சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Khan11

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

+2
நண்பன்
ansar hayath
6 posters

Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Mon 18 Mar 2013 - 11:35

மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன்
*********************************************


பரோவா மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

A=நகைகள்
B=தங்கத்திலான கட்டில்
C=நாணயங்கள்
D&E=ஃபிர்அவ்ன்
F=இஸ்ராயீலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர்.
அவர் தண்ணீர் பிடித்துக்கொள்வதற்கு தனித்தனி இடங்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் இந்த கிணறு.

G=யாருமற்ற சினாயில் இஸ்ராயீலர்கள் பயன்படுத்திய மற்றொரு ஊற்றுதான் இது. ஊற்றின் இடத்தில் சமீப காலத்தில் சிறிய இருவழிக்குழாய் பொருத்தபட்டிருக்கிறது.

H&I=வாதிஅர்பையின் என்று அறியப்படும் இந்த பள்ளத்தாக்கில் இந்த கல்லில்தான் மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அடித்தார்கள். அந்த ஊற்றுக்களில் நீர் வடிந்த அடையாளங்கள் இன்றும் உள்ளன.

மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களை தன் சகோதரர் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களையும் அழைத்துக் கொண்டு ஃபிர்அவ்னை சந்திக்க செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்கள் நாங்கள் உலக இரட்சகனான அல்லாஹ்வின் திருத்தூதர்கள் அதனால் அல்லாஹ்வை நீ ஏற்றுக்கொள், இஸ்ராயீலின் சந்ததியினரை எங்களுடன் அனுப்பிவை என்றும் நானே இறைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்.

ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து இஸ்ராயீலர்களை காப்பற்ற மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முடிவு செய்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான இஸ்ராயீலர்களை ரகசியமாக எகிப்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த ஃபிர்அவ்ன் ஒரு பெரும்படையுடன் அவர்களை பிடிக்க புறப்பட்டான். செங்கடலின் வடக்கு எல்லையில் உள்ள சூயஸ் வளைகுடாவின் வடக்கு எல்லைக்கு இரண்டு கூட்டத்தாரும் சென்று சேர்ந்தனர் என்று வரலாறு கூறுகிறது. இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டான்.

“உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. அல்குர்ஆன் 26:63

தண்ணீர் இல்லாமல் வறண்டு போன பாதை கால்வாயின் நடுவில் தோன்றியது. அப்பாதையில் இஸ்ராயீலர்கள் மறுகரையில் உள்ள சினாய் பகுதிக்கு தப்பிச் சென்றனர். ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலின் நடுவில் தோன்றிய பாதையில் நுழைந்து இஸ்ராயீலர்களை பிடிப்பதற்க்கு ஓடிச்சென்றனர். ஆனால் அவர்கள் பாதையின் நடுவே சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையை அல்லாஹ் மீண்டும் கடலாக மாற்றினான். ஃபிர்;அவ்னும் அவனது படையினரும் தண்ணீரில் முழ்கி இறந்தனர். ஃபிர்அவ்னுடைய பிரேதத்தை ஒரு அத்தாட்சியாக்கி நிலைநிறுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:90-92

அல்குர்ஆனில் கூறப்பட்டது உண்மையாகிவிட்டது. 1898ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி ஹாலில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுடல் 202 சென்டிமீட்டர் நீளமுள்ளது. கி.மு. 1235ல் தண்ணீரில் முழ்கடிக்கப்பட்டு இறந்துபோன ஃபிர்அவ்னின் உடல் பல ஆண்டுகளுக்கு மேலாகியும் கெட்டுப்போகமல் அல்லாஹ் கூறியது போல பாதுகாக்கப்பட்டிருப்பது அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதற்க்கு மாபெரும் சான்றாகும்.

இதே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏனைய பரோவா மன்னர்களின் உடல்கள் குடல்கள் எடுக்கப்பட்டு மருந்தால் நனைக்கப்பட்டு, துணிகளால் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகளாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட இரண்டாவது ராம்ஸஸ் என்றழைக்கப்படும் ஃபிர்அவ்னின் உடல் மம்மி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிர்அவ்னின் பிடியில் இருந்து தப்பித்த இஸ்ராயீலர்கள் மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் ஆகியோருடன் சினாயில் தங்கியிருந்த இடத்திற்க்கு பெயர் உயூன் மூஸா என்பதாகும். உயூன் மூஸா என்ற அரபி சொல்லுக்கு மூஸாவின் ஊற்றுக்கள் என்று பெயர்.

தெற்க்கு சினாய்க்கு சென்ற இஸ்ராயீலர்களை அழைத்து மீண்டும் துவா பள்ளத்தாக்கிற்க்கு அருகிலிலுள்ள வாதியராஹ் என்ற இடத்தில் தங்கவைத்தார்கள். அந்த காலத்தில் இஸ்ராயீலர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டபோது அவர்கள் மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களிடம் முறையிட்டனர். அதற்க்குபிறகு நடைபெற்ற நிகழ்ச்சியை குர்ஆன் விவரிக்கிறது.

மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து: “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். 7:160

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 72337_140144319493068_322129767_n

நன்றி: முக நூல்-
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Tue 19 Mar 2013 - 10:59

நீரின் சுழற்சி
************


நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை Bernard Palissy என்பவர் தான் முதன் முறையாக கி.பி 1580ல் விளக்கிச் சொன்னார். சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு கரு மேகங்களாக உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கிச் சொன்னார்.


உருண்டு திரண்ட வெண் மேகங்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்து குளிர்ந்து கெட்டியாகி நிலத்தில் மழைத்துளிகளாய் விழுகின்றன. இவ்வாறு விழுந்த மழைத்துளிகள் ஏரிகளாய், நதிகளாய் மாறி மீண்டும் சமுத்திரத்திற்கே திரும்பிச் செல்கின்றன. இவை தொடர் நிகழ்ச்சியாய் நிகழ்கின்றன.


கி.மு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் (Thales of Miletus) என்பார் கடலின் மேற்பரப்பில் உள்ள நீர்த்திவலைகள் காற்றின் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு நிலம் நோக்கி மழைத்துளியாய் விழுகின்றது என நம்பினார். ஆரம்ப காலத்தில் நிலத்தடி நீரின் நிலை பற்றிய அறிவை மக்கள் அறிந்திருக்கவில்லை.



இந்நீரியல் கோட்பாட்டின்படி நீரானது குளிர்ந்த மலைப் பொதும்புகளில் உறைந்து நிலத்தடி நீர் நிறைந்த ஏரிகளாய் உருவாயின. அந்த ஏரிகளோ நீரூற்று பொங்கிப் பாய உதவின என்று கருதப்பட்டது. ஆனால், பூமியின் பிளவுகளில் கசிந்து உட்புகும் மழை நீரே ஏரிகளும், நீரூற்றுகளும் தோன்றக் காரணமாய் உள்ளது என்பதை நாம் இன்று அறிந்துள்ளோம். நீரின் சுழற்சி குறித்து திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது.

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُّخْتَلِفًا أَلْوَانُهُ




நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. 39:21 سورة الزمر



وَيُنَزِّلُ مِنَ السَّمَاء مَاء فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ



அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.30:24 سورة الروم





وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிடவும் நாம் சக்தியுடையோம். 23:18 سورةالمؤمنون

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாமறிந்த வகையில் எந்த ஒரு மூல நூலும் நீரின் சுழற்சி குறித்து இவ்வளவு துல்லியமாக வர்ணித்திடவில்லை.

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 28164_140498589457641_639491662_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Wed 20 Mar 2013 - 11:13

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் கண்ட அதிசயங்கள்
**********************************************

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.

இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார்.

அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.

நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது.
குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது.

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82) என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை.

உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.

டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை

‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்.

“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல; அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)

என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீரா!” (16:98)

என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர்.

அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம்.

ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 733801_140863349421165_2109801358_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Thu 21 Mar 2013 - 22:04

கருவறையின் மூன்று இருட்திரைகள்
*********************************


கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

திறுமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் கான்போம்.


உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை! அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுவீர்கள்? (அல்குர்ஆன் 39: 6)

டாக்டர் கீத் மூர் அவர்களின் ஆய்வுப்படி திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் இவையே!

தாயின் அடிவயிறு (Abdominal wall)

கருப்பையின் சுவர் (Uterine wall)

குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் (Amniotic membrane)

கருப்பயில் உள்ள சிசுவைப் பற்றிய முதல் படம் கி.பி.15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த Leonardo da vinchi என்ற இத்தாலியரால் வரையப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen என்பவர் தன்னுடைய “கரு உருவாக்குதல்” என்ற நூலிலும் (Placenta), கருவை மூடியிருக்கும் மெல்லிய சவ்வைப்பற்றியும், விளக்கியிருந்தார். “மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது பற்றி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்” என்பதர்கான சாத்தியக்கூறே கிடையாது. (ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் அருளப்பட்டது )

அப்படி இருக்கையில், குர்ஆன் இறங்கி மனிதக் கரு வளர்ச்சிப்பற்றி கூறக் கூடிய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை! இன்னும் சொல்லப்போனால் கி.பி.15 ம் நூற்றாண்டு வரை “மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைகிறது” என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை!

கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!

கி.பி.20ம் நூற்றாண்டில் Streeter(1941) என்பவரும் முதன் முதல் கரு நிலைகளைப் பற்றிய முறையான விளக்கத்தை தந்தனர். அதற்குமுன் எவரும் மனித கரு வளர்ச்சிப்பற்றிய முறையான விளக்கத்தை விளக்க இயலவில்லை! ஆனால் திருக்குர்ஆன் எழாம் நூற்றாண்டிலேயே மிகத் துல்லியமாக இந்த உண்மைகளை விளக்கி, இறை மறை என்பதற்கு சான்றாகத் நிகழ்கின்றது.

இப்போது மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்.” என்ற சொற்றொடரைக் கவனியுங்கள்! வயிற்றுச்சுவர் கருப்பையின் சுவர் கருவின் மீது போர்த்தி இருக்கும் மெல்லிய சவ்வு ஆகிய மூன்று இருள்களுக்குள் மனிதனை வைத்துப் படைத்ததை அல்லாஹ் அழகாக விளக்குகிறான்.

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 482163_141061732734660_1395102972_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by நண்பன் Thu 21 Mar 2013 - 23:19

சிறந்த முயற்சி அன்சார் தொடருங்கள் இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக ஆமீன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by பானுஷபானா Fri 22 Mar 2013 - 11:27

மிகச் சிறப்பான பகிர்வு நன்றி :#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Fri 22 Mar 2013 - 21:01

செவி,பார்வைப் புலன்கள்
**********************


வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனேயாகும். 24வது வாரத்திற்கு பின்னர் கருக்குழந்தை (Foetus) ஒலிகளை கேட்கத் தொடங்குகிறது. இதனைப் பின் தொடர்ந்து பார்வைப்புலனும் 28வது வாரத்த்தில் கண்ணின் விழித்திரை (Retina) வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பெறுகின்றது. கருவில் உருவாகும் இப்புலணர்வை இறைமறை இப்படி எடுத்துறைக்கிறது.



وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்: (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். 32:9 سورة السجدة

إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக; அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அத்தஹர் 76:2

இந்த வசனங்களிலிருந்து பார்வைப் புலனுக்கு முன்பு செவிப்புலனை குறிப்பிடுவதை பார்க்கலாம். எனவே நவீன கருவியல் கண்டுபிடிப்புகள் குர்ஆன் வர்ணனைகள் பொருந்திப் போவதை காணலாம்.

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 246476_141787309328769_1111383019_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Sat 23 Mar 2013 - 19:38

கல்கி அவதாரம் எப்போதோ முடிந்து விட்டது :
இந்திய பிராமணர்
*****************************************

இறைவனின் கடைசி அவதாரம் என்று இந்துக்களால் விசுவாசிக்கப்படுகின்ற கல்கி அவதாரம் எப்போதோ இடம்பெற்று முடிந்து விட்டது, எனவே இனி அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இந்தியில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் இந்தியாவில் வங்காள மாநிலத்தை சேர்ந்த சமஷ்கிருத பண்டிதரான பிராமணர் ஒருவர்.
இவரின் பெயர் பண்டித் வைத் ப்ரகாஷ. புத்தகத்தின் பெயரை தமிழில் இறை தூதின் வழிகாட்டி என்று சொல்லலாம். முஹமது நபிதான் வேதாகமங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற கல்கி அவதாரம் என்று இந்நூலில் எடுத்துக் கூறி உள்ளார்.
வேதாகமங்களை பன்னெடும் காலம் ஆராய்ந்து கல்கி அவதாரம் குறித்து எழுதப்பட்ட இந்நூல் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் உள்ளது. எட்டு கல்விமான்கள் இந்நூலை படித்து இதில் கூறப்பட்டு இருக்கின்ற தகவல்கள் உண்மையானவைதான் என்று ஏற்றுக் கொண்டு உள்ளனர். இவர் இந்நூலில் முக்கியமாக தெரிவித்து இருக்கின்ற விடயங்களை ஏற்கனவே சில இணையத்தளங்களில் வெளிவந்த விதத்தில் எழுத்துக்கள்கூட பிசகில்லாமல் அப்படியே மீளப் பிரசுரிக்கின்றோம்.

01. வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

02. ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் "ஜஸீரத்துல் அரப்" என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

03. ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம். ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது.

04. அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

05. கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

06. கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

07. மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "மிஃராஜ்" இரவில், "புராக்" வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

08. அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

09. மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 24652_142262455947921_1375587006_n

நன்றி : முக நூல்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Sun 24 Mar 2013 - 13:05

நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?)
*********************************************

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிரி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக்கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்''
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலிரி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மிக முக்கியமான ஒரு வழிமுறையை நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

அதாவது நம்முடைய பாத்திரங்களில் நாய் வாய் வைத்து விட்டால்
#அந்த நீரைக் கொட்டி விட வேண்டும்.
#அந்தப் பாத்திரத்தை ஏழு தடவைகள் தண்ணீரால் கழுக வேண்டும்.
#முதல் தடவை கழுவும் போதே அல்லது எட்டாவது தடவை கழுவும் போதோ மண்ணினால் கழுக வேண்டும்.

இது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் வழிமுறை என்பது மட்டுமில்லை. இஸ்லாம் ஒரு மதமல்ல . அது மனிதனுக் கேற்ற மார்க்கம் என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாகத் திகழ்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப் பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள்.
இவ்வாறு ஏன் கட்டளையிட்டார்கள்? நாய் வாய் வைத்தால் என்ன ? மண்ணை வைத்து ஏன் கழுக வேண்டும்? விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதரின் இந்தப் போதனை சரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.
நபியவர்கள் வழிகாட்டுதல் நூறு சதவிகிதம் சரியானதே என்று இன்றைய நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்றது.


நாயின் உமிழ் நீர்
-----------------------
நபி (ஸல்) நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். தண்ணீரில் நாய் வாய் வைத்தால் அதனுடைய எச்சில் தண்ணீரிலே கலக்கின்றது. நாயின் எச்சிலில் மனிதனுக்கு அபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வைரஸிற்கு ரேபிஸ் என்று பெயர்.
நாயின் உமிழ் நீரில் உள்ள இந்த ரேபிஸ் வைரஸ்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை நாம் அருந்துவதின் மூலம் நம்முடைய உடலிற்குள் சென்று விடுகின்றது.
அல்லது நம்முடைய உடலில் காயம் பட்ட இடத்தில் நாயின் உமிழ் நீர் பட்டாலோ, அல்லது நாய் வாய் வைத்த தண்ணீரை வைத்து நம்முடைய உடலை சுத்தம் செய்யும் போது நம்முடைய உடலில் உள்ள காயங்களின் மூலம் இந்த வைரஸ் நம்முடைய உடலிற்குள் செல்கிறது.
இதன் மூலம் ஏற்படும் நோய்க்கு ரேபிஸ் நோய் என்று பெயர்.
இந்த ரேபிஸ் வைரஸ் காயம் பட்ட இடத்தில் படிந்தவுடன் தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அப்படிப்பட்ட காரணிகளாவன.

காயம் பட்ட இடம் • காயம் பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு • வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை • பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

இந்த ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 லி 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி ரேபிஸ் பைரஸ் படிந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பொதுவாக ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர் தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.

ஒரு மனிதனை நாய்கள் கடிக்கும் போதும் இந்த ரேபிஸ் கிருமிகள் உடலிற்குள் செல்வதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்
--------------------------------------------------------------------

. இந்த பயங்கரமான நோய்களிலிருந்து நம்மை பாது காத்துக் கொள்ளக்கூடிய வழிமுறை நம்முடைய வீடுகளில் நாய்களை வளர்க்காமல் இருப்பதும் நாய் வாய் வைத்த எந்த ஒரு பொருளையும் சாப்பிடாமல் இருப்பதும் தான்.. இதோ அன்றே நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்;
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ''வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பி வைத்து, அது (பிராணிகளைக்) கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். (அந்தப் பிராணியை) நாய் சாப்பிட்டுவிட்டிருக்குமானால் அதை நீங்கள் சாப்பிடாதீர்கள். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவே வைத்துக்கொண்டுள்ளது'' என்று கூறினார்கள். நான், ''எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும்போது) அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?)'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், நீ சாப்பிடாதே. ''நீங்கள் உங்கள் நாயைத்தான் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனப்பவில்லை'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் : புகாரி (175)

நாய்களுக்குப் பயிற்சி அளித்து வேட்டையாட அனுப்பினால் அந்த நாய் வேட்டையாடப் பட்ட பிராணியை தன்னுடைய பற்கள் நன்றாகப் பதியுமாறு கடிக்காது. இதன் காரணமாக நாயின் உமிழ் நீரிலுள்ள நோய் கிருமிகள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிற்குள் செல்வதற்கு சாத்தியமில்லை.
அதே நேரத்தில் அந்த நாய் வேட்டையாடப்பட்ட பிராணியை சாப்பிட்டிருந்தால் அதை நாம் சாப்பிடக்கூடாது என நபியவர்கள் தடை விதிக்கிறார்கள்.
மேலும் பயிற்சி அளித்த நாயுடன் வேறொரு நாய் இருந்து எது வேட்டையாடியது என்ற சந்தேகம் ஏற்பட்டால் கூட நபியவர்கள் அதனை சாப்பிடக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள்.
பிஸ்மில்லாஹ் கூறவில்லை என்ற காரணத்தை நபியவர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் அதில் மேலும் பல நன்மைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
மனித குலத்தின் நன்மைக்காக நபியவர்கள் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி) நூல் : புகாரி (3225)

பாது காப்பிற்காவும் , வேட்டைக்காகவுமே தவிர நாய்களை விற்பதையும் , வாங்குவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூரியை)யும் தடைசெய்தார்கள்; வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபீ ஜுஹைஃபா (ரலி) நூல் : புகாரி (2086)

பாத்திரங்களை மண்ணால் ஏன் சுத்தம் செய்ய வேண்டும்.?
----------------------------------------------------------------

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7 தடவைகள் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்யுமாறு கூறிவிட்டு ஒரு தடவை மண்ணாலும் கழுக வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நபியவர்களின் இந்த வழிமுறையும் மிகவும் அறிவுப் பூர்வமானது. மனிதனுக்கு நன்மை தரக்கூடியது என்பதை இன்றை நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது.

நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும் நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.

பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பல முறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.

கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்து விடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்த கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.

நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து விஞ்ஞானம் கூறக்கூடிய ஒரு செய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும் விஷயங்களையெல்லாம் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் நிச்சயமாக இந்த வார்த்தைகள் முஹம்மத் அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல.
உண்மையான ஏக இறைவனிடமிருந்து பெற்று அறிவித்த வார்த்தைகள் தான். உண்மையில் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம்.
திருக்குர்ஆன், மற்றும் திருநபி வழி நடப்பதில்தான் உண்மையான வெற்றியிருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோமாக.

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 576983_142380685936098_1971763899_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by *சம்ஸ் Sun 24 Mar 2013 - 21:33

அருமையான ஹதீஸ் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 21:40

பலருக்கும் பயன்படக்கூடிய நல்ல பதிவு தொடருங்கள் அன்சார் ஹயாத்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Tue 26 Mar 2013 - 11:26

சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்
*******************************************

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. 24:40

கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.

இந்த இறை வசனம் எல்லா கடல்களையும் குறிக்காது. காரணம் எல்லா கடல்களும் அடுக்கடுக்காய் மையிருள் திரைகள் படிந்துள்ளன என்று கூற முடியாது. “ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்” என்ற திர்க்குர்ஆன் கூற்றுப்படி அது ஆழ்கடலையே குறிக்கும். ஆழ் கடலில் இருள்திரைகள் அடுக்கடுக்காய் படிந்து கிடக்க இரண்டு முக்கிய காரணங்கள் அடிப்படையாகும்.

ஓர் ஒழிக்கதிர் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. இவை ஊதா(Violet), ஆழ்ந்த நீலம்(Indigo), நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறம், சிகப்பு ஆகியன. இந்த சூரிய ஒளிக்கதிர் நீரை கடக்கும்போது ஒளிச்சிதைவு (Refraction of Light) ஏற்படுகின்றது. 10 முதல் 15 மீட்டர் மேலளவு கொண்ட நீர் சிகப்பு நிறத்தை உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கின்றது. எனவே நீரில் மூழ்கும் ஒருவர் அந்நீருக்கு கீழ் 25 மீட்டர் ஆழத்தில் சென்றவர் அடிபட்டு இரத்தம் கசிந்தால் இரத்ததின் சிகப்பு நிறத்தை கண்ணால் பார்க்க முடியாது. காரணம் இந்த ஆழத்திற்கு சிகப்பு நிறம் ஊடுருவிச் செல்வதில்லை.

அவ்வாறு ஆரஞ்சு நிறம் 30 முதல் 50 மீட்டர் வரையும், மஞ்சல் நிறம் 50 முதல் 100 வரையும், பச்சை நிறம் 100 முதல் 200 வரையும், நீல நிறம் 200 மீட்டருக்கு அப்பால் வரையும் ஊதாவும், கருநீலமும் 200 மீட்டருக்கு அப்பாலும் ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு பல்வேறு வர்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக கருமை அடைந்துக்கொண்டே செல்லும். கடலில் 1000 மீட்டருக்கு கீழ் உள்ள ஆழத்தில் முழுமையான இருள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

ஒளிக்கதிர்கள் கடலின் மேற்பரப்பை சென்றடைகின்றபோது அது கடலலையின் மேற்பரப்பால் பிரதிபலிக்கப்பட்டு அதற்கு ஓர் ஒளிப்பிரகாசமான தோற்றத்தை வழங்கிவிடுகின்றது. ஒளியை பிரதிபலித்து இருளை ஏற்படுத்துவது கடலலைகளே! பிரதிபலிக்கப்படாத ஒளியோ கடல் ஆழங்களுக்குள் ஊடுருவிச் சென்று விடுகின்றது. ஆகவே கடலானது இரண்டு பகுதிகளை கொண்டதாக மாறி விடுகின்றது.

கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் ஆழமான அடிநீரை கடலின் உள்ளே உள்ள அலைகள் மூடிக்கொள்கின்றன. இதற்கு காரணம் கடல் ஆழத்தின் நீர் அதன் மேற்பரப்பில் உள்ள நீரை விட அதிகமான அடர்த்தித் தன்மைக் கொண்டதாக இருப்பதே! கடலின் உள்ளே உள்ள அலைகளுக்கு கீழ்தான் இருள் கவியத் தொடங்கும். அப்பொழுது அந்த ஆழத்தில் வசிக்கும் மீன் இனங்கள் கூட பார்வையை இழந்துவிடக் கூடும். அம்மீனனங்களின் உடலிலிருந்து வெளிப்படும் சொந்த ஒளி மட்டுமே அவற்றுக்கு வழிகாட்டும். இதனை மிகச் சரியாக திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது;

ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை….

வேறு வார்த்தைகளால் சொன்னால் இந்த அலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகமான அலை வடிவங்கள் உள்ளன. அதாவது இவை அனைத்தும் கடலின் மேற்பரப்பில் காணப்படுபவை.

இறை வசனம் மேலும் கூறுகின்றது;

அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன.

விளக்கிக் கூறப்பட்ட இம்மேகங்கள் யாவும் ஒன்று மற்றொன்றின் மேல் தடுப்பு சுவர்களாய் அமைந்து கடலின் பல்வேறு அலை மட்டங்களில் நிறங்களை உள்வாங்கி கருமையை தோற்றுவிக்கின்றன.

பேராசிரியர் துர்க்கா ராவ் இறுதியாக இவ்வாறு கூறினார்.

“1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடலலையின் நிகழ்வை குறித்து ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு தெளிவாக கூறி இருக்க முடியாது. எனவே இயற்கைக் கடந்த தெய்வீக ஊற்றிலிருந்தே இந்தச் செய்தித் தகவல்கள் வந்திருக்க முடியும்.”

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 308711_142882015885965_1687763196_n

நன்றி : முக நூல் -
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by *சம்ஸ் Tue 26 Mar 2013 - 18:32

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 480050_143120115862155_1377842412_n
வரலாறு புகட்டும் பாடம்
**********************

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.

உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.

உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.

ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.

யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.

அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.

நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.

நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.

என்ன அது?

நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.

அவன் கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.

இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.

“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?

“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.

ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.

இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.

வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.

சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.

சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.

இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.

எவ்வாறு ?

சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.

குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.

எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.

தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.

இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.

எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.

சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?

“நிச்சயமாக இல்லை”

நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?

அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.

“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !

கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.

கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.

சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.

இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.

வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.

உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.

இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்……


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Wed 27 Mar 2013 - 17:18

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
***********************************

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல் குர்ஆன் வழியில் அறிவியல்……….

அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான்.

பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா? அல்லது செவிடராக இருப்பதா? என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொன்னால், அனைவரும் பார்வையுடையவராக இருக்கவே விரும்புவர். குருட்டுத்தன்மையை எவரும் விரும்பார். செவிடனானலும் பரவாயில்லை என்றே கூறுவார்கள்.

அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த மாதம் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் என்ன கூறுகிறார் என்றால் மனிதனின் பார்வை புலனை விட செவிப்புலனே மிக மிக முக்கியமானது. அதன் செயல்பாடுகள் பார்வைத் திறனை விட பல மடங்கு சிறப்பிற்குரியது என்று அறிவியல் ரீதியாக ஏராளமான சான்றுகளை காட்டி நிரூபிக்கிறார். பார்வையை விட செவி ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியம் என்று ஆய்வு செய்து கூறுகிறார். எந்தளவு என்றால், தான் செவிடனாக இருப்பதை விட குருடனாக இருப்பதையே விரும்புவதாக கூறுகிறார்.

இந்த அறிவியல் செய்தி உண்மைதானா என்று, அன்று இறங்கிய அல்குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்யும் பொழுது, உண்மை நம்மை ஆச்சரியமூட்டுகிறது. ஆம்! அல்லாஹ் பார்வையை காட்டிலும் செவிக்கு முதன்மை ஸ்தானம் கொடுத்துள்ளான் என்று அறியலாம்.

அல்குர்ஆனில் குறைந்தது 20 இடங்களுக்கு மேல் செவியையும் பார்வையையும் குறித்து கூறுகிறான். நமது அறிவின்படி பார்வையைத்தான் அல்லாஹ் முதலில் சொல்லுவான் என்று நினைப்போம். படைத்த ரப்புல் ஆலமீன் முதலில் செவிக்கு முதல் இடம் கொடுக்கின்றான்.

இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப்புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான். – அல்குர்ஆன்.2:20

அல்லாஹ் உங்கள் கேள்விப்புலனையும், பார்வைகளையும் எடுத்துவிட்டு உங்கள் உள்ளங்களில் முத்திரை வைத்து விட்டால்….. -அல்குர்ஆன். 6:46.

உங்கள் செவிக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்? – – அல்குர்ஆன்.10:31

உங்களுக்கு செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவன் அவன்தான். –16:78

நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே மறுமையில் கேள்வி கேட்கப்படும். -அல்குர்ஆன் .17:36.

அவன் தான் உங்களுக்கு செவி, பார்வை, உள்ளம் ஆகியவைகளை கொடுத்தான். -23:78

தன்னுடைய ரூஹை அதில் புகுத்தி, உங்களுக்கு காதுகள், கண்கள், உள்ளம் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். –அல்குர்ஆன்.32:9

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும், அவைகள் செய்தவைகள் பற்றி சாட்சி கூறும். -அல்குர்ஆன்.41:20,22

(இந்த குர்ஆன்) எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்க கூடியதாகவும் இருக்கிறது. –அல்குர்ஆன்.41:44

(அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனை தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனது பார்வையின் மீதும் திரையை அமைத்து விட்டான். -அல்குர்ஆன். 45:23

நீங்கள் செவிடனை கேட்கும்படி செய்துவிடுவீர்களா? அல்லது குருடனை நேரான வழியில் செலுத்தி விடுவீர்களா? -அல்குர்ஆன். 43:40.

நாம் அவர்களுக்கு செவியையும் கண்களையும் கொடுத்தோம், சிந்திக்கக் கூடிய உள்ளத்தையும் கொடுத்தோம். -அல்குர்ஆன்.46:26.

பூமியில் விஷமம் செய்து இரத்த பந்தத்தை துண்டித்துவிடப் பார்க்கிறீர்களா? இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து அவர்களை செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையை போக்கி குருடர்களாக்கி விட்டான். -அல்குர்ஆன். 47:23

( நபியே) நீங்கள் கூறுங்கள் அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்கு செவியையும், கண்களையும் கொடுத்தவன். –அல் குர்ஆன்.67:23

ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம் தான் மனிதனைப் படைத்தோம். அவனை சோதிப்பதற்காகவே செவியுடைவர்களாகவும், பார்வையுடையவர்களாகவும் ….-அல் குர்ஆன்.76:2

ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்கு
செவியையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவன் அவனே தான். -அல் குர்ஆன் .16:78

இதுபோல் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் காதுக்கு முதல் இடம் கொடுத்துவிட்டு இரண்டாவதாகத்தான் கண்களைப்பற்றிக் கூறுகிறான். ஐம்புலன்களையும் படைத்தளித்த அல்லாஹ்விற்கே அதன் சிறப்பும் முக்கியத்துவமும் முழுமையாகத்தெரியும்.

நமது பார்வையில் கண்ணின் தேவை முதலிடத்தில் இருந்தாலும் அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளன் அல்லாஹ் காதுக்கே முன்னுரிமை கொடுக்கின்றான்.இதைவிடப்பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா? படைத்த மனிதனின் புலன்களில் செவிக்கு முக்கியத்துவம் கொடுத்த அல்லாஹ், தன்னைப்பற்றிக் கூறும்போதும் செவியையே முன் நிறுத்துவது சிந்திக்கத்தக்கது. செவியின் உயர் அந்தஸ்தை அறிந்து கொள்ள இதுவே போதுமானது.

குர்ஆனில் 48 வசனங்களில் 49 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், அறிபவனுமாயிருக்கிறான்.” என்று கூறுகிறான். அதில் 8 இடங்களில் “அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.” என்று கூறுகின்றான். எல்லா வசனங்களிலும் அல்லாஹ் தன்னை செவியுறுவோன் என்று செவிக்கு முதல் இடம் கொடுத்துள்ளான். அதன் உண்மைக்காரணம் நம் அற்ப அறிவுக்கு எட்டாத ஒன்று. அல்லாஹ் கூறுவதை அப்படியே சொல்வதுதான் நமது கடமை.

அதேசமயம், இவ்வுலகில் நற்செய்தியை செவியுராமல் குர் ஆன் வசனங்களை காதில் வாங்காமல் செவிடர்கள் போல் வாழ்ந்து நரகம் செல்லும் நிராகரிப்பவர்களை குறிப்பிடும்போது கண்ணுக்கே முதலிடம் கொடுத்து, செவியை இரண்டாவதாக குறிப்பிடுகிறான். காரணம் அவர்கள் குர்ஆன் வசனத்தை காதில் வாங்க மறுத்து கண்ணில் காணும் பொய் தெய்வங்களை பார்த்து ஏமாந்ததால், அவர்களைப் பார்த்து,

“அவர்களுக்கு கண்களுமுண்டு, எனினும் அவற்றைக்கொண்டு (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை)பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு, எனினும் இவற்றைக்கொண்டு நல்லுபதேசங்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். இவர்கள் மிருகங்களைப்போல அல்லது அவற்றை விட வழி கேட்டவர்கள்.” –அல் குர் ஆன்.7:179,25:44.

இதுபோல் உயிர் இல்லா போலித்தெய்வங்களை குறிப்பிடும்பொழுதும் கண்களை முதலிலும்,செவியை இரண்டாவதாகவும் குறிப்பிடுகிறான்.

“இனைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும் (சிலைகளுக்கு) கண்கள் இருக்கின்றனவா அவைகளைக்கொண்டு பார்க்கின்றனவா? அவைகளுக்கு காதுகள் இருக்கின்றனவா? அவைகளைக்கொண்டு கேட்கின்றனவா?” –அல்குர்ஆன். 7:195.

இப்ராஹீம்(அலை)அவர்கள், “ என் தந்தையே! யாதொன்றையும் பார்க்கவும்,கேட்கவும் யாதொரு தீங்கை தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை ஏன் வணங்குகிறீர்கள்? “—அல்குர்ஆன்.19:42.

அடுத்து இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட முதல் கேள்வி,

“ அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா? “—அல்குர்ஆன்.26:72.

பொதுவாக கண் பார்த்தல் என்பது காட்சிகளை பதிவு செய்து மூளைக்கு அனுப்பிவைப்பதோடு முடிந்துவிடும் ஒருவழி தொடர்புதான். ஆனால் செவியானது பேசுபவரின் ஒலியை வாங்கி மூளைக்கு அனுப்பி, அக்கேள்விக்குரிய பதிலை நாவின் மூலம் சொல்ல வைக்கும் இருவழி தொடர்பாக உள்ளது.மக்களிடையே பல மொழிகளை படைத்து (அல் குர்ஆன்.30:22) செவியால் கேட்டு உள்ளத்தால் சிந்தித்து நாவால் பேசும் பெரும் பாக்கியத்தை மனிதர்களுக்கு மட்டுமே அல்லாஹ் கொடுத்துள்ளான்.

செவிக்கு அல்லாஹ் கொடுத்த மற்றொரு சிறப்பு.!

இவ்வுலகில் உள்ள மனு,ஜின், எவருமே அல்லாஹ்வை நேரில் பார்க்க முடியாது. அந்த ஆற்றல் நமது கண்களுக்கு கிடையாது. “பார்வைகள் அவனை அடைய முடியாது..” -அல் குர்ஆன். 6:103. என்றே அல்லாஹ் கூறுகிறான். நபிமார்களுக்குக்கூட அல்லாஹ்வை கண்ணால் காணும் பேறு கிட்டவில்லை. மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை பார்க்க விரும்பியபோது “ அம் மலையைப் பார் அது அவ்விடத்தில் இருந்தால் என்னை காணலாம் என்றான். ஆனால் மலை சுக்குநூறாக நொறுங்கி விட்டது. அல்குர்ஆன். 7:143

அதேசமயம் அல்லாஹ்வின் பேச்சை கேட்கும் பாக்கியத்தை மூஸா(அலை) அவர்களின் செவிக்கு கொடுத்தான். “கலீமுல்லாஹ்” என்று அவரை சிறப்பித்து கூறுகிறான். எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ்வின் வஹி இறங்கியதே செவி வழியாகத்தான், அதை உள்ளத்தில் ஏற்றி ஈமானை அதிகப்படித்தி உயர்ந்தார்கள். கண்ணால் கண்டால்தான் விசுவாசிப்பேன் என்று கூறியவர்கள்,அற்புதங்களை கண்டபின்னும் நம்பாமல் காபிர்களாக நரகம் போனார்கள்.

“ நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம் “ -அல்குர்ஆன்.2:55

“அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டுவந்தாலன்றி நம்பிக்கை….”…-அல்குர்ஆன்.17:92

இன்று உலகில் பெருவாரியான இணைவைப்பவர்கள்,இந்து,கிறிஸ்துவ புத்த, ஜைன மதங்களில் உள்ள சிலைகளையும் சிலுவைகளையும் கண்ணால் கண்டு வணங்கி வழிபட்டு வழிகெட்டார்கள். இன்றும் புதியதாய் மதம் மாறிய கிறிஸ்துவர்களை காரணம் கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் இதுதான். “ இயேசு எனக்கு தரிசனம் தந்தார். “ சாட்சி அளித்தார் “ ஷைத்தானின் காட்சிக்கு சாட்சியாளர்களாக மாறியதற்கு கண்ணால் கண்டதே காரணம். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்,

“(நபியே!) நீங்கள் நம்முடைய அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள், அவர்கள் எத்தகையவர்கள் என்றால் பேச்சை செவியுற்று அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றவர்கள். இத்தகையவர்களையே அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் உண்மையில் அறிவுடையவர்கள் ஆவார்கள்.” –அல்குர்ஆன். 39:18.

இந்த நல்லடியார்களைப்பற்றி அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள்,

“நபிலான வணக்கங்கள் செய்வதன் மூலம் என்னிடம் நெருங்குவதில் என் அடியான் தொடர்ந்திருப்பான். இதனால் அவனை நான் பிரியம் கொள்வேன். அவனை நான் பிரியம் கொண்டு விட்டால், அவன் கேட்கும் அவனது செவியாகவும்,அவன் பார்க்கும் பார்வையாகவும்,அவன் பிடிக்கும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆவேன்.” -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). – புகாரி.

இந்த ஹதீஸ் குத்ஸியிலும் அல்லாஹ் செவிப்புலனிற்க்கே முன்னுரிமை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.நபி(ஸல்) அவர்களின் துவாவிலும் செவிச்சிறப்பை காணலாம்.

“யா அல்லாஹ்! என்னை கடன் தொல்லை மற்றும் வறுமையிலிருந்தும் நீக்குவாயாக! எனது கேட்கும் திறனையும்,பார்க்கும் திறனையும் உன் வழியில் அதிகப்படுத்துவாயாக!”
அறிவிப்பவர்: யஹ்யா இபின் ஸாத் (ரலி) – மு அத்தா.

செவிப்புலன் ஏன் சிறப்பு பெறுகிறது, என்று ஆய்வு செய்தால் ஓர் உண்மை விளங்கும். பொதுவாக கண்களால் பார்க்கும் சக்தியை அல்லாஹ் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுத்துள்ளான். ஆனால் செவி ஒன்றுதான் ஐந்தறிவு என்ற மிருக நிலையில் உள்ளவனை செவியால் மொழிகளைக்கேட்டு உள்ளத்துள் அனுப்பி நன்மை தீமைகளை பிரித்தறிந்து சுவனம் செல்லும் நேர்வழிக்கு துணையாக உள்ளது.

அறிவியல் ரீதியாகவே செவிப்புலனிற்கு பார்வையை விட அதி முக்கியத்துவம் உள்ளதை அறியலாம்.

அல்லாஹ் மனிதனை (காய்ந்தால் “கன்” “கன்”) என்று சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கிறான். செவித்திறனுக்கு ஆதாரமான ஒலி அலைகளை எழுப்பும் (சப்தமிடும்) களிமண் நிலையிலேயே மனிதனை அல்லாஹ் படைத்திருக்கிறான்.

கரு வளர்ச்சி நிலையில் கர்ப்பத்தில் 13 வது வாரத்தில் செவி உருவாக ஆரம்பித்து 20 வது வாரத்தில் முழு வளர்ச்சி பெற்றுவிடுகிறது. கர்ப்பத்திலேயே கேட்கும் திறனை அடைந்துவிடுகிறது. தாயின் இதயத்துடிப்பு, இரத்த ஓட்டத்தின் ஒலிகளை சிசு கேட்கிறது. வெளி உலகில் தாய் பேசும் குரலையும் இசையையும் கர்ப்பத்திலுள்ள சிசு கேட்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

அதேசமயம் பார்வைப்புலனான கண்கள் சிசு வளர்ச்சியின் 26 வது வாரத்திலேயே உருவாக ஆரம்பிக்கிறது.

இன்றைய நவீன அறிவியல் உண்மைகளை ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்குமுன்பே அல்லாஹ் கூறிவிட்டான்.நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,

“கர்ப்பத்தில் இந்திரியம் சேர்ந்த நாற்பதாம் நாளுக்கு பிறகு, அல்லாஹ் மலக்கை அனுப்பி உருவத்தை கொடுக்கின்றான். பிறகு செவிப்புலனையும், பார்க்கும் புலனையும், தோல்,சதை, எலும்பையும் வளரச்செயகிறான். “ அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்ன் மஸ்வூத்(ரலி) –நூல்: முஸ்லிம்.

ஆக கண்ணுக்கு முன் உருவாகும் உறுப்பு செவிப்புலனே!

ஒளியின் வேகம்,ஒலியின் வேகத்தைவிட பலமடங்கு அதிகம். ஆனாலும் நமது செவியானது பார்வை ஒளி அலைகளை விட அதிகளவில் சுமார் மூன்று லட்சம் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்புகிறது.மூளையானது பார்வை ஒளி அலைகளைவிட ஓசை ஒலி அலைகளை ஆயிரக்கணக்கான மடங்கு அதி வேகத்தில் இனம் பிரித்து அடையாளம் காட்டுகிறது.

அல்லாஹ்வின் தூதர் அன்று கூறிய உண்மைகளை இன்றைய அறிவியல் உலகம் மெய்ப்பித்து வருகிறது. ஆக செவிபுலனே பார்வையைவிட எதிலும் முன் நிற்கிறது. மேலும் குழந்தை மண்ணில் பிறந்தவுடன் செயல்படும் முதல் உறுப்பு செவிதான். ஆம்! வெளி உலக சூழலை கேட்டு அதன் தாக்கத்தினால் குழந்தை கத்துகிறது. ஷைத்தான் கிள்ளி விடுவதாக நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள். குழந்தை கண்கள் திறந்து வெளி உலகைப்பார்ப்பது பின்புதான் கர்ப்பத்திலே செயல்பட்ட செவியானது குழந்தை பிறந்த பின்னர் இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்ந்து செயல் படுகிறது. தூங்கினாலும் காது விழிப்பாகவே இருக்கிறது. இரைச்சல் இருக்கும் இடத்தில் தூக்கம் வருவதில்லை. அலாரம் அடித்ததும் காது நம்மை விழிக்க வைக்கிறது. தூக்கத்திற்கும் செவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

ஆனால் கண்கள் தொடர்ந்து செயல்படுவதில்லை. நாம் கண்ணை மூடி தூங்கிவிட்டால் அது செயல்படாது. சிலர் தூங்கும்போது கண்திறந்த நிலையில் இருந்தாலும் காட்சிகள் காணமாட்டா. மேலும் பார்ப்பதற்கு ஒளி வேண்டும் விழித்திருந்தாலும் இருட்டில் கண்ணால் காண முடியாது. குகைவாசிகளைப்பற்றி அல்லாஹ் கூறும்போது அவர்கள் முன்னூறு வருடங்களுக்குமேல் உறங்கியதாகவும்,.அப்படி உறங்குவதற்கு காது மடலை தட்டிக்கொடுத்ததாகவும் கூறுகின்றான். அதே சமயம் அவர்கள் கண் திறந்தநிலையில் உள்ளது. ஆனால் பார்வை செயல்படவில்லை.விழித்திருக்கும் செவியை மட்டும் தட்டிக்கொடுத்து அல்லாஹ் அமைதிப்படுத்துகின்றான். தூக்கத்தில் விழித்து அழும் குழந்தைகளை தாய்மார்கள் தட்டிக்கொடுத்து உறங்கவைப்பதை அனைவரும் அறிவோம்.

.”அக்குகையில் பலவருடங்கள் (நித்திரை) செய்யும்படி அவர்களுடைய காதுகளை தட்டிக்கொடுத்தோம்.”-அல்குர்ஆன்.18:11.

(அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்துகொண்டிருந்தபோதிலும் அவர்கள் விழித்துக்கொண்டிருப்பதாகவே நீங்கள் எண்ணுவீர்கள்.” -அல்குர்ஆன்.18:18.

பிறந்த குழந்தை கண் விழித்து உலகத்தைப்பார்ப்பது அதிசயமோ அற்புதமோ அல்ல.ஆனால் பிறந்த குழந்தை, பேசுகிறவர்கள் பேச்சை செவியில் கேட்டு அதற்க்கு பதில் சொல்வதுதான் அற்புதம்.

மரியம் (அலை) அவர்கள் குழந்தையைப் பெற்று சுமந்து வந்தபோது மக்கள் அவரை நிந்தித்தனர்.அவர் குழந்தையிடம் பேசும்படி ஜாடை செய்தார். அதற்கவர்கள்.

“மடியிருக்ககூடிய குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்.” என்று கூறினார்கள். (இதனை செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை அவன் எனக்கு வேதத்தைக்கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்…….” -அல்குர்ஆன்.19:30.

ஈசா(அலை) அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே அவர்கள் செவியையும் பேச்சையும் அல்லாஹ் அற்புதமாக்கிவிட்டான்.

மண்ணறையிலும் செயல்படும் செவிப்புலன்கள்

மனிதன் இறந்து அவன் உயிர் உடலைவிட்டு பிரிந்து மேலே செல்லும் காட்சியை கடைசியாக பார்க்கும் உறுப்பு கண்கள்தான். ஆகவேதான் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினர். –அறிவிப்பவர்: உம்மு சலமா(ரலி). நூல்:முஸ்லிம்.

ஆனாலும்,ஜனாஸாவை தோளில் வைத்து தூக்கி செல்லும்போது, “அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள், என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத்தவிர அனைத்தும் செவியுறும்.மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்:அபு சயீத் அல்குத்ரீ (ரலி) -புகாரி.

நபி(ஸல்) அவர்கள் கூறினர், “ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யத் செவியுறும்….அவன் நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால், இரும்பாலான சுத்தியால் இரண்டு காதுகளுக்குமிடையே ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்கள் தவிர மற்ற அனைத்தும் செவியேற்கும் அளவிற்கு அவன் கத்துவான்.” அறிவிப்பவர்: அனஸ் (ரலி) -புகாரி.

இறந்த உடல் தூக்கி செல்லும்போதும் அவன் பேசுகிறான். உடலை குழியில் வைத்து மண்ணைப்போட்டு மூடிய பிறகும் நடந்து செல்லும் காலடி ஓசையை அவன் செவி கேட்கிறது. அந்த கப்ரில் நடக்கும் வேதனை ஓலங்களை வெளியில் உள்ள மிருகங்கள் செவியுருகின்றன.

“பர்ஸாக்” என்னும் மறைவான நிலையிலும் செவிப்புலனானது மண்ணுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்பு சாதனமாக உள்ளது. இறந்த உடல் பேசுவதை கேட்கும் சக்தியை மனிதனை தவிர்த்த ஜீவராசிகளுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்.

மண்ணில் நடமாடும் மலக்குகளையும், ஜின் ஷைத்தான்களையும் பார்க்கக்கூடிய ஆற்றல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் அல்லாஹ் கொடுத்துள்ளான்.

“சேவல் கூவுவதை கேட்டால் அது மலக்கை பார்த்துவிட்டது, கழுதை கத்துவதை கேட்டால் அது ஜின்னை பார்த்துவிட்டது”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அபூ ஹுரைரா(ரலி௦). நூல்: புகாரி.

இருப்பினும் மண்ணுக்கு மேல் நடப்பவைகளையே ஜீவராசிகளின் கண்கள் பார்க்கின்றன. ஆனால் மண்ணுக்கு கீழே நடக்கும் சப்தங்களை அறியும் ஆற்றலை செவிப்புலனிற்கே அல்லாஹ் கொடுத்துள்ளான்.

20 HZ ஹெர்ட்ஸ் க்கு குறைந்த ஒலியலைகளை (Infrasonic) இன்ப்ரா சோனிக் என்றும் 20,000 ஹெர்ட்ஸ் க்கு மேல் உள்ள அதிர்வெண் ஒலியலைகளை (Ultrasonic) அல்ட்ரா சோனிக் என்றும் அழைக்கிறார்கள். மனிதர்களுக்கு கேட்கக்கூடிய ஒலி அளவு 20 Hz – 20,000 Hz .Frequency. இதற்க்கு மேலோ அல்லது கீழோ நம்மால் செவியேற்க்க முடியாது. சில மிருகங்கள் குறைந்த அதிர்வெண் ஒலிகளையும் செவியுற முடியும்.

உதாரணமாக யானைகள் மிகக்குறைந்த அதிர்வெண் ஒலியலைகளை 5 Hz—12,000 Hz கேட்கமுடியும். புறாவால் மிக மிக குறைந்த 1 Hz ஒலியலைகளையும் கேட்க முடியும். நாய் 50—45,000 Hz, பூனை 45—65,000 Hz அதிர்வெண் ஒலியலைகளை கேட்க முடியும்.

நிலநடுக்கம்,சுனாமி போன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு பூமிக்கு கீழ் உள்ள தட்டு நகரும் (Tectonic plate movement) மெல்லிய அதிர்வு (5 Hz—20Hz) அலைகளை மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. நவீன கருவிகளாலும் முன் அறிவிக்க முடியாது. பூகம்பம் நடந்த பின்னர் தான் அதன் தாக்கத்தை ரிக்டர் கருவி மூலம் அறியமுடியும்.

ஆனால் மற்ற ஜீவராசிகளுக்கு, பூமிக்கு கீழ் ஏற்படும் மாற்றங்களை முன்னரே உணரக்கூடிய செவியுணர்வை அல்லாஹ் கொடுத்துள்ளான். கடந்த சுனாமியின் போது ஏராளமான மக்கள் ஆபத்து வருவதை அறியாது இறந்தனர். இலங்கை, அந்தமான், இந்தோனேசிய கடலோர காடுகளில் வசிக்கும் மிருகங்கள், பறவைகள் ஒன்று கூட இறக்கவில்லை. காரணம் சுனாமி வருவதை அறிந்து அவை அனைத்தும் மேட்டுப்பாங்கான இடங்களுக்கு ஓடி விட்டன.

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிளெல்லாம் மிக கெட்ட மிருகங்கள் நிராகரிப்பவர்கள்தாம்.”

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால் நடைகளில் மிகக்கேவலமானவை (எவைஎன்றால் சத்தியத்தை) அறிந்து கொள்ள முடியாத செவிடர்களும் ஊமையர்களும்தான். –அல் குர்ஆன்.8:55,8:22

மனிதனாக பிறந்தவன் நேர்வழியை புறக்கணித்து நிராகரிப்பவனாகி மிருக வாழ்க்கை வாழ்கிறான். அந்நிலையிலேயே மரணிக்கிறான். கப்ரில் மலக்குகள் வேதனை செய்யும்பொழுது அவன் எழுப்பும் மிருக ஓலங்களின் அதிர்வெண் ஒலியலைகள், (Frequency) சக மிருகங்கள் கேட்டு உணரும் வகையில் இருப்பதால் அவைகள் செவியுருகின்றன. மனிதர்களால் செவியேற்க இயலாத பூமித்தட்டு நகர்வுகளின் மெல்லிய பூகம்ப சப்தத்தை மிருகங்கள் கேட்பதுபோல் மண்ணறையில் நடக்கும் மனித மிருகங்களின் வேதனைக் குரல்களையும் மண்ணுக்குமேல் உள்ள விலங்குகள் செவியுகின்றன. நல்லடியார்களுக்கு வேதனை இல்லை,அவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள். அல்லாஹ் அறிந்தவன்!

இரண்டு கண்கள் ஒரே செவி

அனைவருக்கும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள் உள்ளன. அல்லாஹ் குர் ஆனில் கண்ணைப்பற்றி குறிப்பிடும்போது பன்மையில் கண்கள் என்கிறான். ஆனால் காதைப்பற்றி கூறும்போது காதுகள் என்று பன்மையில் கூறாமல் காது,செவி என்று ஒருமையிலேயே அழைக்கிறான்.

“அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்வைகளையும் பறித்துவிட்டு ……” அல்குர்ஆன்.6:46

“அவர்களுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும், உள்ளத்தையும் கொடுத்தோம்.”அல்குர்ஆன்.46:26.

இரண்டு காதுகள் இருப்பதால் இரு வெவ்வேறு ஒலிகளை கேட்பதற்காக அல்ல. ஒலி எங்கிருந்து வருகிறது என்று மூளை கணித்து அதன்பக்கம் கவனம் செலுத்தவே இரு காதுகள்.

இரு காதுகளிலும் ஒலி அலைகள் நுழைந்தாலும், எந்தப்பக்கம் உள்ள காது ஒலிக்கு அருகில் உள்ளதோ, அது முதலில் ஒலி அலைகளை மூளைக்கு அனுப்பும். மறு பக்கம் உள்ள காது அடுத்ததாக அனுப்பும். இரு காதுகளில் இருந்து வந்த ஒலியின் முன் பின் நேரத்தை மூளை கணக்கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கி திரும்ப கட்டளையிடும். ஆக ஒலி வரும் இடத்தை மூளை அறிந்து கட்டளை இடைவே இரு காதுகள்.

ஆனால் நமது இரு கண்களும் ஒரே நேரத்தில் பல காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்க முடியும். உதாரணமாக, ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேசுவதை இரண்டு காதுகளும் கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும். அதே நேரத்தில் அவரது அலைபாயும் கண்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை நோட்டமிடும். அலைபாயும் கண்கள் (Saccades) வினாடிக்கு 30-70 தடவை பல காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருக்கும். கண்களை பன்மையாகவும்,செவியை ஒருமையாகவும் குர் ஆன் குறிப்பிடுவதற்கு இதை விட வேறு பல காரணங்களும் இருக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்!

களிமண்-கர்ப்பம்-உலகம்-மண்ணறை –மஹ்ஷர்-சுவனம்-நரகம்

காய்ந்தால் சப்தமிடும் களிமண்ணில் உருவான மனிதன், பெண்ணின் கர்ப்ப அறையில் சிசுவிலே செவியேற்று, மண்ணுலகில் பிறந்தபின்பு இறக்கும்வரை செயல்புரிந்து, இறந்த பின்பும் மண்ணறையில் செவியேற்று, இறுதி நாள் மஹ்ஷர் வரை காத்திருந்து சூர் ஊதப்பட்டதும் கபுராளிகளை எழுப்பி விடுவதும்,இறுதியில் நிரந்தர தங்குமிடம்வரை சென்று செயல்படுவதும் செவிப்புலனே!

“சூர்” ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிளிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக வருவார்கள். அன்றி “ எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்? என்று கேட்பார்கள்.” -அல்குர்ஆன்.36:51,52.

“நீங்கள் செவிமடுத்து கேளுங்கள் (சமாதிகளின்)சமீபத்திலிருந்து (கொண்டு) மரணித்தவர்களே! எழும்புங்கள் என்று அழைப்பவர் அழைக்கும் நாளில் பெரும் சப்தத்தை அவர்கள் மெய்யாகவே கேட்பார்கள். அதுதான் சமாதியிலிருந்து வெளிப்படும் நாள்.” -அல்குர்ஆன்.50:42

உயிப்பித்தல் நிகழ்ச்சியை அல்லாஹ் ஓர் உதாரணம் மூலம் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு காட்டுகிறான். “ நான்கு பறவைகளைப் பிடித்து பழக்கி, பின்னர் அவைகளை துண்டு துண்டாக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விட்டு பின்பு அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள்.அவை உங்களிடம் பறந்து வந்து சேரும்.” -அல்குர்ஆன். 2:260.

நன்கு பழக்கிய பறவைகளை மாமிச துண்டாக்கி நான்கு மலையில் வைத்து அழைத்தபோது அவை செவி ஏற்று பறந்து வந்ததுபோல், மண்ணறை மனிதர்களும் சூர் ஒலி செவியேற்று எழும்புகின்றனர்.

மஹ்ஷரை நோக்கி நடக்கும்போது அணைத்து சப்தங்களும் அடங்கி விடுகின்றன. ஆனால் அவர்கள் காலடி ஓசை மட்டும் கேட்கின்றது..

“அந்நாளில் அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றி செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப்பயந்து எல்லா சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான அவர்களின்) காலடி சப்தத்தை தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்க மாட்டீர்கள்.” அல்குர்ஆன்.20:108

மஹ்ஷர் மைதானத்திற்கு அவர்கள், செவிப்புலன் சப்தத்தை பின்பற்றியே செல்வார்கள். “அதில் தவறு ஒன்றும் ஏற்படாது” என்றும் அல்லாஹ் கூறுகிறான். மறுமை நாளில் அநேகரை குருடனாக எழுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான். உலகில் பார்வை உள்ளவனாக இருந்தேனே என்று கேட்பார்கள், அதற்கு அல்லாஹ்,

“இவ்வாறே நம் வசனங்கள் உம்மிடம் வந்தன, (குருடனைப்போல் உன் காரியங்கள் இருந்தன) நீ அவைகளை மறந்து விட்டாய்.அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்!” என்று கூறுவான். அல் குஆன். 20:106.

அல்லாஹ் இவர்களின் பார்வைப்புலனை பறித்தாலும் செவிப்புலனை எடுப்பதில்லை.காரணம், நரகத்தின் சப்தத்தை பாவிகளான நரகவாசிகள் கேட்பதற்கே!

“எவர்கள் விசாரணை காலத்தை பொய்யாக்குகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான பற்றி எரியும் நரகத்தைதான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். அது இவர்களை கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவிமடுத்துக்கொள்வார்கள்.” -அல் குர்ஆன்.25:12.

சுவனவாசிகளான நல்லடியார்களும் சுபசோபன நற்செய்தியை சுவனத்தில் கேட்பார்கள்.

(அந்நாளில்) “இறை அச்சமுடையவர்களுக்கு சுவனபதி மிக்க சமீபமாக கொண்டு வரப்படும்.” -50:31

“ பூமியில் நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்.” என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள்.” –அல் குர்ஆன். 7:43.

“அவனுடைய வசனங்களுக்கு செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாய் இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. “ —அல்குர்ஆன். 11:67

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 64392_143297969177703_703098629_n

நன்றி: முக நூல் -
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Thu 28 Mar 2013 - 16:13

அனைத்து உயிரினமும் நீரிலிருந்து தோன்றின
****************************************

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? 21:30 سورة النور

இந்த திருமறை வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நமது உடலிலுள்ள உயிரணுவின் (Cell) உள்ளீடாய் விளங்கும் (Cytoplasm) 80% சதவிகிதம் தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50% முதல் 90% சதவிகிதம் வரை தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் நீறைக் கொண்டே படைக்கப்பட்டுள்ளது என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு எந்த ஒரு மனிதனும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியுமா?

இன்னும் தண்ணீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் அரேபிய பாலைப் பெருவெளியில் வசிக்கும் ஓர் அரேபியன் இவ்வாறு எண்ணிப் பார்த்திருக்க முடியுமா?

விலங்கினங்களை நீரிலிருந்தே படைத்ததாக பின்வரும் வசனம் எடுத்துக்கூறுகிறது.

மேலும், எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 24:45 سورة الفرقان

அதே போன்று பின்வரும் வசனமும் நீரிலிருந்தே மனிதனின் படைப்பு தொடங்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். 25:54

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 305273_143426605831506_825583729_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Fri 29 Mar 2013 - 16:16

இஸ்லாத்தில் மரங்கொத்திப் பறவை
********************************


Dr. Ahmad Baqavi Ph.D.
‘ஹுத்ஹுத்’ (الْهُدْهُد) மரங் கொத்திப்பறவை

மரங்கொத்திப் பறவை ஒரு அற்புதமான பறவை. நினைவாற்றல், பேச்சாற்றல்,உணவை சேகரித்தல், உளிபோன்ற கூரிய அலகுகள் உடையவை. இறைமறை கூறுகிறது:-

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். (27:20)

‘நிச்சயமாக நான் அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்.அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வரவேண்டும்’ என்றும் கூறினார். (27:21)

'(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார். அதற்குள் (ஹுத்ஹுத் பறவை வந்து) கூறிற்று.’ தாங்கள் அறியாத ஒன்றைத் நான் தெரிந்துள்ளேன். ‘ஸபா’ என்னும் நகரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்.’ என்று கூறியது.(27:22)

‘நிச்சயமாக அ(ந்நாட்ட)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். மேலும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது.மகத்தான ஒரு அரியாசனமும் (அர்சும்) இருக்கிறது.’(27:23)

‘அவளும், அவளுடைய சமுதாயத்தினரும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்.அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை’(27:24)

‘வானங்களிலும்,பூமியலும்,மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும், இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீஙகள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா? ‘(27:25)

‘அல்லாஹ்-அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்’ (என்று ஹுத்ஹுத் பறவை கூறிற்று. (அல்குர்ஆன் 27:26)

தகவல்களைச் சேகரித்து வரும் அரசு தூதர்!
மரங்கொத்தி வெகுதொலைதூரம் சென்று அதற்குரிய உணவை மட்டுமல்ல, மனிதர்க ளுக்குத் தேவையான செய்திகளையும் சேகரித்து வருகிறது. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஸபாநாட்டு ராணிபற்றியும் அவர்களின் மக்களைப் பற்றியும் தகவல்களைக்கொடுத்து அவர்கள் ஏகத்துவ நெறியின்பால் வருவதற்கு துணைபுரிந்தது என்று திருமறை அல்குர்ஆன் 27:20-26 எனக் கூறுகிறது.

அது பேசியது என்றும், அது பேசிய மொழியை நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிந்திருநதார்கள் என்றும் (27: 20-26) குர்ஆன் கூறுகிறது.

இதனை ஆய்வு செய்த அறிவியலார் அவை மரங்களில் பொந்துகளை துளைத்து வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. அதுமட்டுமல்ல, மரத்துளைகளை தங்களின் உணவுக்கிடங்காகவும் பயன்னடுத்துகின்றன. பறவைகள் தங்கள் அலகுகளைப்பயன்படுத்தி மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மரங்;களை கொத்துகின்றன.

இந்த வேகத்தில்; கொத்தினால் அதன் அலகுகள் பாதிக்காதா? இரண்டாகஉடைந்துவிடாதா ? தொடர்ந்து மிக வேகமாக கொத்துவதால் அதன் மூளைகள் பாதித்து மயக்கமேற்படாதா? போன்ற என்ற ஐயங்கள் நமக்கு எழலாம்.

இடிதாங்கிகள் (Shock Abserbers)

ஆனால் அதன் அலகுகளிலே அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் அபார அமைப்பு அதைப் பாதுகாத்து எஃகு போன்ற பலத்தை அளிக்கிறது. அதன் மூளை தலையின் பின் பகுதியில் அலகுகளுக்கு நிகராக பின்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. அது துளையிடும் போது அவற்றின் கீழ் அலகை ஒட்டியுள்ள சதைப்பகுதி இடிதாங்கியைப்போல (அதாவது மோட்டார் காரின் ளூழஉம யுடிளநசடிநசள) போன்று செயல்பட்டு வேகமாகத் துளையிடுவதால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கி நிற்கிறது.

ஓவ்வொரு மரங்கொத்தியும் தனக்கே உரிய தனிப்பட்ட சிறப்புயல்புகளைக் கொண்டுள்ளது. சில வகை மரங்கொத்திகள் சோளப் பொறிகளை தாம் இட்ட துளைகளில் சேமித்து வைக்கிறது.

50000 சோளப்பொறிகள் வரை சேமித்து வைக்கும் திறமை

கோடை காலம் முழுவதும் பட்டுப்போன மரங்களில் ஆயிரக்கணக்கான துளைகளைப் போட்டுவைக்கின்றன. குளிர்காலத்தில் அவற்றை உணவாகக்கொள்கின்றன.துளையிடும் இந்த இனம் ஒவ்வொரு துளையிலும் ஒவ்வொரு சோளப் பொறியைச் சேமித்து வைக்கிறது. இவ்வாறு சேமிக்கும் மரங்கொத்திப் பறவைகள்

எவ்வளவு சேமித்து வைக்கும் என நினைக்கிறீர்கள்? ஐந்தா பத்தா? இல்லை. ஒரு பெரிய மரத்தில் 50000 சோளப்பொறி வரை சேமித்து வைக்கும் திறமை கொண்டவை.

அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளின் அதிசயச்செயல்களைப் பற்றி வியந்து வியந்து அவன் வல்லமையைப் புரிந்து அவனையே வணங்கி அவனுக்கு நன்றிச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தப் பறவையின் ஏகத்துவ உணர்வைத் தெரிந்து நாமும் ஓரிறைந் கொள்கையில் உறுதியாக இருப்போமாக!

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 429535_143745812466252_1641831846_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Sat 30 Mar 2013 - 22:14

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
**************************************

ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே!


நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

மேற்கண்ட வசனத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை

#நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
#இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்!
# பின்னர் அலக் என்பதை ஒரு தசைப் பிண்ட மாக்கினோம்!
#பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்!
#பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
#பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்!

மேற்கண்ட இந்த ஆறு அம்சங்களையும் ஒவ்வொன்றாக அலசுவோம் வாருங்கள்

ஆண் விந்துத் துளி பற்றிய அறிய தகவல்கள்
--------------------------------------------------------------
ஒரு ஆணிடமிருந்து வெளிப்படும் ஒருவகையான நீர் விந்துத்துளி என்று அறிவியல் உலகம் வர்ணிக்கிறது. இந்த விந்துத்துளியைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிட்டள்ளான் இதைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது

கவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா? குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.” (அல் குர்ஆன்: 86:5-7)

இதோ மேலே காணும் படம் ஒரு ஆண் மகனுடைய விந்தணுவாகும் இது உருவாக 74 நாட்களாகிறது என்றும் விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பெண்ணின் சினைமுட்டை பற்றிய அறிய தகவல்கள்
-------------------------------------------------------------------------
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது என்றும் இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதோ மேலே கண்ட படம் பெண்ணின் சினை முட்டையாகும் இதை சற்று கவனித்துப் பாருங்கள் இது முட்டையைப் போன்று வட்ட வடிவமாக காணப்படுவதால் இதற்கு சினை முட்டை என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது!
பெண்ணின் சினைமுட்டையானது அவளுடைய சினைப் பையிலிருந்து வெளியாகிறது என்றும் இந்த சினை முட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் மேலும் இந்த சினை முட்டை சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருகிறது
-----------------------------------------------------------------------
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது. இதோ விந்தணுவின் படத்தை சற்று கவனியுங்கள்

இந்த ஆணுடைய விந்துநீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது! ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையுடன் கூடுகிறது என்ற நிகழ்ச்சியை படமாக விளக்கியுள்ளேன் கீழே உள்ளதை பாருங்கள்

பெண்ணுடைய சினைப் பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள் ஆகும். மேலும் சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும். இவ்வாறு நுழையும் விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் மேலும் இந்த ஆணின் விந்தணு 24-48 மணி நேரத்தில் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது என்றும் அதே போன்று பெண்ணின் சினைமுட்டையின் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் மூலம் நாம் விளங்குவது என்னவெனில் ஆணுடைய விந்தணு பெண்ணுடைய சினைமுட்டையுடன் 24 மணிநேரத்திற்குள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கருத்தரிக்க வைக்க வேண்டும் என்பதே!
ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருமுட்டையாகும்

கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப் பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது இந்த வளர்ச்சியை கீழே உள்ள படத்தின் உதவியால் காண இயலும்!

பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்!
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

#ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

#கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன துளிர்விடுகின்றன.

#கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது

#கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் துளிர்விடுகின்றன

#கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

#கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

#கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் துளிர்விடுகின்றன மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன

பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்
மேற்கண்ட அருள்மறை வசனம் கூறும் செய்தியை ஆராய்வோம்

#கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படுகிறது மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது

# கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது

#கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது

# கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது. அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!

#கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.

#கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.

கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.

கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது!

#கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.

#கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன

#கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.

#கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.

#கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.

மேலே தாங்கள் கண்ட அனைத்து அறிவியல் அதிசயங்சளையும் கீழ்கண்ட அருள்மறை குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறதா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 543646_144012852439548_1228875723_n

:] facebook
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ராகவா Sat 30 Mar 2013 - 22:16

அருமை :”@:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 8:28

அல்லாஹு அக்பர் அவன் படைப்பாலன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Mon 1 Apr 2013 - 13:25

ஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்
*******************************************
“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

ஒரு பெண், கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கனவனின் உயிரணுவே காரணம்: மனைவி காரணமல்ல. என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருமறை வசனம் கூறியிருப்பது குர்ஆன் கூறும் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக பெண்ணின் சினை முட்டையில் X என்ற குரோமோசோம் மட்டுமே இருக்கும், ஆணின் விந்தணுவில் X அல்லது Y என்ற குரோமோசோம் இருக்கும் என்பதையும் X என்பது பெண்ணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் Y என்பது ஆணை உருவாக்கும் குரோமோசோம் என்றும் நாம் படித்திருக்கிறோம்.

இப்போது மேற்கண்ட குர்ஆன் ஆயத்துக்கள் இன்றைய அறிவியலுடன் எவ்வாறு ஒத்துப் போகின்றது என்பதைச் சற்று விளக்கமாகப் பாப்போம்.

X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-X என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் பெண் குழந்தையாக உருவாகின்றது. (X-X என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் பெண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)

X குரோமோசோம் உடைய பெண்ணின் சினை முட்டையுடன் Y குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு சேர்ந்தால் அது X-Y என்ற ஜோடியைக் கொண்ட செல் உருவாகி அதன் முலம் ஆண் குழந்தையாக உருவாகின்றது. (X-Y என்ற குரோமோசோம் ஜோடியைக் கொண்ட செல் ஆண் குழந்தையை உருவாக்கும் தன்மையைக் கொண்டது)

பெண்ணின் சினை முட்டை வெறும் X குரோமோசோமை மட்டுமே உடையதாக இருக்கிறது. ஆனால் பெண்ணின் கர்ப்பப் பையினுள் செலுத்தப்படும் விந்தணுக்களில் X குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் Y குரோமோசோம்களைக் கொண்ட உயிரணுக்களும் கோடிக்கணக்கில் உள்ளன. ஆனால் ஆணின் ஒரே ஒரு உயிரணு மட்டுமே பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவாக வளர்கின்றது. பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு X குரோமோசோம் உடையதாக இருந்தால் அது பெண் குழந்தையாகவும், பெண்ணின் சினை முட்டையுடன் சேரக் கூடிய ஆணின் உயிரணு Y குரோமோசோம் உடையதாக இருந்தால் அது ஆண் குழந்தையாகவும் உருவாகிறது.

பெண்ணின் சினை முட்டை X ஆக மட்டுமே இருக்கிறது. கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்கள் தாம் X ஆகவோ அல்லது Y ஆகவோ இருக்கிறது. அதாவது கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் உயிரணுக்களுக்களே சினை முட்டையுடன் சோந்து பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகின்றது.

இதை இப்படியும் புரிந்த்துக் கொள்ளலாம்.

பெண்ணின் சினை முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் X குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் பெண் குழந்தையாக உருவாகிறது.
பெண்ணின் சினை முட்டையுடன் – கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் ஆணின் Y குரோமோசோம் உடைய உயிரணு சேர்ந்தால் ஆண் குழந்தையாக உருவாகிறது.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் கர்ப்பக் கோளறையில் செலுத்தப்படும் ஆணின் இந்தியத் துளியே பெண் குழந்தையாகவோ அல்லது ஆண் குழந்தையாகவோ உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது, பெண்ணின் சினை முட்டையல்ல. இன்னும் சற்று விளக்கமாக கூறுவதென்றால் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்ற ஜோடிகளை உருவாக்குவது பெண்ணின் கர்ப்பக் கோளறையில் செலுத்தப் படும் போதுள்ள இந்தியத் துளியைக் கொண்டே என்பது நன்கு புலப்படுகின்றது.

இப்போது மேற்கண்ட வசனங்களை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் – (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு” (அல் குர்ஆன் 53:45-46)

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (அல் குர்ஆன் 75:37)

20 ம் நூற்றாண்டின் இந்த அரிய கண்டுபிடிப்பை 7 ம் நூற்றாண்டிலேயே கூறிய அல்லாஹ்வின் திருமறையின் அறிவியல் அற்புதங்களை உலகிற்கு எடுத்துக்கூறுவது நமது கடமையன்றோ?

இன்றும் நம்மில் சிலர் தம் மனைவி பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறாள், ஆண் குழந்தையே பெற்றெடுப்பதில்லை என்று குறை கூறுகிறாகள். குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ ஆகுவதற்கு தம்முடைய உயிரணுவே காரணம் என்பதை அறியாததே இதற்குக் காரணம். இவர்கள் பின் வரும் இறைவசனங்களைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளாகள்.

அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 42:49-50)

நன்றி: சுவனத்தென்றல்

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 408093_144654845708682_1165691393_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Wed 3 Apr 2013 - 0:39

தாய்லாந்து விஞ்ஞானியின் மாற்றம்..
*********************************
டாக்டர் டிகாடட் டிஜாஸன் (Dr. Tagatat Tejasen):

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்

இந்த மனிதர் இஸ்லாத்தின் கொள்கையைக் (ஷஹாதா) மொழிந்து அவர் இஸ்லாமியர் ஆகுவதை வெளிபடுத்துகிறார். இந்த சம்பவம் நடந்தது ரியாத்தில் நடந்த “எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில்” ஆகும்.

அவர் தாய்லாந்தில் உள்ள ஷியாங் மாய் பல்கலைகலத்தின் உடற்கூறு மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் “தெஜாதத் டிஜாஸன்” ஆகும். அவர் முன்பு அதே பல்கலைகழகத்தில் மருத்துவத் துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் தெஜாஸனிடம் அவரது சிறப்பு துறையான உடற்கூறு மருத்துவம் தொடர்புடைய குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் சிலவற்றை நாம் அளித்தோம். அப்போது அவர் தங்களது புத்த சமய புத்தகங்களில் கரு வளர்ச்சி நிலைகள் பற்றிய சரியான விவரங்கள் உள்ளன என கருத்து தெரிவித்தார். நாங்கள் அந்த புத்தகங்கில் உள்ள விவரங்களை அறிய மிக ஆவலாய் உள்ளோம் எனவும் அந்த புத்தகங்களைப் பற்ற அறிய விரும்புவதாகவும் கூறினோம்.

ஒரு வருடம் கழிந்து பேராசிரியர் டிஜாஸன் “மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்திற்கு” தேர்வாளராக வந்தார். நாங்கள் அவர் கடந்த வருடம் கூறியதை நினைவு கூர்ந்தோம். அந்த கூற்றை தான் உறுதிபடுத்தாமல் கூறி விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார். அவர் புத்த சமய புத்தகங்களை ஆராய்ந்த போது அவைகளில் இது சம்பந்தமான ஒரு விவரமும் இல்லை என்பதை அறிந்தார். இதன் பின் பேராசிரியர் கீத் மூரே எழுதிய ‘தற்கால கருவியல் சம்பந்தமான கருத்துக்கள் எப்படி குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் உள்ள கருத்துக்களுடன் ஒத்து வருகின்றது” என்ற உரையைக் கொடுத்தோம். அவரிடம் கீத் மூரே பற்றிக் கேட்டோம். அவரைப் பற்றித் தெரியும் என்றும் அவர்; ‘கருவியல் துறையில்” உலக பிரசித்து விஞ்ஞானி என்றும் கூறினார். பேராசிரியர் டிஜாஸன் இந்த விவரங்ளைப் (மூரேயின் கருத்துக்கள்) படித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.

நாங்கள் அவரது சிறப்புத் துறையிலே பல கேள்விகளைக் கேட்டோம். அதில் ஒன்று தான் இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான “தோலின் உணர்ச்சிகள்” பற்றியதாகும். டாக்டர் டிஜாஸன் ‘ஆம்- தோல் ஆழமாக எரிக்கப் பட்டால் (உணர்ச்சிகள் பாதிக்கும்)” என்றார். அவரிடம் சொல்லப்பட்டது- ‘நீங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி கூறிய இந்த புத்தகத்தை – புனித நூலை – குர்ஆனை அறிய விரும்புகிறீர்கள?;” இறை நிராகரிப்போர்களை நரக நெருப்பால் தண்டனை கொடுப்பதைப் பற்றிக் கூறும் போது அவர்களது தோல் அழிந்த பின் திரும்ப அவர்களுக்கு புதிய தோலை உருவாக்கி அவர்களுக்கு நரக வேதனையை அனுபவிக்கச் செய்யப்படும் என்று கூறுவதன் மூலம் உணர்ச்சிகளின் நரம்புகள் தோளில் தான் முடிவடைகின்றன


என்னும்உண்மை விளங்குகிறது. குர்ஆனின் வசனங்களைப் பாருங்கள்:
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ- அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை- அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென- அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:56)

நாம் அவரிடம் கேட்டோம்: ’1400 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ச்சிகளின் நரம்புகள் தோலில் முடிவடைகின்றன என்பதற்கு இது ஆதாரம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ ‘ஆம் நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார் டாக்டர் டிஜாஸன் உணர்ச்சிகள் பற்றிய இந்த உண்மை நீண்ட காலத்திற்கே முன்பே தெரிந்ததாகும். காரணம் யாராவது ஒருவர் எதாவது தவறு செய்தால் அவர் தோலைச் சுடுவதன் மூலம் தண்டிக்கப்படும். அதன் பின் அல்லாஹ் அவருக்கு பதிய தோலை போர்த்தி வேதனையை அனுபவிக்கச் செய்வான். அதாவது பல்லாண்டுகளுக்கு முன்பே வேதனையை உணரக்கூடியவைகள் தோலில் தான் உள்ளன என்பதை அறிந்துள்ளார்கள்.

எனவே தான் புதிய தோல் மாற்றப்படுகின்றது. தோல் தான் உணர்ச்சிகளின் மையம். நெருப்பால் முழுமையாக தோல் எரியும் போது- அது அதனுடைய உணர்ச்சிகளை இழந்து விடுகின்றது. அதன் காரணமாகத் தான் மறுமையில் அல்லாஹ் தோலை மாற்றிக் கொண்டே இருப்பான் குர்ஆன் 4:56ல் உள்ளது போல். நாம் அவரிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டோம்.

‘இவை முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதர்களின் மூலமாக வந்திருக்க வாய்ப்புள்ளதா? பேராசிரியர் டிஜாஸன் இது ஒரு காலத்திலும் மனிதர்களின் மூலம் வந்திருக்க சாத்தியம் இல்லை என்று மறுத்தார். ஆனால் இந்த அறிவின் காரணியைப் பற்றியும் முகம்மது எங்கிருந்து இதனைப் பெற்றிருக்க வாய்ப்பள்ளது? என்றும் கேட்டார். ‘மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள அல்லாஹ்விடம் இருந்த’ என்று நாம் கூறினோம். அதன்பின் அவர் ‘அப்படி என்றால் யார் அந்த அல்லாஹ’” என்று கேட்டார்.

o அவன் தான் இருப்பவைகள் அனைத்தையும் படைத்தவன் ஆகும்.

o நீங்கள் ஒரு அறிவைக் கண்டால்- அது மிக்க அறிவுடையோனிடமிருந்து மட்டும் தான் வந்திருக்க முடியும்.

o இந்த அண்டங்களின் படைப்புகளில் அறிவைக் கண்டால்- அனைத்து அறிவுடையோனால் தான் இந்த அண்டங்கள் படைக்கபட்டதால் ஆகும்.

o இந்த படைப்புகளில் ஒரு முழுமையைக் கண்டால் இவையனைத்தையும் மிக அறிவான்மையுள்ள ஒருவனால் தான் படைக்கபட்டுள்ளது என்பதற்கு ஓர் ஆதாரமாகும்.

o கருணையைக் கண்டால் கருணைமிக்க வல்லோனின் படைப்பு என்பற்கு சாட்சியாக ஆகும்.

o இதே போல் படைப்புகள் அனைத்தும் ஒரு முறைப்படியாகவும்- ஒழுங்காகவும் அமையப் பெற்றதைக் கண்டால் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ள ஒரே இறைவனால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும்.

பேராசிரியர் டிஜாஸன் நாம் கூறிவைகளை ஏற்றுக் கொண்டார். அவர் தம் நாடு திரும்பி இந்த புதிய ஞானத்தையும்- கண்டுபிடிப்புகளைப் பற்றிய பல விரிவுரைகள் நிகழ்த்தினார். இந்த விரிவுரைகளின் பயனாக அவரது மானவர்களில் ஐந்து பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நாம் அறிந்தோம்.

பின் ரியாத்தில் நடந்த எட்டாவது சவுதி மருத்துவ மாநாட்டில் குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள மருத்துவ அறிவியல் பற்றிய விரிவுரைகளில் தொடர்ச்சியாக பங்கேற்றார். பேராசிரியர் டிஜாஸன் நான்கு நாட்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத பல அறிஞர்களிடம் குர்ஆன்- ஹதீஸ்களில் உள்ள இந்த உண்மைகளைப் பற்றி கலந்து ஆலோசிப்பதில் கழித்தார்.

அந்த மாநாட்டின் இறுதிப் பகுதியில் பேராசிரியர் எழுந்து பேசலானார்: ‘கடந்த மூன்றாண்டுகளாக ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தானி அவர்களால் தரப்பட்ட குர்ஆனில் நான் ஈடுபாடலானேன். கடந்த வருடம் நான் பேராசிரியர் கீத் மூரே அவர்களின் புதிய ஆய்வுகளை ஷேக் மூலம் பெற்றேன். அவர்கள் இதனை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்து தாய்லாந்து முஸ்லிம்களிடையே உரையாற்றக் கூறினார்கள். அவர்களது வேண்டுகோளை நான் நிரைவேற்றினேன். நான் ஷேக்கிடம் கொடுத்த வீடியோ கேசட்டில் நீங்கள் அதனைப் பார்க்கலாம். இந்த மாநாட்டு மூலமும் எனது ஆராய்ச்சிகளினாலும் நான் நம்புவது என்னவென்றால்- 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனிலே பதியப்பட்டுள்ளது அனைத்துமே உண்மை என்பதையும் அவைகளை அறிவியல் மூலம் நிருபிக்கலாம் என்பதாகும்.

படைப்பதற்கு தகுதியான இறைவன் மூலம் பெற்ற இந்தச் செய்தியை தெரிவித்த முஹம்மது நபி அவர்கள் படிக்கவோ- எழுதவோ தெரியாதவர். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். எனவே நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்..” அதாவது வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை- ‘முஹம்மது ரசூலுல்லாஹ்” முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவரார்கள்” என்பதை கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கிறேன். நான் இந்த மாநாட்டின் மூலம் அறிவியல் உண்மைகளi மட்டுமல்லாது மேலும் பல அறிஞர்களிடையே கலந்துரையாடி பல அறிஞர்களின் நட்பு கிடைத்தது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்ததன் மூலம் நான் அடைந்த மதிப்பிட முடியாத ஒரு பலன் என்னவென்றால் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முகம்மது ரசூலுல்லாஹ்” என்னும் கலிமாவைக் கூறி நான் ஒரு முஸ்லிமானதுதான்.

எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ- அவர்கள் உமக்கு உம்முடைய -இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும்- அது வல்லமை மிக்க- புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள். (அல்குர்ஆன்: 34:6)

நன்றி:« சித்தார்கோட்டை

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 150145_145111438996356_6975729_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 17:04

நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?)
***********************************


உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர்குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள்உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும்,சத்துப்பொருட்கள் வேறாகவும்பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரைசாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ளஇடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடைநுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.

இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்தஆண்டு கி.பி. 1578 ஆகும்.

ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.


ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள்பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!”எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.

(......”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான் ......)

நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும்சந்தேகமில்லை.


(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 733959_146107698896730_2092773840_n
நன்றி:நாஸிர் ஆன்லைன்.காம்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by ansar hayath Sun 7 Apr 2013 - 13:58

நீருக்குள் பிரசவம்
****************


பிரசவ வலி அவரை பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று அவர் கூறினார். ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
(அல்குர்ஆன் 19: 23,24)

பிரசவ வேதனை என்பது ஒரு பெண்ணை மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்லும். அந்த நேரத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு வேதனையை அந்த பெண் உணர்வாள்.

மனித உடலின் வலியை அளக்கும் அலகு டெல் ஆகும். மனித உடல் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவு 45 டெல் (del). ஆனால், பிரசவத்தின் போது ஒரு பெண்ணுக்கு 57 டெல் வரை வலி அதிகமாகும். இவ் வலி 20 இடங்களில் என்பு முறிந்தால் ஏற்படும் வலிக்கு சமனாகும். ஒரு மனிதனால் தாங்கக்கூடிய அதிகூடிய வலியின் அளவை விட அதிக வலியை ஒரு பெண் தன் பிரசவ வேதனையில் உணர்கிறாள்.
மேலுள்ள அல்குர்ஆன் வசனம் பிரசவ வேதனையை குறைக்கக்கூடிய ஒரு வழிமுறையை கற்றுத் தருகின்றது.

மர்யம் (அலை) பிரசவ வேதனையால் ‘நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா’ என்று கூறிய சமயத்தில் ‘கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். இதிலிருந்து அவரது வேதனையைக் குறைப்பதற்கே ஊற்று ஏற்படுத்தப்பட்டது எனத் தெளிவாகின்றது. நீருக்கு பிரசவ வேதனையை குறைக்கும் தன்மை உள்ளது என்பது இதிலிருந்து புலனாகின்றது.

நீருக்குள் பிரசவம்
---------------------------
நீருக்குள் பிரசவம் என்பது வெதுவெதுப்பான நீர் தொட்டிக்குள் குழந்தையை பிரசவிக்கும் முறையாகும். இதன் கோட்பாடு குழந்தை தாயின் கருவறையில் அம்னியன் திரவப் பையில்(amniotic fluid sac) இருந்து தனக்கு ஒத்த சூழலான தண்ணீருக்குள் பிரசவிக்கும் போது குழந்தை இலகுவான முறையில் பிரசவிக்கப்படும். தாய்க்கும் மன அழுத்தம் குறைவாக இருக்கும். நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாயின் மன அழுத்தமும், பிரசவ வேதனையும் குறைகின்றன என் அறியப்பட்டுள்ளது.

நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்

• இளம் சூடான நீர் வலியைக் குறைக்கக்கூடியதாகவும், இதமானதாகவும் இருக்கும்.
• பிரசவத்தின் இறுதிக் கட்டத்தில் நீரானது அத்தாய்க்கு ஒரு ஆற்றலைக் கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

• இந்த மிதப்பின் விளைவானது தாயின் அங்க அசைவுகளுக்கு இலகுவாகவும், தாயின் உடல் எடையைக் குறைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

• நீரில் மிதக்கும் தன்மை கருப்பை தசைகளின் சுருக்கத்திற்கும், ஒக்ஸிஜனைக் கொண்ட இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கின்றது. இதனால் தாய்க்கு வலி குறைகின்றது. குழந்தைக்கும் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது.

• நீரில் அமிழ்ந்திருப்பதால் பதட்டம் காரணமாக ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் குறைகின்றது.

• நீரானது மன அழுத்தம் தொடர்பான ஹோர்மோன்கள்(hormones) உருவாகுவதைக் குறைத்து எண்டோர்பின் (endorphins) எனும் வலி தடுப்பான்கள் உருவாக இடமளிக்கும்.

• நீரானது குழந்தை வெளியேறும் அப்பகுதிக்கு மீள் தன்மையையும், இலகுவையும் கொடுத்து தையல் தேவையை குறைக்கின்றது.

• உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் நீரானது தாய்க்கு மன அமைதியைக் கொடுக்கும்.

• இம் முறை மூலம்; பதட்டம், அச்சம் குறைவடைகின்றது.

நீருக்குள் பிரசவிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்

• கருப்பையிலுள்ள அம்னியன் பைக்கு ஒத்த சூழலை நீர் வழங்குகின்றது.

• நீரானது குழந்தை பிரசவிக்கும்; போது பிரசவத்தை எளிதாக்கி குழந்தையின் மன அழுத்தத்தைக் குறைத்து பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.
மேலுள்ள அத்தனை தகவல்களும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டவை. 1970 இல் ரஷ்யா மற்றும் பிரான்சில் சில தாதிகளும், மருத்துவர்களும் குழந்தை கருப்பையிலிருந்து சுமுகமான முறையில் வெளி உலகுக்கு வருவதற்கு நீருக்குள் பிரசவ முறைக்கு ஆர்வம் காட்டினர். அவர்கள் பெண்கள் பிரசவ வேதனையால் துடிப்பது குறித்து கவலையடைந்தனர். இன்று ஐக்கிய இராட்சியம் உட்பட அநேக ஐரோப்பிய நாடுகளில் இந்த நீர் தொட்டியில் பிரசவ முறை கையாளப்படுகின்றது.

அல்குர்ஆனே நீருக்குள் பிரசவ முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது
விஞ்ஞான தகவல்களின் மூலம் முதன்முதலில் நீருக்குள் பிரசவ முறை 1970 களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1400 வருடங்களுக்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆனில் நீருக்குள் பிரசவ முறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தறிவே இல்லாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் விஞ்ஞான அறிவு என்பது பூச்சியமே.

எனவே, அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை அல்லாமல் வேறில்லை என்பது அல்குர்ஆனை படிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் புரியாமல் போகாது.

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> 549762_145893098918190_849970769_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

<அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்> Empty Re: <அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்>

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum