சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Khan11

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

5 posters

Go down

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Empty நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

Post by Muthumohamed Tue 18 Dec 2012 - 17:50

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?


33:50. நபியே! (முஹம்மதே!) உமது மனை வியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும்
உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித் துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும்.(மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

இவ்வசனத்தில் (33:50) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் இறைவேதம் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் ஏற்றுக் கொள்ள எண்ணற்ற சான்றுகள் குர்ஆனில் இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் முஸ்லிமல்லாத மக்களுக்கு உறுத்தலாகவே அமைந்துள்ளது.
அதிகமான பெண்களுடன் வாழ்வதற்காக முஹம்மது நபி தமக்கு வசதியான இந்தச் சட்டத்தை உருவாக்கிக்கொண்டார் என்று சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிறப்பாக இன்னும் பல சட்டங்கள் உள்ளன. அவை யாவும் அவர்களுக்கு மட்டும் அதிகச் சிரமத்தைச் சுமத்தக் கூடியவையாக உள்ளன.

* ஸகாத் எனும் அரசுக் கருவூலத் திலிருந்து தாமும் தமது குடும்பத் தினரும் எதையும் பெறுவது ஹராம் என்று அவர்கள் பிரகடனம் செய்தது.

* உலகம் உள்ளளவும் தமது பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்று அவர்கள் அறவித்தது.

* தமக்குச் சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமை கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட்டுச் சென்றது.

* தாமும் தமது பரம்பரையினரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்று சட்டம் போட்டது.

* மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையைக் கடமையாக்கிக் கொண்டது.

* இரவு பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்தச் சிரமத்தைத் தாம் மட்டும் மேற்கொண்டது.

இப்படி பல விஷயங்களில் அவர்கள் தமக்கு மட்டும் சிறப்புக் சட்டமாக அறிவித்தவை சலுகை களாக இருக்கவில்லை. சிரமத்தைத் தான் தம் மீது சுமத்திக் கொண்டார்கள்.
மேலும் தம்மை இறைவன் கண்டித்ததாக அவர்கள் அறிவித்த பல வசனங்கள் அவர்களின் கவுரவத்தைப் பாதிக்கக் கூடியவை என்றாலும் அதையும் மக்களிடம் சொன்னார்கள்.
இந்த விஷயங்களைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது ஏன் என்பதைப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமத்தின் காரணமாகத் திருமணம் செய்யவில்லை என்று நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும். ஏனெனில், அவர்கள் பிறந்தது முதல் தம்மை இறைத்தூதர் என்று அறிவிக்கும் வரை சொந்த ஊரிலேயே வாழ்ந்தார்கள்.

எந்தவொரு மனிதனும், தன்னுடைய நாற்பது வயது வரை அப்பழுக்கில்லாமல் வாழ்வது சாத்தியமற்றதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் தம்மை இறைத்தூதர் என்று மக்களிடம் சொன்ன போது, அதை நிரூபிப்பதற்கான முக்கியச் சான்றாக, தம்முடைய முந்தைய வாழ்க்கையைத் தான் முன்வைத்தார்கள்.
"உங்களுடன் பல ஆண்டுகள் நான் வாழ்ந்திருக்கிறேன். என்னிடம் தரங்கெட்ட எந்தச் செயலையாவது நீங்கள் கண்டதுண்டா? 40 ஆண்டுகள் கட்டுப்பாடான, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த நான் பொய் சொல்வேனா?' என்ற அடிப்படையில் தான் தமது நம்பகத் தன்மையை மக்களிடம் நிரூபித்தார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்களை ஆரம்பம் முதல் கண்டு வந்த அந்த மக்கள், இதை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசியதில்லை. நபிகள் நாயகத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் கூட, புது மார்க்கம் என்பதற்காக எதிர்த்தார்களே தவிர, நபிகள் நாயகத்தின் நடத்தையில் ஐயம் எழுப்பி யாரும் எதிர்க்கவில்லை.

பாலியல் குற்றங்களைச் செய்யத் தூண்டும் இளம் பருவத்தில் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு, 60 வயதில் திடீரென்று பெண் மோகம் ஏற்பட்டிருக்குமா என்று சிந்தித்தாலே நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணங்கள் செய்ததற்குக் காமம் காரணமல்ல என்பதை விளங்கலாம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) தமது 25வது வயதில் தம்மை விட வயதில் மூத்தவரான கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். தமது 50 வயது வரை அந்த ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்ந்தார்கள்.

இல்லற சுகம் அதிகம் தேவைப்படு கின்ற 25 முதல் 50 வயது வரையிலான கால கட்டத்தில் ஒரேயொரு மனைவியுடன் வாழ்ந்தவர் பெண் மோகம் கொண்டவராக எப்படி இருக்க முடியும்?
கதீஜா (ரலி) அவர்கள் மரணித்த பிறகு, தமது 50வது வயதில் தம்மை விட ஐந்து வயது அதிகமான, 55 வயதான ஸவ்தாவை மணந்தார்கள்.

பெண் மோகம் தான் திருமணத்திற்குக் காரணம் என்றால் 55 வயதுடைய ஒரு பெண்ணை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்.

இதன் பின்னர் 6 வயதுச் சிறுமி யான ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள். இத்திருமணத்திற்கும் பெண் மோகத்தைக் காரணமாகக் கூற முடியாது. ஏனெனில் பெண் மோகத்தில் திருமணம் செய்பவர் உடனே அனுபவிக்கும் வகையில் தான் பெண்களைத் தேர்வு செய்வார். உடலுறவுக்குத் தகுதி பெறாத சிறுமியை யாரும் மணந்து கொள்ள மாட்டார்கள்.
இத்திருமணம் நடந்த பிறகும் ஆயிஷா (ரலி) அவர்கள் தமது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள். (சிறுமிகளைத் திருமணம் செய்வது தடுக்கப்படுவதற்கு முன் இத்திருமணம் நடந்தது.)
நபிகள் நாயகம் (ஸல்) மக்காவைத் துறந்து, மதீனா சென்ற பிறகு தான் ஆயிஷா (ரலி) பருவமடைகிறார்கள். அதன் பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவுடன் இல்லறம் நடத்தினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் உயிர் நண்பராக இருந்ததால் தமக்கும் நபிகள் நாயகத்திற்கும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியதன் பேரில் தான் ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்), தமது 56ஆம் வயதில் ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் நபிகள் நாயகத்தின் மற்றொரு உயிர் நண்பரான உமர் (ரலி) அவர்களின் புதல்வியாவார்.

ஹஃப்ஸா (ரலி) அவர்களது கணவர் உஹதுப் போரில் வீர மரண மடைந்ததால்
விதவையானார்கள்.
தமது விதவை மகளை நபிகள் நாயகம் (ஸல்) மணந்து கொண்டால் நபிகள் நாயகத்துடன் தமது உறவு பலப்படும் என்று விரும்பிய உமர் (ரலி) அவர்கள் வற்புறுத்தியது தான் இத்திருமணத்திற்கும் காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) தமது 56ஆம் வயதில் ஸைனப் பின்த் ஹுஸைமாவை மணந்தார்கள். இவர் அதற்கு முன்பு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு, மூவரும் அடுத்தடுத்து மரணித்ததால் விதவையாக இருந்தார்கள். ஏறக்குறைய நபிகள் நாயகத்தின் வயதை ஒத்தவராக ஸைனப் பின்த் ஹுஸைமா (ரலி) இருந்தார்கள். மூன்று கணவருடன் வாழ்ந்த, சுமார் 56 வயதுடைய ஒரு பெண்ணை, யாரேனும் பெண் மோகத்திற்காகத் திருமணம் செய்வார்களா?

அடிமையாக இருந்த ஸைத் என்பாரை, அன்றைய அரபுகளின் வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்கள். (தத்தெடுத்தல் பின்னர் தடுக்கப்பட்டு விட்டது.)
உயர்ந்த குலம் என்று கருதப்பட்ட தமது குலத்தைச் சேர்ந்தவரும், தமது மாமி மகளும், தமது பொறுப்பில் வளர்ந்தவருமான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை, முன்னாள் அடிமையான ஸைதுக்கு மணமுடித்து வைத்தார்கள். இதன் மூலம் அன்றைய அரபுகளிடம் இருந்த குலப் பெருமைக்கு சமாதி கட்டினார்கள்.

ஆனால் இவ்விருவருக்கும் ஒத்துப் போகவில்லை. இருவரும் இணைந்து வாழ்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மனைவியை விவாகரத்துச் செய்வதில் ஸைத் உறுதியாக இருந்தார். ஸைனப் (ரலி) 35வது வயதில் விவாகரத்துச் செய்யப்பட்டு, திக்கற்றவராக இருந்தார். எனவே அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள்.
இதற்கும் பெண் மோகத்தைக் காரண மாகக் கூற முடியாது. ஏனெனில் ஸைனபின் மீது அவர்கள் ஆசைப்பட்டிருந்தால் 18 முதல் 30 வயது வரை பெண்களின் அழகு பிரகாசிக்கும் கால கட்டத்தில் ஸைனபை மணந்திருப்பார்கள்.

தமது பொறுப்பிலிருந்த உறவுக்காரப் பெண்ணுக்குத் தாம் செய்து வைத்த திருமண வாழ்வு மகிழ்ச்சிகரமாக அமையவில்லையே என்ற அனுதாபமே இத்திருமணத்திற்குக் காரணமாக இருக்க முடியும்.

அடுத்ததாக, உம்மு ஸலமா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இவரது கணவர் அபூஸலமா (ரலி) மரணித்த பின் ஏழாவதாக இவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். உம்மு ஸலமாவை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்வதாகக் கூறிய போது, "நான் வயது முதிர்ந்தவளாக இருக்கிறேன்; என் வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. குழந்தை பெறும் வயதைக் கடந்து விட்டேன்'' என்று பதிலளித்தார்கள். இத்தகைய நிலையில் உள்ள ஒரு பெண்ணை, பெண் மோகத் திற்காக யாரேனும் மணப்பார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) தமது 59ஆம் வயதில் ஜுவைரிய்யா அவர்களை மணந்து கொள்கிறார்கள்.
பனூ முஸ்தலக் என்ற எதிரிகள் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்தார்கள். போரில் கைதிகளாகப் பிடிபட்டவர்களில் ஜுவைரிய்யாவும் இருந்தார். இவர் அக்கூட்டத்தின் தலைவருடைய மகளாவார். அன்றைய வழக்கப்படி போரில் கைது செய்யப்பட்டவர்கள் போராளி களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவார்கள். ஜுவைரிய்யா (ரலி), ஸாபித் பின் கைஸ் என்ற நபித்தோழருக்கு வழங்கப்பட்டார். அவரைப் பெற்றுக் கொண்ட ஸாபித் பின் கைஸ் (ரலி), "ஏழு வெள்ளிக் காசுகள் தந்து விட்டு நீ விடுதலையாகிக் கொள்'' என்று ஜுவைரிய்யாவிடம் தெரிவித்தார். ஜுவைரிய்யா, நபிகள் நாயகத்திடம் வந்து, "நான் சமுதாயத்தில் முக்கியப் பிரமுகரின் மகளாக இருக்கிறேன். எனவே எனக்காக ஏழு வெள்ளிக்காசுகள் கொடுத்து விடுதலைக்கு உதவுங்கள்'' என்று கேட்டார். அவ்வாறே அவரை விடுவித்து நபிகள் நாயகம் (ஸல்) மணந்து கொண்டார்கள். இத்திருமணமும் பெண் மோகத்திற்காக நடந்திருக்க முடியாது. ஏனெனில் ஜுவைரிய்யா அவர்கள் பெண் மோகம் கொண்டவர்களை ஈர்க்கும் வசீகரத்துடன் இருந்து, நபிகள் நாயகமும் அதில் ஆசைப்பட்டிருந்தால் அவரை ஸாபித்துக்குக் கொடுக்காமல் தாமே எடுத்துக் கொண்டிருப்பார்கள். மேலும் அன்றைய சமூகத்தில் இளம் பெண்கள் அதிக விலைக்கும் வயதானவர்கள் குறைந்த விலைக்கும் விற்கப்பட்டனர். ஜுவைரிய்யாவைப் பெற்றுக் கொண்ட ஸாபித் வெறும் ஏழு வெள்ளிக் காசுகளே கேட்கிறார். இவ்வாறு அற்ப விலையைப் பெற்றுக் கொண்டு அவர் விடுதலை செய்ய முன்வந்ததே ஜுவைரிய்யா அவர்கள் முதிய வயதுடையவராக இருப்பார் என்பதைச் சொல்கிறது.

அடுத்ததாக, தமது 60வது வயதில் உம்மு ஹபீபா அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது தந்தை முஸ்லிம்களின் எதிரிகளான மக்காவாசிகளுக்குத் தலைவராகத் திகழ்ந்தவர். உம்மு ஹபீபா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தந்தையின் கொடுமைக்கு ஆளானார்கள். எனவே தமது கணவர் அப்துல்லாஹ்வுடன் அபீசீனியாவுக்கு நாடு துறந்து சென்றார்கள்.
அதன் பின் இவரது கணவர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை விட்டு கிறித்தவ மதத்திற்கு மாறி விட்டார். இன்னொரு நாட்டில் நிற்கதியாக விடப்பட்டு, பெற்ற தந்தையை எதிர்த்து நிற்கும் தியாகப் பெண்மணிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அவரைத் தாமே திருமணம் செய்து கொள்வதாக நஜ்ஜாஷி என்ற அபீசீனிய மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) தகவல் அனுப்பினார்கள்.

உம்மு ஹபீபாவை நஜ்ஜாஷி, மதீனாவுக்கு அனுப்பி வைத்த பின் அவரை நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கும் பெண் மோகம் காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் 15 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகத்தைப் பிரிந்து உம்மு ஹபீபா, தம் கணவருடன் அபீசீனியாவிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். அவர்களது தோற்றமோ, அழகோ எப்படியிருக்கும் என்பது நபிகள் நாயகத்திற்குத் தெரியாது. நிற்கதியாக நிற்கும் ஒரு தியாகப் பெண்மணி என்பது மட்டும் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரியும். அதற்காகத் தான் அவரைத் திருமணமும் செய்தார்கள்.

தமது 60வது வயதில் ஸஃபிய்யா அவர்களை மணந்தார்கள். இவர் கைபர் பகுதியைச் சேர்ந்தவராவார். கைபர் மீது நபிகள் நாயகம் (ஸல்) போர் தொடுத்து வெற்றியடைந்த போது யூதத் தலைவர்களில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஸஃபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவர். கைது செய்யப்பட்ட ஸஃபிய்யாவை அன்றைய வழக்கப்படி திஹ்யா என்பவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) வழங்கினார்கள். அப்போது நபித் தோழர்கள், "இவர் இந்தச் சமுதாயத் தின் தலைவருடைய புதல்வியாக இருக்கிறார். இவரைத் தங்களைப் போன்ற ஒரு தலைவர் எடுத்துக் கொள்வதே சிறந்தது' என்று கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்து நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்து கொண்டார்கள். ஜுவைரிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சொன்ன காரணமே இதற்கும் பொருந்தும்.
இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதே 60வது வயதில் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவரது வயது குறித்துத் தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் ஏற்கனவே அடுத்தடுத்து இரண்டு கணவர்களை மணந்து விதவையாக இருந்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. எனவே இவரும் நடுத்தர வயதைக் கடந்தவர் என்பதை யூகிக்க முடியும்.

மைமூனா (ரலி), நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸின் மனைவிக்குச் சகோதரியாவார். பெரிய தந்தையின் வற்புறுத்தலின் பெயரிலும், மைமூனாவே வந்து கேட்டுக் கொண்டதன் பேரிலும் இவரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்து கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண் மோகத்தின் காரணமாக அதிகத் திருமணங்களைச் செய்யவில்லை என்பதை மேலே நாம் கூறிய இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்ப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத் தான் முஸ்லிம்கள் அறிந்து கொள் கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகத்தின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்தும் மனைவியரால் மட்டும் தான் இது சாத்தியமாகும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

முஹம்மது இஸ்மாயில்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Empty Re: நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

Post by trueway Mon 11 Feb 2013 - 10:19

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? 188826

trueway
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Empty Re: நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

Post by ராகவா Mon 11 Feb 2013 - 10:20

trueway wrote:நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? 188826
என்ன சிரிப்பு நண்பா.. 😕
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Empty Re: நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 12:01

trueway wrote:நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? 188826
இதில் சிரிக்க என்ன இருக்கிறது நண்பா படித்துப் பாருங்கள்.புரிந்து கொள்ள முயற்சிங்கள். :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Empty Re: நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

Post by மீனு Mon 11 Feb 2013 - 12:03

அச்சலா wrote:
trueway wrote:நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? 188826
என்ன சிரிப்பு நண்பா.. 😕
அதானே!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Empty Re: நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum