Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆஸ்கார் விருதுகள் - 2013
Page 1 of 1
ஆஸ்கார் விருதுகள் - 2013
திரைப்பட உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை ஆர்கோ திரைப்படம் வென்றுள்ளது.
85ஆவது ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்பதற்காகவும் விருதுகளைப் பெறுவதற்காகவும் ஹாலிவுட் மற்றும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் விழா அரங்கில் குவிந்திருந்தினர்.ஆயிரக்கணக்கான ரசிகர்களும் விழா நடைபெறும் இடத்தில் குழுமியிருந்தனர். வண்ணமயமான இந்த விழாவில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் "Lincoln" திரைப்படம் அதிக விருதுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாகவே நடந்தது.
இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட "Life of Pi" திரைப்படம் 11 பிரிவுகளிலும் "Les Miserables", "Silver Linings Playbook" ஆகிய திரைப்படங்கள் தலா 8 பிரிவுகளிலும் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
விருது விபரம்:லைஃப் ஆப் பை திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டாவுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அதேபோல் சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆஃப் பை திரைப்படத்திற்கே ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த இசை மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதினையும் இத்திரைப்படம் வென்றுள்ளது.
லைஃப் ஆப் பை திரைப்படம் புதுச்சேரியை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்டது.
Re: ஆஸ்கார் விருதுகள் - 2013
பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை
இந்தியர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் விருதை நனவாக்கியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
ஆங்கிலத்
திரைப்படத்தில், தமிழில் தாலாட்டுப் பாடலை எழுதி, பாடிய பின்னணிப் பாடகி
பாம்பே ஜெயஸ்ரீ, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
லைஃப்
ஆப் பை என்ற படத்தில், அந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதி இசையமைத்து
பாடியுள்ளார். இந்த பாடலை எழுதியதற்காக அவர் பெயர் ஆஸ்கர் விருதுக்கு
பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு ஆஸ்கர் விருது
கிடைக்கவில்லை.
ஜேம்ஸ் பாண்டுக்கு கவுரவம்:
ஜேம்ஸ்
பாண்ட் திரைப்படங்கள் 50வதுஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு
பகுதியாக ஆஸ்கர் விருது விழாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களை கவுரவிக்கும்
வகையில், ஜேம்ஸ் பாண்ட் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு விழாவில்
வெளியிடப்பட்டது.
டை அனதர் டே என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில்
கதாநாயகியாக நடித்த ஹேல் பெர்ரி அந்த தொகுப்பினை வெளியிட அரங்கமே
அதிர்ந்தது.. கர கோஷத்தால்....
மற்ற விருதுகள் விபரம்....
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஜாங்கோ அன் செயின்ட் படத்தில் நடித்ததற்காக கிறிஸ்டோப் வால்ட்சுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை பேப்பர்மேன் பெற்றுள்ளது.
சிறந்த காஸ்ட்டியூம் டிசைனருக்கான விருதினை ஜாக்குலின் தட்டிச் சென்றார். (படம் அன்னா கரினினா.)
லிசா வெஸ்காட், ஜூலி ஆகியோருக்கு சிறந்த ஆடை மற்றும்
சிகைஅலங்காரத்திற்கான விருது கிடைத்துள்ளது. லெஸ் மிஸரபல்ஸ்
திரைப்படத்திற்காக இருவருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த குறும்படமாக"கர்ஃப்யூ" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த ஆவணப்படம் (சிறிய ஆவணப்படம் பிரிவில்) "இனோசென்ட்" திரைப்படம் ஆஸ்கர் வென்றுள்ளது.
சிறந்த ஆவணப்படம்(ஃபீச்சர் பிரிவு) "சேர்ச்சிங் பார் சுகர்" திரைப்படம் ஆஸ்கர் வென்றது.
சிறந்த வேற்று மொழிதிரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை அமோர் (Amour) திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலிக்கலவைக்கான விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஒலி எடிட்டிங்கிற்கான விருதினை ஜீரோ டார்க் தர்ட்டி என்ற திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதினை லெஸ் மிஸரபல்ஸ் திரைப்படத்தில் நடித்த அனா ஹாத்வே வென்றுள்ளார்.
சிறந்த எடிட்டிங்கிற்கான விருதினை ஆர்கோ (Argo) திரைப்படம் வென்றுள்ளது.
12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள லிங்கன்
திரைப்படத்திற்கு பெஸ்ட் புரொடக்ஷன் டிசைனுக்கான ஆஸ்கர் விருது
கிடைத்துள்ளது.
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் லைஃப் ஆப் பை திரைப்படம் விருது பெற்றுள்ளது.
சிறந்த ஒரிஜினல் பாடல் ( original song) ஆஸ்கர் விருதினை ஸ்கைஃபால் திரைப்படத்தில் பாடிய ஆடெல் வென்றார்.
சிறந்த இயக்குநருக்கான விருதினை லைஃப் ஆப் பை திரைப்படத்தை இயக்கிய ஆங் லீ வென்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை "சில்வர் லைனின்ங்க்ஸ் பிளேபேக்" திரைப்படத்தில் நடித்த நடிகை ஜெனிபர் லாரன்ஸ் வென்றார்.
எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே சிறந்த நடிகருக்கான விருதினை லிங்கன் திரைப்படத்தில் நடித்த டேனியல் டே லெவிஸ் வென்றுள்ளார்.
டேனியல் டே லெவிஸ், சிறந்த நடிகருக்கான அதிக ஆஸ்கர் விருதுகள் பெற்ற
பெருமை இவரைச் சாரும். இது வரை இந்தப் பிரிவில் இவர் 3 விருதுகளை
பெற்றுள்ளார். தேர் வில் பீ பிளட் மற்றும், மை லெஃப் ஃபுட் ஆகிய திரைப்பட
ங்களில் நடித்ததற்காக இவ்விருதினை பெற்றிருக்கிறார்.
சிறந்த இயக்குநருக்கான விருதினை ஆர்கோ திரைப்படத்தினை இயக்கிய பென் ஆல்ஃபெக் வென்றார்.
புதியதலைமுறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum