சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:48

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Khan11

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Go down

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Empty அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Post by ராகவா Thu 7 Feb 2013 - 21:11

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Cuckoo-300x236
ஐயாயிரம் கிலோமீற்றர்கள் பறந்த குயில்கள்! வியந்த பிரிட்டன் விஞ்ஞானிகள்
குயில்கள்
இனிமையாகப் பாடும் என்று தான் நாங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்.
“குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்கிற உலகம்” என்று பிரபல
சினிமாப் பாடலும் உள்ளமை யாவரும் அறிந்ததே.

ஆனால் அவை நீண்ட தூரம் சளைக்காமல் பறக்கும் ஆற்றல் கொண்டவை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

குயில்களின் வாழ்க்கை முறை தொடர்பாக பிரித்தானியாவின் பறவையியல் ஆய்வு அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

ஆய்வுக்காக 5 குயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு Clement, Martin, Lyster, Kasper , Chris என்று செல்லமாக பெயரும் இடப்பட்டன.

அவற்றின்
உடலில் GPS backpacks track எனப்படும் அதிநவீன வழிகாட்டும் கருவிகள்
பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இதன் மூலம் அவை 3 மாதங்களுக்குள் 5
ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரம் பயணித்தது தெரியவந்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது:

GPS
கருவிகள் வழிகாட்ட பயன்படுவதோடு பயணிக்கும் தடங்கள், பயண தூரங்களை
எளிதிலும் துல்லியமாகவும் கண்டுபிடிக்க உதவும் என்பதால் குயில்களின் உடலில்
அவற்றை பொருத்தி ஆய்வு செய்தோம்.

குயில்களின் இயக்கம் முழுவதும்
கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து கடந்த ஜூன்
மாதம் கிளம்பிய இவை தற்போது ஆப்பிரிக்காவில் உள்ளது தெரியவந்துள்ளது.

புறப்பட்டு 3 மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் இவை 5 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரம் பறந்துள்ளன.

குயில்கள் குறைந்த தூரம்தான் பறக்கும் என்ற கருத்தை இந்த ஆய்வு தகர்த்துப் போட்டிருக்கிறது.

இதன் மூலம் குயில்கள் இனிமையாகப் பாடுவதில் மட்டுமல்ல நீண்ட தூரம் பறப்பதிலும் கில்லாடிகள் என்று நிரூபித்து விட்டன.

நன்றி:நிகழ்வு.காம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Empty Re: அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Post by ராகவா Thu 7 Feb 2013 - 21:11

தொலைக்காட்சி பார்க்கும் சொந்தங்களே உங்களுக்கு ஆபத்து..!!!

ஒரு
நாளைக்கு 6 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பது 5 வருடங்களைக்
குறைக்குமென்று ஓர் ஆய்வு கூறுகின்றது. 25 வயதிற்குப் பின்னர் ஒருவர்
தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் வாழ்நாளில் 22
நிமிடங்களைக் குறைக்குமென ஓர் அவுஸ்திரேலிய ஆய்வு கூறுகின்றது. இது
புகைத்தலைப் போல ஆபத்தானது. ஆனால் புகைத்தல் வீதங்கள் குறையுமளவிற்குத்
தொலைக்காட்சி பார்க்கும் வீதம் குறையவில்லை என்பதுதான் உண்மை.

கடந்த
வருடம் இடம்பெற்ற இன்னோர் ஆய்வில் ஒரு மணித்தியாலம் தொலைக்காட்சி
பார்ப்பது 8% ஆயுளைக் குறைக்குமென்றது. அவுஸ்திரேலியர்கள் ஒரு நாளைக்கு 2
மணித்தியாலங்கள் பார்க்கின்றனர். இதனால் ஆண்களிற்கு அவர்களது
ஆயுட்காலத்திலிருந்து 1.8 வருடங்களும் பெண்களுக்கு 1.5 வருடங்களும்
குறைகின்றதென்கின்றனர். பிரித்தானியர்களோ நாளொன்றிற்கு 3 மணித்தியாலம்
தொலைக்காட்சி பார்க்கின்றனர் என்கின்றது இந்த ஆய்வு.

உடற்பயிற்சியின்றி
ஒரேயிடத்தில் இருப்பதால் இது இதய நோய்களைக் கொண்டுவருகின்றது. வழமையாகவே
உடற்பயிற்சியின்றி இருப்பது எமது சுகாதாரத்திற்குக் கேடு என்பது
அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அறிக்கையானது, 1999-2000 இற்குமிடையில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு 25 வயதிற்கு மேற்பட்டவர்களில்
இன்னும் 11,000 பேரை உட்படுத்தி மீளச் செய்தபோதே கிடைத்தது.

நன்றி:நிகழ்வு.காம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Empty Re: அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Post by ராகவா Thu 7 Feb 2013 - 21:11

ரெட் புல்(Red Bull) குடிப்பவரா நீங்கள்.? எச்சரிக்கை..!

ரெட்புல்,
க்லவுட்9 போன்ற (ஆற்றல்) எனர்ஜி குளிர் பானங்களில் சேர்க்கப்படும் கெஃபைன்
மூலப்பொருள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதாக, இந்நிறுவனங்களுக்கு
மத்திய சுகாதார மற்றும் சுற்றுப்புற மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுப்புற சுகாதார மையம் 16 வகையான இதுபோன்ற பானங்களைக் கடைகளில் வாங்கி
சோதனை கூடங்களில் வைத்து சோதனை செய்ததில் ஒவ்வொரு பானங்களின் லேபில்களிலும்
குறிபிட்டுள்ள…, அதாவது அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் கூடுதலாக
கெஃபைன் என்ற மூலப்பொருளைச் சேர்த்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது.

“ஒருவர் பருகும் ரெட்புல் எனர்ஜி பானத்தில், ஒரு
கப் காஃபி சாப்பிடுவதற்குச் சமமான அளவிலேயே, கெஃபைன் சேர்க்கப்பட்டு
தயாரிக்கப்படுகிறது” என்று, ரெட்புல் நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும்
“இதே வகையில்தான் சுமார் 160 நாடுகளில் உள்ள எங்களின் நிறுவனங்களில்
இப்பானம் தயாரிக்கப்படுகிறது” எனவும் ரெட்புல் நிறுவனம் கூறுகிறது. இதன்
தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், “இது போன்ற பானங்கள்
பருகுபவர்கள், அவர்களுடைய மனது உஷார் நிலையில் இருப்பதற்கும், அவர்களின்
வேலையில் அதிக கவனம் செலுத்துவதற்கும் விளயாட்டுப்போட்டிகளில்
சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவுகிறது. ஆனால் அதிகமான் காஃபின்
பருகுவதால் கடுமையான உடல் நல் பாதிப்பு ஏற்படலாம்” எனவும் கூறுகின்றனர்.

உணவு
கலப்பட தடுப்பு சட்டம் 1954 திருத்தம் 37-A (2) ன் படி…, இது போன்ற குளிர்
பானங்களில், 145(ppm) அளவுக்கு மேல் கெஃபைன் மூலப்பொருள் சேர்க்கக்கூடாது
என, வரைமுறை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை எதிர்த்து ரெட்புல் நிறுவனம்,
“தாங்கள் தயாரிக்கும் பானத்தில் சுமார் 320(ppm) அளவில் கெஃபைன் சேர்க்க
அனுமதிக்க வேண்டும்” எனக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு
தொடுத்துள்ளது. இதிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் இலாபக்கண்ணோட்டத்தில்
மட்டுமே இயங்குன்றன எனவும் அவற்றுக்கு மக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித
அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது.

அவரவர் ஆரோக்கியத்தை
அவரவர்தான் பேண வேண்டுமென்பது சரிதான். ஆனால், தங்கள் நாட்டு மக்களுக்குக்
கேடுவிளைவிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் மக்களின் நலனில் அக்கறையுள்ள
அரசுகள் அனுமதிக்காமலிருப்பதே சரியான மக்கள் அரசின் தர்மமாகும். இதனைக்
கருத்தில்கொண்டு, இத்தகைய எனர்ஜி பான நிறுவனங்களை முழுமையாக கண்காணிப்பு
வட்டத்தினுள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின்
எதிர்பார்ப்பாகும்!

நன்றி:நிகழ்வு.காம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Empty Re: அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Post by ராகவா Thu 7 Feb 2013 - 21:12

200 மில்லியன் வருடங்கள் பழமையான அரிய வகை மீன் கண்டுபிடிப்பு!

200
மில்லியன் வருடங்கள் பழமையான அரியவகை மீன் இனம் ஒன்று அண்மையில்
நீருக்கடியில் காணப்படும் குகை ஒன்றினுள் உயிருடன்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு பசுபிப்மாநிலப்பகுதியில் காணப்படும்
தீவுப்பகுதியில் அமைந்த கடலில் சுமார் 35 மீற்றர் ஆழத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பளுப்பு அல்லது பிறவுண் நிறத்தில் ஈல் மீன் போன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன் இனம் பற்றி கருத்து தெரித்த ஆய்வாளர்கள்:

இவ்வகை
மீன்களை கிட்டத்தட்ட 19 குடும்பங்களாக பிரிக்க முடியும் எனவும் இதில் 819
இனங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதே போன்றுதான விலாங்கு மற்றும் ஈல்
மீன் இனங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இதற்கு முன்னைய
காலப்பகுதியிலும் இவ்வாறான மீன் இனங்கள் பற்றிய ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர்கள் இது பற்றியும் ஆய்வுகளை
மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில New-geel

நன்றி:நிகழ்வு.காம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Empty Re: அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Post by ராகவா Thu 7 Feb 2013 - 21:12

முதலை வாய் கொண்ட கோழி : விஞ்ஞானிகள் சாதனை!

பொதுவாக
கோழிகளுக்கு சிறிய அலகு இருக்கும். அதன் மூலம் உணவை அவை உட்கொள்கின்றன.
ஆனால், ஹார்வேர்டு பல்க லைக்கழகத்தை சேர்ந்த உயிரியில் பரிணாம வளர்ச்சி
விஞ்ஞானி அர்காத் அபாஷ்னேங் தலைமையிலான நிபுணர் குழுவினர் புதுவிதமாக ஆய்வு
மேற்கொண்டனர். கோழி கருவில் உள்ள டி.என்.ஏ.மூலக்கூறில் சிறிது மாற்றம்
செய்து முதலையின் நீளமான தாடை போன்ற அலகை உருவாக்கியுள்ளனர்.

கோழி
முட்டையில் சிறிய துவாரமிட்டு அதற்குள் சிறிய பாசிமணி அளவிலான புரோட்டீனை
செலுத்தினர். அதை தொடர்ந்து முட்டை கருவின் வளர்ச்சியை கண்காணித்தனர். 14
நாட்களுக்கு பிறகு கோழின் அலகு முதலையின் தாடை போன்று நீளமாக வளர்ந்தது.
பறவைகள் மற்றும் விலங்குகளின் உடற்கூறு இயல் குறித்து அறிய இந்த ஆய்வு
மேற்கொள்ளப்பட்டதாக விஞ்ஞானி அபாஷ்னோவ் தெரிவித்தார்.

இச்சோதனையின்
மூலம் குழந்தை பிறப்பில் ஏற்படும் குறைபாடுகளை நீக்க முடியும் என
நம்பப்படுகிறது. இந்த சாதனை சுமார் 6 1/2 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சி
வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நன்றி:நிகழ்வு.காம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Empty Re: அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Post by ராகவா Thu 7 Feb 2013 - 21:13

2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.

பூமிக்கு
மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க
வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5
மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.

பூமியின்
கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து
பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும்
முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள். பூமிக்கு மேல் 22 மைல் பயணம்
செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில்
உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும்
இணைக்கப்பட்டு இருக்கும்.

ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில்
கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது ஆகும். இந்த கலத்திற்கு ப்ளூன் என்ற
பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கலம் விண்வெளி பகுதியை அடைய ஒரு மணி நேரம்
ஆகும். அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர்
மீண்டும் அது திரும்பும். இந்த ஹீலியம் கலத்தை ஸ்பெயின் தொழிலதிபர் ஜோஸ்
மரியானோ லோபஸ் உருவாக்கி உள்ளார்.


அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Helium_ballon_001-1


அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Helium_ballon_002

நன்றி:நிகழ்வு.காம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில Empty Re: அறிந்துக்கொள்ளும் செய்திகள்-சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum