சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

அழகுக்கு தேவையான காலை உணவு…  Khan11

அழகுக்கு தேவையான காலை உணவு…

4 posters

Go down

அழகுக்கு தேவையான காலை உணவு…  Empty அழகுக்கு தேவையான காலை உணவு…

Post by ஹனி Wed 2 Feb 2011 - 15:13

அழகுக்கு தேவையான காலை உணவு…  Idli-dosa


சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள்- தைலங்கள் விற்பனை யாகின்றன! எப்போதும் ஒலி- ஒளிபரப்பாகும் அழகு குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?!

மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை புத்துணர்ச்சி யுடன் வைத்துக் கொள்கின்றன. எப்படி யென்றால்…

நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதான மாய் செல்லும். உதாரணமாக ரையீரலுக்கு அதிகாலை 3 – 5 மணி, மண்ணீரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக் கும் குறிப்பிட்ட நேரம் வகைசெய்யப்பட்டிருக் கிறது.

நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.

உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும்.

ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு- கசப்பு சுவையுடனும், மண்- இனிப்பு சுவையுடனும், காற்று – துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர்- உப்பு சுவையுடனும், ஆகாயம் – புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது.


ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அழகுக்கு தேவையான காலை உணவு…  Empty Re: அழகுக்கு தேவையான காலை உணவு…

Post by ஹனி Wed 2 Feb 2011 - 15:18

இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 4 இட்லி சாப்பிடுபவர் களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும்.

அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7- 7.30-க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவு கள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்.



இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்?

வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30-க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் பருக வேண்டும். பின்பு 7.45-லிருந்து காலை 11 மணி வரை தண்ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும்.

மண்ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும். அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும்.

மண்ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும். உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும்.

மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்.

தகவல்: டாக்டர் எல்.உமா வெங்கடேஷ், சென்னை-17.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அழகுக்கு தேவையான காலை உணவு…  Empty Re: அழகுக்கு தேவையான காலை உணவு…

Post by இன்பத் அஹ்மத் Wed 2 Feb 2011 - 19:50

சரி இதை கடைப்பிடிப்போம்........ :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அழகுக்கு தேவையான காலை உணவு…  Empty Re: அழகுக்கு தேவையான காலை உணவு…

Post by *சம்ஸ் Wed 2 Feb 2011 - 23:40

தினமும் எனது சாப்பாடு இதுதான் ##* :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அழகுக்கு தேவையான காலை உணவு…  Empty Re: அழகுக்கு தேவையான காலை உணவு…

Post by நண்பன் Wed 2 Feb 2011 - 23:42

##* :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அழகுக்கு தேவையான காலை உணவு…  Empty Re: அழகுக்கு தேவையான காலை உணவு…

Post by ஹனி Thu 3 Feb 2011 - 11:03

அன்பு , ரசிகன் , நண்பன்.
:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அழகுக்கு தேவையான காலை உணவு…  Empty Re: அழகுக்கு தேவையான காலை உணவு…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum