Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
16 மணிநேரம் மின்வெட்டு
Page 1 of 1
16 மணிநேரம் மின்வெட்டு
16 மணிநேரம் மின்வெட்டு
கோடைகாலம்
துவங்கியதால், மின் தேவை அதிகரிக்கும் நிலையில், வறட்சி காரணமாக மின்
உற்பத்தியும் பாதித்ததால், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நேற்று, 2,923
மெகா வாட் ஆக உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுவதுடன்,
தொழிற்சாலைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி முடங்கும்
அபாயம் ஏற்பட்டுள் ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக
தினமும், 14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
மின்
உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், 2008 மார்ச் மாதம் முதல், தமிழகத்தில்
மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. மின் பற்றாக்குறையால், 2008 செப்.,
1 முதல் மின்தடை நடைமுறைக்கு வந்தது. இம்மாதம் 13ம் தேதி, 11,132 மெகா
வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் தேவை கடந்த, 20ம் தேதி 11,515 ஆகவும்,
நேற்று காலை, 11,736 மெகா வாட் ஆகவும் அதிகரித்தது. ஒரு வாரத்தில் மின்
தேவை, 600 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது. தமிழக அனல் மின் நிலையங்கள்
மூலம், 2,655 மெகா வாட், நீர் மின் நிலையங்களில், 663 மெகா வாட், மத்திய
மின் தொகுப்பில் இருந்து, 2,243 மெகா வாட் மற்றும் தனியார், மரபுசாரா மின்
உற்பத்தி மூலம், 8,813 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.
பற்றாக்குறை
இம்மாதம்
13ம் தேதி, 2,198 மெகா வாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் பற்றாக்குறை,
கடந்த, 20ம் தேதி 2,865 ஆகவும், நேற்று காலை, 2,923 மெகா வாட் ஆகவும்
அதிகரித்தது. இதனால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் சில நாட்களாக தினமும்,
14 முதல், 16 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி,
கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தினமும் சராசரியாக, 14 மணிநேரம்
மின்தடை செய்யப்படுகிறது. அதிகரிக்கும் மின் தடையால் தினமும், ஆயிரம் கோடி
ரூபாய்க்கு மேலாக உற்பத்தி முடங்குகிறது. பின்னலாடை நகரமான திருப்பூரில்,
காலை, 6:00 மணி முதல், 9:00மணி வரையும், மதியம், 12:00 முதல், 4:00 மணி
வரையிலும், மாலை 6:00 மணிக்கு மேல் இரவு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என,
அதிகபட்சம், 14 மணிநேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. ஒரு வாரத்துக்கு
முன் மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், 420 மெகா வாட், வல்லூரில், 360
மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டது. இரு
யூனிட்களிலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக
நிறுத்தப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணம்.
காற்றாலை உற்பத்தி "பூஜ்யம்”
மொத்தம்
7,130 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட, காற்றாலைகள் மூலம், சில நாட்களாக
சராசரியாக, 100 முதல், 200 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. நேற்று காலை
காற்றின் வேகமும் குறைந்து விட்டதால், காற்றாலைகள் மின் உற்பத்தி பூஜ்யமாகி
விட்டது. முன்அறிவிப்பு இன்றி திடீர், திடீரென மின்தடை செய்வதால்,
வீடுகளில் குறித்த நேரத்தில் சமையல், இயந்திரத்தில் துணி துவைப்பது போன்ற
பணிகளை முடிக்க இயலாமல், இல்லத்தரசிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்ற னர். மின்
தடையை சமாளிக்க பலர் வீடுகளில்இன்வெர்ட்டர் பொருத்தியுள்ளனர்.
இன்வெர்ட்டர் பேட்டரி சார்ஜ் ஆவதற்கு, ஐந்து மணிநேரம் தேவை. தொடர்ந்து
ஐந்து மணிநேரம் கூட மின் வினியோகம் இல்லாததால், இன்வெர்ட்டர்
பொருத்தியவர்களும் அவதிப்படுகின்றனர். ஒரே ஆண்டில் டீசல் லிட்டருக்கு,
எட்டு ரூபாய் தொழிற்சாலைகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் அவதி
பிளஸ் 2 தேர்வு முடிவடையும் நிலையில், இம்மாதம் 27ம் தேதி முதல்,
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி
வருகின்றனர். ஆனால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை செய்வதால்,
மாணவ, மாணவியர் இரவு நேரத்தில் படிக்க முடியாமல், மன உளைச்சலால்
பாதிக்கப்படுகின்றனர்.
தினமலர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum