Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகல் முடிவை காலை அறிவிப்புக்கு காரணம் என்ன?
Page 1 of 1
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகல் முடிவை காலை அறிவிப்புக்கு காரணம் என்ன?
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகல் முடிவை காலை அறிவிப்புக்கு காரணம் என்ன?: ப.சிதம்பரத்திற்கு கருணாநிதி பதில்
சென்னை, மார்ச்.21-
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவது குறித்த தி.மு.க.வின் 19-ந்தேதி காலை அறிவிப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அறிவாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருவதற்குள், தி.மு.க. திடீரென அறிவித்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டிருக்கிறாரே?
பதில்:- கடந்த 18-ந்தேதி இரவுக்கும், 19-ந்தேதி காலைக்கும் இடையே என்ன நடந்து விட்டது, எதற்காக தி.மு.க. தனது நிலையை மாற்றிக்கொண்டது என்று எங்களுக்குத் தெரியாது என்று அருமை நண்பர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 18-ந்தேதி இரவு மத்திய மந்திரிகளுடன் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பேசியதை அனைவரும் அறிவார்கள்.
மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் வெளியே செய்தியாளர்களிடம் கூறும்போது கூட, நடந்த விவகாரத்தைப் பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் தெரிவிப்போம் என்று தான் கூறினாரே தவிர, நாங்கள் கூறியதை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றோ, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் நாங்கள் கோரிய திருத்தங்களைச் சேர்க்க முயற்சிப்போம் என்றோ கூறியதாக மறுநாள் ஏடுகளில் எந்தச் செய்தியும் வரவில்லை.
மறுநாள் காலையில், திருத்தப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் கிடைத்தது. நான்காவது முறையாகத் திருத்தப்பட்டு அளிக்கப்பட்ட அந்தத் தீர்மானம் பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விட்டது என்றும், அதில் இலங்கை அரசுக்கு எதிராக எந்தவிதமான கடுமையான வார்த்தைகளும் இடம் பெற்றிருக்கவில்லை என்றும் ஊர்ஜிதமான தகவல்கள் கிடைத்தன.
அந்தத் தகவலின்படி தீர்மானத்தில் நாங்கள் கேட்ட திருத்தங்களை இணைப்பதற்கான வாய்ப்பு அறவே அற்றுப் போய் விட்டதாகவே எங்களுக்குத் தெரிந்தது. தி.மு.க.வின் 19-ந் தேதி காலை அறிவிப்புக்கு இவை தான் காரணமே தவிர வேறல்ல.
கேள்வி:- அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று ப.சிதம்பரம் சொல்வது சாத்தியமான ஒன்றா?
பதில்:- அது சாத்தியமா என்று தெரியவில்லை. அதற்கு காலம் இன்னமும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எழுத்துப் பூர்வமாகத் திருத்தம் கொடுப்பதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி மத்திய மந்திரி கமல்நாத் மற்ற கட்சிகளுடன் பேசியதாகவும், பலர் ஆதரிக்கவில்லை என்று சொல்லியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum