சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம் Khan11

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்

Go down

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம் Empty இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 23:34

1. கப்றுகளின் மீது பள்ளிவாயில்கள் கட்டுவது.
அல்லாஹ்வின் சாபம் யூதர்கள் மீதும் கிருத்தவர்கள் மீதும் உண்டாகட்டும்! ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாயில்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று குணமடைந்த எழாத – மரண – நோயின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கின்றார்கள்
(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அவர்கள் செய்த செயல்களை விட்டும் நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்துள்ளார்கள்.
இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் சிலையாக நீ ஆக்கிவிடாதே! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்ததாகவும் ஹதீஸ் வந்துள்ளது.
எச்சரிக்கை! நிச்சயமாக உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அவர்களுடைய நபிமார்களின் கப்ர்களை பள்ளிவாயில்களாக ஆக்கிக் கொண்டார்கள். இச்செயலை விட்டும் நான் உங்களை நிச்சயமாகத் தடுக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் கூற நான் கேட்டுள்ளேன் என ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . (நூல்: முஸ்லிம்)
2. கப்ர்களில் தொழுவது
கப்ர்களின் மீது அமராதீர்கள்! அதில் தொழாதீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மர்ஸத் அல் பகவீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பூமியின் அனைத்து இடங்களும் மஸ்ஜித் (ஸஜ்தா செய்யுமிடம்) தான். கப்ர்களையும் குளியலறையையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூற்கள்: அஹமத், திர்மிதி)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம் Empty Re: இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 23:35

3. கப்ர்களின் மீது எழுதுவது
கப்ர்களை பூசுவதையும் அதன் மீது எழுதுவதையும் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: அஹமத்)

4. கப்ர்களை பூசுவது
முன்னுள்ள நபிமொழியே இதற்கும் ஆதாரமாக உள்ளது.

5. கற்கள் அல்லது அது போன்ற பொருட்களைக் கொண்டு கப்ர்களை கட்டுவது

குப்பா – முகடு – போன்றோ கூடாரம் போன்றோ அல்லது இது போன்ற எந்த வடிவிலும் கப்ர்களைக் கட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. கப்ர்களை பூசுவதையும் அதன் மீது எழுதுவதையும் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக உள்ளது. (நூல்: அபூதாவூத்)

6. கப்ரில் விளக்கேற்றுவது, சிறு விளக்குகள் அல்லது அது போன்றவைகளை அதனருகில் வைப்பது
கப்ர்களை ஜியாரத் செய்யும் பெண்களையும் அதனை பள்ளிவாயில்களாக ஆக்குபவர்களையும் அதில் விளக்கேற்றுபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூற்கள் அஹ்மத், திர்மிதி)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம் Empty Re: இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 23:35

7. கப்ர்களை விழாக்கூடமாக்குவது

இது ஜியாரத்திற்கென வாரங்களில், மாதங்களில், வருடங்களில் குறிப்பிட்ட நாட்களை நிர்ணயிப்பதால் ஏற்படுவதாகும்.
உங்களுடைய வீடுகளை கப்ர்களாக ஆக்கிவிடாதீர்கள்! என்னுடைய கப்ரை விழாக் கூடமாக ஆக்கிவிடாதீர்கள்! என் மீது ஸலவாத்துக் கூறுங்கள்! நீங்கள் எங்கிருத்து ஸலவாத்துக் கூறினாலும் நிச்சயமாக அது எனக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் நூல்: அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கே விழாக் கொண்டாடுவது கூடாது எனும் போது நிச்சயமாக மற்ற எவரின் கப்ருக்கும் விழாக் கொண்டாடுவது கூடாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?

8. கப்ரை சமப்படுத்துவதும் பூமியை விட உயர்த்தாதிருப்பதும் மிக அவசியமாகும்.

எச்சரிக்கை ! நபி (ஸல்) அவர்கள் என்னை எந்த வேலைக்காக அனுப்பினார்களோ அதே வேலைக்காக நான் உம்மை அனுப்பகிறேன். நீர் எந்த உருவ –படம் மற்றும் சிலைகளை அழிக்காமல் விட்டுவிடக் கூடாது. தரையை விட்டும் உயர்ந்திருக்கும் எந்த கப்ரையும் சம்மாக்காது – தரைமட்டமாக்காது – விட்டுவிடக் கூடாது என்று அலி (ரலி) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என அபுல் ஹயாஜ் அல்அஸத் அவர்கள் கூறுகின்றார்கள்
(நூல்: முஸ்லிம்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம் Empty Re: இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 23:36

9. கப்ர்களில் பரகத் உண்டு என்று நம்புவது, அதற்காக அதனைத் தொடுவது, அதனிடம் பிரார்த்தனை செய்வது.

இவை அனைத்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்த செயல்களாகும், நிச்சயமாக இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களி கட்டளையிடாத – மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்ட – பித்அத்தான செயலாகும். கப்ர்களில் கேட்கும் பிரார்த்தனைகளிலேயே மிகவும் அருவருப்பான – இழிவான பிரார்த்தனை கப்ரில் அடக்கப்பட்டிருப்பவரிடம் பிரார்த்திப்பதும் அவர்களிடம் தன் தேவைகளை கேட்பதும்தான். ஏனெனில் நிச்சயமாக இது பெரிய ஷிர்க எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது தனக்குத் தானே நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெறாதவரிடம் பிரார்த்திப்பதாகும். (நபியே!) உமக்கு பயன்தரவோ, துன்பமிழைக்கவோ முடியாத – அல்லாஹ் அல்லாதவரை நீர் அழைக்காதீர்! அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர். என்று அல்லாஹ் கூறுகின்றான். (10:106)
சகோதரரே: மரண சிந்தனை மற்றும் படிப்பினை பெற இறந்தவர்களுக்காக நாம் பாவமன்னிப்புக் கேட்க, அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்க நாம் பிரார்த்திக்கத்தான் கப்ர் ஜியாரத் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதை விட யாரேனும் அதிகமாக எதைச்செய்தாலும் நிச்சயமாக அவர் தவறு செய்கிறார் . நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு மாறுசெய்கிறார். நன்மைக்கு பகரமாக தீமையையே சுமந்து கொள்கிறார். நற்செயர்களின் நன்மைகள் அனைத்தையும் அழித்தொழிக்கும் கொடிய ஷிர்க்கின் பக்கம் ஷைத்தான் அவரை அழைத்துச் செல்கிறான் என்றே நாம் பயப்பட வேண்டியுள்ளது. – அல்லாஹ் நம் அனைவரையும் மரணிக்கும் வரை மார்க்கத்தின் உண்மையான வழியில் உறுதியாக நிலைத்து நிற்க கிருபை செய்வானாக!

சகோதரரே! நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் மேலே சில விஷயங்களை தவறு என்று சுட்டிக் காட்டியிருப்பதால் நாம் கப்ரில் அடக்கியிருப்பவரை தரம் தாழ்த்துகிறோம் என்றோ, நல்லடியார்களை நாம் நேசிப்பதில்லை என்றோ தயவுசெய்து தாங்கள் நினைத்து விடாதீர்கள். – சிலர் அவ்வாறு தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். – அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவ்வாறல்ல. நாம் மேற்கூறிய விஷயங்களும் இவையல்லாத மற்ற சில செயல்களையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதால்தான் நாமும் தவிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதும் நல்லடியார்களை நேசிப்பதுமாகும். நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அவர்களின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுவது. மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்தை விட்டொழிப்பதுதான் நல்லடியார்களை பின்பற்றி, அவர்களை கண்ணியப்படுத்தி, மரியாதை செய்யும் முறையகும்.
இவ்வாறு செயல்படுவதுதான் அவர்கள் விரும்பிய பாதையில் செல்வதாகும் அவர்கள் வெறுத்த பாதயை விட்டும் விலகுவதுமாகும்.

சகோதரரே! நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இருந்து நாம் பெற்ற விளக்கத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! மனித, ஜின்களில் உள்ள ஷைத்தான்கள், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராதவற்றில் உங்களுக்கு ஆசையூட்டி உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம் Empty Re: இறைத் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum