சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தினம் ஒரு தகவல்.. Khan11

தினம் ஒரு தகவல்..

+3
பானுஷபானா
rammalar
*சம்ஸ்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தினம் ஒரு தகவல்.. Empty தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Tue 29 Jan 2013 - 15:45

தினம் ஒரு தகவல்.. 542410_139383786221154_1303990847_n

காரூன்
மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”. இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.

கல்வி ஞானம் பெற்றவர்களே “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28:76-82

கெய்ரோவிலிருந்து 150 கிலோமீட்டர் தென்மேற்க்கில் கஸர காரூன் என்ற இடத்தில் தான் அவனுடைய ஆலயம் உள்ளது.

காரூனின் ஆலயம்


காரூனின் கிணறு


காரூனின் ஏரி என இப்பொழுதும் அழைக்கபடுகின்ற ஏரி.


காரூனும் அவனுடைய சுற்றத்தார்களும் புதைந்துபோன இடம்.

நன்றி முகநூல்.


Last edited by *சம்ஸ் on Sun 14 Jul 2013 - 10:45; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள்.

Post by *சம்ஸ் Tue 29 Jan 2013 - 15:49

தினம் ஒரு தகவல்.. 265148_500383136679929_1916879179_n

இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316)

நன்றி முஸ்லிம் பெண்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by rammalar Wed 30 Jan 2013 - 0:05

நல்ல பதிவு தினம் ஒரு தகவல்.. 2027189708
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Wed 30 Jan 2013 - 8:04

தினம் ஒரு தகவல்.. 9444_462976730431298_1744905086_n

ஒரு நாயை துன்பத்திலிருந்து காப்பாற்றியவர் சுவனம் செல்கின்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 173, 2363

இப்படி ஒரு மறுமை நம்பிக்கை இருந்தால் தான் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்குக் கூட வதையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

// அதே சமயம் இஸ்லாத்தில் நாய் வளர்ப்பதை பற்றி என்னசொல்லபட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம் //

நாய் வளர்க்கலாமா?


பதில்

வேட்டையாடுவது பாதுகாப்புத் தேவை ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டும் நாய்கள் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. இது போன்ற தேவைகளின்றி செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கக் கூடாது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.
2322حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَمْسَكَ كَلْبًا فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ قَالَ ابْنُ سِيرِينَ وَأَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدٍ وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ رواه البخاري


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (நன்மைகள்) குறைந்து போய் விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (2322)

2323حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ رَجُلًا مِنْ أَزْدِ شَنُوءَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ اقْتَنَى كَلْبًا لَا يُغْنِي عَنْهُ زَرْعًا وَلَا ضَرْعًا نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِي وَرَبِّ هَذَا الْمَسْجِدِ رواه البخاري

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
"அஸ்த் ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீ ஸுஹைர் (ரலி) அவர்கள் என்னிடம், " "விவசாயப் பண்ணையையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் தேவை எதுவும் இன்றி எவர் நாய் வைத்திருக்கின்றாரோ அவரது நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
நூல் : புகாரி (2323)
3225حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةُ تَمَاثِيلَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
இதை அபூ தல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (3225)
3928حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ رواه مسلم
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள். உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்து விட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழைய மாட்டோம்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (4272)
பாதுகாப்பிற்காக நாய்களை வளர்க்கலாம் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வளர்க்கும் போது அந்த நாய்களைத் தொட வேண்டிய நிலை அவசியம் ஏற்பட்டால் தொடுவது தவறல்ல.
நாயின் எச்சில் கடுமையான அசுத்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அதனுடைய எச்சில் நம்மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
174 وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ حَدَّثَنَا أَبِي عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِي حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ كَانَتْ الْكِلَابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ رواه البخاري
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலுக்குள் நாய்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. இதற்காக மக்கள் (பள்ளிக்குள் தண்ணீர்) எதையும் தெளிப்பவர்களாக இருக்கவில்லை.
நூல் : புகாரி (174)

422و حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ سَمِعَ مُطَرِّفَ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ عَنْ ابْنِ الْمُغَفَّلِ قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ ثُمَّ قَالَ مَا بَالُهُمْ وَبَالُ الْكِلَابِ ثُمَّ رَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَكَلْبِ الْغَنَمِ وَقَالَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ رواه مسلم

அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள். மேலும் "பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (473)
நாய்கள் மூலம் வேட்டையாடும் போது அது தன்வாயால் கவ்வி பிராணிகளைப் பிடித்து வந்தால் அந்தப்பிராணியை நாம் உண்ணலாம் என்று அல்லாஹ் அனுமதி அளித்துள்ளான். இதுவும் வேட்டைக்காக நாய் வளர்க்கலாம் என்பதை விளக்குகிறது.
"தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை (வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன'' எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.
திருக்குர்ஆன் 5:4

மேலும் பார்க்க

http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/poonai_valarkalama/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/meen_valrkalama/


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Thu 31 Jan 2013 - 8:15

பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்

"நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர. தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்." (திருக்குர்ஆன் 24:31)

மேலே உள்ள இந்த கட்டளை ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய கண்ணியம் அல்ல, மாறாக பெண்ணினத்திற்கே அல்லாஹ் வழங்கிய கண்ணியம் ஆகும்.

ஏனென்றால் இறைவன் மனித இனத்தை படைத்து, அதிலும் பெண்ணினத்திற்கு மட்டும் ஹிஜாப் என்னும் ஆடை முறையையும் குறிப்பிட்டு சொல்வதனால் இதனை இறைவன் பெண்களுக்கு வழங்கிய கண்ணியம் என்றே பெண் சமுதாயம் எண்ண வேண்டும்.

ஆனால் அவ்வாறு எண்ணி பெருமை பட வேண்டிய சமுதாயம் அதையே தனக்கு வேலி என்றும் தன்னை அடிமைப் படுத்துகிறது என்றும், தன் சுதந்திரத்திற்கு தடையாக உள்ளது என்றும் எண்ணி தன் இறைவன் தங்களுக்கு அளித்த கண்ணியத்தை தாங்களே பாழாக்கி சிறுமைப்பட்டுக் கொள்வதையும் பார்க்கின்றோம்.

சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் அவரது ஆதரவாளர்களும் 'பர்தா' பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறது, பிரான்ஸ் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று பர்தாவுக்கு எதிரான விவாதத்தில் ஈடுபட்டு சர்சைக்குள்ளாயினர்.

பிரான்சின் கலாச்சாரத்திற்கு வேறுபடுகிறது என்று வருத்தப்பட்டு புலம்பியவர்களின் கலாச்சாரத்தை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால்.....

யார் யாருடனும் பேசலாம், பழகலாம், உறவு வைத்துக் கொள்ளலாம், உறவை முறிக்கலாம். அவர்கள் தங்கள் மேலாடையையும் கீழாடையையும் குறைத்துக் கொள்வது தான் தங்கள் கலாச்சாரம் என்று எண்ணி பெருமை பேசி தங்கள் கற்பையும், வாழ்வையும் சீரழித்து வாழ்க்கையையும் சீரழித்து இருளில் வாழ்கின்றனர்.

இரவையே பகலாக்கக் கூடிய வெளிச்சத்தில் ஹோட்டல்களில் (டிஸ்கொதேக்) ஆடிப்பாடி திரியக் கூடிய அனைத்து மங்கைகளும் உண்மையில் வாழ்வது இருளில் தான்.

இப்படி பெருமை பட்ட(?) கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியத்தை விமர்சிப்பதற்கு எள்ளளவும் ஏன் நுனியளவும் கூட அருகதை கிடையாது.

இந்த கலாச்சாரத்தை தான் மேற்கத்திய கலாச்சாரம், சமுதாய முன்னேற்றம், பெண்களின் சுதந்திரம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

National Domestic Violence Survey - தனது ஆய்வில் அமெரிக்காவில் 1 வருடத்தில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் 1 நாளில் மட்டும் 3 பெண்கள் தங்கள் காதலன் / கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள்(?) 1970 களில் போராடிப் பெற்ற அனைத்து பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே போராட்டம், ஆர்ப்பாட்டம், எதுவுமின்றி பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

அதை ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக பல அல்ல ஒரு உதாரணம், ஒரு பெண்ணின் உயிர்த் தியாகம். இந்த உயிர்த் தியாகம் மேற்கத்திய வர்க்கத்திற்கு ஒரு கசையடியாக விழுந்துள்ளதை பத்திரிகைகள் படம் போட்டு காட்டியது.

ஜெர்மனியில் வாழ்ந்து வந்த தம்பதிகள் உக்காஸ் (பொறியாளர்), செர்பினி (மருந்தாளர் துறையில் பட்டப் படிப்பு முடித்தவர்). இவர்களுக்கு 3 வயதான முஸ்தபா என்ற மகனும் உண்டு.

2008 ஆம் ஆண்டு செர்பினி தன் மகன் முஸ்தபாவுடன் சிறுவர் பூங்காவுக்கு சென்று அங்கு நீந்துவதற்கு அலெக்ஸ் என்ற 28 வயது இளைஞரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அலெக்ஸ் செர்பினியைப் பார்த்து தீவிரவாதி, விபச்சாரி, என்று தூற்றியுள்ளான். செர்பினி இஸ்லாமிய முறையில் ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணம்.

தன்னையும் தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற செர்பினி வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஜூலை 1 ம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கில் அலெக்ஸ் 780 யூரோ பணத்தை அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது நீதி மன்றம். உடனே அலெக்ஸ் திடீரெனப் பாய்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி மூன்று மாத கர்பிணியான செர்பினியின் வயிற்றில் 18 முறை குத்தினான். நீதிமன்றத்தின் நடுவே இந்த கோரச் சம்பவம் நடந்தேறியது.

அலெஸை சுட்டுத் தள்ள வேண்டிய போலீசாரோ காப்பாற்ற வந்த உக்காஸ் மீது துப்பாகியால் சுட்டனர். உயிருக்கு போராடிய உக்காஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அப்பாவித் தாயான செர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றிலிருந்த 3 மாதக் கருவும் உயிர் துறந்தது. 3 வயது சிறுவன் முஸ்தபாவிற்கு தன் கண் முன்னேயே தன்னுடைய தாய் உயிர் துறப்பதை காணும் அவலம் ஏற்பட்டது.

மறவா அல் செர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6 ம் தேதி அவரது சொந்த ஊரான எகிப்தின் அலெஸ்ஸான்டிரியா நகரில் நடைபெற்றது.

ஹிஜாபிற்காக ஷஹீதான செர்பினி போராட வேண்டும் என்ற குணம் படைத்தவர்.

இறைவன் பெண்ணினத்திற்கு அளித்த சலுகையோ, உரிமையோ அல்ல இந்த ஹிஜாப், மாறாக இது ஒரு கண்ணியம்.

அந்த கண்ணியத்தை பெண்ணினம் பேண வேண்டும், அதை உணர வேண்டும். அது மட்டுமல்ல ஹிஜாபிற்காக செர்பினி போன்ற ஒரு பெண் அல்ல பல பெண்கள் போராடிக் கொண்டும் அதன் மூலம் இரு உலகிலும் வெற்றிப் பெற்றுக் கொண்டும் தான் உள்ளனர். இந்த போராட்டம் இனி வரும் காலங்களிலும் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயமாக நம் சமுதாயத்தை மாற்றுவோம். நாமும் மாறுவோம். வெற்றி பெறுவோம்.

அல்லாஹ் வழங்கிய கண்ணியத்தை பேணி காப்போம்.


உம்மு ஷஹீதா ஆலிமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by பானுஷபானா Thu 31 Jan 2013 - 11:14

பகிர்வுக்கு நன்றி தினம் ஒரு தகவல்.. 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Thu 31 Jan 2013 - 12:17

பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தினம் ஒரு தகவல்.. 331844
மறுமொழிக்கு நன்றி அக்கா @. :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Fri 1 Feb 2013 - 20:50

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சமையல் காளான் 'மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.


ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஹகம் இப்னு உ(த்)தைபா(ரஹ்) எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தபோது தான் அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு வந்தேன்.
ஸஹீஹ் புகாரி 5708


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Fri 1 Feb 2013 - 20:52

"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Sat 2 Feb 2013 - 16:09

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.:

இமாமுக்கு முன்பே தலையை உயர்த்துபவர் அவரது தலையை கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை பயந்து கொள்ளவில்லையா?

(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 647)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by ansar hayath Sun 3 Feb 2013 - 1:29

://:-: @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Sun 3 Feb 2013 - 8:26

ansar hayath wrote: ://:-: @.
நன்றி அன்சார் மறுமொழிக்கு @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Sun 3 Feb 2013 - 10:06

இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா?


பதில்:

‘ஸபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் – மேற்படி பொருள் குறித்து – ஒரு சீக்கியருக்கும் – ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன்.

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார்: நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது – அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு – கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் – நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து – சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?

மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.

மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் – ‘ஷாபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.


1. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.
அரபிமொழியில் ‘ஸக்காத்’ என்றால் ‘தூய்மை’ என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து ‘ஸக்கய்தும்’ (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் காலந்டைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B. ‘ஸபிஹா’ என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும்.
மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.
இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் – அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே!
கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. .இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீ;ண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.


மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்

தமிழாக்கம்: அபூ இஸாரா

Anñisa | முஸ்லிம் பெண்கள்
உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தினம் ஒரு தகவல்.. 73323_504126812972228_578397918_n


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Sun 3 Feb 2013 - 15:28

தினம் ஒரு தகவல்.. 205639_330726853695589_4354514_n

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.

இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.

இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?

இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34

(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

(அல்குர்ஆன் 34 : 6)

-கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 21:36

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5678.

பேரீச்சம் பழம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5445


ஜபலா இப்னு சுஹைம்(ரஹ்) கூறினார்

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், '(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று சொல்வார்கள். பிறகு, 'ஒருவர் தம் சகோதரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தாலே தவிர' என்று சொல்வார்கள்.
'அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்' என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) கூறினார்.
ஸஹீஹ் புகாரி 5446


அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்.
ஸஹீஹ் புகாரி 5447

Anñisa | முஸ்லிம் பெண்கள்
உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 21:37

ஜக்காத் (இஸ்லாமிய வரி)


"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும்
(34:39)


இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவத்ற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.
காலில் முள் தைத்தால் கண்ணில் நீர் வழிகிறது. உடம்பில் எங்கேனும் அடிபட்டால் கரம் உடனே அவ்விடத்தைத் தேய்த்துக் கொடுக்கிறது. விரலில் பட்ட காயத்துக்காக இரவெல்லாம் கண் தூங்க மறுக்கிறது. இது போன்று சமுதாயத்தில் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை மற்றவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் வாடும் சகோதரனுக்கு வாழ்வளிக்க இஸ்லாம் ஜக்காத் என்ற கடமையின் மூலம் வழிவகைச் செய்கிறது.


~பிறரின் ஏழ்மையை விரட்ட:~

ஜக்காத்தின் தலையாய நோக்கமாக திகழ்வது ஏழ்மை எனும் ஒரு நிலையை விரட்டியடிக்க இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஐம்பது பைசா, ஒரு ருபாய் போன்ற நாணயங்களாக அல்லது ஆடைகளாக கொடுப்பதினால் ஜக்காத் நிறைவேறிவிட்டது என கருதவேண்டாம்.


ஒரு செல்வந்தர் தனது ஆண்டு ஜக்காத்தின் மூலம் வாழத்துடிக்கும் ஒருவருக்கு ஒரு தொழில் துவங்க ஒத்துழைப்புத்தந்தால், அவர் தனது செல்வத்தைப் பெருக்கி, அவரும் பலருக்கு ஒத்துழைப்புத்தரும் சாத்தியக்கூறு ஏற்படலாம். அல்லது பல செல்வந்தர்கள் தங்கள் ஜக்காத்தை ஒன்று திரட்டி பல ஏழைகளுக்கு கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் துவங்க வழிவகை செய்யலாம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு செல்வந்தரும் ஆண்டொன்றுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் ஏழ்மை விரண்டோடிடும் என்பதில் ஐயமில்லை.

இக்கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அருமையாக சித்தரிக்கிறார்கள்.
"ஓரிரு கவள உணவு அல்லது ஓரிரு பேரீத்தம்பழம் பெறுவதற்காக மக்களின் மத்தியில் சுற்றித் திரிபவர் ஏழையல்ல, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதியைப் பெறாதவரே ஏழை. தருமம் கொடுப்பதற்காக அவரை யாரும் எளிதில் இனம் கண்டுக்கொள்ள இயலாது. யாசகம் பெறுவதற்காக அவர் மக்களின் மத்தியில் நிற்கவும் மாட்டார்" - (அல்ஹதீஸ் - நூல்:புகாரி)


அருள்மறை இவ்வாறுக் கூறுகிறது:


"அல்லாஹ்வின் பாதையில் சிறைப்பட்டுவிட்ட ஏழைகளுக்கு அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவும் சக்தி பெறமாட்டார்கள். அவர்களின் முகவாட்டத்தைக் கொண்டு நீர் அவர்களை இனங்கண்டு கொள்வீர்! அவர்கள் மக்களிடம் வற்புறுத்தி யாசகம் கேட்கவும் மாட்டார்கள்" (2:273)


ஜக்காத் கடமையாக்கப்பட்டிருப்பதற்கு சமுதாய நோக்குமட்டும் காரண்மல்ல. ஒருவரின் செல்வம் அவரை விட்டு அகலாமல் நீடித்திருப்பதற்கும், செல்வத்தை அழிவின் பாதைகளிலிருந்து காப்பதற்காகவும் ஜக்காத் கடமையாக்கப்பட்டிருக்கிறது.


நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாக தேவையான சக்திகள் உடலுக்குள் செல்வதைப் போன்று, ஊறுவிளைவிக்கும் சில குணங்களும் புகுந்துவிடுகின்றன. நோன்பின் மூலமாக அக்குணங்களிலிருந்து உடலை சுத்தப்படுத்த இறைவன் வகுத்துதந்துள்ளான். அதுபோல நாம் செல்வத்தைத் தேடும் போது, அழிவை தேடித்தரும் சில பகுதிகள் செல்வத்தில் புகுந்து விடுகின்றன. தேடிய செல்வத்திலிருந்து, நம்மை அழிவுப் பாதைக்கு கொண்டுச் செல்லும் ஒரு பகுதியை அப்புறப்படுத்துவதற்குள்ள ஒரே வழி ஜக்காத்தாகும். இக்கருத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது.


(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான். (9:103)


நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை மன்னிப்புக் கோருதலை ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான்
என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (9:104)


நபிகள் நாயகம் (ஸல்) விளக்குகிறார்கள்.

"நோன்பு உடலை சுத்தம் செய்வதைப் போன்று ஜக்காத் செல்வத்தை சுத்தம் செய்ய வல்லதாகும்". (அல் ஹதீஸ்)


செல்வத்திலிருந்து, இறைவன் கூறும் அளவை அப்புறப்படுத்தும் போது, எஞ்சிய செல்வம் பரக்கத்தானதாக, பலன் தருவதாக, நிலைப் பெற்றதாக மாறிவிடும். அஃதனின்றி அந்த அளவை அப்புறப்படுத்தாவிடில் திரட்டிய செல்வத்துக்கும் அழிவு ஏற்படும் நிலையுண்டாகும். ஒரு பாத்திரப் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தால் அது முழுவதும் எவ்வாறு நஞ்சாகிவிடுமோ! அதுப்போன்றுக் கொடுக்கப்படாத ஜக்காத் தொகை எல்லாச் செல்வத்தையும் பரக்கத்தற்றதாக, தேவையின் போது கை கொடுக்காததாக முறையற்ற வழியில் செல்விட வேண்டிய கட்டாயத்துள்ளானதாக மாற்றி விடும்.
கடலிலோ, திடலிலோ ஒருவரின் பொருள் அழிவதற்கு ஜக்காத் செலுத்தப்படாமலிருப்பதேயன்றி வேறு காரணமில்லை.
(அல் ஹதீஸ்)


ஜக்காத்தின் மூலம் உங்களின் செல்வத்தைக் காப்பாற்றுங்கள். தருமத்தைக் கொண்டு உங்களின் நோய்க்கு மருந்திடுங்கள். சோதனைகளை பிரார்த்தனையைக் கொண்டு வெல்லுங்கள்.
(அல் ஹதீஸ்)



~செல்வத்தின் மாமருந்து:~


செல்வத்தை எல்லோரும் தேடுகின்றனர். ஆனால் தேடிய செல்வத்தை அழியாததாக, உரிய நேரத்தில் கை கொடுக்கவல்லதாக நினைந்தறியா விதத்தில் வளர்ச்சியடையக் கூடியதாக ஆக்கும் முறையை அறிந்து செயல்படுபவர் மிகவும் குறைவே!
கோடைக்காலத்தில் இலைகள் காய்ந்து உதிருவது மரத்துக்கு வறட்ச்சியான தோற்றத்தை தந்தாலும், அடுத்து வரும் வசந்த காலத்தில் புத்தளிர் விட்டு மரம் பசுமையடையப் போவதற்கு அது அறிகுறியாகும். நோன்பு நோற்பதால் உடல் மெலிவதைப் போன்றிருந்தாலும், பின்னர் நல்ல சக்திகள் சேகாரமாகி உடல் திடகாத்திரம் ஆவதுப் போல, ஜக்காத் செலுத்துவதால் செல்வத்தின் ஒரு பகுதி செலவிடப்பட்டு, குறைந்துவிட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அதனால் செல்வம் வளர்ச்சியே அடைகிறது.


"(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜக்காத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது) அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்".
(30:39)



~எப்போது கொடுப்பது:~


இறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகளில் உரிய தருனத்தை விட்டு முந்தக்கூடாது. ஆனால் இறையடியார்களுக்குப் பலனளிக்கும் ஜக்காத் கடமை வருவதற்கு முன்பே கூட கொடுக்கலாம். எனவே ஆண்டு முழுவதும் ஜக்காத்தைக் கொடுக்கலாம். இருப்பினும் ஒரு ந்ற்செயலுக்கு எழுபது பங்கு அதிகமான கூலி வழங்கப்படும் நாளாகிய ரமலான் மாதத்தில் கொடுப்பதை மக்கள் ஏற்புடையதாகக் கருதுகின்றனர். அதுவும் ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலத்துல் கத்ரி இரவில் வழங்குவதை அநேகர் வழமையாகக் கொண்டுள்ளார்கள்.


குறிப்பாக ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பணம், பொருள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!.


முறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழ வைத்து, வல்ல ரஹ்மானின் கிருபையையும், நெருக்கத்தையும் பெருவோமாக! ஆமீன்!!.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Sun 10 Feb 2013 - 9:55

தினம் ஒரு தகவல்.. 72606_513438168707759_40417452_n
நேரம் தவறாமை

நேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும். நேர தவறுதல் ஏன் ஏற்படுகிறது? அக்கறையின்மையால். எதன் மீது? எந்தக் காரியத்திற்காகப் போகிறோமோ அதன் மீது நமக்கு முழு ஈடுபாடு இல்லை. எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழே முக்காலுக்கு நுழைபவர்தான் சரியான மனிதர்.

ஸ்கூட்டரை அலுவலக வாசலில் நிறுத்தி விட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு காலை வணக்கம் சொல்லி, இன்றைய பொழுது இந்த அலுவலகத்தில் நல்லபடி நகர வேண்டுமே என்ற அக்கறையோடு சில விநாடிகள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருப்பின், நிச்சயம் அந்த நாள் பலம் பொருந்தியதாக இருக்கும். இந்த ஐந்து நிமிட நேரத்தில் மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியாகி விடும். மாறாக, எட்டு பதினேழுக்கு அரக்கப் பறக்க நுழைந்து, கையெழுத்துப் போட்டு விட்டு வியர்த்து வழிய, நெஞ்சு படபடக்க சுற்றியிருப்பவர்களுக்கு முகமன் சொல்ல மறந்து போய், மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கும் போது, நீங்கள் கேலிப் பொருளாக மாறி விடுவீர்கள். சீக்கிரம் வந்தவர்கள் உங்களை அதிசயமான பிராணியாகத் தான் பார்ப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழிக்கின்ற அலுவலகத்தில் நீங்கள் எந்த மரியாதையும் இல்லாமல் தாமதமாக வருவது, உங்கள் வேலை மீது உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இல்லை என்பதை நிச்சயமாக்குகிறது. உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கவில்லை என்பதும் உண்மை. ஆறு மணிக்குத் திறக்க வேண்டிய மளிகைக் கடையை ஏழு மணிக்குத் திறந்தால், இடையே உள்ள ஒரு மணி நேரத்தில் இருபது வாடிக்கையாளர்கள் வந்து போயிருப்பார்கள். ஒரு நாள் தாமதித்து, மறு நாள் நீங்கள் ஆறு மணிக்குத் திறந்தாலும், “அட… அவன் எங்க கடையைத் திறந்திருக்கப் போறான்; ஆடி அசைஞ்சு எட்டு மணிக்குத்தான் கடையையே திறக்கறான்” என்று உங்கள் கடையைப் பற்றி, உங்களைப் பற்றி ஒரு தவறான செய்தி பரவும். இதை விட வியாபரத்திற்கு இடைஞ்சலான விஷயம் எதுவுமில்லை.

குறித்த நேரத்திற்கு ஒரு இடத்திற்குப் போக முயாதபடி இடைஞ்சலாக இருப்பது எது என்று யோசித்துப் பார்த்தால், உடனடியாக எல்லோராலும் சொல்லப் படும் விஷயம் டிராபிக்ஜெம். அந்தக் காரணம் எல்லோராலும் நிஜமாகவோ, பொய்யாகவோ சொல்லப்படுகிறது. சில சமயம் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்மையாயினும் தினந்தோறும் அப்படித்தான் என்று சொல்வதற்கில்லை. இப்படி தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் இருக்குமானால், அந்த நெரிசல் நேரத்தையும் கணக்கிட்டு, முன்கூட்டியே கிளம்பலாமே!

நேரம் தவறாமையை ஒரு முக்கியமான விஷயமாக ஏன் கருதுவதில்லை? நம்முடைய மன்னிக்கின்ற குணம்தான் காரணம் என்று தோன்றுகிறது. வெகு எளிதில் நாம் தவறுகளை மன்னித்து விடுகிறோம். “பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சுன்னா தலையா போயிடும்?” என்று பேசுகின்றோம். பெரிய பாவமில்லை என்று எண்ணுகின்றோம்.

தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளாத தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சந்திப்பிற்கு ஒருவர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலும் அவரை புறக்கணிக்க வேண்டும். அம்மாதிரி உறுதியோடு நீங்கள் இருப்பின், நீங்கள் தாமதமாக எந்தச் செயலையும் செய்ய மாட்டீர்கள். நேரம் தவறாமையில் அக்கறை கொள்வீர்கள். இது இரட்டை லாபம். மற்றவர் தாமதத்தை நேர் செய்வது; உங்களையும் நேரம் தவறாமையில் பழக்கிக் கொள்கிறீர்கள்.

தாமதம் தவிர்த்தல் ஒரு தவம். மிக நல்ல பழக்கம். இது உங்களுக்குள் படிந்து வந்து விட்டதென்றால் திட்டமிடல் என்ற விஷயம் உங்களுக்குள் மிக வேகமாக நுழைந்து விடும். திட்டமிடுவதற்குண்டான தெளிவும் மனதிற்குள் படிந்து விடும். நேரம் தவறியதற்கு, மற்றவர்களுடைய நேரம் தவறிய செயல்களும் ஒரு காரணம் என்று அடிக்கடி சொல்லப்படும். “நான் கரெக்ட்டா பத்து மணிக்குப் போய் நின்னேன் ஸார். அந்தாள் பதிணொன்ரை மணிக்கு வரான். வந்துட்டு பேப்பர் படிக்கிறான். பேப்பர் படிச்சிட்டு டீ குடிக்கப் போயிடறான். பன்னிரெண்டேமுகாலுக்குத்தான் ஸார், வாங்க உட்காருங்கன்னு சொன்னான். ரெண்டு தடவை வேணும்னே பண்ணிரண்டு மணிக்குப் போனேன். இப்போதும் அதே மாதிரிதான் சாப்பிட்டு அப்புறம் தான் ஸார் கூப்பிடறான்.’

அவருடைய நேர தவறிய புத்தி இவருக்கும் ஒட்டிக் கொள்கிறது. “என்னங்க பண்றது. இப்படியே பழகிட்டோம். பத்து மணிக்கு வாங்க அப்படின்னாலே, புத்தி பதினோரு மணிக்குன்னு கணக்கு போட்டுக்குது’ என்று உளறுபவர்கள் உண்டு. இதற்கு செவி சாய்த்து விடக் கூடாது.

நீ திருடினால் நான் திருட வேண்டுமா? நீ லஞ்சம் வாங்கினால் நான் லஞ்சம் வாங்க வேண்டுமா? நீ பொய் சொன்னால் நான் பொய் சொல்ல வேண்டுமா? என்பது போல அவர் தாமதம் உங்களைத் தொற்றிக்கொள்ளக் கூடாது. நீங்கள் அதை மறுத்து, முன்னிலும் உறுதியாக நேர தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரிந்தால் நேர தவறாமை குணமும் தானாக வந்து விடும்.

நேர தவறாமை என்பது உங்களை நீங்களே மதிக்கும் சுயமரியாதை. உங்களை எப்பொழுதும் உற்சாகமாகவும் தொடர்ந்து வேலை செய்பவராகவும் வைக்கும். உங்களைச் சோம்பலிலிருந்து அப்புறப்படுத்தி சுறுசுறுப்பானவராக வைக்கும். அந்தச் சுறு சுறுப்புதான் கம்பீரம். அந்தக் கம்பீரம் தனிக் கவர்ச்சி. கவர்ச்சிதான் உங்களைப் பெரிய மனிதராக, முக்கிய மனிதராகக் காட்டும். நேரம் தவறுதலை இயல்பாகக் கொண்டவர்களின் முத்தில் எப்போதும் தூக்கம் இருக்கும். எதையும் ஊன்றிப் பார்க்காத குழப்பம் இருக்கும். அவருக்குப் புகழ் பற்றியோ, பணம் பற்றியோ எந்த வேட்கையும் இருக்காது.

“தோன்றின் புகழொடு தோன்றுக” என்பதற்குப் பக்கத்தில் நேரம் தவறாமை நிச்சயம் இருக்கிறது. நேரம் தவறாமையை நிச்சயம் கடைப்பிடிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

நன்றி : தினகரன்
பாலகுமாரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 8:57

தினம் ஒரு தகவல்.. 563122_143867495775339_1663386265_n

பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; என்று அல்லாஹ் கூறுகிறான்.

இங்கு பறவைகளைப் பற்றி இறைவன் கூறுகிறான் அவைகளில் விண்ணில் படபடவென சிறகடித்து பறப்பவையும் உண்டு நிலத்தில் நடப்பையும் உண்டு எனவே மேற்கண்ட வசனத்தை படித்தவுடன் பறக்கும் பறவைகள் மட்டும்தான் பறந்து சென்று தஸ்பீஹ் செய்கின்றன என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக கீழ்கண்டவாறு சிந்தித்து உணர வேண்டும்.



வானத்தில் பறக்கும் போது பறவைகள் 100% கீழே விழுந்து மடிய வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் இந்த பறக்கும் பறவைகள் வானில் எவ்வாறு பறக்க வேண்டும் என்று தங்களுடைய உள்ளுணர்வில் உதிக்கும் ஆற்றலை மையமாக வைத்து பறக்கும் முறைகளை தீர்மாணிக்கின்றன.



எனவே உள்ளத்தில் ஏற்படும் ஒருவகை உள்-உணர்வின் (சிந்தனையின்) திறமையினால் சிறகையடித்து வானில் பயமின்றி இவைகளால் பறக்க இயலுகிறது இப்படிப்பட்ட நிலையில் இவைகள் உள்ளுணர்வின் மூலம் பறக்கும் யுக்திகளை உணரும்போது அல்லாஹ்வின் வல்லமையையும் நிச்சயமாக உணர்ந்திருக்கும் என்று நாம் நம்ப வேண்டும். எனவே இந்த உள்ளுணர்வின் மூலமாக ஏன் இந்த பறவைகள் அல்லாஹ்வை பறந்தபடியே நன்றி செலுத்த தஸ்பீஹ் செய்யாது? என்று நினைக்க வேண்டும் அதை அப்படியே நம்ப வேண்டும்! (அல்லாஹு அக்பர்)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 11:13

:!+: :!+: அல்லாஹு அக்பர் ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Mon 18 Feb 2013 - 17:56

தல்பீனா (பால் பாயசம்)

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்
(என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்பார்கள்.
ஸஹீஹ் புகாரி 5689


உர்வா(ரஹ்) கூறினார்
ஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், 'அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது' என்று சொல்வார்கள்.
ஸஹீஹ் புகாரி 5690.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 21:39

:!+: :!+: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by பானுஷபானா Tue 19 Feb 2013 - 6:56

பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 9:14

நன்றி அன்சார் நன்றி அக்கா :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 17:20

தினம் ஒரு தகவல்.. 303295_150303061735261_709070689_n

சூரியன் பற்றிய சில தகவல்கள்

சூரியனின் விட்டம் - 14,00,000 கிலோ மீட்டர்கள். (14 இலட்சம்)
சூரியனின் வயது - 4.5 கோடி ஆண்டுகள்
சூரியனின் ஆயுட்காலம் - 1000 கோடி ஆண்டுகள்
சூரியனுக்கும் புவிக்கும் இடையில் உள்ள துரம் - 14 கோடி 96 இலட்சம் கி.மீ

தினம் ஒரு தகவல்.. 294204_149849925113908_1948630297_n

சூரியன்

ஆகாய கங்கையில் இது ஒரு விண்மீன். நவீன கணிப்பீடுகளின்படி உடுமண்டல மையத்தில் இருந்து சுமார் 32000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சூரியன் தன்னுடன் ஒத்துழைத்த விண்மீன்களுடன் நொடிக்கு 250 கி.மீ . வேகத்தில் உடுமண்டல மையத்தை சுற்றி பயணம் செய்கின்றது. இந்தக் கணக்கில் ஒரு முறை உடுமண்டலத்தை சுற்றிவர 25 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச வருடம் ( Cosmic Year ) எனப்படும்.

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by ansar hayath Tue 19 Feb 2013 - 17:31

சூரியன் பற்றிய அருமையான தகவல்...'சம்ஸ்' க்கு நன்றி.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தினம் ஒரு தகவல்.. Empty Re: தினம் ஒரு தகவல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum