சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Khan11

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

3 posters

Go down

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Empty இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 18:20

நாகர்கோவிலில் அமைந்துள்ள அந்த ஓட்டல் ஒரு பிரபலமான அசைவ ஓட்டல்பா... அங்கு, மாலை 4:00 மணிக்கு இஞ்சிச்சாறு சேர்த்து சுவையான டீயும், சுடச்சுட மெது வடையும் போடுவாங்க. இதனால், மாலையில் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும்...

சமீபத்தில் ஒரு நாள் அந்த நெரிசலான நேரத்தில் ஒருவர், "ஐயோ! கொல்ல வாரானே... காப்பாத்துங்க!' என்று அலறியடித்தபடியே ஓட்டலுக்குள் பாய்ந்தார். அவரைத் தொடர்ந்து ஒரு ஆசாமி, கையில் அரிவாளுடன் விரட்டிக் கொண்டு வந்தான். ஆனால், அந்த முரட்டுக்காளை ஓட்டலுக்குள் நுழையாமல், படியிலேயே நின்று விட்டான். கொலைக்காரனானாலும் அவனுக்கும் தப்பிப் பிழைக்க வழி தெரிந்திருந்தது.

திடீரென ஏற்பட்ட பரபரப்பால், ஓட்டலில் கலெக்ஷன் குறைந்தது. ஓட்டல் அதிபர் கோபத்தால் கொதித்துக் குதித்தார். மனிதாபிமானம் சற்றும் இல்லாமல், அடைக்கலம் தேடி வந்த அப்பாவியை, கழுத்தை பிடித்து ஓட்டலுக்கு வெளியே தள்ளினார்.

எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டுமேயென்று, தலைதெறிக்க ஓடினார் அவர். ஆனால், அந்த கொலைகாரன் அவரை மடக்கிப் பிடித்து, கண்டபடி நாலைந்து வெட்டு வெட்டி, ஓடி மறைந்து விட்டான்.
நடுரோட்டில், அந்த அப்பாவி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்காக மன்றாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே திரண்டு விட்டது. "ஐயோ பாவம்...' என்று இரங்கினரே தவிர, அவரது உயிரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

அப்போது, அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த நல்லவர் ஒருவர், பக்கத்து கடைக்குச் சென்று, இந்தக் கோர சம்பவம் பற்றி காவல் நிலையத்திற்கு போனில் தகவல் கொடுத்தார். "நேரில் இங்கு வந்து புகார் எழுதிக் கொடுங்கள்!' என்று காவல் நிலையத்திலிருந்து பதில் வந்தது.

பாவம்! அவர் என்ன செய்ய முடியும்? "அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர் கதி இது தான்!' என்று எண்ணியபடியே, சம்பவ இடத்திற்கு மீண்டும் செல்லாமல் நடையைக் கட்டி விட்டார்!

இதற்கிடையே தகவல் அறிந்து அவரது மனைவி ஓடோடி சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமுற்றுக் கிடந்த கணவரின் முகத்தைப் பார்த்து, குமுறி குமுறி அழுதாள். தன் கணவரைத் தூக்கி, கடை வராந்தாவில் கிடத்தும்படி, கூட்டத்தினரைப் பார்த்து கண்ணீரும், கம்பலையுமாக மன்றாடினாள்!
உதவ வேண்டியது தான்... காவல் துறையிலிருந்து உபத்திரவம் வருமே என்று பலர் எண்ணியிருக்க வேண்டும். ஒருவர் பின் ஒருவராக கம்பியை நீட்டி விட்டதால், கூட்டம் மெலிந்து கரைந்து போயிற்று!

இந்த நேரத்தில், லேசான மழைத் தூறலும் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்து நனைந்து கொண்டிருந்த கணவரைப் பார்த்து, மனைவி, விம்மி விம்மி அழுதாள். "குடை வைத்திருக்கும் நல்லவர்களே, இரக்கமுள்ளவர்களே, முகத்திலாவது மழைத்துளி விழாமல் காக்கலாமே...' என்று கதறிய அவள் கண்களிலிருந்து, பொல பொலவென்று கண்ணீர் வடிந்தது!

இந்த சோகக் காட்சியைப் பார்த்த ஒருவர், மனமுருகி, தம்மிடமிருந்த குடையை அவளிடம் கொடுத்து விட்டு, நனைந்து கொண்டே வேகமாக நடந்து மறைந்தார். குடை ஒரு தடயமாகி விடக்கூடாதே என்பது தான் அவரது வேகமான நடைக்கு காரணமாக இருக்கலாம்!

சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குப் பின்,மரணத்திற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிய வேளையில், போலீஸ் ஜீப் இரைந்து கொண்டே வந்து நின்றது.

போலீசார் தடதடவென்று குதித்து இறங்கியதும், கூட்டம் மடமடவென்று கலைந்து, ஐந்தாறு பேரே நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு வயோதிகர், தன் கண்களை துடைத்துக் கொண்டே, "போலீஸ், சட்டத்தின் கெடுபிடி, மக்களின் உதவும் மனப்பக்குவத்தையே அழித்து விட்டது...' என்று, பயந்து பயந்து முணுமுணுத்தார்.

உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த அனாதையாக்கப்பட்ட, "அப்பாவி' சில மணி நேரத்தில், துடி துடித்து பரிதாபமாக இறந்து போனார்!

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மக்கள் திரண்டு கொலைக்காரனை விரட்டிப் பிடித்து, ஒரு மரத்தில் கட்டி போலீசாரிடம் ஒப்படைத்திருப்பர். படுகாயமுற்றவரை, எப்படியாவது தூக்கிப் போய் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருப்பர்! அத்தகைய உதவிக் கரங்களை இப்போது கட்டியது யார்?

தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Empty Re: இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Post by rammalar Wed 27 Feb 2013 - 18:28

1945 ம் ஆண்டிலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்க கூடும்...
-
அப்போது மட்டும் மனித நேயம் மலர்ந்திருந்ததாக
தினமலர் ஆசிரியர் எழுதியிருப்பது அறியாமையினால்
இருக்கலாம்..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Empty Re: இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Post by ahmad78 Wed 27 Feb 2013 - 20:42



1945 ம் ஆண்டிலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்க கூடும்...
-
அப்போது
மட்டும் மனித நேயம் மலர்ந்திருந்ததாக
தினமலர் ஆசிரியர் எழுதியிருப்பது
அறியாமையினால்
இருக்கலாம்..!

:cheers:

மனிதநேயம் என்பது எவ்வளவு தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு வரும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Empty Re: இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Post by Muthumohamed Mon 4 Mar 2013 - 17:39

ahmad78 wrote:


1945 ம் ஆண்டிலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்க கூடும்...
-
அப்போது
மட்டும் மனித நேயம் மலர்ந்திருந்ததாக
தினமலர் ஆசிரியர் எழுதியிருப்பது
அறியாமையினால்
இருக்கலாம்..!

:cheers:

மனிதநேயம் என்பது எவ்வளவு தடைகள் வந்தாலும் உடைத்துக்கொண்டு வரும்.

@. @. @. @. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Empty Re: இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Post by rammalar Mon 4 Mar 2013 - 17:54

மனிதநேயம் என்பது எவ்வளவு தடைகள்
வந்தாலும் உடைத்துக்கொண்டு வரும்...
-
நம்புவோம்...நம்பிக்கைதானே வாழ்க்கை..!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?  Empty Re: இதுவே, 1945ம் ஆண்டிற்கு முன்னர், இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum