Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆப்கானில் வெளிநாட்டு வான்படையின் உதவியை பெற ஜனாதிபதி தடை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

குடியிருப்பு பகுதிகளில் வெளிநாட்டு படையினருக்கு வான் தாக்குதல் நடத்த ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு அனுமதி அளிக்க முடியாது என ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்சாயி அறிவித்துள்ளார்.
இதனைத் தடை செய்யும் ஆணை பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆப்கானின் கிழக்கு மாகாணமான குனாரில் நேட்டோ படை இரவில் நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டு ஒரு வாரம் கழிவதற்குள்ளேயே ஆப்கான் ஜனாதிபதி கடந்த சனிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
எனினும் இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னரே நேட்டோ படை தனது நிலைப்பாட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“எமது நாடு மற்றும் கிராமங்களில் வெளிநாட்டினர் வான் தாக்குதலை நடத்த ஆப்கான் பாதுகாப்புப் படையினர் அழைப்பு விடுப்பதை தடை செய்யும் ஆணை பிறப்பிக்கப்படும்” என காபுலில் இருக்கும் தேசிய இராணுவ அகடமியில் இடம்பெற்ற விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது கர்சாயி குறிப்பிட்டார்.
“எமது இராணுவம் வெளிநாட்டு வான்படை உதவியை கோருவதால் எமது சிறுவர்கள் கொல்லப்படுகிறார்கள்” எனவும் கர்சாயி குறிப்பிட்டார்.
நேட்டோ படைகள் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறவுள்ளது. இதனையொட்டி தற்போது வெளிநாட்டு படைகள் பாதுகாப்புப் பொறுப்புகளை படிப்படியாக உள்நாட்டு பாதுகாப்புப் படையிடம் கையளித்து வருகிறது. வெளிநாட்டுப் படையின் வெளியேற் றத்திற்கு கர்சாயி மகிழ்ச்சி வெளியிட்டி ருந்தார்.
“அவர்களின் உதவிகளுக்கு எமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் எமது நாட்டு பாதுகாப்பிற்கு அவர்களது உதவி தேவைப்படாது. ஆப்கான் படைகளே தமது சொந்த நாட்டை காக்க வேண்டும்” என்று கர்சாயி வலியுறுத்தினார். எனினும் ஆப்கான் படை தற்போது உள்நாட்டின் 90 வீதமான பாதுகாப்புப் பணிகளை தாமே பொறுப்பேற்றிருப்பதாக அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் ஆப்கான் விமானப்படை இன்னும் வலுவுள்ளதாக இயங்கவில்லை. எனவே நேட்டோவின் வானுதவி ஆப்கான் உள்நாட்டு யுத்தத்தில் தீர்க்கமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆப்கானின் அபாயகரமான நிலப்பரப்புகள் மற்றும் மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில் வானுதவி கட்டாயமானதாகும். கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி குனாரில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இந்த தாக்குதலுக்கு ஆப்கான் பாதுகாப்புப் படையே வெளிநாட்டு படைக்கு அழைப்பு விடுத்ததாக தமக்கு அறிவுறுத்தப்பட்டது என கர்சாயி குறிப்பிட்டார். “இது உண்மையாயின் மன்னிக்க முடியாத வெட்கக் கேடானதாகும். எவ்வாறு அவர்கள் வெளிநாட்டு விமானங்களை அனுப்பி எமது வீடுகளுக்கு குண்டு போடச் செய்ய முடியும்” என கர்சாயி விசனம் தெரிவித்தார். “நாம் மிகக் கடுமையான பாதையை கடந்து வந்திருக்கிறோம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் இது எமக்கு சொந்தமான நாடு. துரதிருஷ்டவசமாக எம்மால் எமது நாட்டை பாதுகாக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது” என்றும் ஜனாதிபதி கர்சாயி குறிப்பிட்டார்.
ஆப்கானில் இருக்கும் 66,000 அமெரிக்கப் படைகளில் பாதிப்பேர் இந்த ஆண்டுக்குள் வாபஸ் பெறப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த தினத்திலேயே நேட்டோ படையினர் பொதுமக்கள் மீது வான் தாக்குதல் நடத்தியது. கடந்த ஆண்டு இதே பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான் முன்னணி தலைவர் முல்லாஹ் நதுல்லா கொல்லப்பட்டார்.
இதில் ஐ.நா. தரவுகளின் படி ஆப்கானிஸ்தானில் 2008 தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் உள்நாட்டு யுத்தத்தில் பலியாகும் சிவிலியன்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. எனினும் ஐ.நா. இம்மாதம் ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க விமானத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை கொன்றிருப்பதாக குற்றம் சாட்டியது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» ஆப்கானில் பஞ்சத்தால் 26 இலட்சம் பேர் பாதிப்பு
» ஆப்கானில் நேட்டோ ஹெலி விபத்து: 6 பேர் பலி
» பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
» ஆப்கானில் வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் முடிவு
» கடந்த 6 மாதங்களில் ஆப்கானில் 1,462 சிவிலியன்கள் பலி
» ஆப்கானில் நேட்டோ ஹெலி விபத்து: 6 பேர் பலி
» பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு
» ஆப்கானில் வீரர்களை வாபஸ் பெற பிரான்ஸ் முடிவு
» கடந்த 6 மாதங்களில் ஆப்கானில் 1,462 சிவிலியன்கள் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum