Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பாப்பாப் பாட்டு – மகாகவி பாரதியார்
4 posters
Page 1 of 1
பாப்பாப் பாட்டு – மகாகவி பாரதியார்
–
௧) ஓடி விளையாடு பாப்பா! – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! – ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!
-
௨) சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
-
௩) கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!
-
௪) பாலைப் பொழிந்து தரும், பாப்பா! – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!
-
௫) வண்டி இழுக்கும் நல்ல குதிரை, – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!
-
௬) காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!
-
௭) பொய்சொல்லக் கூடாது பாப்பா! – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!
-
௮) பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
-
௯) துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
-
௰) சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!
-
௰௧) தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
-
௰௨) சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!
-
௰௩) வடக்கில் இமயமலை பாப்பா! – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
-
௰௪) வேத முடையதிந்த நாடு – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
-
௰௫) சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
-
௰௬) உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் – இது
வாழும் முறைமையடி பாப்பா!-
————————————————————-
நன்றி
http://store.tamillexicon.com/
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: பாப்பாப் பாட்டு – மகாகவி பாரதியார்
மிக்க நன்றி ராம் :”@:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாப்பாப் பாட்டு – மகாகவி பாரதியார்
என்னை சிறுவயதிற்கே திரும்ப அழைத்துச் சென்று விட்டீர்கள்... அருமை ... அருமை பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|