சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ??? Khan11

கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???

2 posters

Go down

கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ??? Empty கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 11:12

கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???
சுரேஷ் டேவிட்

பதில்;P;J[பீ,ஜெ]

கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ??? 554536_326582467464927_1999161_n

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனையாகும்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு
மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

"அவன்' என்பதற்கு அரபு மொழியில்
"ஹூவ' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அவர்கள் என்பதற்கு ஹூம் என்ற
வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஒருவனைக் குறிப்பது என்றால் ஹூவ என்றும்
பலரைக் குறிப்பது என்றால் ஹூம் என்றும் கூறுவார்கள். மரியாதைக்காக ஒருவனைக்
குறிக்கும் போது (ஹூம்) அவர்கள் என்று கூறவே மாட்டார்கள்.


அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூவ' என்று தான் குர்ஆனில்
பயன்படுத்தியுள்ளான். மரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று அவன்
பயன்படுத்தவில்லை.

அது போலவே இப்லீஸ், பிர்அவ்ன் போன்ற தீயவர்களுக்கும் ஹூவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் "ஹூவ'
என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு
மொழியில் கிடையாது.

"ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது பலரைப்
பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று
தான் அரபுகள் விளங்குவார்களே தவிர அவர் மரியாதைக்குரியவரா? இல்லையா?
என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்: இதே போல்
ஆங்கிலத்தில் He என்ற வார்த்தை ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது.
They(அவர்கள்) என்பது பலரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. மரியாதைக்காக
ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது They என்று குறிப்பிடுவதில்லை. இன்னும்
ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியைப்
பொருத்த வரை ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. "அவன்' என்பது
ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ்
இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.


ஒரு நபரைக் குறிப்பிடுவதற்குப் பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை
மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமாக மாறி விட்டது.
ஒருவரைக் குறிப்பிட அவர் என்ற பன்மைச் சொல்லைப் பயன்படுத்தலானார்கள்.
அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்றனர்.

மரியாதை கொடுக்க தகுதி இல்லாதவரைக் குறிப்பிடும் போது அவன் எனவும்,
மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரைக் குறிப்பிடும் போது அவர் எனவும் அதிகம்
மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் மாற்றிக் கொண்டனர்.

தமிழில் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள்
எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் தமிழில் அவன் என்றே
குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான். கம்பன் கூறுகிறான். ராமன் வில்லை ஒடித்தான்.
என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம். அதே போலவே கடவுளைக்
குறிக்கும் போதும் அவன் நீ என்று தான் குறிப்பிடப்பட்டது. மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே இலக்கியங்களில் அவன் என்று கடவுள்
குறிப்பிடப்பட்டதால் அதுவே தொடர்ந்து வருகிறது.

மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ்
இலக்கியத்திற்கு அறிமுகமானததால் "அவர்கள்' எனக் கூறப்பட்டனர்.


கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.
கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம். இதற்குக்
காரணம் கருணாநிதி மரியாதைப் பன்மை வழக்கமாகி விட்ட காலத்தில் வாழ்கிறார்.
கம்பன் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் வாழ்ந்தான்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள்
நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.
மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன்னரே கடவுள் அவன் என்றும் நீ
என்றும் குறிப்பிடப்பட்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள்
என்பது தான் இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று கூறுகின்ற
முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட
அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம். எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும்
கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான்.

அவன் என்று கூறுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் "அவர்' என்பதும் அவர்கள் என்பதும் பலரைக் குறிக்கின்ற சொல்லாகும்.

அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட
ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி
விட்டால் எதிர்காலத்தில் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று
நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து
விடும். ஒருவன் என்ற கூறுவது தான் முக்கியமானது என்பதால் அவன் என்று
கூறுவதை தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.
அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.

அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.

மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் "அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ??? Empty Re: கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???

Post by விஜய் Sat 30 Mar 2013 - 16:04

நல்ல தகவல் நன்றி அண்ணா கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ??? 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum