Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
சேட்டை விமர்சனம்
3 posters
Page 1 of 1
சேட்டை விமர்சனம்
ஆர்யாவும் ப்ரேம்ஜியும் மும்பையில் ஒரு கார்ப்பரேசன் குப்பைத்தொட்டி போன்ற ரூமில் ரூம்மேட்ஸ். ஆர்யாவின் வேலை ஒரு பத்திரிக்கை ரிப்போர்டர். அந்த அருவருப்பானரூமில் தானாய் வந்து வலையில் விழுந்து ஒட்டிக்கொள்கிறார் சந்தானம். ஆனால் ஆர்யாவின் காதலியோ ஹைகிளாஸ்ஹன்சிகா. ஏர் ஹோஸ்டஸாய் வேலை. அவர் தன் ஃப்ரெண்டு ஒருத்தி சாதாரணமாய் கேட்டஒரு சின்ன உதவியைசெய்யப் போக அதுதான் கதையை ஆரம்பித்து வைக்கிறது. அதாவது ஏர்போர்டில் ஒரு பார்சலை வாங்கி ஒரு அட்ரஸில் குடுக்கும் உதவி.
வேலை முடிந்ததும்நேராய் யூனிபார்ம் கூட மாற்றாமல் தன் காதலன் ஆர்யாவின்ரூமுக்கு வந்து ரூம்மேட்கள் முன்னாலேயே கொஞ்சி விட்டு, போகிற போக்கில் தன் ஃப்ரென்டுக்கான பார்சலை ஆர்யாவிடம் குடுத்து அந்த அட்ரஸில் குடுக்கசொல்ல, ஆர்யா சந்தானத்திடம் குடுக்க, ஒரு ரோட்டோர சிக்கனை சாப்பிட்டு லூஸ்மோசனில் அலையும் சந்தானம்அந்த பார்சலை ப்ரேம்ஜியிடம் குடுக்க, ப்ரேம்ஜி ஒரு குழப்பத்தில் பார்சலை மாற்றிக்குடுத்துவிட.. பார்சலுக்காக காத்திருக்கும் தாதா நாசர் கடுப்பாக அதன் தொடர்சியான சம்பவங்கள் தான் கதை. இடையில் இன்னொரு ரிப்போர்டராய் வரும் அஞ்சலியுடன் ஒரு லேசான காதல் எபிசோட் ஒன்று.
இந்த படத்தின் பலமே கதைதான். இன்னும் தெளிவாய்சொல்லப்போனால் திரைக்கதைதான். நாம் வழக்கமாய் பார்த்து பழகிய, அல்லது எதிர்பார்க்கும் எந்த சீன்களும் இல்லாமல் இருப்பதுதான் பெரிய பலம். அதற்கு காரணமும் இருக்கிறது. இந்தப் படத்தின் ஒரிஜினலான டெல்லிபெல்லி படத்தின் ஸ்கிரிப்டை எழுதியவர் அக்சத்வர்மா. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கல்லூரியில் சினிமாக் கலை பயிலும் போது அதற்கான ப்ராஜக்டாக எழுதியதுதான் இந்த ஸ்கிரிப்ட். அதனால் தான் நமதுஇந்திய சினிமாவின் தாக்கம் எள்ளவும்இல்லை. பின் பல போராட்டங்களுக்குப் பின் ஆமிர் கானில் தயாரிப்புநிறுவனத்தில் அந்த ஸ்கிரிப்ட் ஓக்கேயானது தனிக்கதை.
இதைத் தமிழ் படுத்திய டைரக்டர் ஆர்.கண்ணனும் ஸ்கிரிப்டை பெரியஅளவில் எதுவும் மாற்றிவிடவில்லை.சில பாடல்களை மட்டும் இடையில் சொருகி படத்தின் சீரான ஓட்டத்தை சற்று தடைபடுத்தியிருக்கிறார். மற்றபடி கதையும் மும்பையிலேயே நடப்பதாய் வைத்துவிட்டதால் தமிழ் கலாச்சாரத்துக்கென பெரிய மெனக்கெடல் எதுவும் தேவைப்படவில்லை. ஹிந்தி டெல்லி பெல்லியில் இருந்த எல்லாமே அப்ப்ப்ப்ப்ப்படியே இதிலும் இருக்கிறது. கண்ணனின் பலமும் அதுதான் பலவீனமும் அதுதான். இவர் ரீமேக் செய்யும் போது ஒரிஜினிலை எந்த விதத்திலும்சிதைத்துவிடுவதில்லை. இன்னும் கமர்சியலாக்குறேன் பார் என்ற கந்தர்வகோலமெல்லாம் பண்ணி கெடுப்பதில்லை. அப்படியே அதே எஃபக்டை இங்கும் கொண்டுவந்துவிடுகிறார். அதனால் தான் ரீமேக் கிங்என்ற நற்பெயரை சம்பாதித்து பெரிய பட்ஜெட்டில் ரீமேக் என்றால் முதலில் தன் பெயர் தான் வரும்என்ற இடத்தை பிடித்துவிட்டார் ஆர். கண்ணன்.
அதே சமயம் நாம் இன்னொரு விசயத்தையும் நோட் பண்ண வேண்டும். இப்படி ரீமேக் பண்ணும்போது க்ரியேட்டிவ்வாக இவரது பங்களிப்புஎன்று பெரிதாய் எதுவும் இருந்துவிடுவதில்லை. அந்த ஒரிஜினல் படத்தை விட இன்னும் சிறப்பாய் எடுக்கிறேன் என்றஏரியாவுக்கே இவர்போவதில்லை. ஆகவே ஒரு முழுமையான இயக்குனர் என்ற பார்வையில் கண்ணனை இன்னும் பார்க்க முடியவில்லை. அதற்கு அவரது சொந்த சிந்தனையில் உருவாகும் படம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.
ஹன்சிகாவுக்கு பணக்கார காதலி வேடம். இயல்பாய் பொருந்துகிறார். கொஞ்சம் எடையை குறைத்து நமது சந்தோசத்தை கூட்டுகிறார். பெரிய அளவுக்கு கதையிலே காதலிலோ அவருக்கு வேலை இல்லை. உண்மையை சொல்லப்போனால் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பெரிய முக்கியத்துவமெல்லாம் இல்லை. (ஆனால் இன்றைக்குஹன்சிகாவின் அழகுக்கு இருக்கும் டிமாண்டுக்கு அவர் வந்தாலே போதும் என்ற நிலைஎன்பது வேறு விசயம்). திரைக்கதைக்கு தேவைப்பட்ட அளவுக்கு மட்டுமேஒவ்வொரு கதாபாத்திரமும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் திரைக்கதையின் பலமாகிறது. ஆர்யா ஹீரோ என்பதற்காக தனியாய் எந்த பில்டப்பும் இல்லை. ஹீரோயிசமான சண்டைக்காட்சிகள் இல்லை. அவர் அந்த பாத்திரத்துக்கு தேவையானதை கச்சிதமாய் செய்திருக்கிறார்.
அஞ்சலி ஃப்ரஷ்சாகஇருக்கிறார். கலகலப்பில் க்ளாமர் அவதாரம் எடுத்த அவருக்கு இதில் இன்னொரு விதமான தோற்றம்.
தமனின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் சொல்லும் படி இல்லைதான். ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் பண்ணுகிறார்.
ப்ரேம்ஜியின் 'லோ ஹிப்' ஷாட்கள். சந்தானத்தில் அடிவயிறு கலக்கலின் விளைவுகள், அது தொடர்பான பாத்ரூம் டீடெய்லகள், சவுண்ட் எஃபெக்ட்கள் என கொஞ்சமாய் அதிர்ச்சியளிக்கும் காமெடி-நெடிகள் படம் முழுவதும் உண்டு. அதை என்ஜாய் பண்ணுவதும், நெளிவதும் அவரவர்விருப்பம். ஆனால் டெல்லி பெல்லி படத்தில் இருந்த அளவுக்கு ராவான காட்சிகள், டயலாக்குகள் இங்கே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
பெரிய அளவில் ஃபீல் பண்னுவது அல்லது மனதை தொடுவது அல்லது மிரட்சியடைவது இதெற்கெல்லாம் இந்தப் படத்தில் வேலை இல்லை. ஒரு ரெண்டு மணி நேரத்தை போரடிக்காமல், வழக்கமான பார்த்து புளித்தகாட்சிகள் இல்லாமல் கலகலப்பாய் ஓட்டும் நிறைவான படம் இது. பாருங்கள்.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
Re: சேட்டை விமர்சனம்
@.பெரிய அளவில் ஃபீல் பண்னுவது அல்லது மனதை தொடுவது அல்லது மிரட்சியடைவது இதெற்கெல்லாம் இந்தப் படத்தில் வேலை இல்லை. ஒரு ரெண்டு மணி நேரத்தை போரடிக்காமல், வழக்கமான பார்த்து புளித்தகாட்சிகள் இல்லாமல் கலகலப்பாய் ஓட்டும் நிறைவான படம் இது. பாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum