சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சினி மினி Khan11

சினி மினி

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினி மினி Empty சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:41

திரையுலக மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார்
வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2'-க்கான
கதை விவாதம் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின்
அலுவலகத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்த வண்ணம் உள்ளன. ""முதல்
பாகத்தை விட இந்த பாகத்தில் காமெடி சற்று தூக்கலாக இருக்கணும்'' என சொல்லி
அதன்படி கதையை எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. தொடக்க காலத்திலிருந்து
தனக்கு காமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:41

இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பதை தவிர்த்து வந்தார் த்ரிஷா.
"தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க
அவரின் நெருங்கிய நண்பர் விஷால் கேட்ட போது கூட மறுத்து விட்டார். தற்போது
பாலிஸியை மாற்றிக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில்
தயாராகும் "ரம்' என்ற படத்தில் நடிக்கிறார். "ரம்பா ஊர்வசி மேனகா' என்பதன்
சுருக்கமே "ரம்'. மற்ற இரண்டு ஹீரோயின்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:42

பிந்து சாகர் என்றால் சிலருக்குப் புரியாது. பிந்து மாதவி என்றால்
சட்டெனப் புரியும். சாகர் என்பது அவரின் அண்ணனின் பெயர். ஐ.ஏ.எஸ்.
படித்துக் கொண்டிருந்த அவர், சாலை விபத்தில் இறந்து போக, அவரின் நினைவாக
சாகர் என்பதை பிந்துவுடன் இணைத்துக் கொண்டார். "வெப்பம்', "கழுகு', "சட்டம்
ஒரு இருட்டறை' படங்களை முடித்துள்ள பிந்து சாகர் தன் அண்ணனின் நினைவாக
கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பத்து
குழந்தைகளுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:42

ஜல்லிக்கட்டால் ஏற்படும் விபரீதங்களை பின்னணியாக்கி உருவாகி வரும் படம்
"பூர்வகுடி.' ""தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டால்
பல குடும்பங்கள் தங்கள் தலைவனை இழந்து விடுகிறது. அதன் பின் அந்த
குடும்பத்தின் நிலை, அவர்களின் வறுமை, குழந்தை தொழிலாளர்களின் உருவாக்கம்
இவற்றையெல்லாம் கதையின் அம்சங்களாக வைத்திருக்கிறேன்'' என்கிறார் புதுமுக
இயக்குநர் இப்ராஹீம். ஜல்லிக்கட்டு போட்டியில் தற்காப்புடன் எப்படி
பங்கேற்பது என்பதையும் சொல்ல வருகிறதாம் இப்படம்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:42

"தாமிரபரணி' படத்தின் மூலம் அறிமுகமான பானு, குடும்ப பிரச்னை காரணமாக
சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் வசந்த் இயக்கும் "மூன்று
பேர் மூன்று காதல்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வருகிறார். ""என்
தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னை தீர்ந்து விட்டது. அதனால் சினிமாவில் இரண்டாவது
இன்னிங்ûஸத் தொடங்கி இருக்கிறேன். மூன்று பக்க வசனத்தை எழுதி அதை
மனப்பாடம் செய்ய சொன்னார் வசந்த். பின் அதை நாகர்கோவில் வட்டார வழக்கு
மொழியில் பேசச் சொன்னார். அதன் பின்புதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்''
என்கிறார் பானு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:42

தேடல்தான் வாழ்க்கை. அந்த தேடல் காதல், நட்பு, பணம் என எதுவாகவும்
இருக்கலாம். அப்படியான தேடலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக
வைத்து உருவாகும் படம் "சார்லஸ் ஷபிக் கார்த்தி'. பிரகாஷ்ராஜின் உதவியாளர்
சத்தியமூர்த்தி இப்படத்தை எழுதி இயக்குகிறார். "இனிது இனிது' படத்தில்
நடித்த விமல், நாராயணன், மிஷால் நடிக்கின்றனர். "ஆரோகணம்' படத்தில் நடித்த
ஜெய் குகைனி ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை
எட்டியுள்ள நிலையில் பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:43

ராம்சரண் தெலுங்கில் நடித்து வெற்றிப் பெற்ற படங்கள் தொடர்ந்து தமிழில்
டப் செய்யப்பட்டு வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. "மாவீரன்', "ரகளை',
"சிறுத்தைப்புலி' ஆகிய படங்களின் வரிசையில் வெளியாக உள்ள படம் "நாயக்'.
தெலுங்கில் மிகப் பெரும் ஹிட்டடித்த இப்படத்தில் காஜல் அகர்வால், அமலாபால்
இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் பிரபலமான வி.வி. விநாயக்
இப்படத்தை இயக்கியுள்ளார். 300 கார்களின் முகப்பு வெளிச்சத்திலேயே
படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் சண்டை காட்சி படத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள்.
ஜனவரி -9ம் தேதி இப்படம் வெளிவருகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 11:43

சூர்யா - ஜோதிகா நடிப்பில் "சில்லுன்னு ஒரு காதல்' படத்தை இயக்கிய
கிருஷ்ணா எழுதி இயக்கும் படம் "நெடுஞ்சாலை.' ஆரி கதாநாயகனாகவும், ஷிவிதா
கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். ""நெடுஞ்சாலை பயணங்கள் எப்போதுமே நிறைய
அனுபவங்களைத் தருவதுண்டு. அப்படியான ஒரு பயணத்தில் நான் பார்த்த
காட்சிகளைத்தான் இந்த கதையில் தொகுத்திருக்கிறேன். பின்னணியில் ஒரு காதலை
வைத்து கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறேன். அமைதியான பயணங்களில்
சட்டெனக் கடந்து போகும் சில காட்சிகள் எவ்வளவு அதிர்ச்சியானது என்பதை
எதார்த்தத்துக்கு பக்கத்தில் படம் பிடித்திருக்கிறேன்'' என்கிறார்
கிருஷ்ணா.

தினமணி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:06

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் கின்ஸ்லின் இயக்கும் படம் "வத்திக்குச்சி'. சென்னை புறநகர் மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் சகோதரர் திலீபன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். சினிமாவில் நடிக்கும் அனுபவம் பற்றி திலீபனிடம் பேசுகையில், ""ஷேர் ஆட்டோ டிரைவராக இயக்குநர் நடிக்க அழைத்ததும் ஏற்றுக் கொண்டேன். உடனடியாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். ஒரு வருடம் ஷேர் ஆட்டோ டிரைவர்களுடன் பழகினேன். தினமும் இரண்டு மணி நேரம் ஆட்டோ ஓட்டக் கற்றேன். அது நல்ல அனுபவத்தை கொடுத்தது. என் அண்ணன் தயாரிக்கும் படம் என்பதால், எந்தச் சலுகையும் எனக்கு இல்லை. சினிமாவில் எல்லாமும் கிடைக்கும். ஆனால் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என அண்ணன் எனக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். நடிப்பில் அனுபவம் நிறைந்த அஞ்சலி, படப்பிடிப்பின் போது நிறைய டிப்ஸ் கொடுத்தார். சில காட்சிகளில் ரீடேக் போகும் போது, அஞ்சலி துணையாக இருந்தார். அது பயனுள்ளதாக இருந்தது'' என்றார் திலீபன்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:06

த்ரிஷாவை போல் பாவனாவும் சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாவனா,

2002-இல் வெளிவந்த "நம்மள்' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த பாவனா, 2006-இல் மிஷ்கின் இயக்கிய "சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். "தீபாவளி', "கூடல் நகர்' உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த பாவனா, கன்னட, மலையாள சினிமாக்களுக்கே தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மலையாளத்தில் "எல்லோ', "ஹனிபி', "ஆங்கிரி பேர்டு' ஆகிய படங்களில் நடித்து வரும் பாவனாவிடம் பேசுகையில், ""பத்து வருடங்களை சினிமாவில் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. நான் நடிகையானதே வித்தியாசமான அனுபவம். எனக்கு கறுப்பு மேக்-அப் போட்டு டெஸ்ட் வைத்தார் இயக்குநர். அவருக்கு பிடித்து விட்டது. நடிக்க வைக்க ஒப்புக் கொண்டார். திருமணம் பற்றிதான் எல்லோரும் கேட்கிறார்கள். மணம் முடிந்தாலும் சினிமாவில் நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். காதல் பற்றி இப்போது பேச முடியாது'' என்றார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:07

வீரா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் "என் காதல் புதிது'. கதாநாயகனாக ராம் சத்யா நடிக்கிறார். உமாஸ்ரீ, நமீதா பிரமோத் ஹீரோயின்கள். ஜி.எம்.குமார், பாண்டியராஜன், "லொள்ளு சபா' ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரமேற்று நடிக்கின்றனர். "புன்னகை' வெங்கடேஷ் ஒளிப்பதிவில், புதுமுகம் சத்யதேவ் இசையமைக்கிறார். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த, மாரீஷ்குமார் இக்கதையை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். அதென்ன "என் காதல் புதிது?' என்று கேட்டால், ""80 வருட தமிழ் சினிமாக்கள் எல்லாமும், ஆண்களின் பக்கத்தில் இருந்துதான் காதலைச் சொல்லியிருக்கிறது. காதல் தோல்விக்குப் பின் தாடி வளர்த்து, சோகமாக திரியும் காதலனைத்தான் படம் பிடித்திருக்கிறது. பெண்களின் பக்கம் போய், அவர்களின் நிலைமையை சொன்னதே இல்லை. காதலால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் எனஓர் ஆய்வறிக்கை சொன்ன செய்திதான் இந்த திரைக்கதைக்கான முதல் படி. காதல் தோல்வி பற்றி சோகம் காட்ட கூட, இந்த சமுதாயம் அவர்களை அனுமதிப்பதில்லை. அந்த விஷயத்தைதான் இதில் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் மாறுபட்ட சினிமாவாக இருக்கும்'' என்றார் இயக்குநர் மாரீஷ்குமார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:07

"டெல்லி பெல்லி' ரீமேக் படத்தில் நடிக்க அழைத்ததும் அதை ஆபாச படம் என கூறி நடிக்க மறுத்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப கதை மாற்றப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் கண்ணன் சொன்னதையும் நம்பாமல், கதை கேட்டுதான் "சேட்டை' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ""ஹிந்தி "டெல்லி பெல்லி'யை தமிழில் எடுக்க போகிறேன். நீங்க நடிக்கிறீங்க'' என கண்ணன் சொன்னதும், ""இப்படியொரு படத்தில் பிளாஸ்டிக் கவரால் என் முகத்தை மூடி நடிக்க வைக்க போகிறீர்களா?'' என்று கேட்டேன். அந்த அளவுக்கு "சேட்டை' படத்தில் நடிக்க தயக்கம் காட்டினேன். ஹிந்தியில் ஆபாச வசனங்கள், காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அப்படியொரு படம் தமிழ் சினிமாவுக்கு பொருந்துமா? என்று கேட்டேன். அதனால் நடிக்கவும் மறுத்தேன். தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப கதையில் மாற்றம் இருக்கிறது என்று சொன்னார். அப்போதும் நம்பவில்லை. புதுக்கதையை கேட்ட பின்னர்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கான படமாக இது இருக்கும். ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி ஆகியோரால் படம் வேறொரு இடத்துக்கு சென்றிருக்கிறது'' என தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஹன்சிகா.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:07

திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்ட, மீனாவுக்கு மலையாளப் பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. மோகன்லால் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து இருக்கிறார். இது குறித்து மீனாவிடம் பேசுகையில், ""தமிழ் மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நடிப்பில் பெரிய திருப்தி எற்பட்டவுடன்தான் திருமண வாழ்க்கைக்குள் புகுந்தேன். திருமணத்துக்கு பின் சினிமா வாய்ப்புகளை நான் பெரிதும் விரும்பவில்லை. குடும்ப வாழ்க்கையில் ஆர்வமாக இருக்கிறேன். இரண்டு வயது மகள் நைனிகாவை கவனித்து வருகிறேன். இது தவிர மற்ற வேலைகளுக்கும் நேரம் சரியாக இருக்கிறது. லால் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் கதைப்படி அதில் நிறைய ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கூட்டமாக வந்து போவதில் விருப்பமில்லை. எனக்கு மட்டும் முக்கியத்துவம் இருந்தால், சினிமாவில் நடிப்பது பற்றி யோசிப்பேன்'' என்றார் மீனா.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:08

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் போலி அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்து எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "சுவாசமே'. சத்யா, பிரதிஷ்டா ஜோடி. இயக்குநர் பிரவீண் காந்திடம் உதவி இயக்குநராக இருந்த வினோத் இப்படத்தை எழுதி இயக்கி அறிமுகமாகிறார். இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை நடத்துவதற்கு தாஜ்மாஹாலின் உள்ளே சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தியுள்ளார்கள். "" ஷூட்டிங் நடத்துவதற்கான மொத்தத் தொகையை செலுத்தி அனுமதி பெற்ற பின்னரும் தாஜ்மாஹாலுக்குள் ஷூட்டிங் நடத்த சிரமம் இருந்தது. எந்த இடத்தில் கேமிராவை வைத்தாலும், ""இது சுற்றுலா தலம். ஷூட்டிங் ஸ்பாட் கிடையாது'' என சுற்றுலா பயணிகள் கேமிராவை வைக்க அனுமதிக்கவில்லை. அந்த சிரமங்களையெல்லாம் சந்தித்து ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் செலுத்தி அந்த பாடல் காட்சியை ஆறு நாள்கள் படமாக்கினோம். உள்ளே தண்ணீர் பாட்டில் தவிர, எந்த சாப்பாட்டு பொருளையும் எடுத்து போக கூடாது. படக்குழு சாப்பிட வெளியே வந்தாலும், மீண்டும் டிக்கெட் பெற்றுக் கொண்டுதான் உள்ளே போக முடியும். தாஜ் நூர் இசையில் மாபோ ஆனந்த் ஒளிப்பதிவில் அந்த பாடலை ஒரு வழியாக முடித்து வந்து விட்டோம்'' என்றார் இயக்குநர் வினோத்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:08

"கடல்' படத்துக்கு பின் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவாவின் ஜோடியாக "யான்' படத்தில் நடிக்கிறார் துளசி. "கடல்' படப்பிடிப்பின்போது, தன் அம்மா ராதாவை துணையாக அழைத்து வந்தவர், இப்போது "யான்' படப்பிடிப்புக்கு தனியாளாக வருகிறார். என்ன காரணம்? துளசியிடமே கேட்போம்... ""என் குடும்பத்தில் என் அக்கா வரை எல்லோருமே நடிகைகள். அதனால் என்னை பார்ப்பவர்கள் ""நீ எப்போது நடிகையாக போகிறாய்'' என்று கேட்பார்கள். ""அதற்கு சான்ஸ் இல்லை''யென்று கூறி வந்தேன். மணிரத்னம் பட வாய்ப்பு வந்தால் அதை யார்தான் மறுக்க முடியும். "கடல்' படத்துக்கான நடிப்பு பயிற்சிக்காக சென்னையில்தான் இரண்டு மாதங்கள் இருந்தேன். அப்போதும் என் துணைக்கு என் அம்மாவோ, என் பெரியம்மாவோ வரவில்லை. மணிரத்னம் பார்வையில் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு ஒன்றுதான் இதற்குக் காரணம். ஒரிரு நாள்கள் மட்டுமே அந்தப் படப்பிடிப்பின் போது அம்மா துணைக்கு வந்தார். அதை அப்படியே இனி வரும் சினிமா காலத்துக்கும் பின்பற்றலாம் என நினைத்தேன். அதை அம்மாவிடம் சொன்னதும், ரொம்பவே சந்தோஷப்பட்டார். கதைகள் கேட்பதை மட்டும் அம்மா எனக்காக செய்கிறார். மற்றபடி இனி படப்பிடிப்புக்கு தனியாளாகத்தான் வருவேன்'' என்றார் துளசி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:08

கோலிவுட், டோலிவுட்டில் அனுஷ்கா நடித்த "அருந்ததி' பட வெற்றிக்குப் பின் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அதிகமாக உருவெடுக்கின்றன. "அருந்ததி' படத்தையடுத்து "ருத்ரம்மாதேவி' என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் அனுஷ்கா. அவருக்காகவே நீண்ட காலமாக "ருத்ரம்மாதேவி" கதையை தயார் செய்து வருவதாக தெரிவித்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் குணசேகர். இப்படத்தில் இளவரசி வேடம் ஏற்கும் அனுஷ்கா, இரண்டு மாத காலமாக வாள் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். சரித்திர கால படம் என்பதால், அது சம்மந்தப்பட்ட வரலாற்று நூல்களையும் படித்து வருகிறார். அதேபோல் பிரியாமணியும் "சாண்டி' என்ற வரலாற்று படத்தில் வீராங்கனையாக நடிக்கிறார். இவரும் வாள் சண்டை பயிற்சியுடன், குதிரை ஏற்ற பயிற்சியும் பெறுகிறார். அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடிக்கும் அமலாபாலும் வாள் சண்டை பயிற்சி பெறுகிறார். சில நிமிடங்களே வரும் வரலாற்றுப் பின்னணி காட்சிக்காக அமலாபால் இப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வரலாற்றுப் பின்னணிப் படங்கள் வெற்றி பெறுவதால், தமிழில் சில முன்னணி இயக்குநர்களும் ஹீரோயின்களுக்கு கதை தயார் செய்யும் பாணியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:08

வின்னர் புல்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் க்ரோல் குரூப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் "நேரம்'. மலையாள திரையுலகின் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் நிவின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நஸ்ரியா நாசிம் நடிக்கிறார். தம்பி ராமையா, ஜான் விஜய், நாசர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். கலைஞர் டி.வி.யின் "நாளைய இயக்குநர்' புகழ் அல்ஃபோன்ஸ் புத்திரன், கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். படம் குறித்து அவரிடம் பேசுகையில், ""ஒட்டு மொத்த மனித இனத்துக்கே நேரத்தின் மேல் நம்பிக்கை உண்டு. நல்லது நடந்தால், இதற்கெல்லாம் நேரம்தான் காரணம் என்பதும், கெட்டது நடந்தால் நேரம் சரியில்லை என்பதும் மனித இனத்தில் தினந்தோறும் நடக்கும் நம்பிக்கையாகவே மாறிவிட்டது. நல்ல நேரம், கெட்ட நேரம் என நேரம் இரண்டு வகைப்படும். நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாகி விடுவான். கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாகி விடுவான் என்கிற பழமொழிதான் இந்த திரைக்கதைக்கான முதல் அடி. காமெடி மற்றும் திரில்லர் கலந்த இந்த திரைக்கதையில் காதலும் உண்டு. அனைத்து தரப்பினருக்குமான ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. நான் ஏற்கெனவே இயக்கிய மியூசிக் ஆல்பத்தில் நடித்த நஸ்ரியா நாசிமை, இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு கொண்டு வருகிறேன். தனுஷ் ஜோடியாக "நய்யாண்டி' படத்தில் நடித்துவந்தாலும், நஸ்ரியாவுக்கு இதுதான் முதல் படம்'' என்றார் இயக்குநர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:09

"தேநீர் விடுதி' படத்துக்குப் பின் எஸ்.எஸ்.குமரன் இயக்கும் படம் "கேரள நாட்டிளம் பெண்களுடனே'. அபி, காயத்ரி, தீட்சிதா, அபிராமி ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கு.ஞானசம்பந்தன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ்.எஸ்.குமரன் பேசுகையில், ""தேநீர் விடுதி' படத்தின் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது. நல்ல விஷயங்கள் ஒன்று கூடி வரும் போதுதான் வெற்றி சொந்தமாகும். அதற்கான திட்டமிடலோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு அப்பாவுக்கும் ஒரு லட்சியம். தன்னால் அடைய முடியாத ஒரு விஷயத்தை தன் மகனை வைத்து அடைந்து விடுவது என்பதுதான் அது. அந்த விஷயம்தான் இந்தப் படத்தின் கதை ஏரியா. முழுக்க முழுக்க கேரளப் பின்னணியில் வரும் தமிழ்ப் படமாக இது இருக்கும். திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா உள்ளிட்ட கேரள மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. வைரமுத்துவின் பாடல்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன'' என்றார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:09

"பார்யா அதரா போரா' படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவுக்கு வருகிறார் கோபிகா. ஆஸ்திரேலிய தொழில் அதிபர் அஜ்லெûஸ மணந்து நாடு கடந்தவருக்கு, மலையாள தயாரிப்பாளர் ஜோசப் சினிமா அழைப்பு விடுக்க, ""கதை நல்லா இருக்கு. நானே நடிக்கிறேன்'' என கேரளத்திலேயே தங்கி விட்டார். விடுமுறைக்காக தன் மகனுடன் தாய் வீடு வந்தவரை சந்தித்தார் ஜோசப். ""நடிக்கலாம் என நினைக்கிறேன்'' என கோபிகா அஜ்லெஸþக்கு எஸ்.எம்.எஸ்.தட்ட, ""பிடிச்சிருந்தா நடி''யென அஜ்லெஸþம் பச்சைக் கொடி காட்டி விட்டார். கோபிகாவுக்கு ஹீரோ ஜெயராம். ""நான் கேரளத்துக்கு வந்ததை தெரிந்து பலரும் என்னிடம் பேசினார்கள். ஆனால் ஜோசப் சொன்ன கதை பிடித்திருந்தது. அதனால்தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. திருச்சூர் அருகிலேயே ஷூட்டிங். அதனால் குழந்தையை கவனித்துக் கொள்ளவும் நேரம் இருக்கிறது. துணிச்சலான பெண் வேடம். இது மாதிரி இதற்கு முன்பு நடித்ததில்லை. நேரமும், கேரக்டரும் பொருந்தி வந்தால் தொடர்ந்து நடிப்பதை பற்றி யோசிப்பேன்'' என்றார் கோபிகா.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:09

ஸ்ரேயாவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் இயக்குநர் ரூபா அய்யர். ""தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இந்தியாவின் கடைசி இளவரசன், இளவரசியின் கதையாக "சந்தரா' ஸ்கிரிப்ட் உருவானது. இதில் இளவரசியாக நடிக்க பல ஹீரோயின்களை சந்தித்தேன். யாரும் பொருத்தமாக அமையவில்லை. சில நடிகைகள் கதையில், கேரக்டரில் மாற்றம் வேண்டும் எனக் கேட்டார்கள். மாற்றங்கள் செய்யக்கூடிய கதையாக இதை நான் உருவாக்கவில்லை. இறுதியில் ஸ்ரேயாவை பார்த்த போது, அவரது உடலமைப்பு, தோற்றம் இளவரசியாக நடிக்க பொருத்தமாக இருந்தார். அதனால் அவர்தான் இளவரசி என்பதை முடிவு செய்து விட்டேன். கதையை சொன்னதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு, தன்னை வருத்திக் கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் முன்னணி இடத்தில் இருக்கும் ஸ்ரேயாவுக்கு இப்போதும் பல படங்கள் காத்திருக்கின்றன. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக எந்தப் படத்துக்கும் கால்ஷீட் ஒதுக்கவில்லை. ஸ்ரேயாவின் சினிமா ஆர்வம் மகத்தானது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார் ரூபா அய்யர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Sat 16 Mar 2013 - 19:10

பூனம் பஜ்வா, "தாமிரபரணி' பானு, ரியாஸ்கான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் "மாந்திரீகன்'. அதே பெயரில் தமிழில் டப் செய்யப்படுகிறது. ஆர்.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இப்படத்துக்கு வைத்தி எஸ்.பிள்ளை ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பாலாஜி கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஆர்.பி.பாலா வசனத்தில் மலையாளப் படவுலகின் பிரபல இயக்குநர் அனில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படம் பற்றி அனில் கூறுகையில், ""சமஸ்தானத்தைச் சேர்ந்த இளைஞன், ஓர் ஏழைப் பெண்ணை காதலிக்கிறான். இதை எதிர்க்கும் அவரது சகோதரர்கள் அந்தப் பெண்ணை கொலை செய்து விடுகின்றனர். காதலன் தற்கொலை செய்து கொள்ள, இறந்த அப்பெண் ஆவியாக வந்து பழி வாங்குவதுதான் கதை. சஸ்பென்ஸ் அதிகம் உள்ள திகில் கதையான இப்படம், மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தில் படத்தை உருவாக்கும் போதே, தமிழில் வெளியிடும் திட்டத்தில் இருந்தோம். அதன்படி படப்பிடிப்பை நடத்தினோம்'' என்றார் இயக்குநர் அனில்.

திரை கதிர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by நண்பன் Sat 16 Mar 2013 - 19:19

Muthumohamed wrote:திரையுலக மறு பிரவேசத்துக்கு தயாராகி விட்டார்
வடிவேலு. சிம்புதேவன் இயக்கத்தில் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி -2'-க்கான
கதை விவாதம் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சாலிகிராமத்தில் வடிவேலுவின்
அலுவலகத்தில் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்த வண்ணம் உள்ளன. ""முதல்
பாகத்தை விட இந்த பாகத்தில் காமெடி சற்று தூக்கலாக இருக்கணும்'' என சொல்லி
அதன்படி கதையை எழுத வைத்திருக்கிறாராம் வடிவேலு. தொடக்க காலத்திலிருந்து
தனக்கு காமெடி டிராக் எழுதிய சிலரை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம்.
அட்டகாசமாக இருக்கும் தொடரட்டும் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 13:32

மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை மற்றொருவருக்கு பொருத்த நடக்கும் சாகசப் பயணத்தை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "டிராபிக்',"சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மூன்று தேசிய விருதுகளை பெற்ற "உஸ்தாக் ஓட்டல்' விரைவில் ரீமேக்காகஇருக்கிறது. இதையடுத்து மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற "சாப்பா குரிச்சி', "புலிவால்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விமல், பிரசன்னா, அனன்யா, ப்ரணிதா நடிக்கின்றனர்."கண்ணோடு கண்ணாக' படத்தை இயக்கிய மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். என்.ஆர்.ரஹ்நந்தன் இசையமைக்கிறார். செல்போனை சுற்றி நடக்கும் கதையாக இதுஉருவாகிறது. ராதிகா சரத்குமாரின் ஐ ப்ரேம்ஸþடன் இணைந்து இப்படத்தை மலையாள தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் தமிழில் தயாரிக்கிறார்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 13:34

தன்னைக் காதலிக்கும் கோபிசந்திடம் மூன்று பேரை கொல்லச் சொல்கிறார் தீக்ஷா சேத். காதலியின் வார்த்தையைகேட்டு, அந்த மூவரையும் கொல்கிறார் கோபிசந்த். அந்தமூவரும் யார்? எதற்காக அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை திரில்லர் ப்ளஸ் ஆக்ஷன் கலந்து, தெலுங்கில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் "வான்டட்'. இப்படம் தமிழில் "வேங்கை புலி' என்ற பெயரில் டப் ஆகிறது. லஷ்மி லோட்டஸ் மூவி மேக்கர்ஸ் எஸ்.ஜி.ஆர்.பிரசாத், வேல் ஃபிலிம்ஸ் கோவை வேல்முருகன் தயாரிக்கின்றனர். கோபிசந்த், தீக்ஷா சேத், பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தம் நடிக்கின்றனர். ஏப்ரலில் படம் வெளியாகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Muthumohamed Mon 8 Apr 2013 - 13:34

வாரிசுகள் வரிசையில் சேருகிறார் இயக்குநர் வசந்தின் இரண்டாவது மகன் ரித்விக் வருண்.

வசந்த் தற்போது இயக்கும் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள இவர், விரைவில் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார். இது தொடர்பாக வசந்த் கூறும் போது, ""ஆதித்யா, ரித்விக் வருண் என எனக்கு இரண்டு மகன்கள். சினிமா ஆசையில் சுற்றி வந்த ரித்விக் அருண், முறைப்படி சண்டை கற்றான். நடனம் கற்றான். சினிமாவுக்குத் தேவையான அனைத்து வகையான பயிற்சிகளையும் முறையாகப் பெற்றான். அவனது ஆசையை அறிந்து என் இயக்கத்திலேயே அறிமுகப்படுத்தி இருக்கிறேன். கடுமையாக உழைத்து நல்ல பெயரை எடுப்பது வருண் கையில்தான் இருக்கிறது'' என்றார் இயக்குநர் வசந்த்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சினி மினி Empty Re: சினி மினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum