Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
Page 1 of 1
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
ஒரு பக்கம் மாண்டு போன நாகரீகத்தை, இனங்களின் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்க, அது அழிந்த கதைகளை பக்க பக்கமாய் எழுதி கொண்டிருக்கிறோம். மறுபுறம் தங்கள் கலாசாரங்களை, தம் மதங்களை தம் மக்களின் அடையாளங்களை அழிந்து போகாமல் இருக்க காக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்."இத்தகைய முயற்சிகள் பலன் அளிக்குமா?" மாண்டு போன கலாசாரங்கள் "உலகில் நிலையானது என்று எதுவுமில்லை" என்ற தத்துவத்தையே போதிக்கிறது.
இயற்கைக்கு முன்னால் எதுவும் தன்னை காப்பாற்றி கொள்ள இயலாது என்பதே உண்மை. ஆனாலும் மனிதர்கள் தம் கலாசாரத்தை, அடையாளத்தை, மொழியை, மதத்தை பேண போராடுகிறார்கள். அந்த போராட்டம் பலனளிக்குமா? நேர்மையான ஆய்வும், அதனால்சரியான பாடமும் கற்று கொண்டால் நம் அடையாளத்தை காக்கலாம் - அதுவும் ஓரளவுக்கேனும் தான். தம்மைதமிழர்கள் என்பதை மறுத்து திராவிடர்கள் என்று சொல்லி கொள்பவர்களுக்கு"நேர்மையான ஆய்வும், அதனால் சரியான பாடமும் கற்று" கொள்ளும் மனநிலை உள்ளதா?
தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பதிலாவது ஒற்றுமையாக இருக்கிறதா தமிழ்ச்சமுகம். எப்படி இருக்கும். தம்மை எப்படி அழைப்பது (தமிழனா, திராவிடனா) என்பதிலேயே அவனிடம் ஒற்றுமை இல்லையே. ஒற்றுமை தான் இல்லை. இந்த ஆய்வை வெளிக்கொண்ர் வதிலாவது ஒற்றுமையோ, கருத்துகளில் - உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அவாவது உள்ளதா? எதுவும் இல்லை. வழக்கம் போல தமிழர்கள் தம் அடையாளத்தை பேணுவதில் இரண்டாக பிளவுபட்டிருக்கிறார்கள்.
இயற்கைக்கு முன்னால் எதுவும் தன்னை காப்பாற்றி கொள்ள இயலாது என்பதே உண்மை. ஆனாலும் மனிதர்கள் தம் கலாசாரத்தை, அடையாளத்தை, மொழியை, மதத்தை பேண போராடுகிறார்கள். அந்த போராட்டம் பலனளிக்குமா? நேர்மையான ஆய்வும், அதனால்சரியான பாடமும் கற்று கொண்டால் நம் அடையாளத்தை காக்கலாம் - அதுவும் ஓரளவுக்கேனும் தான். தம்மைதமிழர்கள் என்பதை மறுத்து திராவிடர்கள் என்று சொல்லி கொள்பவர்களுக்கு"நேர்மையான ஆய்வும், அதனால் சரியான பாடமும் கற்று" கொள்ளும் மனநிலை உள்ளதா?
தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பதிலாவது ஒற்றுமையாக இருக்கிறதா தமிழ்ச்சமுகம். எப்படி இருக்கும். தம்மை எப்படி அழைப்பது (தமிழனா, திராவிடனா) என்பதிலேயே அவனிடம் ஒற்றுமை இல்லையே. ஒற்றுமை தான் இல்லை. இந்த ஆய்வை வெளிக்கொண்ர் வதிலாவது ஒற்றுமையோ, கருத்துகளில் - உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அவாவது உள்ளதா? எதுவும் இல்லை. வழக்கம் போல தமிழர்கள் தம் அடையாளத்தை பேணுவதில் இரண்டாக பிளவுபட்டிருக்கிறார்கள்.
Re: கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
ஒரு பிரிவுக்கு மதம் சார்ந்த விஷயங்களே அடையாளமாக, கலாசாரமாக தெரிகிறது. பிற அடையாளங்கள் அழிவதில், மொழி சிதைவதில் யாதொரு அக்கறையும் இல்லை. மற்றொருபிரிவு இதற்கு முற்றிலும் மாறுபட்டு... மதத்தை தவிர பிற அடையாளங்களை மாத்திரமே தமிழர் அடையாளமாக முன் வைக்கிறது.இந்த நூற்றாண்டில் மதம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்தும் செல்லாக்காசாக மாறி வருகிற நிலை. ஆனாலும்,யாருக்கு எது தேவையோ அதை மட்டுமே முன்னிறுத்தி"காக்கப்பட வேண்டும்" என்கிற கருத்தை முன் வைக்கிறார்கள்.
தமிழ் கலாசாரம் அழிவது, அதை ஆக்ரமித்த பல்வேறு மதம் குறித்த ஒரு கட்டுரையை வாசித்தேன். ஓரளவுக்கு நேர்மையாக சொன்னது. எஸ்.ராமகிருஷணன் எழுதியதில் ஒரு பத்தி."இந்த நூற்றாண்டில் தவறுகள் இல்லை. எல்லாமே விவாதத்திற்குட்பட்டு, கேள்விக்குட்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படக் கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு வரலாறு என்பது உண்மை பேசுபவர்களுக்கான ஒரு விஷயம் மட்டும் கிடையாது. உண்மையைச் சொல்வதற்கான _ உண்மையை அறிவதற்கான ஒரு தேடும் வழி. இந்த உண்மையைத் தேடுகிற எல்லோருமே வரலாற்றைத் தேடுகிறவர்கள்தான். ஆனால்,என்ன உண்மையென்று அவர்கள் சொல்லும்போதுதான் அவர்கள்யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரியும்" என்கிறார்.
மிக சரியாக சொல்லி இருக்கிறார். உண்மைக்கு மாறான தகவல்களை ஒருவர் வரலாறாக மாற்ற முனையும்போது தான் தெரிகிறது "வரலாறுகளில் பாதி பொய்களே" என்று. வரலாற்றை பக்க பக்கமாக உண்மை இல்லாமலே எழுத முனைகிறார்கள். வரலாறு பற்றி பேசுபவர்களின் நிகழ்காலமே - அவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாஇல்லையா என்று பார்த்து, அவர்கள் எழுதுவதை படிப்பதா, வேண்டாமா என்கிறயோசனையை தோற்றுவிக்கிறது.
Re: கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
சில மாதங்களுக்கு முன்னால் தமிழ் பெயர் வைப்பதிலும் தமிழ் கலாசாரத்தின் உயிருள்ளது என்றொருவர் தம் கட்டுரையை துவக்கி - தமிழர்களின் பெயர்கள், தலைமுறைக்குள்ளேயே உருமாறி தமிழ் பெயர்கள் சிதைவதை இப்படி சொன்னார்.
அபிஷேக், த/பெ மாறன்...
தனுஜா, த/பெ அழகிரி...
ஸ்ரீ சைதன்யா, த/பெ விஜயன்...
ராகேஷ், த/பெ அறிவழகன்... என்பதாக தூய தமிழ் பெயர்களில் இருந்து வடமொழிக்கு தமிழர்களின் பெயர்கள் மாறுகிறது என்று ஆதங்கப்பட்டார். நல்ல விஷயமான அதற்கு, அந்த பதிவுக்கு நான் மறுமொழியிட்டேன்.
ஸ்டாலின், த/பெ கருணாநிதி...
டேவிட், த/பெ சண்முகம்,
மார்க்ஸ், த/பெ போஸ்,
ஏஞ்சல், த/பெ சரவணன் என்றெல்லாமும் கூட பெயர்கள் தமிழுக்கு சம்பந்தமில்லாத மொழிகளில்உருமாறுகிறது. அதனாலும் தமிழ் பெயர்கள், தமிழ் கலாசாரம் அழியப்படும். இதையும் தங்கள் கட்டுரையில் விரும்பினால்இணைக்கலாம் என்று எழுதினேன். அவர் மறுமொழியையும் இணைக்கவில்லை. எம் குறிப்பையும் கட்டுரையில்சேர்க்கவில்லை. வட மொழி சொற்களுக்கு ஒரு நியாயம், பிற மொழி சொற்களுக்கு ஒரு நியாயம்.
ஆக, நாம் எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போட்டு கொண்டு கலாசாரத்தை காக்க புறப்படுகிறோம். அது யாதொரு பலனையும் தராது. நாம் என்றோ தமிழர்களின் அடையாளம் அழிய காரணமாக இருந்த பார்ப்பனியத்தை இன்றும் சாடிக் கொண்டிருக்கிறோம். தவறில்லை. ஆனால் இன்று தமிழர்களின் அடையாளத்தை, தமிழர்களின் பெருமைகளை இருட்டடிப்பு செய்யும் பல் வேறு விஷயங்களை கண்டும் காணாமல் இருக்கிறோம்.
Re: கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?
ஒரு தமிழ் பண்பாட்டு ஆர்வலர் வேதனையுடன் சொன்னது. "நாம் புறநானூறு வீரத்தை பற்றி பெருமையாக பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு சேகுவாராவை தவிர வேறு எதுவும் தெரியாது" என்றார். வந்தேறிகளின் மதமோ, கலாசாரம் மட்டுமே ஒரு நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை மாற்ற சொல்வதாக இருந்தது அவரது கருத்து. தமிழர்களின் பண்பாட்டை சிதறடிக்க நிறைய விஷயங்கள் வந்தாயிற்று. நாம் அதை ஆராய முனைவதில்லை. எல்லா நாகரீகமும் அழியும் போதும் இது தான் நடந்தது.
தமிழர்களின் உலகம் கலாசாரம் நாகரீகம் என்பது வேறு. அவன் எந்த ஒரு கருத்தை வைப்பதாக இருந்தாலும் உலக பொது மறையாம் திருக்குறளில் இருந்தே மேற் கொள் காட்டுவான்.
கம்யூனிஸ்ட்கள்"மூலதனத்தில்" இருந்து மேற்கோள் காட்டுவார்கள். எந்த மதத்தவரும் தங்கள் வேதப்புத்தகத்தை தாண்டி, வேறு ஒரு கருத்தை முன் வைக்க நினைக்கவும் மாட்டார்கள். திராவிடர்களுக்கு பெரியார் கருத்துகளே வேத வாக்கு. இன்றைக்காவது திருக்குறளை பற்றி பேச சிலராவது இருக்கிறார்கள்.
வந்தேறிகளின் மதங்களும் மற்றும் சோஷலிச கொள்கைகளும் தவிர்க்கப்படமுடியாத சக்தியாகும்போது - தமிழர்களின் அடையாளம் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த ஒரு இனத்தின் அடையாளமும் கேள்விக்குறியாகும். ஒன்றுமற்றொன்றை அழிப்பதற்கே பிறக்கிறது - இறந்த நாகரீகமும் இருக்கிற நாகரீகமும் அதையே எடுத்துரைக்கிறது. அரபுலகம் போல இரும்பு திரைசட்டங்களை இயற்றினால் - கலாசாரங்கள், அடையாளங்கள் பிழைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சோஷலிச நாடுகளிலேயே அத்தகைய சட்டங்கள் இயலாத விஷயங்களாக ஆகிவிட்டபோது - ஜனநாயகம் பேணும் நாடுகளில் அது சாத்தியமில்லையே.
புதியன புகுதலும், பழையன கழிதலும் என்பது நாகரீகங்களுக்கும் பொருந்தக்கூடியவையே. எந்த ஒரு புது நாகரீகமும் தமக்கு முன்னால் இருந்த நாகரீகத்தை"காட்டுமிராண்டிகளின் நாகரீகம்" என்று சொல்ல தவறியதே இல்லை.
நன்றி/http://oosssai.blogspot.com/2013/04/blog-post_2.html
Similar topics
» எந்த பூவிலும் இல்லாத புதுமை குங்குமபூவில் உள்ளதா..?.. சுகப்பிரசவத்தில் குழந்தை பெற இயலுமா..?
» கிரீசை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் முன்வருமா
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
» மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
» கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்
» கிரீசை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் முன்வருமா
» குடும்பத்தைக் காப்பாற்ற எளிய வழி!
» மீனுவ காப்பாற்ற யாருமே இல்லயா..
» கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum