Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...
Page 1 of 1
பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...
பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...
பெங்களூரு புறநகர் ரயில் நிலையம்
நிலையத்தின்
படிக்கட்டை ஒட்டியு நிரம்பிவழிந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி அதன்
அருகே, சாப்பிட்டு பல நாளானதன் காரணமாக ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில்
பிடித்து வைத்துக் கொண்டு, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில்
வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து,
சிரமப்பட்டு உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.
இந்த காட்சியை பார்த்த
ஆயிரக்கணக்கான பயணிகள் "உச்' கொட்டி பரிதாபட்டதோடு சரி, யாரும் பக்கத்தில்
போகவில்லை, முதல் காரணம் அவசரம், முக்கிய காரணம் இளைஞனின் உடம்பை
உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.
இந்த
நேரம் ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறிஸ்துவ சகோதரி
ஒருவர், இளைஞனை பார்த்த மாத்திரத்தில் தன் வயதையும் பொருட்படுத்தாமல்
ஒடோடிப் போய் "மைசன்' என்று தூக்கி தனது மடியில் கிடத்திக் கொண்டார், பிறகு
பையில் இருந்த உணவை ஊட்டிவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, தலையைக்
கோதியபடி "யாராப்ப நீ' என்று விசாரித்தார்.
கர்நாடக மாநிலம் மதுரகிரி
என்ற ஊரைச் சேர்ந்த ரமேஷ் பாபுவிற்கு தொழு நோய் என்று தெரிந்த உடனே
பெற்றோரே வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். இந்த துரத்தல் எல்லா பக்கமும்
தொடர்ந்தது. தொழுநோயும் வளர்ந்தது.
ஒரு கட்டத்தில் நடமாட முடியாத
நிலையில், இந்த ரயில் நிலையத்தின் மூலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தனது
கதையை கூறிய ரமேஷ்பாபு, பெற்ற தாய் கூட தொடத் தயங்கி, துரத்தி விட்ட தன்னை
தூக்கி மடியில் கிடத்தி, உணவு ஊட்டிய கருணை தெய்வத்தின் கைகளை பிடித்துக்
கொண்டு கதறி அழுதார். அந்த சகோதரியின் விரல்கள் பிடித்து தொழுதார்.
"நான்
வந்துட்டேன்ல, இனி அழக்கூடாது என்று கூறிய சகோதரி, உடனே போன் செய்தார்.
அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாகனம் வர, இருவரும் அதில் பயணப்பட்டனர்.
சில ஆண்டுகள் கழிந்தது
இப்போது
ரமேஷ் பாபு பெங்களூரு மாநகராட்சியில் சுறு, சுறுப்பாக பணியாற்றும்
உதவியாளர். "ரமேஷ்...ரமேஷ்'' என்று அலுவலகமே கூப்பிடுகிறது. கொஞ்சுகிறது.
ஒரு காலத்தில் எனக்கு தொழுநோய் இருந்தது என்பதை இப்போது என்னாலயே
நம்பமுடியவில்லை. தொழு நோய் முற்றிலும் குணமாகி மைனைவி குழந்தைகள், சொந்த
வீடு என்று சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார்.
இந்த அதிசயம் எப்படி நடந்தது .
பெங்களூரு
பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளி; இங்கு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஓரு
தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தால் 77ம் ஆண்டு
துவங்கப்பட்டது. தொழு நோய் இல்லம் தயராகிவிட்டது, தொழு நோயாளிகளும்
வந்துவிட்டனர், ஆனால் அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான
சகோதரி தேவைப்பட்டார். மாநிலம் முழுவதும் உள்ள சகோதரிகள் அனைவருக்கும்
வேண்டுகோள் விடப்பட்டது.
அப்போது சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக
வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும் இந்த வேண்டுகோள்
கடிதம் கிடைத்தது. அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி
எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்துகொண்டார்,
இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார் .
அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.
இல்லத்தில்
உள்ள தொழுநோயாளிகளை சரியான மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்துவதும்,
குணமான அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித்
தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர்களுக்கு சிறு கடைகள் அமைத்து
கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார், பின்னர்
அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து
விடுகிறார்.
இப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் பெங்களூரில் உள்ள அரசு
மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கின்றனர், அந்த 500 பேரில்
ஒருவர்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ரமேஷ் பாபு, 800 பேர்வரை
முழுமையாக குணமாகி அரசு கொடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.அத்தனை பேர்
வீட்டு பூஜை அறைகளிலும் தவறாமல் மேரியின் படம் இடம் பெற்றிருக்கிறது.
இப்போது
75 வயதாகும் மேரிக்கு பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக்கொண்டன.,அவரை பொறுத்தவரை
"அம்மா, நான் இப்ப நல்ல இருக்கேம்மா'' என்று கைபிடித்து பேசும் முன்னாள்
தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.
பெங்களூரில், வாழும் அன்னை தெரசாவாக வலம் வரும் சகோதரி மேரியை வாழ்த்த வயதும், தகுதியும் இல்லாததால் வணங்குவோம்.
- எல்.முருகராஜ்
---தினமலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum