Latest topics
» மனிஷா பஞ்சகம்by rammalar Yesterday at 20:20
» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15
» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07
» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59
» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47
» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46
» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42
» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40
» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38
» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36
» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20
» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45
» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34
» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35
» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21
» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43
» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38
» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34
» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46
» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37
» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10
» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57
» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56
» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40
» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19
» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14
» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09
» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48
» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40
» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32
» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25
» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24
"மூலிகைக் குடிநீர்" சித்தர்கள் கூறிய - கைவைத்தியம்
3 posters
Page 1 of 1
"மூலிகைக் குடிநீர்" சித்தர்கள் கூறிய - கைவைத்தியம்

"மூலிகைக் குடிநீர்" சித்தர்கள் கூறிய - கைவைத்தியம்
நோயற்ற வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுக்கும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும்
மாசுபட்டுக் கிடக்கின்றன. வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும்
நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை
உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள்
கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக
அமைந்து விடுகிறது. இதனால் சுடவைத்து ஆறிய நீரை அருந்தும்படி வைத்தியர்கள்
சிப்பார்சு செய்கின்றனர்.
உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய்
தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள பல வைகையான மூலிகைக் “குடிநீர்” களை
சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகைக் குடிநீரை அருந்தினால்
உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமன்றி நோய்களும் தடுக்கப்படும்.
அந்த
வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி
குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர்,
மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.
இவ்வகை
குடிநீரை அருந்திய எம் முன்னோர்கள் பலசாலிகளாகவும், ஆரோக்கியமாகவும்
பலகாலம் வாழ்ந்தார்கள் என்பது அனுபவ உண்மை. குடிநீரை குடித்து வந்தால்
வைத்தியசாலைக்கு செல்லத் தேவையில்லை என்பது நம்முன்னோர்கள் எமக்கு சொல்லிச்
சென்ற வேதமாகும். அவற்றுள் சில கீழே பதிவாகியுள்ளன.
ஆவாரம்பூ (ஆவரசம்பூ) குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”
என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக்
கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை
தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால்
அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு
உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும்
இதுதான்.
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு,
ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.
இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில்
கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும்,
மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும்.
இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு,
மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி,
வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல்,
போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை
சுத்தப்படுத்தும்.
வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.
இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன்
செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற
மூலிகையாகும்.
காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும்.
இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச்
சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய்,
யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”
என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை
கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.
வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை
35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான
அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப்
பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து
குடிநீராகவும் அருந்தலாம்.
கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.
சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.
இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.
ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.
சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.
மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால்,
நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல்
தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.
நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.
இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி,
இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல்
சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு
மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
ஆடாதோடைக் (பாவட்டை) குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,
சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.
வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.
சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.
Re: "மூலிகைக் குடிநீர்" சித்தர்கள் கூறிய - கைவைத்தியம்
இது மிக மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி உறவே @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "மூலிகைக் குடிநீர்" சித்தர்கள் கூறிய - கைவைத்தியம்
பயனுள்ள பகிர்வு நன்றி :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

» நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்!
» ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...
» நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்
» பாட்டி சொல்லும் கைவைத்தியம்
» குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!
» ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...
» நோயில்லாத வாழ்வு வாழ மூலிகைக் குடிநீர்
» பாட்டி சொல்லும் கைவைத்தியம்
» குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|