சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Khan11

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:23

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு 549856_154821111346644_1332164917_n
தியா அப்துல் சஹ்ரா கதீம்



1970 ஆம் ஆண்டு ஈராக்கில் பிறந்த தியா அப்துல் சஹ்ரா கதீம் "ஜுண்டல் ஸமா" எனப்படும் SOLDIERS OF HEAVEN இயக்கத்தின் தலைவராவார்.இவர் தான் அலி (ரலி) அவர்களின் மறுபிறப்பு என்றும் மறைக்கப்பட்ட இமாம் மஹதியும் நானே என அறிவித்தான்.இவன் ஷியா பிரிவைச் சேர்ந்தவன் என்றாலும் 2007 ஆண்டு இராக்கில் நஜாப் பகுதியில் ஆஷுர தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டவன் இவனே.இந்த தாக்குதலின் போது அமெரிக்க மற்றும் இராக்கிய படைகளுடன் இடம்பெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டான்.


சில பிரிவினர்களால் இமாம் மஹ்தி (அலை) என உரிமை கொண்டாடப்படுபவர்கள்.


மாஸ்டர் பார்த் முஹம்மத் - நேசன் ஒப் இஸ்லாம்
முஹம்மத் அல் நப்ஸ் அல் சகியா - ஷியாக்களில் ஒரு பிரிவினர்
முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஆப்த இப்னு ஜாபார் அல் சாதிக் - பாதியத் ஷியா
ஜாபார் அல் சாதிக் - தாவுஸ்ஸியா ஷியா
மூசா அல் கதீம் - வக்பியாத் ஷியா
முஹம்மத் இப்னு காசீம் - அலவிகள்
யஹ்யா இப்னு உமர்
முஹம்மத் இப்னு அலி அல் ஹாதி - முகம்மதியா ஷியா
அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ்
ரியாஸ் அஹ்மத் கோஹார் ஷாஹி - மஹ்தி பவுண்டேசன்
முஹம்மத் பயாசித் கான் பன்னி

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:24

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு 602156_154818648013557_410836608_n
நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
19 ஆம் நூற்றாண்டு
============================

மிர்ஸா குலாம் அஹ்மத்



1835 பெப்ரவரி 13 திகதி இந்தியாவின் காதியான் என்ற நகரில் பிறந்த இந்த மிர்ஸா குலாம் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் நபி ஈஸா (அலை) என்றும் அறிவித்தார்.1889 அஹ்மதியா இஸ்லாம் என்ற புதிய மதத்தை உருவாக்கினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:25

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு 386506_154818451346910_1896929337_n

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
19 ஆம் நூற்றாண்டு
============================


முஹம்மத் அஹ்மத்



1844 ஆகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த முஹம்மத் அஹ்மத் ஒரு ஸூபி அறிஞ்சர் ஆவார்.1881 ஜூன் மாதம் அவரை அவர் இமாம் மஹ்தி என பிரகடனப்படுத்திக்கொண்டார்.பின் துருக்கி - மிஸ்ர் இணைந்த ஆட்சிகெதிராக வெற்றிகரமான ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்து 1885 இல் இன்றைய சூடானிய தலைநகரமான கார்த்தூம் நகரை கைப்பற்றினார்.இதன் பொது அவர் கைப்பற்றிய இடங்களை உள்ளடக்கிய பிரதேசத்துக்கு "மஹ்தியா" என பெயரிட்டார்.இவர் கார்தூமை நகரை கைப்பற்றிய வருடமே வபாத்தானார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:25

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
19 ஆம் நூற்றாண்டு
============================


பாப் (BAB) எனப்படும் அலி முஹம்மத் ஷிராசி


பஹாய் மதத்தின் ஆரம்ப கர்த்தாவான அலி முஹம்மத் ஷிராசி பாரசீகத்தின் ஷிராசி என்ற ஊரில் பிறந்தார்.1844 இல் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்று அறிவித்தார்.பின்பு அவர் தனது பெயரை "பாப்"(BAB) என்று மாற்றிக்கொண்டார்.இவரே பஹாய் மதத்தின் ஆரம்ப கர்த்தா.இவரைப் பின்பற்றியே பஹாவுல்லாஹ் பஹாய் மதத்தை ஆரம்பித்தார்.

பஹாய் மதத்தில் உள்ளவர்கள் அலி முஹம்மத் ஷிராசி நபி இல்யாஸ் (அலை) மற்றும் நபி ஸகரிய (அலை) அவர்களின் ஆன்மீகத் திரும்பல் என்று நம்புகின்றனர்.அப்போதைய இரானின் பிரதம மந்திரி அமீர் கபீர் அவர்களால் மரணதண்டனை வழங்கப்பட்டு தப்ரிஸ் நகரில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.இன்று இவரின் நினைவாக இஸ்ரேலில் பாரிய நினைவுச்சின்னம் ஒன்று இருக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:26

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
15 ஆம் நூற்றாண்டு
============================



முஹம்மத் ஜான்பூரி
1443 செப்டெம்பர் 09 ஆம் திகதி இந்தியாவின் ஜான்பூரில் பிறந்த முஹம்மத் ஜான்பூரி தான் ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் ஏழாவது இமாமான மூஸா அல் கதீம் அவர்களின் பரம்பரையில் வந்தவர் எனவும் தானே மறுமை நெருங்கும் போது வெளிவரும் வாக்களிக்கப்பட்ட மஹ்தி எனவும் வாதிட்டார்.இவர் இந்த வாதத்தை மூன்று இடங்களில் கூறினார்,மக்காவில் ஒரு முறையும் இந்தியாவில் இரு முறையும் தானே மஹ்தி என்றார்.

65 ஆவது வயதில் காலமான முஹம்மத் ஜான்பூரியை இமாம் மஹ்தியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றும் மக்களை "மஹ்தாவி" என அழைக்கின்றனர்.இவர்கள் பெரும்பாலும் இந்திய பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக வசிக்கின்றனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் "சிக்ரி" (zikri) பிரிவினரும் இவரையே இமாம் மஹ்தி என ஏற்றுக்கொள்கின்றனர்.



17 ஆம் நூற்றாண்டு

அஹ்மத் இப்னு அபி மஹல்லி
மொரோக்கோவின் தெற்கு பிராந்தியத்தில் பிறந்த அஹ்மத் இப்னு அபி மஹல்லி ஒரு காதி நீதிபதியாவார்.சாதி பரம்பரையின் (SAADI DYNASTY) ஆட்சிக்கெதிராக போர்க்கொடி தூக்கிய கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் ஒருவர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:26

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
9 ஆம் நூற்றாண்டு
============================


9 ஆம் நூற்றாண்டு


முஹம்மத் இப்னு ஹசன் இப்னு அலி

முஹம்மத் அல் மஹ்தி என்ற பெயரில் பிரசித்தி பெற்ற முஹம்மத் இப்னு ஹசன் இப்னு அலி ஷியாக்களின் பதினோராவது இமாமான ஹசன் அல் அஸ்கரி அவர்களின் மகனாவார்.ஹிஜ்ரி 255 இல் பிறந்த இவர் ஷியாக்களின் நம்பிக்கைப் படி இன்றுவரை மறைந்தே வாழ்ந்துவருகிறார்.ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் நம்பிக்கைப்படி இவர் மறுமை நெருங்கும் போது மறுமையின் அடையாளங்களில் ஒருவராக வெளிவருவார் என கூறப்படுகிறது.இவருக்கு 5 வயது இருக்கும் போது 12 ஆவது இமாமாக தெரிவு செய்யப்பட்டார். ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் நம்பிக்கைப் படி ஹிஜ்ரி 329 முதல் இவர் மறைந்தே வாழ்வதாக கூறப்படுகிறது.

ஆனால் சுன்னிகளான நமது இமாம் மஹ்தி (அலை) தொடர்பான நம்பிக்கைப் ஷியாக்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:26

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
12 ஆம் நூற்றாண்டு
============================
இப்னு தூமார்ட்
அல் மோராவிட்ஸ் கிலாபாத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்து அல் முகாத் என்ற கிலாபாத்தை நிறுவிய அபூ அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு தூமர்ட் தன்னை வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் தான் எல்லா பாவங்களிலிருந்தும் மீட்சி பெற்றவர் என்றும் அறிவித்தார்.

இப்னு தூமார்டின் தர்கா - மொரோக்கோ


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:27

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
8 ஆம் நூற்றாண்டு
============================

ஸாலிஹ் இன்பு தரீப்
இந்த ஸாலிஹ் இன்பு தரீப் என்பவன் பர்காவதா ஒன்றியத்தின் (Barghawata) இரண்டாம் மன்னன் ஆவான்.இந்த ஒன்றியம் காரிஜியாக்களின் ஒரு பிரிவான சுப்ரி இயக்கத்துடன் இணைந்து உமையாக்களுக்கு எதிராக பேபர் (Beber) இனத்தவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நாடாகும்.இது இன்றைய மொரோக்கோவில் அட்லாண்டிக் கடற்கரை ஓரமாக அமைந்திருந்தது.

உமையாக்களின் கலீபாவான ஹிஷாம் இன்பு அப்துல் மாலிக் அவர்களின் காலத்தில் தோன்றிய இந்த ஸாலிஹ் இப்னு தரீப் தான் புதிதாகத் தோன்றிய மதத்தின் தீர்க்கதரிசி என அறிவித்துக் கொண்டான்.தனக்கு இறைவனிடமிருந்து புதிய வெளிப்பாடு அதாவது ஒரு புனித நூல் ஒன்று அருளப்பட்டதாகவும் அது 80 அத்தியாயங்களைக் கொண்டதாகவும் உள்ளதாக அறிவித்தான்.அரேபிய வரலாற்றாசிரியர் இப்னு கல்தூனின் தகவல்களுக்கு அமைய ஸாலிஹ் இன்பு தரீப் தன்னை ஒரு புதிய மதத்தின் நபியாக அறிவித்துக் கொண்டு இறைவனிடமிருந்து தனக்கு 80 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு புதிய புனித நூல் அருளப்பட்டதாக அறிவித்தான்.ஐந்து நேர தொழுகைக்குப் பதிலாக அவன் பத்து வேளை தொழுகையை நிறைவேற்றுமாறு மக்களை பணித்தான். அவன் தன்னைப் பின்பற்றும் மக்களை நிர்வாகம் செய்ய அவனே புதிய சட்டங்களை உருவாக்கினான்.இவைப் பின்பற்றிய மக்கள் சாலிஹை "ஸாலிஹ் அல் மூமினின்" என அழைத்தனர்.மேலும் அவன் அவனே வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் நபி ஈஸா (அலை) தனக்கு முன்னாள் இருந்து தொழுகை நிறைவேற்றுவதாகவும் அறிவித்தான்.

ரமலான் மாதத்தில் நோன்பு பிடிப்பதற்கு பதிலாக ரஜப் மாதத்தில் நோன்பு பிடிக்குமாறு மக்களை அறிவித்தான்.தொழுகையை பத்து வேலையாக மாற்றிய இவன் வுழு செய்யும் முறையையும் மாற்றினான்.இஸ்லாத்தின் பல சட்ட திட்டங்களை மாற்றிய இந்த ஸாலிஹ் இப்னு தரீபின் புதிய மதம் பதினோராம் நூற்றாண்டில் அல்மோராவிட்ஸ்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு முஆவியா
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்களில் ஒருவரான அபுதாலிப் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மகனும் அலி (ரலி) அவர்களின் மூத்த சகோதரரான ஜபார் இப்னு அபூதாலிப் அவர்களின் பரம்பரையில் வந்தவர்தான் இந்த அப்துல்லாஹ் இப்னு முஆவியா.127 வது ஹிஜ்ரி ஆண்டின் இறுதிப் பகுதியில் கூபாவிலுள்ள ஷியாக்கள் இவரை தாங்களின் இமாமாக நியமித்துக் கொண்டனர்.உமையாக்களின் கலீபாவான மூன்றாம் யசீதுக்கு எதிராக புரட்சி செய்து இன்றைய ஈரானின் மேற்குப் பகுதியை இரண்டு வருடங்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கி.பி.747 இல் உமையாக்களினால் தோற்கடிக்கப்பட்ட அப்துல்லாஹ் இப்னு முஆவியா குராசானில் ஒரு சிறையில் காலமானார்.ஆனால் அவரை இமாமாக ஏற்று பின்பற்றியவர்கள் இப்னு முஆவியா மரணிக்கவில்லை என்றும் அவர் மறுமை நெருங்கும் போது இமாம் மஹ்தியாக வெளிவருவார் என்றும் நம்புகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:27

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு 24297_154807328014689_737246182_n
நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
19 ஆம் நூற்றாண்டு
============================


இந்த நூற்றாண்டில் முன்னைய நூற்றாண்டுகளை விட பலர் நான் தான் இமாம் மஹ்தி என உரிமை கொண்டாடினர்.


டிபோநேகோரோ எனப்படும் முஸ்தகார்


முஸ்தகார் இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்தில் இருந்த யோகிகர்தா (YOGYKARTA SULTHAN ) இன் இளவரசர்களில் ஒருவர்.இவரது தந்தை இறந்ததற்குப் பின் இவரது சகோதர் ஒல்லாந்தர்கள் சார்பாக நடந்துகொண்டமை இவரது எழுச்சிக்கு காரணமாக இருந்தது.உள்ளூர் மக்களின் பாரிய ஆதரவுடன் ஒல்லாந்தர்களுக்கு எதிராக போராடினர்.கிருஸ்தவர்களுக்கு எதிராக போராட தான் ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்த ஓர் சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் நினைத்தார்.மேலும் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் ஜாவா பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாய்வழிக் கதைகளில் குறிப்பிடப்படும் "ரது ஆதில்" (RATU ADIL) லும் அவரே என நினைத்தார்.

1830 இல் ஒல்லந்தர்களால் சமாதான பேச்சுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட முஸ்தகார் ஒல்லந்தர்களால் நாடு கடத்தப்பட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 17:28

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.
10 ஆம் நூற்றாண்டு
============================

அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ்
அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் பாதிமிய்யாஹ் கிலாபாத்தின் முதல் கலீபா ஆவர்.பாதிமிய்யாஹ் கிலாபாத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இவர் தன்னை இமாமாக அறிவித்துக்கொண்டார்.இவர் ஷியாக்களின் இஸ்மாயிலியா பிரிவைச் சேர்ந்தவர்.தன்னைத்தானே இமாமாக அறிவித்துக்கொண்ட அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளான பாத்திமா (ரலி) அவர்களின் மகனான ஹுசைன் (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்தவர் என வாதிட்டார்.அபூ அப்துல்லாஹ் அல் ஷி என்ற இஸ்மாயிலிய ஷியா மத பெரியார் ஒருவரே இவரை மக்தியாக அறிவித்தார்.இவர்களின் இந்த பாதிமிய்யாஹ் கிலாபா மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு Empty Re: நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள். 21 ஆம் நூற்றாண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum