Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குவாண்டனமோ சிறை!
2 posters
Page 1 of 1
குவாண்டனமோ சிறை!
குவாண்டனமோ சிறை! உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில் நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பே சிறை என்று அழைக்கப்படும் இந்த சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது அமெரிக்கா!
குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரிக்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் குவாண்டனாமோ
சிறையிலடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகிறது அமெரிக்கா.
இங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஆப்கானைச் சேர்ந்த 89 வயது கிராமவாசியும், 12 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவர்.
89 வயது முதியவர் மீதான குற்றச்சாட்டு என்னவென்றால்…. அவரது விட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான்! இவருக்கு தீவிரவாதிகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, உள்ளூர் தாலிபான் தலைவர்களைப் பற்றி தெரிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் அந்த 12 வயது சிறுவனை கைது செய்து இந்தச் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு கட்டத்தில் கடும் மனநிலை பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும், இன்னும் பலரோ தற்கொலை முயற்சிகளைக் கூட மேற்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு கடும் சித்திரவதைகள் இங்கு நடந்துள்ளன.
கைதிகளை நிர்வாணமாக்கி நாய்களை ஏவி, அவர்களை கடித்துக் குதற வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். தீவிரவாதிகளை விசாரணை செய்கின்றோம் என்கிற பெயரில் அவர்களை பல வகையான, கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகின்றது அமெரிக்கா.தண்ணீரில் மூழ்கடித்தல், கைதிகளின் அறைகளில் pepper spray அடித்து மூச்சி திணறடிப்பது, மூக்கின் வழியாக திரவத்தை பலமுறை செலுத்தி மயக்கமடைய செய்வது, ஆடையின்றி நிர்வாணமாக்குதல், முகத்தை பல நாட்களுக்கு மூடி வைத்தல், கேவலமான பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குதல் போன்ற சித்திரவதை பட்டியலில் தற்பொழுது இசையும் சேர்ந்து கொண்டது.
கைதிகளை சித்திரவதை செய்வதற்கான ஒரு முறையாக, இடைவிடாது இசையை கைதிகளின் செவி கிழியும் சத்தத்திற்கு சற்று குறைவான சத்தத்தில் கிட்டத்தட்ட 72 மணிநேரம் இசைக்க வைக்கின்றனர். இந்த சித்திரவதைக்காக அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவினரின் இசை பயன்படுத்துவது தெரிந்ததை அடுத்து அந்த இசைக்குழுவினர் அமெரிக்க அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.குவாண்டானமோ பே, டிக் சென்னியின் அமெரிக்காவாக இருக்கலாம், ஆனால் என்னுடைய அமெரிக்கா இதுவல்ல, என்னுடைய இசை மனிதர்களை சித்திரவதை செய்வதற்காக பயன்படுத்தப்படுவது என்னை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது என்று Race against Machines இசைக் குழுவின் Morello கூறினார்.
குவாண்டனமோ சிறைச்சாலையில் கைதிகள், தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் அடித்துத் துவைக்கப்படும், கொடூரமான முறையில் துன்புறுத்தப் படும் செயல்கள் வரலாற்றாசிரியர்களால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே
விசாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிராண்டன் நீலி, பயங்கரவாதிகளை "உரிய" முறையில் விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் ஆர்வமுள்ளவர். குவாண்டனமோ சிறைச்சாலை தனது முதல் கைதியை வரவேற்றபோதே அங்கு பணியில் அமர்த்தப் பட்டவர்.
"பெரும் பயங்கரவாதிகளை எதிர்நோக்கியிருந்த தனது ஆவலும் எதிர்பார்ப்பும், குவாண்டமோவினுள் கொண்டு வரப்படும் அப்பாவிகளைக் கண்டு பொய்த்து விட்டது" என்று கூறுகிறார் நீலி.
ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “குவாண்டனமோ சிறைச்சாலையை மூடுவேன். அங்கு சித்திரவதைகள் நடைபெறுகின்றன என வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. ஓராண்டிற்குள் அந்தச் சிறைச்சாலை மூடப்படும்” என்றார்.
ஆனால் இன்றுவரை அதற்கான முயற்சிகளில் எள் முனையளவு கூட முன்னேற்றம் இல்லை. குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் நிரபராதிகள் என்று தெரிந்தும், அவர்களை நேர்மையான முறையில் விடுதலை செய்யாமல் சிறைக் கூடத்தில் சித்திரவதை செய்து வரும் அமெரிக்கா, அநீதியையும் அராஜகத்தையும் மட்டுமே செய்யும் அமெரிக்க வெட்கமே இல்லாமல் மனித உரிமை குறித்து பேசுவது அயோக்கியத்தனம்தானே?
யா அல்லாஹ்! இந்த சகோதரர்களுக்கும் இதுபோல உலகில் பல்வேறு சிறையில் அடைபட்டு துன்பப்பட்டு கொண்டுஇருக்கும் சகோதரர்களுகக்கும் உன் புறத்தில் இருந்து உதவியை விரைந்து அனுப்புவாயாக !அவர்கள் விடுதலை அடைய செய்வாயாக !அவர்களுக்கு இம்மைளும் மறுமைலும் நற்பாக்கியங்களை கொடுப்பாயாக!
நன்றி : முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குவாண்டனமோ சிறை!
யா அல்லாஹ்! இந்த சகோதரர்களுக்கும் இதுபோல உலகில் பல்வேறு சிறையில் அடைபட்டு துன்பப்பட்டு கொண்டுஇருக்கும் சகோதரர்களுகக்கும் உன் புறத்தில் இருந்து உதவியை விரைந்து அனுப்புவாயாக !அவர்கள் விடுதலை அடைய செய்வாயாக !அவர்களுக்கு இம்மைளும் மறுமைலும் நற்பாக்கியங்களை கொடுப்பாயாக!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum