சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Khan11

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

2 posters

Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by Muthumohamed Sun 10 Feb 2013 - 11:11

துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களைத் தொடர்ந்து, புதிய படங்கள் வெளியீட்டிற்கு
பல்வேறு தடைகள் தொடர்வதால், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். தேவையற்ற எதிர்ப்புகளால், பட வெளியீடு தாமதப்படுவதால்,
கோடிக்கணக்கில் நஷ்டமடைய வாய்ப்பு ஏற்படும் என்ற அச்சம், தயாரிப்பாளர்கள்
மத்தியில் ஏற்பட்டுள்ளது. கமலின், "விஸ்வரூபம்' படத்தையடுத்து,
மணிரத்னத்தின், "கடல்', அமீரின், "ஆதிபகவன், ஹரியின், "சிங்கம் 2' மற்றும்
"ஆண்டவ பெருமாள்' படங்களுக்கு, சில தரப்பில்இருந்து திடீர் எதிர்ப்பு
ஏற்பட்டு உள்ளது.

"விஸ்வரூபம்' ; இது குறித்து, தயாரிப்பாளர்கள் தரப்பில்கூறப்படுவதாவது:
"விஸ்வரூபம்'
படத்திற்கு, சென்சார் மூலம், "யுஏ' சான்றிதழ் பெற்ற பிறகு, படத்தில்
பிரச்னை வருவதற்கு, எந்த முகாந்திரமும் இல்லை என, கமல் அழுத்தமாக
சொல்லியிருக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின்
உதவியை கேட்டிருக்க வேண்டும்."விஸ்வரூபம்' படம் பிரச்னையில், கமல்
மட்டுமே, அவருக்கு தெரிந்தவழியில், முடிவு காண முயன்றதால் தான், படத்திற்கு
மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

கமலின்
நிலையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள், இயக்கங்கள்
ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தத்தில்,
"விஸ்வரூபம்' படப்பிரச்னையில், கமல் ஏற்படுத்திக் கொண்ட சமரசம் காரணமாக,
அடுத்தடுத்த படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. எந்தஅமைப்பு, எந்த
இயக்கம் எப்போது மிரட்டுமோ என்றஅச்சத்தோடு படத்தயாரிப்பாளர்கள்
இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

"கடலுக்கு' சிக்கல் :
மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கவுதம் கார்த்திக் - துளசி
நடித்துள்ள,"கடல்' படத்திற்கு, சென்சார் போர்டு மூலம், "யு' சான்றிதழ்
வழங்கப்பட்டு, திரைக்கு வந்துள்ளது. ஆனால், "இப்படத்தில், கிறிஸ்தவ
பாதிரியார்கள் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் காட்சிகள் உள்ளன. ஒரு
காட்சியில், ஏசுவின் சிலை உடைந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதற்கு,
"யு' சான்றிதழ் வழங்கியது தவறு. படம் திரையிட தடை விதிக்க வேண்டும்' என,
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அமீர்
இயக்கியுள்ள,"ஆதிபகவன்' படத்தில், இந்துசமய நம்பிக்கைகளை புண்படுத்தும்
விதமாக காட்சிகள் இருப்பதாகவும், படத்தை இந்து இயக்க தலைவர்களுக்கு
திரையிட்டுகாட்டிய பின்பே, தியேட்டரில் திரையிட அனுமதிக்க வேண்டும்' என,
இந்து மக்கள் கட்சியின் சார்பில், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின்
தனிப் பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள் :
இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள,"சிங்கம்-2'
படத்தில்,"முஸ்லிம்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போல,காட்சிகள்
உள்ளதென்றும், இக்காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என, தவ்ஹீத் ஜமா அத் மூலம்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதுமுகங்கள் நடித்து, இம்மாதம், 22ம் தேதி
வெளியிடப்பட உள்ள, "ஆண்டவ பெருமாள்' படத்தின் பெயர் மாற்றப்பட
வேண்டும்."கடவுளுக்கு சம்பந்தமில்லாமல், காதலை மையமாக வைத்து
உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, ஆண்டவபெருமாள் என, இந்து கடவுள் பெயரை
வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர்' என, தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள்
கூட்டமைப்பின் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கொடுக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை : இப்படி, வரிசையாகதமிழ் படங்கள்
சிக்கலில் மாட்டும்போது, சம்பந்தப்பட்ட படத்தினர் மட்டுமே, தனித்து நின்று
போராட வேண்டிஉள்ளது. சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட படங்களுக்கு,
எதிர்ப்பு உருவாகும் போது, திரையுலக சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட
வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்துள்ளது. இதற்காக, சினிமா
சங்கங்கள் ஒன்றிணைந்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து
வருகின்றன.

தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் Empty Re: அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்

Post by ராகவா Sun 10 Feb 2013 - 13:18

அடுத்தடுத்த எதிர்ப்புகள்; அதிர்ச்சியில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் 800522
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum