சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Khan11

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 8:00

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Moorshistory
ஒரு இனத்தின் இருப்புக்கு அதன் அடையாளமும் வரலாறும் இன்றியமையாத விடயமாகும். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை முன் சென்ற தொடர்களில் அலசப்பட்டது போன்று தமது அடையாளம் தொடர்பில் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது.

தம்மை முஸ்லிம்கள் என்றே அழைக்க விரும்பும் பெரும்பாலானோர் தமக்கென ஒரு இன அடையாளம் இருப்பதையே மறக்கும் அளவுக்கு வரலாற்றுத் திரிபுகள் புகுத்தப்பட்டுள்ளது. இதை மிகக் கவனமாகக் கையாண்ட புத்திஜீவிகள் முஸ்லிம்கள் மத்தியிலே அவ்வப்போது சில தூண்டுதல்களை ஏற்படுத்தி வரலாற்றுப் பிறழ்வுகளையும் ஏற்படுத்தியே வந்துள்ளனர்.

இலங்கை முஸ்லிம்கள் தம்மை ஒரு இனமாகக் காண்பதைத் தடுக்கும் பல காரணிகள் உள்ளன. அவற்றில் பிரதானமானது இவர்களிடையே புகுத்தப்பட்ட பிரிவுகளாகும். எனவே, அப்பிரிவுகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல் தம்மை முஸ்லிம்கள் எனும் அடையாளத்திற்குள் வைத்திருப்பதே சிறந்தது என 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர்கள் எண்ணங்கொண்டார்கள். எனினும் மார்க்க அடையாளம் இன அடையாளமாக முடியாது என்பதால் தொடர்ந்தும் அரசியல் நிலைப்பாட்டில் இலங்கை முஸ்லிம்கள் “சோனகர்கள்” (Sri Lankan Moors) எனும் வரையறைக்குள்ளேயே வருகின்றனர்.

எனினும், சோனகர்களையும் இரண்டாகப் பிரிக்க விளைகிறது அரசியல் ஆவணங்கள். இலங்கைச் சோனகர்கள், இந்தியச் சோனகர்கள் அல்லது கரையோரச் சோனகர்கள் என்பதே இவ்விரு பிரிவுகளாகும்.

இதில், இலங்கைச் சோனகர் என்பாரைப் பூர்வீகக் குடிகள் என்றும் கரையோரச் சோனகரை இந்தியக் கலப்புள்ளவர்கள் என்றும் வரையறுக்க விளையும் ஆவணங்களே சில இடங்களில் இந்தியச் சோனகர்கள் என்றும் குறிக்க விளைகிறது. எனினும், தற்காலத்தில் பொதுவாக “சிலோன் மூர்ஸ்” எனும் அடையாளமே பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழ்களில் பதியப்படுகிறது.

இந்தப் பிரிவினையை ஆழமாக விதைத்ததில் இராமநாதருக்குப் பெரும் பங்கிருக்கிறது. இலங்கையிலே “தமிழ்” பேசும் மக்கள் அனைவரும் ஒரு இனமே என நிரூபிக்க விளைந்த அவர் ஆரம்பத்தில் சோனகர்கள் (Moors) என ஒரு பிரிவு இல்லையென்று மறுதலித்தும், பின்னர் ஒரு கட்டத்தில் சோனகர் என அறியப்படுவோரில் பெரும்பாலானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் மிகச் சிறிய அளவில் இலங்கைச் சோனகர்கள் இருக்கிறார்கள் என்றும் Royal Asiatic Society இடம் சமர்ப்பித்த தம் ஆராய்வில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறு அளவிலே இருப்பினும், அந்தப் பூர்வீகக் குடிகளின் இன அடையாளம் பதியப்படவே வேண்டும் என்று வாதாடிய ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் அவர்கள் பின்னர் இராமநாதரின் குரோத நடவடிக்கைகளை வென்றிருந்தது வரலாறாக இருக்கிறது. எனினும், சிங்கள மக்களும் இப்பிரிவினையை அவ்வாறு பார்க்கவே செய்தார்கள்.

யோனக மினிசு எனும் அடையாளத்திலும் ஹம்பயாக்கள் என்றும் மரக்கலயாக்கள் என்றும் கூடப் பிரித்துப் பார்க்கும் பழக்கம் இன்றளவும் சிங்கள மக்களிடம் இருக்கிறது. நவீன காலத்தில் இந்தப் பிரிவினைகள் மேலும் வடிவங்கள் பற்று சம்பிரதாய முஸ்லிம்கள், அடிப்படை வாதிகள் என்று பிரித்துப் பார்க்கும் பழக்கமும் உருவாகியிருக்கிறது.

தன் வரலாற்றையும் பூர்வீகத்தையும் பதிவாக்கவோ அறிந்து கொள்ளவோ தவறும் ஒரு சமூகம் எதிர்காலத்தில் தம் இருப்பையும் அடையாளத்தையும் இவ்வாறே இழக்க ஆரம்பிக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty Re: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 8:00

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தம் வரலாற்று அறிவு பற்றிய அக்கறை பெருமளவில் சமூகத்தேவையாக இருந்ததில்லை என்பதால் வாய்வழிக் கதைகள் அல்லது ஊகங்கள் மூலம் முஸ்லிம் அடையாளத்துக்கு ஏதுவான சம்பவங்களைத் தொடர்பு கொள்ள விளைவதோடு அத்தோடு தம் பூர்வீகத்தையும் வரையறுத்துக்கொள்ள விளைகிறார்கள்.

காலத்தால் சற்றுப் பின்தள்ளி ஆராய விளையும் சமூகம் கி.பி 8ம் 9ம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு வணிக நோக்குடன் வந்த அரேபியரைத் தம் மூதாதையராகக் கொண்டு அங்கிருந்து வரலாற்றை ஆரம்பிக்கிறது. ஆனாலும் மிகச் சொற்பமானவர்களே அந்த அரேபியரும் இத்தீவிற்குள் வருவதற்கு அடிப்படைத் தொடர்புகள் எப்போதிருந்து ஆரம்பித்திருக்கும் என்று ஆராய விளைகிறார்கள்.

அரேபியர் இத்தீவிற்கு வருகை தந்ததன் ஆரம்பம் குறித்து இவ்வுரைத் தொடரின் முன்சென்ற பதிவுகளில் பல்வேறு விடயங்கள் அலசப்பட்டுள்ளன. இன்னும் பல காரணிகள் பின்வரும் தொடர்களிலும் ஆராயப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும் அதே வேளை இடைக்கால வரலாற்றோடு இச்சமூகத் திருப்தி காண்பதற்கான காரணிகளை அலசுவது தகும்.

அதன் அடிப்படையில் அரேபியரை மையமாகக் கொண்டு, அதிலும் முஸ்லிம் அரேபியரை மையமாகக் கொண்டு தம் வரலாற்றை ஆராய விளையும் சமூகம் தமது பூர்வீகத்தை இரு நிலைகளிலிருந்து ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது. அதில் முதன்மையானது அரேபிய – உள் நாட்டுக் கலப்பு.

அதாவது, அரேபியர் தம் வருகையின் பின் உள் நாட்டில் இருந்த பெண்களைத் திருமணம் முடித்து அதன் மூலம் பெருகிய சமூகமெனக் கொள்வது. இதிலும் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. முதற் பிரிவானது அரேபியர் வந்த போது முதலில் கரையோரங்களிலேயே தரையிறங்கியிருப்பர் அந்த வகையில் அவர்கள் கரையோரங்களில் வாழ்ந்த சமூகத்தோடு கலந்திருக்க வேண்டும் எனும் ஊகம். இந்த ஊகத்தைக் கையாள்பவர்கள் இக்கலப்பு “தமிழ்” பெண்களோடுதான் நடந்தது என வாதிடுவது அதன் மூலமாகவே தமிழ் மொழி முஸ்லிம்களின் தாய் மொழியானது எனும் வாதத்தையும் முன் வைக்கின்றனர். எனினும், இலங்கைக்குள் தமிழ் எனும் மொழியைக் கொண்டு வந்ததே பின் நாளில் முஸ்லிம்களாகிய சோனக சமூகமே என்பது ஆராயப்படாமலே தவிர்க்கப்பட்டு வருகிறது. இதன் சாத்தியங்கள் மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் மேலும் விரிவாக ஆராயப்படும்.

இரண்டாவது பிரிவானது, கரையோரங்களைத் தாண்டி வந்து உள் நாட்டில் சிங்கள சமூகத்திடமிருந்து பெண் எடுத்த அரேபியர் எனும் ஆரம்பம். இதன் வழியில் வாதிடுபவர்கள் முஸ்லிம்களில் ஒரு பகுதியினருக்கு சிங்கள “குடும்பப் பெயர்களும்” அவர்கள் சிங்கள மொழியை முதன் மொழியாகப் பேசுவதற்கும் இது காரணம் என வாதிடுகிறார்கள்.

இதற்கடுத்ததாக முஸ்லிம்கள் எனும் அடையாளத்துடன் இந்தியாவிலிருந்து வருகை தந்த சமூகத்தின் வளர்ச்சியும் விருத்தியும் எனும் நிலையிலிருந்து தம் பூர்வீகத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் இலங்கை முஸ்லிம்கள்.

இந்த அடிப்படையின் நியாயங்கள் தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் – இலங்கை முஸ்லிம்களுக்குமிடையில் இருக்கும் கலாச்சார, உடை மற்றும் பழக்க வழக்கத்தொடர்புகள் கொண்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இதன் ஆதிக்கம் பெரும்பாலும் கிழக்கிலங்கையிலிருக்க, தமிழர் இராச்சியத் தொடர்புகளின் பெறுபேறுகள் வட இலங்கையிலும் சிங்கள சமூகத் தொடர்புகள் மத்திய இலங்கையிலும் ஆளுமை செலுத்துவதைக் காணலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty Re: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 8:00

ஆயினும், தென்னிலங்கையில் அதுவும் குறிப்பாக பேருவளை, வெலிகம போன்ற பகுதிகளிலும், புத்தளம், கண்டி உட்பட்ட மற்றும் சில மத்திய பிரதேசங்களிலும் இவ்விரண்டு சாராருக்கும் தொடர்பு படாத நிலையிலான வாழ்வியல் முறைகளும் காணப்படுகின்றன.

இதனைக் கருத்திற்கொண்டு தான் இராமநாதன் தன் அறிக்கையில் ஒரு சிறு பகுதி உள்நாட்டு “சோனகர்” இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அதனடிப்படையில் இலங்கையின் முஸ்லிம்களின் பிரிவை பின்வரு வகையில் வரலாற்றாசிரியர்கள் பிரித்துப் பார்க்கிறார்கள்.

1. அரேபிய (சோனக) + தமிழ் கலப்பு

2. அரேபிய (சோனக) + சிங்களக் கலப்பு

3. இந்திய + அரேபிய (சோனக) கலப்பு

4. பூர்வீக சோனகர்கள்.

இங்கே அனைத்துக் கலப்புகளும் அரேபியரை மையமாக வைத்தே உருவாக்கப்படுவதன் அடிப்படையைக் கொண்டு இக்கலப்பின் ஆதி மூலம் “சோனக” அடையாளத்திற்குள் இட்டுச் செல்லப்படுகின்றது.

“சோனகர்” என்பது அரேபியருக்கு தமிழில் வழங்கப்பட்ட பெயராகவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மொழி ரீதியான காரணப்பெயராகவும் அமைந்திருக்கும் சாத்தியமும் முன் சென்ற பதிவுகளில் ஆராயப்பட்டுள்ளது.

இதற்கு ஏதுவாக சிங்கள மொழியிலும் குறிப்பிட்ட சமூகம் “சோன – காரயா ” என அடையாளப்படுத்தப்பட்டிருந்த தகவல்களை முன்னெடுத்து ஆராய்வது உதவும். “காரயா” எனும் பதத்திற்கு முன்பாக சில வேளைகளில் குறிப்பிட்ட நபரின் பெயரையும் இணைத்துப் பேசும் பழக்கம் இன்றைய நிலையிலும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கிறது.

முற் சென்ற தொடரில் விளக்கப்பட்டது போன்று “சோனின்” மொழியைப் பேசிய மக்களே இவ்வாறு “சோன” அல்லது “யோன” சமுதாயமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்புகளும் இல்லையென்று மறுக்க முடியாது. ஏனெனில் கி.மு வரையப்பட்ட தப்ரபேன் வரைபடத்தில் குறிப்பிட்ட பகுதி “சோனாக்கள்” பகுதியாகவும் பிற்காலத்தில் இது சோனக்களுக்கு அன்றைய மன்னன் ஒதுக்கிக் கொடுத்த நிலப்பரப்பும் எனும் அடிப்படை விளக்கம் ஒன்றும் நம்பப்படுகிறது.

அதே போன்று, உலக வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அக்கால கட்டத்தில் பாரசீகர், கம்போயாக்கள், அரேபியர் எனப் பெரும்பாலும் மத்திய கிழக்கு மக்கள் இப்பூமியில் நிரந்தரமாகக் குடியேறிய ஆதாரங்களும் தாராளமாக இருக்கின்றன.

இலக்கியக் குறிப்புகளைப் பொறுத்தவரை வட இந்திய வேத கால இலக்கியங்களே தம் பதிவுகளில் கம்போயாக்கள் (ஹம்பயாக்கள்) பற்றிக் குறிப்பிடுவதிலிருந்தும், பின் வந்த மொழிபெயர்ப்புகள் மிகத் தெளிவாக துருக்கியர், சோனகர்களை (அரேபியர்) ப் பிரித்தறிவதன் மூலத்தையும் வைத்துப் பார்க்கும் போது சோனகர் என அறியப்படும் அரேபிய மக்களின் வருகை காலத்தால் முந்தியது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

அவ்வாறு வந்த ஒரு சமுதாயம் இலங்கையில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளோடு கலந்து கொண்டது மாத்திரமன்றி சில பிரதேசங்களில் தனிக் குடியிருப்புகளையும் உருவாக்கி வாழ்ந்து வந்திருக்கிறது. இதன் அடிப்படையிலேயே கி.மு 326 அளவில் கிரேக்க மாலுமி ஓனோஸ் கிறிட்டோஸால் வரையப்பட்ட இலங்கை வரைபடத்தில் புத்தளம் மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் சோனாள்களின் குடியேற்றம் எனப் பெயரிடப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.

கி.பி 150 காலப்பகுதிக்குரிய தொலமியின் “தப்ரபேன்” வரைபடத்தில் மஹவாலி ஆறு “பாசிஸ் புலுவியஸ்” அதாவது பாரசீகர் வாழும் நதி (பிரதேசம்) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையும் அவதானித்துப் பார்க்கும் போது அக்கால கட்ட சோனகக் குடியிருப்புகளின் குண நலன்கள் அலசி ஆராயப்படும் தேவையம் வருகிறது.

பொதுவாக நதியோரங்களில் குடியேறிய இம்மக்களின் குணவியல்புகள் ஆராயப்படும் போது அவர்கள் வாழ்வாதார முறைகள் கவனத்திற்குரியதாக அமைகிறது.

இஸ்லாத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் போதும் மத்திய கிழக்கிலிருந்து இஸ்லாம் பரவிய போது அதனை ஏற்றுக்கொண்ட பெரும்பாலான ஆபிரிக்க, அரேபிய இனத்தவர்களது குண நலன்கள் இன்றளவும் இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் வர்த்தக குணவியல்புகளுடனும் ஒத்துப்போவதாகவே அமைகிறது.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மனிதர்களிடம் இதே ஒற்றுமை இஸ்லாத்திற்கு முன் காணப்படுவதும், அதே மக்கள் அல்லது அதே குண நலன் கொண்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதையும் எடுத்து நோக்கும் போது இவ்விரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களுக்கிடையில் ஏதோ ஒரு வகை தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படும்.

அதே போன்று ஏக இறைக்கொள்கையிலிருந்து விலகி உருவ வழிபாடுகளையும் மனிதக் கடவுளர்களையும் உருவாக்கிய சமூகத்திலிருந்து ஆன்மீகத் தேடலைக் காணப் புறப்பட்ட தொடர்பினையும் முன் சென்ற தொடர்களில் அலசியிருக்கிறோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty Re: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 8:01

சொனின் மக்கள் தொடர்பான ஆழமான ஆராய்வை மேற்கொள்ளும் போது பல அபூர்வமான தொடர்புகளை எம்மால் நிறுவ முடியும்.

அதில் பிரதானமானதொரு விடயம் தான் வணக்க வழிபாடாக இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை சில வரலாற்றாசிரியர்கள் முற்காலக் குடிகளை இடையர்கள், யக்கர்கள், நாகர்கள் எனவும் பிரித்தறிந்திருக்கிறார்கள்.

இதில் நாகர்கள் எனும் சமூகம் பற்றிய பெருமளவிலான வரலாற்றுச் சான்றுகள் பிற்காலத்தில் இல்லாமல் போனதைக் கருத்திற் கொண்டு இவர்கள் சோனகர்களாக மாறியிருக்கலாம் எனும் கருத்தும் சில முஸ்லிம் ஆய்வாளர்களிடம் திகழ்கிறது. 52

ஆயினும் நாகத்தை (பாம்பு) வழிபட்ட இவர்களின் பழக்க வழக்கம் தொடர்பில் இலங்கையிலிருந்து மேலதிக தகவல்களை ஆதாரபூர்வமாகப் பெறக்கூடிய அளவு அவர்கள் பற்றிய வரலாறு பதியப்படவில்லை. முற்காலத்தில் இவ்வாறு ஒரு சமூகம் வாழ்ந்தது என்பதே பல வரலாற்றாசிரியர்களின் தீர்ப்பாக இருக்கிறதே தவிர அச்சமூகத்தின் நாகத்தினை வணங்கும் பழக்க வழக்கத்தின் மூலம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் ஆராய்வுகள் வரையறுக்கப்பட்டனவாகவே இருந்து வருகிறது.

எனினும், இச்சமூகத்தின் இப்பழக்கவழகத்தின் அடிப்படை கூட “சொனின்” மக்களிடமிருந்து வந்திருக்கக்கூடிய வாய்பினை உலக வரலாற்றோடு ஒப்பிட்டு எம்மால் நிரூபிக்க முடியும். அதன் அடிப்படையில் இலங்கையில் “சொனின்” மக்களின் கலப்பு தொடர்பில் ஆழமாக ஆராய்வது தகும்.

பொதுவாக “சொனின் மக்கள்” என அறியப்படுவோர் மேற்கு ஆபிரிக்காவில் பல இனக்குழுக்களைச் சேர்ந்த Manden குழுமத்திற்குள் அடங்குகிறார்கள். இக்குழுவைச் சேர்ந்த மக்கள் பேசும் பல மொழிகளுள் ஒன்றுதான் சொனின் மொழி, இதை சொனின்கே அல்லது சோனின் மொழி என்றும் அழைப்பார்கள்.

இம்மொழி பேசிய மக்களில் ஒரு பிரிவினருக்கு “மரக்கர்கள்” எனும் பெயரும் உண்டு.

உலக வரலாற்றில் நன்கறியப்பட்ட இம்மக்களின் கலப்பு என்பது பொதுவாக மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. அது தவிரவும் பின்நாளில் “மோரி” மக்கள் என அறியப்பட்ட சந்ததி இவர்களின் கலப்புள்ளது என்பது வரலாறு ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். இந்த மோரி (Mauri) எனும் பெயரே பிற்காலத்தில் ஆங்கிலத்தில் “மூர்ஸ்” (Moors) என மாறிய சொல்லாகும்.

எனவே மூர்ஸ் பற்றிய குறிப்புகளின் போது சொனின் மக்களின் கலப்பும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.இம்மக்களின் மூதாதையர்களின் பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் இலங்கையில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் நாகர்களின் வணக்க வழிபாட்டுடனும் அதே போன்று பின்நாளில் காணப்படும் சைவர்களிடமும் காணப்படும் சாதி வேற்றுமைப் பழக்கவழக்கங்களுடனும் ஒத்துப் போவதையும் கொண்டு இம்மக்களின் இலங்கைத் தீவுடனான தொடர்பினை ஆராய முடியும்.

கானா இராச்சியம் (கி.மு 1500 – கி.பி 300) இன்றைய மேற்குலகம் அடையாளம் காணும் “மூர்ஸ்” மக்களின் அடிப்படை வரலாற்றில் முக்கியம் பெறும் ஒரு பிரதேசமாகும். ஏனெனில் மொரிடேனியாவின் தென் கிழக்குப் பகுதியையும் மேற்கு மாலியையும் இணைத்த பகுதியே பொதுவாக கானா இராச்சியமாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் மொரிடெனிய தொடர்புடையவர்களாகக் காணப்பட்ட அதே வேளை கானா இராச்சியம் பேபர் இனத்தவரோடு (இவர்களே மூர்ஸ் இனத்தின் ஆணி வேர் எனவும் சில மேற்குலக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்) ஏற்பட்ட தொடர்ச்சியான போரை இரு இனத்தின் கலப்புத் திருமணம் மூலம் நிறைவுக்குக் கொண்டு வந்ததாகவும் உலக வரலாறு சான்று பகிர்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty Re: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 8:01

அதன் அடிப்படையில் பின் நாளில் கானா இராச்சிய மக்கள் இரு இனத்தின் கலப்பாகவும் ஒருமித்த குண நலன்களுடனும் காணப்பட்டதற்கான சாத்தியங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை ஆகும்.

அதே போன்று இம்மக்களில் ஒரு பகுதியினர் நாகத்துக்கு வழிபடும் பழக்கத்தைக் கொண்டிருந்தமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏழு தலைகளைக் கொண்ட “பிடா” என்றழைக்கப்படும் கரு நாகத்தினை இவர்களில் ஒரு பிரிவினர் தெய்வமாக நினைத்து வழிபட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இப்பாம்பு கொல்லப்பட்ட போது ஊருக்குக் கெடுதல் வருமெனப் பயந்து இம்மக்கள் வாழ்ந்தது பற்றி கானா இராச்சிய வரலாறுகளில் பதியப்பட்டுள்ளது.

இவர்களின் குணாதிசயங்கள் என்று பார்க்கும் போது இவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படைகள் “சாபியீன்கள்” என அறியப்படும் வர்த்தக சமூகத்தின் குணத்தையும் ஒத்ததாகக் காணப்படுவதும் அதற்கான கலப்பும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கிறது.

அதே போன்று விவசாயத்தில் ஈடுபாடுடையவர்களாகவும் இருக்கும் இவர்கள் கலாச்சார, சம்பிரதாய ரீதியாக பல வழிகளில் இலங்கை முஸ்லிம்களோடு நெருங்கிய தொடர்புகளை (தற்காலத்திலும்) கொண்டிருக்கிறார்கள்.

ஆண் – பெண் குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் முறை, ஆடைக் கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் கூட இவர்களோடு இலங்கை முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்புகள் உண்டு.

“அரிசிக் கஞ்சி” என அழைக்கப்படும் கஞ்சி உணவு தயாரிக்கும் முறையை இரு சமூகமும் பகிர்ந்து கொள்வது ஒரு சாதாரண எடுத்துக்காட்டாகும்.

அது தவிரவும் இரு சாராருக்கும் இடையில் இருக்கும் மிக அன்யோன்யமான ஆன்மீக ஒற்றுமையும் இருக்கிறது. இஸ்லாம் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு அறிமுகமானபோது முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவிய மக்கள் சொனின் மக்களாகவே இருக்கிறார்கள்.

இலங்கையிலும் இஸ்லாம் அறிமுகமான போது இந்த ஆன்மீகத் தேடல் அவர்களை உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வைத்திருந்தமை ஒப்பிட்டு அலசப்பட வேண்டிய விடயமாகும்.

அதே போன்று இச்சமூகம் இலங்கைக்கு வந்திருந்தால், அவர்கள் குடியிருப்புகள் எங்கெங்கு அமைந்திருக்கலாம் எனும் நோக்கில் ஆராயும் போது அவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்ததனால் நதியோரங்களைத் தெரிவு செய்திருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகிறது.

இலங்கையில் நாக வழிபாட்டிற்குப் பெயர் போன இடமாக நைனா தீவு எனும் வட பிரதேசம் இருக்கிறது. இங்கு இன்றளவும் நாகபூசணி அம்மன் எனும் கோயில் காணப்படுவதுடன் அங்கு இன்னும் நாக வழிபாடே நடந்து வருவது கவனிக்கத்தக்க விடயமாகும்.

இந்து மதத்தின் அடிப்படைகள் உருவானதாக அறியப்படும் இந்தியாவில் நாக வழிபாடு மற்ற வழிபாடுகள் அளவுக்குப் பிரபலமானதாக இல்லை. தென்னிந்தியாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினர் நாகத்தைக் குலதெய்வமாகக் கும்பிடுவதோடு நாகர் கோவில் பகுதியில் நாகராஜ கோவில் என பிரத்யேக வழிபாட்டுத்தளம் இருக்கிறது. எனினும் கேரளா, தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் நாகவழிபாடு காணப்படவே செய்கிறது.

இவற்றின் அடிப்படையில் இலங்கை – இந்திய நாக வழிபாடு வரையறுக்கப்பட்டதாகவும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்து மதப் புராணங்களில் சிவபெருமான் நாகத்தைப் படுக்கையாகக் கொண்டிருப்பதாகச் சித்தரிக்கப்படுகின்ற போதும் நாக வழிபாடு பெருமளவில் கடைப்பிடிக்கப்படும் விடயமன்று.

தற்காலத்தில் நயினாதீவு என்று வழங்கப்படும் இத்தீவு நயினார்தீவு, நாகநயினார்தீவு, நாகதீவு, நாகேஸ்வரம், மணிநாகதீவு, நாகதீபம், நாவலத்தீவு, எனப் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. இத்தீவில் காணப்படும் வணக்கமுறைக்கும் நாகர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வல்லமை பெற்ற நாக அரசுகர் காணப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty Re: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 8:01

அரசுகள் அமைக்கப்பட்டிருந்தனவா என்பது தொடர்பில் ஆதாரங்கள் இல்லையாகினும் நாகர்கள் என அறியப்படக்கூடிய நாகத்தை வழி பட்ட மக்கள் வாழ ஆரம்பித்திருக்கக்கூடிய காலமும் பிரதேச வரலாறு தொடர்பான ஐதீகமும் அதே போன்று இங்கு ஆராயப்படும் சொனின் மக்கள் வருகை இலங்கைக்கு வருகை தந்திருக்கக்கூடிய காலமும், கிரிட்டோஸ் வரைந்த இலங்கை வரை படம், அதில் காணப்படும் சோனாக்கள் குடியிருப்பு தொடர்பான விபரம் மற்றும் சொனின் மொழியடையாளம் போன்ற விடயங்களை வைத்துப் பார்க்கும் பொது இங்கு ஒரு வரலாற்றுப் பிணைவு காணப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

காலப்பிறழ்வு அற்ற நிலையில் ஏறத்தாழ நெருங்கிக் காணப்படும் இவ்வரலாறு மூலம் சொனின் மக்கள் இலங்கைத் தீவுக்குள் வருகை தந்ததும் குடியிருப்புகள் அமைத்து வாழ ஆரம்பித்ததும், அதில் ஒரு பகுதியினர் தம் மத்தியில் நிலவிய நாக வழிபாட்டை இத்தீவிற்கும் கொண்டு வந்திருக்கக்கூடிய வாய்ப்புகளும் மிக அதிகமாக இருக்கின்றன.

இதனைக் கொண்டு நோக்கும் போது பண்டைய காலத்தில் விபரிக்கப்பட்ட “சோனா குடியிருப்பு” கள் இந்த சொனின் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களாகவும் இருந்திருக்கலாம், அதில் ஒரு பகுதியினர் தம் வழிபாட்டு முறைகளைக் கொண்டு நாகர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்களாகும்.

இதே போன்று இஸ்லாம் தம் மத்தியில் அறிமுகமாகிய போது அதனை இம்மக்கள் வேக வேகமாக ஏற்றுக்கொண்ட அடிப்படையையும் இலங்கையிலும் இஸ்லாம் வேரூன்றிய விதத்தினையும் ஆராயும் போது சிந்தனை வடிவத்திலும் இரு சாராரும் இணைந்து காணும் விகிதாசாரம் அதிகரிக்கிறது.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து இலங்கை வரை வந்திருக்கக்கூடிய இம்மக்கள் வரும் வழியில் தமது மூதாதையர்களான சாபியீன்களுடன் கலந்து வந்திருக்கலாம் என்பதும் மறுக்க முடியாத விடயமாகும். அதே போன்று இவர்கள் கேரளா ஊடாக இந்தியக் கரையோரங்களில் குடியேறியிருக்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சோனகர் எனும் அடையாளத்தைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியங்கள் இப்பதத்தினைப் பாவிப்பது சமஸ்கிருத மொழிபெயர்ப்பிலிருந்தே என்பதால் அங்கு குறிப்பிட்ட யோனர்களே (அரேபியர்கள்) இங்கு சோனகர்கள் ஆகிறார்கள்.

இந்தச் சோனகர்கள் மூலம் இலங்கையில் கலக்கப்பெற்றவர்கள் பல வகையினராக இருக்கின்றனர். அதில் யெமனியர்களுக்குப் பெரும் பங்கிருப்பதாகவே முடிவெடுக்க முடிகிறது. (அங்கிருந்து வந்த இடையர்களும் கலந்திருக்கக்கூடிய வாய்ப்பு முறைகள் பற்றி முன் சென்ற தொடர்களில் அலசப்பட்டுள்ளது ).

இது தவிரவும் பாரசீக ஆளுமை தென்னிலங்கையில் 15ம் நூற்றாண்டளவிலும் இருந்திருக்கிறது. ஹம்பயாக்கள் அல்லது கம்போயாக்களின் கலப்பும் இன்னொரு புறத்தில் இருந்திருக்கிறது. இவற்றின் அடிப்படைகளை இறுதியில் “இஸ்லாம்” எனும் அடையாளத்தோடு ஒன்றிணைக்கும் நோக்கில் ஆராயும் போது பெரும்பாலும் இவ்வாறு வெளி நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் உள்நாட்டில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் ஆன்மீக அபிலாசைகளோடு ஒத்துப்போனவர்களாகவே இருந்திருக்க வேண்டிய தேவையும், அதுவே இக்கலப்பு அளவில் குறைந்ததாகவும் இருப்பதற்கும் காரணமாக அமைகிறது என எடுத்துக் கொள்ளலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty Re: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 8:02

சிங்கள மக்களிடையே இவ்வாறான கலப்பு பற்றிய விபரங்கள் பெரும்பாலும் இல்லை, ஆனாலும் இன்னொரு பிரிவாக இருந்த பூர்வீகக்குடிகளோடு அக்கலப்பு நிச்சயமாக இடம்பெற்றிருக்கிறது, அவ்வாறு தேர்ந்தெடுத்து கலந்து கொண்ட சமூகங்களுக்கிடையில் பொதுவான எண்ணப்பாடுகளும், இணக்கமும், உள்ளுணர்வும் இருந்திருக்காவிட்டால் இவ்வாறான கலப்புகள் கி.மு 3ம் நூற்றாண்டு முதல் கி.பி 15ம் நூற்றாண்டு வரை கூட ஆதிக்கம் செலுத்தும் காரணிகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

இவற்றைக்கொண்டு ஆராயும் போது இன்றைய முஸ்லிம்களின் வரலாறு, அவர்கள் முஸ்லிம்களாக மாறுவதற்கு முற்காலத்தில் அதுவும் இலங்கையின் வரலாறு பதியப்படக்கூடிய காலத்திலிருந்து தொடர்புபடுத்தக்கூடியது மாத்திரமன்றி ஏற்றுக்கொள்ளவும் வேண்டியதாகும்.

இன்றைய நாட்களில் குழப்பிக்கொள்ளப்படுவது போன்று இலங்கை முஸ்லிம்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரோ அல்லது கி.பி 8ம் நூற்றாண்டுக்குப் பின்னரோ கூட வந்தேறிய குடிகளன்று, மாறாக இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு பகுதியினரே என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் பதிய வேண்டும்.

தொடரும்…

முன்னைய பதிவு : இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (7)

நன்றி sonakar.com


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9) Empty Re: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு – V (9)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum