சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Khan11

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

4 posters

Go down

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Empty மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Post by Muthumohamed Wed 6 Feb 2013 - 16:04

மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் எதையோ இழந்தது போல் சோர்ந்து போய்விடுவார்கள்.

செய்த
செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர்
விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு நம்மில் பலர் ஆளாகின்றனர்.
வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள்.

இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.
காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வு காண்பது எளிது. மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியதாகும்.

அன்றாட
வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள், மன அழுத்தங்கள்
ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக்
கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில
பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள், இரண்டையுமே
மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அவற்றைப் பார்க்கலாம்.
அழுத்தத்தின் அடையாளம்
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும்.
சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும்.
உங்களுக்கு
ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள்
தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில்
இறங்கமுடியும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்
உள்ளங்கைகளில், மற்ற
கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ்
செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப்
போக்குகிற திறன் கொண்டவை.
பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின்
இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று
இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல், பின் கழுத்தில் அழுத்தம் தருதல்,.
கழுத்துச்
சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல் போன்றவைகளால்
அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும்
உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

புன்னகையின் சக்தி
மகிழ்ச்சியாக
இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ,
புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை.
நரம்புகளில்
தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான
உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும்
நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர்.
புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

மனம் சொல்லும் மந்திரம்
நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி.
நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது.
‘எல்லாம் செய்யக்கூடும்’, ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும்.
மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

எதையும் எழுதுங்கள்
மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய
வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள்.
மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.
அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது.
தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

காபியைக் குறையுங்கள்

காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான்.
ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.

தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும்.
தண்ணீரோ
பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு
தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

அழுத்தம் போக்கும் நட்பு

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள்.
அவரிடம்
உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப்
பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Empty Re: மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Post by Muthumohamed Wed 6 Feb 2013 - 16:05

மனச்சோர்விற்கு இயற்கை வைத்தியம்..:)
பச்சைக்கொத்தமல்லி
தழை அரைக்கட்டு நன்றாக சுத்தம் செய்து நறுக்கி அதோடு சிறிய துண்டு
தேங்காய் பனங்கற்கண்டு சிறிது போட்டு மிக்ஸியில் அரைத்து ஜூசாக
குடிக்கலாம்..புத்துணர்வை உணர்வீர்கள்..பக்கவிளைவுகள் கிடையாது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Empty Re: மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Post by மீனு Wed 6 Feb 2013 - 16:09

மன அழுத்தம் வராமலே இருக்கட்டும் இம்பட்டும் மிச்சம். :,;:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Empty Re: மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 21:20

மீனு wrote:மன அழுத்தம் வராமலே இருக்கட்டும் இம்பட்டும் மிச்சம். :,;:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Empty Re: மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Post by ராகவா Thu 7 Feb 2013 - 20:56

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! 162318
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்! Empty Re: மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தர சில பயிற்சிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum