சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இன்று 64-வது குடியரசு தினம் Khan11

இன்று 64-வது குடியரசு தினம்

3 posters

Go down

இன்று 64-வது குடியரசு தினம் Empty இன்று 64-வது குடியரசு தினம்

Post by Muthumohamed Sat 26 Jan 2013 - 10:48

உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி
மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த
போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான்
சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து
துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த
15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த
இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு
மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் என புவியியல் அமைப்பிலும் பல
வித்தியாசங்கள். சரியும் ஜனநாயகம்இவ்வளவு சிறப்புமிக்க இந்தியஜனநாயகம்,
இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவிக்கிறது.
ஜனநாயகத்தின் தலைமை இடமான பார்லிமென்ட், பயனில்லாத இடமாக
மாறிக்கொண்டிருக்கிறது. காந்தி, நேரு, வல்லபாய் படேல், நேதாஜி என ஆரம்பகால
தலைவர்களின் சிறப்பான பணியை தொடர முடியாமல், தற்போதைய அரசியல்வாதிகள்
தடுமாறுகின்றனர். இதனால் ஜனநாயகத்தின் மீதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர்.
தற்போதைய எம்.பி.,க்களில் மூன்றில் ஒரு பகுதியினர், கிரிமினல் பின்னணி
உடையவர்கள். எந்த கூட்டத் தொடருமே, முழுமையான நாட்களை நிறைவு செய்வதில்லை.
ஒவ்வொரு திட்டத்திலும் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது.ஆளும் மற்றும்
எதிர்கட்சிகள் மாறி மாறி அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசவே நேரம்
கிடைக்கவில்லை. பின், மக்களைப்பற்றி சிந்திக்க எப்படி நேரம் வரும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்பு பணத்தை
பற்றிய விவரம் இன்றளவும் வெளியிடப்படவில்லை. வெளிநாட்டு, உள்நாட்டு
பயங்கரவாதம், நவீன இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.நாட்டின் உயரிய
விசாரணை அமைப்பான சி.பி.ஐ., ஆளும் கட்சியின், கைப்பாவையாக செயல்படுவதாக
குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு ஆட்சியில் போடப்படும் வழக்குகள், அடுத்த
ஆட்சியில், அதன் சுவடே இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது,குற்றங்கள்
அதிகரிக்கத்தான் வழி செய்யும். வாரிசு அரசியல், அசுர வளர்ச்சி பெறுகிறது.
அதே நேரம், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் கானல்
நீராக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே
தவிர குறையவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 100
ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெறுபவர்கள். நாளுக்குநாள் உயரும்
விலைவாசியால், இவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு,
பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறக் கூடிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குஅரசு
முன்னுரிமை அளிக்க வேண்டும். மறுபக்கம், ஜனநாயகத்தை பாதுகாக்க, மக்களும்
ஒத்துழைக்கவேண்டும்.


மிரட்டும் படைபிரிவுகள்

டில்லியில்
இன்று நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், இந்திய ராணுவத்தில்
புதிதாகசேர்க்கப்பட்ட ஏவுகணைகள், புதிய கண்டுபிடிப்புகள், விமானப்படையில்
சமீபத்தில்சேர்க்கப்பட்ட விமானங்களின் மாதிரிகளை காணலாம். கப்பல்படையின்
அணிவகுப்பும் நடக்கும். குதிரைப்படைகள் அணிவகுப்பு, பாராசூட் ரெஜிமண்ட்,
காவலர்களின் பிரிகேட், குமோன் ரெஜிமண்ட், அசாம் ரெஜிமண்ட், மகார்
ரெஜிமண்ட், கூர்கா ரைபிள் ரெஜிமண்ட் போன்ற துணை ராணுவ படைகளின்
அணிவகுப்புகள் இடம்பெறும். துணை ராணுவம், எல்லைபாதுகாப்பு படை, கடலோர காவல்
படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை,
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, ரயில்வேபாதுகாப்பு படை, என்.சி.சி.,
மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்புகள் இடம்பெறும். தொடர்ந்து
முன்னாள் படை வீரர்களின் அணிவகுப்பு இடம்பெறும்.

பாசறை திரும்புதல்

குடியரசு
தினத்தின் இறுதியாக ஜன., 29ல் பாசறை திரும்பும் நிகழ்ச்சிநடைபெறும்.
இதில், முப்படைகளின்சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஜனாதிபதிக்கு
வணக்கம் செலுத்தப்படும். தேசிய கீதத்துடன் விழா நிறைவடையும்.

ஒரே இந்தியா உருவானது எப்படி

சுதந்திரத்தின் போது,
பல சிறு சமஸ்தானங்களாக இந்தியா பிரிந்திருந்தது. இவற்றை ஒருங்கிணைப்பது
சவாலாக இருந்தது. ஒருங்கிணைப்பு பணியில், சர்தார் வல்லபாய் படேல்முக்கிய
பங்கு வகித்தார். 565 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இந்தியா என்ற
ஒரேகொடையின் கீழ் கொண்டு வந்தார். பெரும்பாலானவை தாமே வந்தும்,
பேச்சுவார்த்தையின் மூலமும்இணைக்கப்பட்டன. ஐதராபாத், காஷ்மீர், ஜூனாகாத்,
ஜோத்பூர் ஆகியவை, ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைந்தன. உறுதியாக நின்று
ஒருங்கிணைப்பில் ஈடுபட்ட வல்லபாய் படேல், இந்தியாவின் "இரும்பு மனிதர்' என
பெயர் பெற்றார்."ஆப்பரேஷன் போலோ': ஐதராபாத், இந்தியாவுடன் இணைய மறுத்தது.
சுதந்திரமாகவே செயல்படும் என அதன் நிஜாம்அரசாணை வெளியிட்டார். அப்பகுதியை
இணைப்பது முக்கியமாக கருதப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இதையடுத்து அரசு, "ஆப்பரேஷன் போலோ' என்ற ராணுவ நடவடிக்கையை 1948,
செப்.13ம் நாள் துவக்கியது. சில நாட்களிலேயே அப்பகுதியைராணுவம்,
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.குஜராத்தின் தென்மேற்குப் பகுதியில்
இருந்த ஜூனாகாத், பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்தது. இருப்பினும்,
அது இந்தியாவுடன் இணைவது தான் நியாயம் என மவுண்ட் பேட்டன் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதி ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைத்துக்
கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளான ஜோத்பூர் மற்றும் ஜெய்ஷல்மார் ஆகியவை
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன. அப்பகுதி மக்களின்
விருப்பப்படி, இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

அரசின் கடமை

* நாட்டு மக்களுக்கு பேதம் கருதாது நல்ல வாழ்க்கை, வசதிகளை அமைத்துத் தருதல்.

*சுகாதாரத்தை மேம்படுத்தி, சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்துதல்.

*உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

*இலவச கட்டாய கல்வி, மருத்துவ வசதியை அளித்தல்.

*குறிப்பிட்ட சிலரின் கையில், நாட்டின் செல்வம் அனைத்தும் சென்று சேரா வண்ணம் தடுத்தல்.

* மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாளும் பாடுபடுதல்.

*ஏழைகளுக்கு இலவச சட்ட உதவியை வழங்குதல்.

*நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்தல்.மக்களின் கடமை

*அரசியல் அமைப்பை பின்பற்றி தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் மதித்து நடத்தல்.

* நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்.

*தேசியப் பணிபுரிய எப்போதும் தயாராக இருத்தல்.

*இந்தியர்கள் அனைவரிடத்திலும், சகோதரத்துவ உணர்வு கொண்டிருத்தல்.

*நமது பண்பாடு, கலாசாரத்தை கட்டிக் காத்தல்.

*இயற்கை சூழ்நிலைகளை பாதுகாத்தல்.

*வன்முறையில் ஈடுபடாமல் பொதுச் சொத்துக்களை காத்தல்.

*குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புதல்.

*அறிவியல், தொழில்நுட்பத்தை வளர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்.

*மனிதாபிமான உணர்வோடு இருத்தல்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்று 64-வது குடியரசு தினம் Empty Re: இன்று 64-வது குடியரசு தினம்

Post by Muthumohamed Sat 26 Jan 2013 - 10:48

அமெரிக்காவுக்கு "நோ
'
1950ல்
இருந்து ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும், வெளிநாட்டு தலைவர் ஒருவர்,
விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950ல் நடந்த முதல் குடியரசு தினத்தில்,
விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ பங்கேற்றார். இதன்பின் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இப்பட்டியலில், வல்லரசு நாடான
அமெரிக்காவில் இருந்து ஒரு விருந்தினர் கூட பங்கேற்றதில்லை என்பது
ஆச்சரியமான விஷயம். அதிகபட்சமாக பிரான்ஸ்மற்றும் பூடானில் இருந்து தலா
நான்கு முறை விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.

* இந்தாண்டு
வெளிநாட்டு சிறப்பு விருந்தினராக பூடான் மன்னர் "ஜிக்மே கேசர்நாம்கியல்
வாங்சுக்' பங்கேற்கிறார். உலகின் நீளமானஅரசியலமைப்பு

* குடியரசு தினம் மூன்று நாள் விழா. இறுதி நாளில் வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது.

*
இந்திய அரசியலமைப்பு இந்திமற்றும் ஆங்கிலத்தில்மட்டுமே எழுதப் பட்டுள்ளது.
இதுஉலகின் நீளமான அரசியலமைப்பு. ஒருநாளில் இதை வாசித்துவிட முடியாது. 1950
ஜன., 26 காலை 10.18 மணிக்கு அமலுக்கு வந்தது.

* குடியரசு தினத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்; சுதந்திர தினத்தில் பிரதமர் உரை நிகழ்த்துவார்.

*
2002ல் நடந்த 53வது குடியரசு தினத்துக்குப்பின், இந்திய குடிமகன் யார்
வேண்டுமானாலும் தேசியக்கொடியை (முறைப்படி) ஏற்றிஇறக்கலாம் என்ற அறிவிப்பு
வந்தது. இதற்கு முன் அரசு உயர் அதிகாரிகளுக்குமட்டுமே இந்த உரிமை இருந்தது.

*
குடியரசு தின அணிவகுப்பு ராஜ்பாத்தில் நடப்பது தெரிந்த விஷயம். இது
1954க்குப்பின் தான் இங்கு நடக்கிறது. இதற்கு முன் ஆண்டுதோறும் வெவ்வேறு
இடங்களில் நடந்தது.


கம்பீரமான ராஜபாட்டை

டில்லியில்
நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு, ராஷ்டிரபதி பவனில் துவங்கி, விஜய்
சவுக்,இந்தியா கேட் வழியாக தேசிய மைதானத்தைசென்றடையும். இது நடைபெறும்
பெருமைக்குரியதெருவின் பெயர் தான் ராஜபாட்டை (ராஜ்பாத்). இதை ஆங்கிலேயர்கள்
ராஜ வழி (கிங்ஸ் வே) என்று அழைத்தனர்.

வரலாறு

பிரிட்டன்
கட்டட கலைஞர் எட்வின் லூட்டியன்ஸ், ராஜ்பாத்தை சுற்றியுள்ள பகுதிகளை
கட்டினார். அப்போது இந்த தெருவிற்கு, அதிக முக்கியத்துவம் அளித்தார்.
ராஷ்டிரபதி பவனில் இருந்து பார்க்கையில், டில்லி நகரின் பரந்து விரிந்த
அமைப்பு தெரிய வேண்டும் என்ற நோக்குடன் இந்த தெருவையும் சுற்றியுள்ள
கட்டடங்களையும் வடிவமைத்தார். தெருவின் இருபுறமும், புல்வெளிகள்,
வாய்க்கால்கள்மற்றும் வரிசையான மரங்கள் காணப்படுகின்றன. கிழக்கு - மேற்கு
திசையில் செல்லும் இந்த பாதை,செயலக கட்டடத்தின் வடக்குமற்றும் தெற்கு
பகுதியின் பக்கவாட்டில் உள்ளது. ராஷ்டிரபதி பவன் வாயில் கதவுடன், பாதை
முடிகிறது.



"மாண்புமிகு'' மக்களாட்சி

குடியரசு
என்பதன் நேரடி பொருள் "மக்களாட்சி'. தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை
தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இது குடியரசு நாடு
என அழைக்கப்படுகிறது. இதன் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என
அழைக்கப்படுகிறார். பதவிக்காலம் 5 ஆண்டுகள். எப்படி வந்தது இந்தியா
சுதந்திரம் பெறுவதற்கு முன்,பிரிட்டிஷாரிடம் இருந்து "டொமினியன்
அந்தஸ்து'பெற்றால் போதும் என பல சுதந்திர போராட்ட தலைவர்கள் எண்ணினர்.
"டொமினியின் அந்தஸ்து' என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய
ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள்
தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு
தெரிவித்தனர். பின் பூரண சுயராஜ்யம் தான் லட்சியம் என தலைவர்களிடம் மாற்றம்
வந்தது. இதன்படி லாகூரில் நடந்த காங்., மாநாட்டில் இந்தியாவுக்கு
சுதந்திரம் கிடைத்தால் ஜன., 26 "பூரண சுதந்திர தினமாக' கடைபிடிக்க வேண்டும்
என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்றாலும்,
உண்மையான சுதந்திரம் கிடைத்தது 1950, ஜன., 26ல் தான். ஏனெனில் சுதந்திரம்
பெற்ற போது, பிரிட்டிஷ் அரசுஇந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான்
வழங்கியது. அதன்படி பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர்ஜெனரல்
தான் நாட்டின் தலைவராக இருந்தார்.சுதந்திரத்துக்குப் பின், ஆட்சியாளர்கள்,
தங்களது விருப்பத்துக்கு செயல்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசியலமைப்பு
உருவாக்கப்பட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. கவர்னர் ஜெனரல் பதவி
நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவானது.


ஜனாதிபதியின் அதிகாரங்கள்

* இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதி.

*பார்லிமென்டில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பிரதமராக பதவியேற்க அழைத்தல் மற்றும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தல்.

* பிரதமரின் பரிந்துரைப்படி, அமைச்சர்களை நியமனம் செய்தல்.

* தேர்தல் நடத்தவும், அவசர உத்தரவு பிறப்பிக்கவும் அதிகாரம்.

* மாநில அரசை கலைக்கும் அதிகாரம்.

* பார்லிமென்டை கூட்டுதல், தள்ளி வைத்தல், உரையாற்றுதல், நிறைவேறிய மசோதாக்களுக்கு கையெழுத்திடல்.

*
ஆளுநர், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்திய அரசின் தலைமை
வக்கீல், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதுவர் ஆகியோரை நியமனம்
செய்யும் பொறுப்பு.

* அவசர நிலையை பிரகடனம் செய்தல்.

* பார்லிமென்டின் கீழவையை கலைக்கும் அதிகாரம்.

* சுப்ரீம் கோர்ட் அளித்த தண்டனையை குறைக்கும் அதிகாரமும் உண்டு.

தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இன்று 64-வது குடியரசு தினம் Empty Re: இன்று 64-வது குடியரசு தினம்

Post by rammalar Sat 26 Jan 2013 - 10:59

இன்று 64-வது குடியரசு தினம் 800522இன்று 64-வது குடியரசு தினம் Image00003
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இன்று 64-வது குடியரசு தினம் Empty Re: இன்று 64-வது குடியரசு தினம்

Post by ansar hayath Sat 26 Jan 2013 - 19:04

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இன்று 64-வது குடியரசு தினம் Empty Re: இன்று 64-வது குடியரசு தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum