சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Khan11

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR

Go down

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Empty செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR

Post by gokul2500 Wed 12 Dec 2012 - 8:56

செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை
சுமார் 2000 ஆண்டுகளுக்கு
முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும்
கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து
வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல
பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர்,
ஆற்காடு,ஆரணி,காமக்கூர்,தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம்,
திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக
வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர்
வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி
வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம்
என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான
ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும்
கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர்
என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த
இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான
வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும்
புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும்
நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில்
முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில்
உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர்
என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின்
சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால்,
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள்
உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும்
நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும்
மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின்
மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை
என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள்
தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி
எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள்
பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி
வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே
தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு
நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில்
புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த
வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக்
கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச
கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது
அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள்
சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத்
தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும்
இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம்.
போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை
இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட
நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு
கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின்
மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு
என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில்
புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும்
வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது
விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா!
என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர்
சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த
இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும்,
இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட
ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த
அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி
பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த
திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே
கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும்
கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு)
படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப்
பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத்
தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும்,
விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம்
நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின்
சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை
துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து
தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை
நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும்
உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட
பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by
Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce:
Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian
Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச்
சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப்
புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப்
புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும்
செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின்
ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும்
முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல
சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல்
இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப்
புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை
நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம்
தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில்
- அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில்
ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் -
தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும்,
தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல்
நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள்
தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும்,
இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு
சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில்
சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி
முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு :
இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில்
(குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது.
இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை
நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)


Labels: kaikolar, muthaliyar, sengunthar, கைகோளர், கைக்கோளர், செங்குந்தம், செங்குந்தர், முதலியார்
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Devikapuramperiyanayagi

gokul2500
gokul2500
புதுமுகம்

பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10

http://www.eegarai.net/t92047-topic

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum