சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Khan11

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

+2
பானுஷபானா
Muthumohamed
6 posters

Go down

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Empty லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

Post by Muthumohamed Wed 6 Mar 2013 - 21:48

கல்லூரிகள் திறக்கும் நேரம் வரப்போகிறது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும்
பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள்.
சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள்
மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் சென்னைக்கு வந்தால் தனியார்
விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நாம் பணத்தை கொடுத்தும்
சரியான உணவு கிடைக்காதது, மற்றும் பல அசவுகரியங்களை உண்டாக்கும்
விடுதிகளும் இருக்கிறது. சென்னைக்கு புதிதாக வரும் இளம் பெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விடுதிகளை தேர்வு செய்ய வேண்டும் என இதோ சில டிப்ஸ்..
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! 21students1
*
சென்னையில் எப்படியும் உங்களுடைய உறவினர், நண்பர்கள் வீடு இருக்கும்
ஏரியாவுக்கு அருகில் விடுதி பார்ப்பது நல்லது. விடுதியில் திடீரென மோட்டார்
ரிப்பேராகி தண்ணீர் வரவில்லை என்றால் கூட அவர்கள் வீட்டுக்கு சென்று
தயாராகிக் கொள்ளலாம். ஏதேனும் அவசர உதவி என்றால் அவர்களிடம் கேட்கலாம்.

*
ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் விடுதி இருப்பது
அவசியம். வெளியூரிலிருந்துவரும் பெண்கள் பெரும்பாலும் டூ-வீலர்
பயன்படுத்தாமல் இருப்பதால், அதிக தூரம் நடக்க வேண்டியதை தவிர்க்கலாம்.
மேலும் நேரம் தாமதமாகி விடுதிக்கு வரும் போது நிகழ வாய்ப்பிருக்கும்
பிரச்னைகளையும் தவிர்க்க இது உதவும்.

* உணவைப் பொறுத்தவரை சேரும்
முன் அங்கே சாப்பிட்டு பார்ப்பது நல்லது. விடுதி என்றாலே சாப்பாடு அப்படி
இப்படி தான் இருக்கும் என்றாலும் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும். தட்டை நீட்டினால் அவர்களாக அளவு சாப்பாடு வழங்கும்
விடுதிகளை தவிர்க்கலாம்.

* ரூமுக்கு தனியாக டி.வி. இருந்தால் அந்த
ஹாஸ்டல் பற்றி பரிசீலித்து கொள்ளலாம். ஆரம்பத்தில் ரூமில் டி.வி.
இருக்கிறதே பாட்டு, சினிமா பார்த்துக்கொள்ளலாம் என சந்தோஷமாக தான்
இருக்கும். ஆனால் நாம்
லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! 21students
கல்லூரிக்கோ
அல்லது வேலைக்கோ சென்று அலுப்பாக திரும்பி வரும் போது ரூமில் இருக்கும்
மற்ற நபர்கள் டி.வி. யை இரவு நெடுந்நேரம் வரை அலறவிடுவது மிகவும் தொந்தரவாக
இருக்கும்.

* விடுதியில் சேரும் முதல்நாளே அங்கிருக்கும்
கார்டியன் உங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறாரா.. இது உங்களை வேறு
ஹாஸ்டல் போக விடாமல் மனதை மாற்றும் வித்தை. அந்த அக்கா தான் நல்லா
பேசுறாங்களே, அந்த தாத்தா பாசமா லக்கேஜ்லாம் எடுத்து கொடுக்கிறாரே என்று
உணர்ச்சிவசப்பட்டு அங்கேயே தங்கிவிட வேண்டாம். விடுதி சரியில்லை என்றால்,
கிளம்பிவிடுங்கள். உங்கள் சவுகரியமும் பாதுகாப்பும்தான் முதலில். அதற்குப்
பிறகு தான் எல்லாமே.

* சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் கூட
வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம்.தண்ணீர் பிரச்னை என்றால் எங்கு போக
முடியும்? அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை ஹாஸ்டலில் தங்கியிருக்கும்
நபர்களிடம் கோடை காலத்திலும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருமா எனக் கேட்டு
தெரிந்து கொள்ளுங்கள்.

* பண விஷயத்தில் அட்வான்ஸ்வாங்கி கொள்ளும்
விடுதிகள், ' நீங்கள் ஹாஸ்டலை காலி செய்வதென்றால் மூன்று மாதத்திற்கு
முன்பே நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும், அதும் அட்வான்ஸ்தொகையை பணமாக
கொடுக்க மாட்டோம் காசோலையாக தான் கொடுப்போம் ' என சொல்பவர்களை மறுபரிசீலனை
செய்யுங்கள்.

* சில விடுதிகளில் செல்போன் சார்ஜ் போட பிளக்பாயின்ட்
உங்கள் ரூமில் இல்லாமல் வெளியில் பொது ஹாலில் மட்டுமே பிளக் பாயின்ட்
இருக்கும். மின்சாரத்தை குறைக்கும் நடவடிக்கை இது. காஸ்ட்லி மொபைல்
வைத்திருக்கும் நபர்கள் போனில் சார்ஜ் ஏறும் வரை பக்கத்திலே
அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் செல்போன் சார்ஜ் ஏறும்வரை
நீங்களும் அங்கேயே இருக்க வேண்டி வரும். உங்கள் நேரம் விரயமாகும்.

*
லேப்டாப் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், அயன்பாக்ஸ்
பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், வாஷிங் மெஷின் பயன்படுத்த தனியாக
கட்டணம்.. என பலவித கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகளும் இருக்கின்றன.
முதலிலேயே எல்லாவற்றையும்கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

*
மிகவும் அவசியமான விஷயம்பாதுகாப்பு. விடுதிக்கு அருகில் டாஸ்மாக் கடைகள்
இருந்தாலோ, அதிகப்படியான ஆண்கள் கூடும் இடங்களுக்கு அருகில் விடுதி
இருந்தாலோ.. கொஞ்சம்கவனம் தேவை. அதைத் தேர்வு செய்வது அவ்வளவு
பாதுகாப்பானது அல்ல.

* எப்படியிருந்தாலும் எடுத்ததுமே அட்வான்ஸ், வாடகை
என முதல் நாளே அனைத்து தொகையும் செட்டில் செய்துவிடாமல் பாதித் தொகை
மட்டும் கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையை இரண்டு நாட்கள் கழித்து தருகிறேன்
என சொல்லுங்கள். ஒருவேளை நீங்கள் அங்கு சென்று தங்கிய பிறகு ஹாஸ்டல்
பிடிக்கவில்லை என்றால் கொடுத்த பணத்தை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டாலும்
நஷ்டம் பெரிதாக இருக்காது.

* ஹாஸ்டல் எனபது நாம் பெற்றவர்களை
விட்டு தனியாக இருக்கும் இடம். மனது பல விஷயங்களுக்கு அலைபாயும் என்பதால்
கூடுதல் கவனம் தேவை. ரூமில் உங்களுடன் தங்கும்தோழிகளுடன் தனிப்பட்ட
விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களின் நல்ல விஷயங்களை பின்பற்றலாமே
தவிர, கெட்ட விஷயங்கள் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

* சொந்த
ஊரைவிட்டு, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களை விட்டு
வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே
நிம்மதியாக படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.
ஹாஸ்டல்
வாழ்க்கை என்பது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களைத் தரக்கூடிய
காலம். தங்கும் இடமும், உடன் இருக்கும் மனிதர்களும் உங்கள் நோக்கத்தை திசை
திருப்பவோ,தடுக்கவோ வாய்ப்பளிக்காமல், கவனமாக விடுதியைத் தேர்வு செய்து
நிம்மதியாக உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.. வாழ்த்துகள்
சகோதரிகளே!
-
யூத்பூல் விகடன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Empty Re: லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

Post by பானுஷபானா Thu 7 Mar 2013 - 5:59

பெண்களுக்கு பாதுகாப்பான பகிர்வு நன்றி முஹம்மத்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Empty Re: லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

Post by *சம்ஸ் Thu 7 Mar 2013 - 8:18

பானுகமால் wrote:பெண்களுக்கு பாதுகாப்பான பகிர்வு நன்றி முஹம்மத்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Empty Re: லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

Post by கைப்புள்ள Thu 7 Mar 2013 - 8:52

யார் பெத்த பிள்ளையோ இம்பட்டு விசயம் சொல்லுது லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! 517195
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Empty Re: லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

Post by மீனு Thu 7 Mar 2013 - 12:03

கைப்புள்ள wrote:யார் பெத்த பிள்ளையோ இம்பட்டு விசயம் சொல்லுது லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! 517195
யார் பெத்தாலும் நல்ல விசயம் சொன்னா கேட்கனும் (*(: (*(:
:,;: :,;:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Empty Re: லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

Post by rammalar Thu 7 Mar 2013 - 12:44

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்! Empty Re: லேடீஸ் ஹாஸ்டல்: அவசிய டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum