சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனிஷா பஞ்சகம்
by rammalar Yesterday at 20:20

» இதுதான் திருமணம்
by rammalar Yesterday at 20:16

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:15

» ஒரு நல்ல சிரிப்பு & ஒரு நீண்ட தூக்கம் -இரண்டும் சிறந்தது!
by rammalar Yesterday at 20:07

» உப்பு போல இரு!
by rammalar Yesterday at 19:59

» தீபாவளிக்கு மோத வரும் 3 படங்கள்
by rammalar Yesterday at 19:47

» 1982 அன்பரசின் காதல்- விமர்சனம்
by rammalar Yesterday at 19:46

» இயக்குனராக அறிமுகமாகும் இயக்குனர் இமையத்தின் மகன்!
by rammalar Yesterday at 19:42

» ’லவ் டுடே’ இந்தி ரீமேக்
by rammalar Yesterday at 19:40

» அதிக படங்களில் திரிஷா
by rammalar Yesterday at 19:38

» 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்கும் பாவனா
by rammalar Yesterday at 19:36

» மாமன்னன் திரைப்படத்தின் 2ஆவது பாடல் ‘ஜிகு ஜிகு ரயில்’ வெளியாகியுள்ளது
by rammalar Yesterday at 13:20

» டிகிரி காபி மாதிரி வாழ்க்கை மணக்கணும்!
by rammalar Yesterday at 9:45

» வெட்டுக்கிளிகளை கண்டு அஞ்சும் தலைமுறை...!
by rammalar Yesterday at 9:34

» சிவபெருமானின் தமிழ் பெயருக்கு இணையான வடமொழிப் பெயர்
by rammalar Yesterday at 6:35

» பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவான வரலாறு
by rammalar Yesterday at 6:21

» விரைவான தகவல் தொடர்புக்கு…!
by rammalar Yesterday at 5:43

» நல்ல எண்ணம் நல்வாழ்வைத் தரும்
by rammalar Yesterday at 5:38

» அன்பே கடவுள்!
by rammalar Yesterday at 5:34

» பல்சுவை
by rammalar Fri 26 May 2023 - 19:46

» விரைவான தகவல் தொடர்புக்கு...
by rammalar Fri 26 May 2023 - 19:37

» நீ நீயாகவே இரு.
by rammalar Fri 26 May 2023 - 17:10

» தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ்!!
by rammalar Thu 25 May 2023 - 17:57

» இந்த வாரம் வரவிருக்கும் திரைப்படங்கள்
by rammalar Thu 25 May 2023 - 17:56

» இஞ்சி மிட்டாய் ஐஸ்கிரீம்
by rammalar Thu 25 May 2023 - 17:40

» நம்பிக்கை!
by rammalar Thu 25 May 2023 - 17:19

» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
by rammalar Thu 25 May 2023 - 17:14

» ஆபரேசன் தியேட்டர் என்பதற்குப் பதிலா ‘ஆடு களம்’ னு எழுதி இருக்கே!
by rammalar Thu 25 May 2023 - 17:09

» தலைவருக்கு கிரிமினல் மூளை!
by rammalar Thu 25 May 2023 - 16:48

» கோலம் போடுறதுல என்ன தப்பு…!
by rammalar Thu 25 May 2023 - 16:44

» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
by rammalar Thu 25 May 2023 - 16:40

» காத்திருக்கும் மனைவி...!
by rammalar Thu 25 May 2023 - 16:32

» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by rammalar Thu 25 May 2023 - 16:26

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 24 May 2023 - 19:25

» கடமைக்கு வாழும் வாழ்க்கை...(படித்ததில் பிடித்தது)
by rammalar Wed 24 May 2023 - 14:24

நம்மிடமிருந்து மறைந்து போன,  நாம் மறந்து போன.... சில மருத்துவ குறிப்புகள்.. Khan11

நம்மிடமிருந்து மறைந்து போன, நாம் மறந்து போன.... சில மருத்துவ குறிப்புகள்..

Go down

நம்மிடமிருந்து மறைந்து போன,  நாம் மறந்து போன.... சில மருத்துவ குறிப்புகள்.. Empty நம்மிடமிருந்து மறைந்து போன, நாம் மறந்து போன.... சில மருத்துவ குறிப்புகள்..

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:06

நம்மிடமிருந்து மறைந்து போன,

நாம் மறந்து போன.... சில மருத்துவ குறிப்புகள்..


..சில இலைகளும், அதன் மருத்துவ குணங்களும்..
நம்மிடமிருந்து மறைந்து போன,  நாம் மறந்து போன.... சில மருத்துவ குறிப்புகள்.. 526581_10151372291648450_1045278895_n

துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.


வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது.


அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடு தான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல் தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது.


அரச இலை:- ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது.


பூவரசு:- தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம். சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.


கல்யாண முருங்கை (முள் முருங்கை) :- அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பிரியும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீரிழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.


வாழைத்தண்டு:- சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னி போல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது. பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டு நாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.


கொத்தமல்லி:- இது நல்ல பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.


கறிவேப்பிலை:- பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.


புதினா:- சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.


கற்பூர வல்லி (ஓமவல்லி) :- மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.


வல்லாரை:- எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.


கண்டங்கத்திரி :- காசநோய், ஆஸ்துமா, மார்புச்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.


தூதுவளை:- நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக். ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூதுவலை நல்லது.


மஞ்சள் கரிசலாங்கண்ணி:- காமாலை, கண் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.


செம்பருத்தி:- மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.


மணத்தக்காளி கீரை:- சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். (World best ointment.)


தும்பை:- பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்புச்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும், வாழைத்தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.


வெங்காயமும், பூண்டும்:- கிருமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.


குப்பைமேனி:- ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.



கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன்...


முடிந்த மட்டும்

மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

யாருக்கேனும் உபயோகமாகலாம்.....

மன்சூர் அலி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum