத்தில் எனக்கு அப்படியொரு வலிமையையும், துணிச்சலையும் கொடுத்திருந்தான் இறைவன், அல்ஹம்துலில்லாஹ்.

காவல்துறையிலும், கல்லூரி முதல்வரிடத்திலும் புகார் கொடுப்பேன் என்று மிரட்டினார் என் அம்மா. ஆனால் நாங்கள் எதற்கும் மசியவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தோம். நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, வேறொரு நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் சகோதரர் அந்த வேலையை கைவிட்டார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு (கூட) அந்த வேளையில் போக முடியவில்லை என்பதே காரணம்.

ஒரு சிறிய இடத்தில் வாழ ஆரம்பித்தோம். சிறிய ஸ்டவ், ஒரு விரிப்பு (பாய்), சில சமையல் பாத்திரங்கள் - இவைதான் எங்களிடம் அப்போது இருந்த பொருட்கள். எங்களுடைய துணிமணிகளை தரையில் வைத்துக்கொள்வோம். புத்தகங்களை தலையணைகளாக பயன்படுத்திக்கொள்வோம். என்னுடைய துப்பட்டா தான் தரைவிரிப்பாக இருந்தது. சாப்பிடும் தட்டுக்களை கண்ணாடிகளாக உபயோகப்படுத்தி தலை வாரிய அந்த நாட்கள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ், அவை என் வாழ்வின் மிக அழகான நாட்கள். இவ்வளவு சோதனைகளை அளித்து எங்களை கெளரவப்படுத்தியதற்காக இறைவனுக்கு என்றென்றும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

மதிய உணவோடு என்னை சந்திக்க கல்லூரிக்கு வருவார் என் அம்மா. வீட்டிற்கு திரும்ப வேண்டுமென்று சொல்லுவார். நான் மிகுந்த பசியுடன் இருந்தாலும், அந்த உணவை வாங்க மறுப்பேன். சுமார் 8-12 மாதங்கள் வேலையில்லாமல் இருந்தார் என் சகோதரர். சில நேரங்களில், வாழைப்பழங்கள் மற்றும் சில ரொட்டி துண்டுகளுடன் எங்கள் நாட்களை கழித்திருக்கின்றோம். விழித்திருந்தால் பசிக்கும் என்பதால், சில நாட்களில், கல்லூரியில் இருந்து திரும்பியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உறங்க சென்று விடுவேன்.

இன்று என்னுடைய வாழ்வை திரும்பி பார்க்கின்றேன். இறைவனின் மகத்தான கிருபை மட்டும் இல்லையென்றால் எங்களால் இத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்க முடியாது. அல்ஹம்துலில்லாஹ், தற்போது தொலைத்தொடர்பு (டெலிகாம்) துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்கின்றேன். என் சகோதரர், ஒரு பெரிய நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகின்றார்.

என் முஸ்லிம் நண்பர்களை கிண்டல் செய்த பள்ளி நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். இன்றோ, அவன் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கின்றான் இறைவன். தினமும் அவனை ஐந்து முறை தொழ வைத்திருக்கின்றான்.

பல்வேறு சோதனைகளை கொண்டு எங்களுக்கு பயிற்சியளித்து தூய்மைபடுத்தியிருக்கின்றான் இறைவன். இதனை கண்களில் கண்ணீர் ததும்ப நினைத்துப் பார்க்கின்றேன். 'இறைவன் யாரை அதிகம் நேசிக்கின்றானோ அவர்களுக்கு அதிக சோதனைகளை கொடுக்கின்றான்' என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை நினைவு கூறும்போதெல்லாம் இறைவன் எங்களுக்கு இன்னும் சோதனைகளை கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம். அதனை மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றோம்"

ஸுப்ஹானல்லாஹ்....
இவர்களின் அனுபவத்தை கேட்கும் போதே புது உற்சாகம் பிறக்கின்றது. இவர்களுக்கு மிகச் சிறந்த நற்கூலியை இன்மையிலும் மறுமையிலும் இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

சகோதரி ஃபிர்தவ்ஸ் அவர்களுக்கு ஒரு அழகான, நிறைவான வாழ்வை இறைவன் கொடுத்திருக்கின்றான். ஒரு பெண், பின்பு ஆண் இரட்டையர்கள் என்று மூன்று குழந்தைகளை இறைவன் சகோதரிக்கு அருளியிருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.

இறைவனின் சோதனைகள் நமக்கான பயிற்சிகள், நம்மை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் என்றெண்ணி பொறுமை காப்போம். இன்ஷா அல்லாஹ்.
இறைவா, எங்களுக்கு எவ்வளவு சோதனைகளை கொடுத்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் பொறுமையையும், வலிமையையும் தந்தருள்வாயாக...ஆமீன்.
அல்லாஹ் எந்தவொரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவு சோதனையை கொடுப்பதில்லை. (குர்ஆன் 2:286)
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக....ஆமீன்
.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to: சகோதரி அன்னு.
source: www-ethirkkural-com
குளோபல் இஸ்லாம் - GI


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" Empty Re: "இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை"

Post by நண்பன் Fri 27 Jul 2012 - 15:23

மாஷா அல்லாஹ் இறைவன் அவர்களைப்பொருந்திக்கொண்டான் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" Empty Re: "இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை"

Post by *சம்ஸ் Tue 4 Dec 2012 - 20:28

நண்பன் wrote:மாஷா அல்லாஹ் இறைவன் அவர்களைப்பொருந்திக்கொண்டான் :];:
@. @. @. :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

"இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" Empty Re: "இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum