Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சரியான வைத்தியம்!
2 posters
Page 1 of 1
சரியான வைத்தியம்!
பாலு சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவன். அதனால் அவனது தாயார் அவனுக்குச்
செல்லம் கொடுத்து வளர்த்து விட்டதால், பாலு வேலை எதுவும் செய்யாமல்,
உதவாக்கரையாக இருந்தான்.
ஒருநாள் மாலை இருட்டும் வேளையில், பாலு
ஊருக்கு வெளியே கால்வாய் கரையில் உட்கார்ந்திருந்தான். அப்போது தனியாக
ஒருவன் வருவதைக் கண்ட பாலு அவனை வழிமறித்து, தன் இடுப்பிலிருந்து கத்தியை
எடுத்து மிரட்டி, ""மரியாதையாக உன் பணப்பையைக் கொடு,'' என்றான்.
வந்தவனும், பயந்து போய் பணப்பையைக் கொடுத்து விட்டு ஓடி விட்டான்.
பணப்பையை ஒரு மரப்பொந்தில் ஒளித்து வைத்து விட்டு, தன் வீட்டிற்குச் சென்றான் பாலு.
அப்போது
அவன் தாயாருக்கு காய்ச்சல் அடிக்கவே அவள் படுத்திருந்தாள். அது
நள்ளிரவுக்கு மேல் அதிகமாகவே, பாலு மறுநாள் காலை வைத்தியரிடம் அழைத்துப்
போய் காட்டுவதாகக் கூறினான்.
மறுநாள் காலை அவன் தன் தாயாருடன்
வைத்தியரின் வீட்டிற்குப் போனபோது, அங்கு ஒரே கூட்டமாக இருப்பதைக் கண்டான்.
அவன் தன் தாயாரை அங்கேயே ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டு, ""அம்மா! இந்த
நோயாளிகளை எல்லாம் கவனித்து விட்டுத்தான் வைத்தியர் உன்னைப் பார்ப்பார்.
அதற்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். நீ இங்கேயே இரு. நான் கடைத்
தெரு வரை போய்விட்டு வந்து விடுகிறேன்,'' என்று கூறிவிட்டுப் போனான்.
இரண்டு
மணி நேரத்திற்கு பிறகு பாலு வைத்தியரின் வீட்டிற்கு வந்தபோது, வேறு
நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. அவனது தாயார் மட்டும் படுத்திருந்தாள்.
வைத்தியர் அவளது நாடியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதை கண்ட பாலு, ""அம்மாவுக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டான்.
வைத்தியரும்,
""உன் அம்மாவுக்கு இழுப்பு வந்து விட்டது. இதற்குப் பழுக்கக் காய்ச்சிய
இரும்புக் கம்பியால், இரண்டு சூடு போட்டால் சரியாகி விடும். கம்பியை
நெருப்பில் வைத்திருக்கிறேன். நீ இவளது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்
கொள். நான் போய் எடுத்து வருகிறேன்,'' என்று கூறிவிட்டு உள்ளே போனார்.
பாலு
தன் தாயாரின் கைகளைப் பிடித்துக் கொண்டான். அப்போதும் அவளது உடலும்,
கால்களும் இழுப்பால் ஆடின. வைத்தியர் சூடான இரும்புக் கம்பியைக் கொண்டு
வந்தார்.
அவர், பாலுவின் தாயாருக்கு சூட்டைப் போடாமல், பாலுவின்
கைகளில் போட்டு இழுத்து விட்டார். அவன் "ஆவென' அலறினான். அதே சமயம் அவனது
தாயாரின் உடல் ஆட்டமும் நின்றது. வைத்தியரும் அவளது நாடியைப் பிடித்துப்
பார்த்து விட்டு, அவள் இறந்து போய் விட்டதாக கூறினார்.
பாலுவுக்கு
கோபம் வந்து விட்டது. உடனே அவன் வைத்தியரின் கழுத்தைப் பிடித்து, நெறிக்க
முயன்றான். வைத்தியர் பலமாக அவனது கைளில் அடித்து தன்னை விடுவித்துக்
கொண்டு, ""அடே பாலு! இது நாள் வரை நீ திருடன் என்று நான் கேள்விப்
பட்டிருக்கிறேன். இப்போது நீ கொலைகார னாகவும் மாறி விட்டாய் என்று
தெரிகிறது. நேற்று நீ ஒரு ஏழை மனிதனின் பணம் முழுவதையும் பறித்துத்
கொண்டாயே.
""அந்த மனிதர் பாடுபட்டு தன் மகள் கல்யாணத்திற்காக
சேர்த்த பணம் அது. அதை இழந்ததால், அவரது பெண்ணின் கல்யாணம் நின்று
போயிற்று; தந்தையும், மகளும் வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
இதற்கு நீ நடத்திய வழிப்பறியே காரணம். அவர்கள் மனது நொந்து உன் குடும்பமே
அழிய வேண்டும் எனச் சபித்ததால், உன் தாயார் இறந்து விட்டாள். இனி நீயும்
திண்டாடுவாய்,'' என்றார்.
பாலுவுக்கு தலையே சுழன்றது. தன்
செய்கையால் தன் தாயாருக்கு மரணம் என, எண்ணி அவன் கண்ணீர் வடித்தான். பிறகு,
அவன், ""இறந்து போன குடும்பத்தவருக்கு நான் நஷ்டஈடு கொடுத்தாலே என்
தாயாரின் ஆத்மா சாந்தி அடையும். நான் பணம் கொண்டு வந்து உங்களிடம்
கொடுக்கிறேன். நீங்கள் உரிய இடத்தில் சேர்த்து விடுங்கள்,'' எனக் கூறி
விட்டு வெளியே சென்றான்.
அவன் போனதுமே, கீழே கிடந்த அவனது தாய்
எழுந்து உட்கார்ந்து, ""என் மகன் இப்படிக் கெட்டு விட்டான் என்பது
இப்போதுதான் தெரிந்தது. ஆனால், நீங்களும் பணத்தைப் பறி கொடுத்த உங்கள்
உறவினரும் சேர்ந்து என்னை இப்படி நடிக்கச் சொன்னதால் தான், அவன் மனம்
திருந்திப் போயிருக்கிறான்,'' என்றாள்.
உறவினரும் வைத்தியர் பக்கம்
வந்து, ""நேற்று என்னை மிரட்டிப் பணம் பறித்தவன் இவனே. உங்கள் மூளை எப்படி
யெல்லாம் வேலை செய்துள்ளது. பாலு மனம் இறங்கி மாறுவதற்குத்தான் இப்படி ஒரு
கதை ஜோடித்தும் சொன்னீர்கள்! உங்கள் மூளையே அபாரம்,'' என்று பாராட்டினார்.
அப்போது
பாலுவின் தாயாரும், ""இனி அவன் திருடன் என்றும் கொலைகாரன் என்றும் பெயர்
எடுக்க மாட்டான். நீங்கள் அவன் கையில் போட்ட சூடு அவனுக்கு நன்கு நினைவில்
இருக்கும். அது அவனுக்கு ஒரு பாடமே,'' என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டே பணத்தோடு வந்த பாலு, தன் தாயார் உயிருடன் இருப்பது கண்டு மகிழ்ந்தான்.
தாயாரிடம்,
""அம்மா! நான் திருந்தி விட்டேன். இனி நல்லவன் என்றே பெயர் பெறுவேன்.
வைத்தியர் போட்ட சூடு எனக்கு நல்ல பாடத்தைக் கற்பித்தது,'' என்று வைத்தியரை
வணங்கினான்.
கெட்டுப் போன பிள்ளைக்கு இப்படித்தான், "ஷாக் டீரிட்மென்ட் கொடுக்கணும். அப்போதான் திருந்துவர்.
சிறுவர் மலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum