Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சதாம் உசேன்
5 posters
Page 1 of 1
சதாம் உசேன்
சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி (அரபு மொழி: صدام حسين عبد المجيد التكريتي), (பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006) முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.
ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.
அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான்-ஈராக் போர் (1980–1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.
மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.
எதிரிகளின் பார்வையில் அவர் ஒரு அரக்கன், சர்வாதிகாரி. எதிரிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுவிடும் சுபாவம் உடையவர். ஆனாலும், ஈராக் மக்களுடைய ஆதரவுடன், சுமார் 20 ஆண்டுகள் ஆட்சியை நடத்திய சதாம், தற்போது அமெரிக்கப் படைகளின் பிடியில். அவருடைய வாழ்க்கையை ஒருமுறை அலசிப் பார்க்கும்போது, நமக்கு கிடைத்தவை:
குழந்தை பருவம் :
1937 ஏப்ரல் 28 தேதியன்று திக்ரித்திற்கு பக்கத்திலுள்ள “அல்_ஒளஜா” என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார். அவருடைய குழந்தை பருவம் பல கஷ்டங்களுடன் இருந்தது. தாய் சுபா கர்ப்பமாக இருக்கும்போதே, அப்பா இறந்தார். சதாம் பிறந்த பிறகு, சுபா மற்றொருவரை மணக்க, அந்த மாற்றான் தந்தை சதாமை பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். சிறு வயதிலேயே ஆடுகளை மேய்க்கவும், திருடவும் சதாமை அனுப்புவார் அந்த மாற்றாந்தந்தை. இதனால் சதாம் தன்னுடைய 10ஆவது வயதில், வீட்டிலிருந்து வெளியேறி, தாய் மாமன் கைருல்லா தல்பாவிடம் தஞ்சம் புகுந்தார்.
படிப்பு :
சதாம் உசேனுக்கு பத்து வயது வரைக்கும் “அ, ஆ…” கூட தெரியாது. மாமன் கைருல்லாதான் சதாமுக்கு படிப்பு சொல்லித் தந்தார். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் சதாம் படிப்பு நடந்தது. ஈஜிப்ட் நாட்டில் தலைமறைவாக வாழும்போது, சட்டப் படிப்பை முடித்தார். அங்குதான் ஸ்டாலின் பற்றி முழுமையாகப் படித்தார். அவருடைய மேசையிலும், பீரோக்களிலும் ஸ்டாலின் பற்றிய புத்தகங்கள்தான் அதிகமாக இருக்குமென்று சொல்வார்கள். அரபு தேசீய வாதத்தை சதாமிற்கு சொல்லிக் கொடுத்தது மாமன் கைருல்லா தலாஃபாதான் என்பார்கள்.
குடும்பம்:
சதாம் எத்தனை பேரை கல்யாணம் செய்து-கொண்டாரென்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருப்பதாக உலகத்துக்குத் தெரியும். மகன்கள் காஸே உசேன், உதய் உசேன் சதாமுக்கு இடது, வலது கைகள் போன்றவர்கள். அமெரிக்கப் படையெடுப்பின்போது, இவர்கள் கொல்லப்பட்டனர். மருமகன் உசேன் கமால், பல விஷயங்களில் மாமாவுக்கு துணையாக இருந்தார். ஆனால், குடும்பத் தகராறில் மகள்கள், மருமகன்களும் ஜோர்டான் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.
சுபாவம் :
ஆரம்பத்திலிருந்து சதாம் உசேன் போராட்ட குணம் உடையவர்தான். அந்த போராட்ட குணத்துடனே, கொடூர குணமும் இருந்தது. தன்னை எதிர்த்தவரை ஈவு இரக்கமின்றி கொல்வதுதான் சதாமின் ஸ்டைல். தன்னை அதிபர் பதவியிலிருந்து விலகச் சொன்ன சுகாதார அமைச்சரைக் கொன்றதும், புரட்சி செய்த குர்த்துக்களின் மேல் இராசாயன ஆயுதங்களை பிரயோகித்ததும் இந்த கொடூரம்தான். சதாமுக்கு சிறு வயதலிருந்தே மேற்கத்திய நாடுகள் என்றால் அறவே பிடிக்காது. அரபு நாடுகளையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டு வரவேண்டுமென்பது அவருடைய கனவு.
அரசியலில்…
மாமன் கைருல்லாவிடம் அரசியலை பற்றி கற்றுக் கொண்ட சதாம், 1957_ல் பாத் கட்சியில் சேர்ந்தார். சுயநலத்துடன், நம்பியதைத் துணிச்லாக செய்யும் யுக்தியுடன், பாத் கட்சியின் துணைத் தலைவராக வளர்ந்தார். 1979_ல் ஈராக் நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார். அன்றிலிருந்து 2-0 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். ஈராக்கில் பாத் கட்சியை பட்டித்தொட்டியிலும் பரப்பவிட்ட புகழ், சதாம் உசேனைத்தான் சேரும்.
புரட்சிகள்:
1956 ஈராக் மன்னர் ஃபைஜல்_2க்கு எதிரான புரட்சியில் சதாம் பங்கேற்றார். 1959_ல் ஈராக் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜெனரல் காசிம்மை கொல்ல முயற்சி செய்து, அந்த முயற்சியில் தோல்வியுற்றார். அப்போது தன் காலில் பாய்ந்த புல்லட்டை கத்தியுடன் அவரே அகற்றினார். இருந்தாலும், அவருக்கு ஒரு தலைவனாக மதிப்பு கிடைத்தது. பிறகு கைரோவுக்கு ஓடிப்போனார். 1963_ல் தன் சொந்த நாட்டுக்குள் நுழைந்தார். அதிபரான பிறகு, ஈராக்கில் ஷியாக்களின் புரட்சியை வடக்கு ஈராக்கில் குர்த்துக்களின் புரட்சியை இரும்பு கரங்களுடன் அடக்கினார்.
யுத்தங்கள்:
சதாம் உசேன் அரபு நாடுகளுடன் தோழமையுடன்தான் இருந்தார். ஆனால், அரபு நாடுகள்தான் அவரை தூரமாக வைத்திருந்தன. பக்கத்திலுள்ள குவைத் நாட்டின் மேல் படையெடுத்து, அந்நாட்டிற்கு எதிரியானார். சௌதீ அரேபியாவுடனும் வைரம்தான். சிரியா, ஜோர்டன் நாடுகளுக்-கு நல்ல நண்பன். இஸ்ரேல் யூத ஐக்கிய வாதமென்றால், எரிச்சல். அமெரிக்கா, இங்கிலாந்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிபரான ஓராண்டிற்குள்ளேயே, ஈரானுடன் போர் தொடங்கினார். அந்தப் போர் 8 ஆண்டுகள் தொடர்ந்தது. 1990 ஆகஸ்ட் 2ம் தேதியன்று சதாம் படைகள் குவைத் நாட்டை ஆக்கிரமித்தன.
1991_ல் அமெரிக்கப் படைகள் தோழமை நாடுகளின் உதவியுடன் ஈராக்கின் மேல் படையெடுத்து குவைத் நாட்டை மீட்டுவிட்டன. ஆனால், அந்தப் போரினால் ஈராக் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. இந்த ஆண்டு மார்ச் 20 தேதியன்று, அமெரிக்கப் படையெடுப்பின் காரணமாக சதாம் தலைமறைவானார்.
சதாம் உசேன் எப்படி பிடிபட்டார்?!
எங்கே : சொந்த ஊர் திக்ரிட் பட்டணத்திற்கு 16 கி.மீ. தொலைவிலுள்ள அத்வரில்…. தன்னுடைய பண்ணை வீட்டின் சுரங்கத்தில் தூங்கிக் கொண்டு.
எப்போது : சனிக்கிழமை இரவு 11 மணி அளவில்.
எப்படி : கடந்த பத்து நாட்களாக அமெரிக்கா படைகள் சதாம் பந்துக்களை இண்டராகேட் செய்து வருகின்றன. அவர்கள் கொடுத்த தகவலின்படி, அங்கு சென்ற அமெரிக்க படைகளுக்கு சில கற்கள், மண்ணும் தெரிந்தன. அந்த மண்ணை எடுத்தபோது, அங்கு ஒரு குழி தெரிந்தது. அங்கு 7_8 அடி ஆழத்தில், சதாம் தூங்கிக் கொண்டிருந்தார். எந்தவிதமான சத்தமும் செய்யாமல், அமெரிக்க படைகள் சதாமை பிடித்தன.
சதாம்தானா? : ஈராக்கின் முன்னாள் வெளியுறவுத்துரை அமைச்சர் தாரீக் அஜீஜ் சதாம் உசேனை அடையாளம் கண்டுகொண்டார். வாயிலிருந்து சாம்பில்ஸ் எடுத்து பிடிபட்டவர் சதாம்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சதாம் உசேன்
உங்களின் அருமையான ஆளமான கருத்துக்கள் பொருந்திய மறுமொழியை எதிர்பார்க்கிறேன் பாஸ். :!#: :!#:kalainilaa wrote: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சதாம் உசேன்
நல்லவரோ கேட்டவரோ மக்கள் மனதில் இடம் பெற்றவர்.
அமெரிக்காவிற்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியவர்.
அமெரிக்காவிற்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியவர்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சதாம் உசேன்
அறிந்திட நினைத்த தகவல் நன்றி அண்ணா
##*
##*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சதாம் உசேன்
@. @.ahmad78 wrote:நல்லவரோ கேட்டவரோ மக்கள் மனதில் இடம் பெற்றவர்.
அமெரிக்காவிற்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியவர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சதாம் உசேன்
ஜார்ஜ் புஸ் தொடுத்த ஆக்கிரமிப்பு யுத்தத்தால் இதுவரை
ஈராக்கில் சுமார் 6 லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
148 ஷியா இன மக்களை கொன்று குவித்த வழக்கில் சதாமிற்கு
மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மரணதண்டனையை
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி", "ஈராக்கியர்களது
வாழ்வில் ஒரு மைல்கல்" என கொண்டாடுகிற மேற்கத்திய உலகம்
பல கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது.
ஒரு நாட்டை சீரழித்து சின்னா பின்னமாக்கி 6 லட்சம் மக்களை
கொன்றவர்களுக்கு எப்போது தண்டனை?
இந்த சர்வதேச கொலைக் குற்றவாளிகளை எந்த நீதிமன்றத்தில்
விசாரிப்பது?
-
நன்றி: இணையம்
ஈராக்கில் சுமார் 6 லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
148 ஷியா இன மக்களை கொன்று குவித்த வழக்கில் சதாமிற்கு
மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மரணதண்டனையை
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி", "ஈராக்கியர்களது
வாழ்வில் ஒரு மைல்கல்" என கொண்டாடுகிற மேற்கத்திய உலகம்
பல கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது.
ஒரு நாட்டை சீரழித்து சின்னா பின்னமாக்கி 6 லட்சம் மக்களை
கொன்றவர்களுக்கு எப்போது தண்டனை?
இந்த சர்வதேச கொலைக் குற்றவாளிகளை எந்த நீதிமன்றத்தில்
விசாரிப்பது?
-
நன்றி: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இவைபோல - சிறுவர் பாடல் - கலைமாமணி அ.உசேன்
» வீரங்கொள் - சிறுவர் பாடல் - கலைமாமணி அ.உசேன்
» நல்லவனாக மாறிட- சிறுவர் பாடல் - கலைமாமணி அ.உசேன்
» சதாம் இங்குதான் இருக்கார்
» சதாம் ஹுசைனின் பிறந்த தினம் இன்று
» வீரங்கொள் - சிறுவர் பாடல் - கலைமாமணி அ.உசேன்
» நல்லவனாக மாறிட- சிறுவர் பாடல் - கலைமாமணி அ.உசேன்
» சதாம் இங்குதான் இருக்கார்
» சதாம் ஹுசைனின் பிறந்த தினம் இன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum