சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Khan11

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!

2 posters

Go down

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Empty ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 19:07

• தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் தமிழில் எழுத முடியும்.

• இளநிலைப் பட்ட நிலையில் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள்தான் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும்.

• விருப்பப் பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு

• ஆங்கிலப் பாடத்தாளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களும் ரேங்க்கிற்கு கணக்கில் கொள்ளப்படும்.

• பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படும் ஜெனரல் ஸ்டடீஸ் தாள்களுக்கான மதிப்பெண்கள் 600லிருந்து ஆயிரமாக்கப்பட்ட ­ுள்ளது.

• நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 300-லிருந்து 275 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது.

சிவில்
சர்விஸ் முதன்மைத் தேர்வில் (மெயின் தேர்வு) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள
­ன. முதன்மைத் தேர்வில் எழுத வேண்டிய தாள்களின் எண்ணிக்கை 9-லிருந்து
ஏழாகக் குறைக்கப்பட்டுள ­்ளது. மற்ற சில முக்கிய மாற்றங்கள்:

பொது ஆங்கிலப் பாடம்
பழைய
முறையில், பொது ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும். அதில்
மாணவர்கள் எடுக்கும்மதிப்பெண்கள் ரேங்க்கிற்கு கணக்கில் எடுத்துக்
கொள்ளப்படாது. இப்போது இந்தத்தாளில் எடுக்கும் மதிப்பெண்கள் ரேங்க்கிற்கு
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பழைய முறையில் இருந்த கட்டுரைப்
பகுதியில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை ­. தற்போதும் இதற்கு 200
மதிப்பெண்கள் வழங்கப்படுகின்ற ­ன. இந்த முதல் தாளில் இரண்டு பிரிவுகள்
இருக்கும். அதாவது முதல் பகுதி கட்டுரைப் பகுதி. இதற்கு 200 மதிப்பெண்கள்.
இரண்டாவது பகுதியில் இங்கிலீஷ் காம்பிரிஹென்சன் ­, இங்கிலீஷ் பிரிசிஸ்
இருக்கும். இதற்கு 100 மதிப்பெண்கள். மெட்ரிக்குலேஷன் ­ அல்லது பத்தாம்
வகுப்பு நிலையில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட ­ுள்ளது.

பொது அறிவுத்தாள்கள்
தற்போதைய மாற்றங்களில் மிகமுக்கியமான மாற்றம் பொது அறிவுத் தாளில் செய்யப்பட்டுள்ளது.
பழைய
முறையில் இரண்டு பொது அறிவுத்தாள்கள் (ஜெனரல் ஸ்டடீஸ்) இருந்தன. அதற்கு
600 மதிப்பெண்கள். தற்போது நான்கு தாள்கள். ஒவ்வொரு தாளுக்கும் 250
மதிப்பெண்கள். அதாவது, இந்தநான்கு தாள்களுக்கும் சேர்த்து ஆயிரம்
மதிப்பெண்கள். ஜெனரல் ஸ்டடீஸ் முதல் தாளில் இந்திய பாரம்பரியம் மற்றும்
கலாசாரம், உலக வரலாறு மற்றும் புவியியல், சமூகம் ஆகிய பிரிவுகளிலிருந் ­து
கேள்விகள் கேட்கப்படும்.

ஜெனரல் ஸ்டடீஸ் இரண்டாவது தாளில் ஆட்சி
நிர்வாகம், அரசியலமைப்பு, அரசு அமைப்புகள். சமூக நீதி மற்றும் சர்வதேச
உறவுகள் குறித்த கேள்விகள் கேட்கப்படும்.
ஜெனரல் ஸ்டடீஸ் மூன்றாவது
தாளில் தொழில்நுட்பம், பொருளாதார மேம்பாடு, பல்லுயிர்ப் பெருக்கம்,
சுற்றுச்சூழல், பாதுகாப்புமற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த கேள்விகள்
இருக்கும்.

ஜெனரல் ஸ்டடீஸ் நான்காவது தாளில் நெறிகள், நேர்மை, திறனறிவு (எத்திக்ஸ், இன்டகிரிட்டி, ஆப்டிட்யூட்) குறித்த கேள்விகள் கேட்கப்படும்.

விருப்பப் பாடங்கள்
விருப்பப்
பாடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள ­ன. பழைய முறையில் இரண்டு
விருப்பப்பாடங்களும் நான்கு விருப்பத் தாள்களும் இருக்கும். அவற்றிற்கு,
1200 மதிப்பெண்கள். ஆனால், இப்போது ஒரே விருப்பப் பாடம். அதில் இரண்டு
தாள்கள். இந்த இரண்டு தாள்களுக்கும் தலா 250 மதிப்பெண்கள் வீதம்
வழங்கப்படும். ஆகவே, விருப்பப் பாடங்களுக்கான மொத்த மதிப்பெண்களின்
எண்ணிக்கை, 1200லிருந்து 500 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது.

அத்துடன்,
இளங்கலைப் பட்டப் படிப்பில் இலக்கியம் படித்தால் மட்டுமே இலக்கியத்தை
விருப்பப் பாடமாக எடுக்க முடியும். அதாவது நீங்கள் தமிழ் இலக்கியத்தை
விருப்பப் பாடமாக எடுக்க விரும்பினால் இளநிலைப் பட்ட நிலையில் தமிழ்
இலக்கியம் படித்திருக்க வேண்டும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 19:09

மதிப்பெண்களில் மாற்றம்
புதிய மாற்றங்களின்படி ­, எழுத்துத் தேர்வுக்கான
மதிப்பெண்கள் 2000 லிருந்து 1800 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது நேர்முகத்
தேர்வுக்கு வழங்கப்பட்டு வந்த 300 மதிப்பெண்கள் 275 ஆகக் குறைக்கப்பட்டுள
­்ளது. அதாவது மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான மொத்த
மதிப்பெண்களின் எண்ணிக்கை 2300-லிருந்து 2075 ஆகக் குறைக்கப்பட்டுள ­்ளது.

தேர்வுகள்:
தேர்வுகள்
வழக்கமான கட்டுரை வடிவிலேயே இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் விடையளிக்க
மூன்று மணி நேரம் வழங்கப்படும். மெயின் தேர்வில் முதல் தாள் ஆங்கில மொழி
குறித்தது என்பதால், அந்தத் தாளுக்கு ஆங்கிலத்தில்தான ­் விடையளிக்க
முடியும். மற்ற தாள்களுக்கு ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ
விடையளிக்கலாம். ­ அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம்,
காஷ்மீரி, கொங்கணி, மைதிலி,மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா,
பஞ்சாபி, சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய
மொழிகளில் இளநிலைப் பட்டம்பெற்ற மாணவர்கள்தான், அந்த மொழியில் விடையளிக்க
முடியும். அதாவது தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் தமிழ் மொழியில்
விடையளிக்க அனுமதிக்கப்படுவ ­ார்கள். ஆங்கில மீடியத்தில் படித்தமாணவர்கள்,
தமிழ் மொழியில் விடையளிக்க அனுமதிக்கப்படமா ­ட்டார்கள்.

இந்த மொழிகளில் தேர்வு எழுத
ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது 25 மாணவர்களாவதுவிருப்பம் தெரிவித்தால்தான ­்,
அந்த
மொழியில் விடையளிக்க அனுமதிக்கப்படுவ ­ார்கள். அவ்வாறு இல்லாத நிலையில்,
ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் விடையளிக்க வேண்டியதிருக்கு ­ம்.

“ஏற்கெனவே,
சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வில் கொண்டு வந்த மாற்றங்கள் தமிழ்
மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாக இல்லை. தற்போது முதன்மைத்
தேர்வில் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள்தான் தமிழில் எழுத முடியும்.
இளநிலைப் பட்ட நிலையில் தமிழ் இலக்கியம் படித்த மாணவர்கள்தான் தமிழ்
இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும் என்ற புதிய முறை தமிழக
மாணவர்களுக்கு உகந்ததாக இல்லை” என்கிறார், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும்
சிபிகுமரன்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!

Post by Muthumohamed Tue 12 Mar 2013 - 19:12

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்முதல்நிலைத் தேர்விலேயே விருப்பப் பாடங்கள்
நீக்கப்பட்டன. பொது அறிவுத்தாளும் திறனறித்தாளும் கொண்டு வரப்பட்டன. மாறி
வரும் சூழ்நிலைக்கு ஏற்ப முதன்மைத் தேர்விலும் தற்போது மாற்றங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் புதிய மாற்றங்களின்படி ­, விருப்பப்
பாடங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு பொது அறிவுப் பகுதியின்
முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்ட ­ுள்ளது தெரியவரும். இம்மாற்றத்தினால ­்,
கிராமப்புறங்களி ­ல் உள்ள மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறுவது கடினமாக
இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக
சிவில் சர்வீஸ்
தேர்வுகளில் சாதனை படைத்துவந்த தமிழகம் இனியும் தொடர்ந்து சாதனை படைக்க
முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் பாடத் திட்டங்களில் தகுந்த மாற்றங்களை செய்வதற்கும்
ஆங்கிலப் புலமையை வளர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”
என்கிறார், கோவையில் சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து
வரும் பேராசிரியர் கனகராஜ்.

விருப்பப் பாடங்கள்
வேளாண்மை,
கால்நடை மருத்துவ அறிவியல், மானுடவியல், தாவரவியல், வேதியியல் சிவில்
என்ஜினீயரிங், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல், பொருளாதாரம்,
எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், புவியியல், மண்ணியல், வரலாறு, சட்டம்,
மேனேஜ்மெண்ட், கணிதம், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மருத்துவ அறிவியல்,
தத்துவம், இயற்பியல், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள், உளவியல்,
பொது நிர்வாகம், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல்.

எந்த மொழிகளில் இலக்கியப் பாடங்கள்?
அசாமி,
பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி,கன்னடம், காஷ்மீரி, கொங்கணி,
மைதிலி, மலையாளம்,மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி,
சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம்.

புதிய முறை முதன்மை தேர்வு எப்படி இருக்கும்?
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில்
மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய முறைப்படி தேர்வு முறை விவரம்:

Paper-I
Section 1: Essay 200 Marks
Section 2: English Comprehension
& English Precis 100 Marks
(Of Matriculation /
Xth standard level)

Paper-II

General Studies–I 250 Marks
(Indian Heritage and Culture,
History and Geography of the
World and Society)

Paper-III

General Studies –II 250 Marks
(Governance, Constitution,
Polity, Social Justice and
International relations)

Paper-IV
General Studies –III 250 Marks
(Technology, Economic
Development, Bio-diversity,
Environment, Security
and Disaster Management)

Paper-V
General Studies –IV 250 Marks
(Ethics, Integrity and Aptitude)

Paper-VI
Optional Subject – Paper 1
250 Marks

Paper-VII

Optional Subject – Paper 2
250 Marks
Sub Total (Written test)
1800 Marks
Personality Test 275 Marks.
Grand Total 2075 Marks.

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயன்படக்கூடிய புத்தகப் பட்டியலுக்கு இந்த வார புதிய தலைமுறை கல்வி இதழைப் பாருங்கள்...

புதிய தலைமுறை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!

Post by rammalar Tue 12 Mar 2013 - 19:43

கிராமங்களில், ஆங்கில மீடியத்தில் படித்தமாணவர்களில்
பலரும், ஆங்கில மொழியில் நல்ல தேர்ச்சி
உடையவர்கள் கிடையாது...
-
அதனால் அவர்களும்
தமிழ் மொழியில் விடையளிக்க அனுமதிக்கப்பட வேண்டும்
--
செய்வார்களா..?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
» ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்திலிருந்து 109 பேர் தேர்ச்சி
» பிராந்திய ஸ்திரமின்மையால் ஹமாஸ் தலைமை தேர்வில் தாமதம்
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» கூகிள் ன் மாற்றங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum