சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

சூரியன் பற்றி சில தகவல்கள்  Khan11

சூரியன் பற்றி சில தகவல்கள்

2 posters

Go down

சூரியன் பற்றி சில தகவல்கள்  Empty சூரியன் பற்றி சில தகவல்கள்

Post by ராகவா Sat 9 Feb 2013 - 23:02

சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின்
விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல்
109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்
போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின்
மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி
ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்). இந்த அண்டத்தின் மையத்தைப் பற்றிக்
கொண்டு வினாடிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒரு முறை சுற்றி வரச்
சூரியனுக்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. இத்துடன் சூரியன்
தனது அச்சைப் பற்றிக் கொண்டு ஒருமுறை சூழலத் துருவத்தில் (at the Poles) 24
முதல் 25 நாட்களும்; மைத்தில் 34 முதல் 37 நாட்களும் ஆகின்றது.


Enlarge this image
சூரியன் பற்றி சில தகவல்கள்  Sun370

சூரியன்,
புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது. சூரியன் வாயுவினா
லான நெருப்புக் கோளமாக இருந்தாலும் இது நான்கு அடுக்குகளாக உள்ளது.
சூரியனின் ஒளிமயமான மைய வட்டுப் பகுதி ஒளிக் கோசம் (Photo sphere)
எனப்படும். இதில் வெப்பநிலை 14 மில்லியன் டிகிரி சென்டிகிரேட் அளவு
இருக்கும். இது தொடர்நிற மாலையைக் (continuous spectrum) கொண்டது. இந்த
ஒளிக் கோசத்தைச் சுற்றி அமைந்துள்ள பகுதி சூரியனின் (atmosphere) வளி
மண்டலமாகும். இதன் மூடியுள்ள பகுதி வெவ்வளி வட்டம் (Chromosphere)
எனப்படும். இதன் வெப்ப நிலை ஏறக்குறைய 6000 டிகிரி சென்டிகிரேட் அளவு
காணப்படுகிறது. இப்பகுதியில் பல்வேறு தனிமங்கள் வாயு நிலையில்
காணப்படுகின்றன. இவ்வெவ்வளிவட்டத்தைச் சூழ்ந்துள்ள பகுதி ஒளிவளையம்
(carona) ஆகும். இந் ஒளி வளையத்தில் உள்ள வாயுக்களின் வெப்பநிலை
வியக்கத்தக்க அளவில் சுமார் 2 மில்லியன் கெல்வின் அளவுக்குக் காணப்படும்.
இதற்குக் காரணம் ஒளிக்கோசம் மற்றும் வெவ்வளிவட்டம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சூரியன் பற்றி சில தகவல்கள்  Empty Re: சூரியன் பற்றி சில தகவல்கள்

Post by ராகவா Sat 9 Feb 2013 - 23:03

சூரியனில் அணுவினை

சூரியனில் நடைபெறும் அணுவினையை மூன்று படிகளாகக் கருதலாம்.

படி 1. 1H 1Hfi 2H+e’+ நியூட்ரினோ

படி 2. 2H 1Hfi 3He+ ஃபோட்டான்

படி 3. 3He+ 3Hefi 4He+ 1H+ 1H+ ஃபோட்டான்

முதல்
நிகழ்வில் இரண்டு புரோட்டான்கள் (Proton) ஒன்றோடு ஒன்று மோதி
ஒன்றுபடுவதால் ஒருவித ஹைட்ரஜன் (H) அணு உருவாக்கப்படுகிறது. இத்துடன் ஒரு
மிகச் சிறிய பாசிட்ரான் (Positron) துகளும், நியூட்ரினோ (Neutrino) என்ற
ஒரு நிறையற்ற துகளும் வெளியேறுகின்றன. இரண்டாவது நிகழ்வில் இந்த ஹைட்ரஜன்
மற்றொரு புரோட்டானுடன் மோதி ஒன்றிணைவதால் ஹீலீயம் -3 (3He) என்ற அணு
உருவாகின்றது. இத்துடன் ஃபோட்டான் (Photon) ஆனது கதிர்வீச்சாக
உமிழப்படுகின்றது. மூன்றாவது நிகழ்வில் இரண்டு ஹீலியம் 3 அணுக்கள் மோதி
ஒன்றிணைந்து ஹீலியம் – 4 என்ற (4He) அணு உருவாகின்றது. இத்துடன் இரண்டு
புரோட்டான் மற்றும் ஒரு ஃபோட்டான் ஆகியன வெளிப்படுகின்றன.

இந்நிகழ்வுகளின்
போது ஆற்றலானது ஃபோட்டான்களாக வெளியேறுவதோடு மட்டுமின்றி, எடை குறைந்த
தனிமமான ஹைடிரஜனிலிருந்து எடை மிகுந்த ஹீலியம் தனிமம் உருவாக்கப்படுகிறது.
அத்துடன் துவகத்தில் இருந்த ஹைடிரஜன்களின் மொத்த நிறையைக் காட்டிலும்
நிகழ்வின் இறுதியில் பெறப்பட்ட தனிமங்களின் மொத்த நிறை குறைவாகும். அணுச்
சேர்க்கையின் (Fusion) போது ஒரு சிறு பகுதி நிறை (m) ஆற்றலாக (E)
மாற்றப்படுகிறது. சூரிய அணுச்சேர்க்கையின் போது, ஒவ்வொரு ஒரு கிலோ கிராம்
எடையுடைய ஹைட்ரஜன் வினையின் போதும் 0.007 கிலோகிராம் அளவு ஆற்றலாக
மாற்றப்படுகிறது.

இவ்வாற்றல் சூரியனுள் 4x1026 ஜூல்/வினாடி அளவு
உண்டாகின்றது. தன் சமநிலையை பராமரிக்க இதே அளவு ஆற்றலைச் சூரியன் ஒவ்வொரு
வினாடியும் கதிர்வீச்சாக வெளியிடுகின்றது. இதன் அளவு 400 டிரில்லின்
டிரில்லியன் வாட்டுகள் ஆகும். (ஒரு டிரில்லியன் = 1012 ஆகும்). ஒவ்வொரு
வினாடியின் போதும் சூரியனானது 4 மில்லியன் டன்கள் ஹைடிரஜனை ஆற்றலாக மாற்றி
அண்ட வெளியில் கதிர் வீச்சாக உமிழ்கிறது. இவ்வாறு சூரியன் தனது ஆற்றலை
இழந்து கொண்டே வருவதால் அதன் எடை குறைந்து வருகிறது. இதுவரை சூரியனின் வயது
500 கோடி ஆண்டுகள் எனக்கணக்கிட்டுள்ளனர். சூரியன் மேலும் சுமார் 700 கோடி
ஆண்டுகள் வாழ்தற்கான ஆற்றலைப் பெற்றுள்ளதாகவும் அறிவியலார்
கணக்கிட்டுள்ளனர்.

சூரியனது ஆற்றல் வெளியாகி எடை குறைந்து கொண்டே
வருவதால், சூரியனின் உட்பகுதியில் உட்குழிவு ஏற்பட்டு மேற்பரப்பில்
சுருக்கம் ஏற்படுகிறது. அதனால் உள்பகுதியை நோக்கி மேற்பரப்பு
நெருக்கப்படுகிறது. இதனால் சூரியனில் வெப்பம் அதிகரிக்கிறது. இவ்வாறாக
இன்னும் 100 கோடி ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் 50,000 டிகிரி ஃபாரன்ஹுட்
அளவை எட்டும். அப்போது சூரியனிலிருந்து வெளிர்நீல நிறமுள்ள கதிர்கள்
வெளியாகும். அடுத்து 300 கோடி ஆண்டுகளில் சூரியன் அதன் நடுத்தர வயதை
எட்டிப் பிடிக்கும். இந்நிலையில் சூரியனில் ஹைட்டிரஜன் மற்றும் ஹீலியம்
அணுக்கள் முழுக்கத் தீர்ந்த நிலையில் அது விரிவடையத் தொடங்கும். இவ்வாறு
விரிவடையும் போது சூரியனுள் புதன், வெள்ளி, புவி ஆகிய கோள்மீன்கள் அடங்கி
விடும்.

இந்நிலையில் சூரியன் சிவப்பு ராட்சசனாகிக் (Red Giant)
காணப்படும். உட்புற நெருக்கம் காரணமாகச் சூரியனில் அழுத்தம் அதிகரிக்கும்.
இந்நிலையில் சிவப்பு நிறம் வெள்ளையாகிக் காணப்படும். மேலும் 50 கோடி
வருடங்களில் சூரியனிலுள்ள எரி பொருள் முழுக்கத் தீர்ந்துபோன நிலையில்,
வெள்ளைக் குள்ள விண்மீனாகச் சூரியன் மாறிவிடும். அடுத்து 30 இலட்சம்
வருடங்களில் ஆற்றல் முழுவதையும் இழந்த சூரியன் கருப்பாக மாறி விடும்.
இந்நிலையில் சிவப்பு ராட்சசனாக இருந்தபோது விழுங்காமல் விட்ட சில துணைக்
கோள்மீன்களுடன் கருப்புக்குள்ளனாகக் (Black Dwarf) காணப்படும்.
_______________________________________
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சூரியன் பற்றி சில தகவல்கள்  Empty Re: சூரியன் பற்றி சில தகவல்கள்

Post by ராகவா Sat 9 Feb 2013 - 23:03

சூரியக் கரும்புள்ளி (Sun Spot)

சூரியனின் மேற்பரப்பில் சில
இடங்களில் சில வேளைகளில் பல கரும்புள்ளிகளைக் காணலாம். இக்கரும்புள்ளிகள்
காந்த விசையின் பாதிப்பினால் ஏற்பட்டவையாகும். இப்புள்ளிகள் சூரியனின்
மேற்பரப்பிலுள்ள ஏனைய பகுதிகளாகக் காட்டிலும் வெப்பம் குறைந்தவையாகக்
காணப்படுகின்றன. சூரியப் புள்ளிப் பகுதியைச் சுற்றியுள்ள வாயுக்கள்
வெளியிடும். 5700 டிகிரி கெல்வின் வெப்பத்தைக் காட்டிலும், சூரியப்
புள்ளிப் பகுதியிலுள்ள வாயுக்கள் வெளியிடும் வெப்பம் குறைவாக 4000 முதல்
4500 டிகிரி கெல்வின் அளவில் இருப்பதுதான் அது கருமையாகக் காணப்படுவதற்குக்
காரணமாகும். கரும்புள்ளிக்கு அருகிலுள்ள சூரிய வாயு காந்தப் புலத்தால்
கட்டுப்படுத்தப்படுகிறது. சூரியனிலுள்ள அயனிகள் காந்தப் புலத்தில்
தன்னிச்சையாகச் செல்லாமல் காந்தப் புல திசையிலேயே ஒருங்கிணைந்து
காணப்படும். இக்காரணத்தால் சூரியக் கரும்புள்ளியிலுள்ள அயனியாக்கமடைந்த
வாயுவும், ஏனைய சூரிய வளி மண்டலத்திலுள்ள வாயுவும் வேறுபட்ட வடிவங்களில்
காணப்படுகின்றன. அயனியாக்கமடைந்த வாயு பல ஆயிரம் கி.மீக்கு அனற் பிழம்பு
போன்று சுவாலைகளாகக் (Prominences) கிளம்பும். கரும்புள்ளிகள் தோன்றும் கால
அளவு சில மணி நேரங்களிலிருந்து பல வாரங்கள் வரையானதாகவும் காணப்படுகிறது.
நீண்ட கால அளவைப் பெற்றிருப்பின் புவியின் அயனி மண்டலத்தில் பாதிப்பை
ஏற்படுத்துகிறது. இதனால் வானொலித் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகிறது.

புவியை
நோக்கி வரும் மின்னூட்டப்பட்ட துகள்களை மின்காந்தப் புலம் விலக்கித்
தள்ளும். இதனால் அத்துகள்கள் புவியின் இருதுருவங்களை நோக்கி ஈர்க்கப்படும்.
இவ்வாறு துருவங்களை நோக்கி மின் துகள்கள் ஈர்க்கப்படுவதால் வடக்கு மற்றும்
தெற்கு துருவம் நோக்கி பேரொளி (அ) அறோறா பொறியாலிஸ் (Aurara Borealis)
எனப்படும் விந்தைக் காட்சிகள் அதிகமாகக் காணப்படும்.

சூரியனில்
ஏற்டும் இந்த மாற்றம் 22 ஆண்டுகாலச் சுழற்சியை உடையது. இதுவும் இந்த 11
ஆண்டுகாலத் துணைச் சுழற்சியைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இந்த 11 ஆண்டுத்
துணைச் சுழற்சியில் மிகவும் குறைவாகக் காணப்படும் காலத்திலிருந்து
ஏறக்குறைய 4½ ஆண்டுகளுக்குப் பின் இக் கரும்புள்ளிகள் மிகவும் அதிகமாகவும்,
பின்னர் 6½ வருடங்களில் மீண்டும் குறைவாகவும் காணப்படும். மேலும் ஒவ்வொரு
11 ஆண்டுகாலத் துணைச் சுழற்சியின் போதும் சூரியனின் காந்தப் புலத்தின்
திசை முழுவதுமாக எதிராக மாறுபடுகிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும்
தீ நாக்குகளிலிருந்து துகள்கள் விண்வெளியில் எறியப்படுகின்றன. இது சூரியப்
புயல் எனப்படும் இப்புயல் புவியையும் கடந்து வெளிக் கோள் மீன்கள் வரையும்
பரவுகின்றது. புவிக்கு அருகில் இப்புயல் வினாடிக்கு 600 கிலோ மீட்டர்
வேகத்தில் கடக்கிறது. இந்த வாயுத் துகள்கள் மிகவும் நுண்மையாக இருப்பதால்
புவி எந்த வித வெப்பப் பாதிப்பையும் பெறுவதில்லை. விண்வெளிக் கலங்களைக்
கொண்டு திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து இப்புயல் சனிக் கோள் மீனின் சுற்றுப்
பாதை வரை காணப்படுவதாக தெரிகிறது.

2000-ஆம் ஆண்டு ஜூலை 14,
வெள்ளிக் கிழமை கிரீன்விச் நேரம் 10.24 மணிக்கு சூரியனின் பரப்பிலிருந்து
மாபெரும் தீப் பிழம்பு வெடித்து வெளிச்சிதறியது. இதனால் பல நூறு
கோடிக்கணக்கான பிளாஸ்மாக்களும் மின்னூட்டப்பட்ட துகள்களும் (Charged
Particles) அண்டவெளியில் வீசியெறியப்பட்டன. அவற்றில் சில மணிக்கு 48
இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் புவியை நோக்கி வரத் தொடங்கின. இவை புவியின்
மின்காந்தப் புலத்தை அடுத்தநாள் தாக்கியது. இதனால் மின்காந்தப் புயல்
ஏற்பட்டது.

பொதுவாக மின்னூட்டப்பட்ட துகள்கள் வந்து தாக்காத வண்ணம்
புவியின் மின்; காந்தப் புலம் பாதுகாப்பு அளித்து வருகிறது. எனினும்
சூரியனில் ஏற்படும் இது போன்ற ஆற்றல் மிக்க வெடிப்பால் வானொலி சமிக்ஞை,
தகவல் தொடர்பு பரிமாற்றங்கள், செயற்கைக்கோள் தொடர்பு, மின்விநியோகம் ஆகியவை
பாதிக்கப்படுகின்றன.

(நன்றி – மனோரமா இயர்புக்)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சூரியன் பற்றி சில தகவல்கள்  Empty Re: சூரியன் பற்றி சில தகவல்கள்

Post by Muthumohamed Sun 10 Feb 2013 - 7:59

பயனுள்ள பதிவு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சூரியன் பற்றி சில தகவல்கள்  Empty Re: சூரியன் பற்றி சில தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum