சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Khan11

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

5 posters

Go down

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Empty வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

Post by veel Thu 11 Apr 2013 - 13:00

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!


வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! 548424_464702620264501_2123296644_n
1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில்
நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த
காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள்
கலந்துகொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா
பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா
பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு,
‘ஆனா, தயவுசெஞ்சு கல்யாணத்துக்கு வரணும்னு சிரமப்பட்டுக்காதீங்க.
பிள்ளைங்களை நானே ஒரு நாள் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துர்றேன்!’
என்று பாலீஷாகச் சேதி சொல்லி யிருக்கிறார் வடிவேலு. பத்திரிகை யாளர்களுக்கு
அந்தத் தகவலும் இல்லை. ரசிகர் மன்றத்தினருக்கு ‘வர வேண்டாம்!’ என்று மிகக்
கண்டிப் பான கட்டளை.

மதுரை நகரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருக்கும்
ஒரு மண்டபத்தில், கடந்த ஞாயிறு அன்று நடந்தது திருமணம். மண்டபத்தை புக்
பண்ணும்போதுகூட, எந்த வடிவேலு என்று சொல்லாமல் மண்டபத்தை புக்
செய்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் வடிவேலுவின் வளர்ச்சிக்கு உதவியாக
இருந்த ராஜ்கிரண், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் ‘கண்டிப்பாக நாங்கள்
வருவோம்!’ என்று சொல்லியபோது, ‘சூழ்நிலை அப்படி இருக்குண்ணே. பிள்ளைகளைக்
கூட்டிக்கிட்டு நானே உங்க வீட்டுக்கு வந்திடுறேன்!’ என்றாராம் வடிவேலு.

காலை 9-10 முகூர்த்தத்துக்கு 9.30 மணிக்குத்தான் மேடைக்கே வந்தார்
வடிவேலு. பட்டு வேட்டி, சட்டை அணிந்து அமைதியாக அமர்ந்து திருமணச்
சடங்குகளில் ஈடுபட்டார். மேடைக்கு முன், முதல் வரிசையில் உட்கார்ந்து தன்
பேத்தி யின் திருமணத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்
வடிவேலுவின் அம்மா சரோஜினி அம்மாள்.
மணமகள் அருகே கலகலவென இருந்தார்கள்
வடிவேலுவின் மற்ற இரு மகள்களான கார்த்திகாவும் கலைவாணியும். கார்த்திகா
எம்.பி.ஏ., கலைவாணி எம்.சி.ஏ. பட்டதாரிகள். வடிவேலுவின் ஒரே மகன்
சுப்பிரமணியன், சென்னையில் பி.பி.ஏ. படிக்கிறார்.

காலை 8 மணியில்
இருந்தே ‘மச்சான்’ சடங்குகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த சுப்பிரமணியன், செம
ஸ்டைல் லுக்கில் இருந்தார். வடிவேலுவின் மாப்பிள்ளை சதீஷ்குமார், காமராசர்
பல்கலைக்கழகம் செல்லும் வழியில் இருக்கும் விளாம்பட்டியைச் சேர்ந்தவர்.
எம்.ஃபார்ம். பட்டதாரியான சதீஷ்குமார், மதுரையில் ஒரு மருந்து நிறுவனத்தில்
உயர் பொறுப்பில் இருக் கிறார்.

மகள் கழுத்தில் தாலி ஏறும் வரை
சின்ன பதைபதைப்புடன் இருந்த வடிவேலு, கெட்டிமேளம் உற்சாகமாகக் கொட்டி
முழக்கப்பட்ட பிறகே ரிலாக்ஸானார். அதன் பிறகு, அருகில் இருப்பவர்களுடன்
வழக்கமான கேலி, கிண்டல் மூடுக்கு வந்தார்.

முகூர்த்தத்துக்கு
முந்தைய நாள் இரவு 14 வகை பதார்த்தங்களுடன் விருந்து, முகூர்த்த நாளில் 17
வகை உணவுடன் விருந்து என உறவினர்களைக் குஷிப்படுத்திய வடிவேலு மொய்
வசூலிக்கவில்லை. ”ரொம்ப நாள் கழிச்சு சொந்தக்காரங்களோட சந்தோஷமா இருக்கேன்.
அவங்க வர்றதே பெரிய கௌரவம். மொய் கிய்னுலாம் எதுவும் வாங்கிப்புடாதீங்க!”
என்பது வடிவேலுவின் கட்டளை. திருமணப் பத்திரிகை, தாம்பூலப்பை என எந்த
இடத்திலும் நடிகர் என்ற வார்த்தையை அச்சிடவில்லை. பத்திரிகையிலும் தன்
பெயரை எஸ்.என்.வடிவேலு என்றுதான் பிரசுரித்திருந்தார்.

திருமண
மண்டபத்துக்குப் பின்புறம் கேரவன் ஒன்று நின்றது. யாரேனும் மிக முக்கிய
வி.ஐ.பி. வருவார் என்ற நினைப்புக்கு மாறாக, அதைப் பயன்படுத்தியது
வடிவேலுவேதான். உறவினர்களில் ஒருவராக கேரவனுக்குள் சென்றுவிட்டோம். ”ஏண்ணே…
சினிமாக்காரங்க வரலை?’ என்று இயல்பாகக் கேட்டோம். ”சினிமாக்காரங்களைக்
கூப்பிட்டா, கட்சிக்காரங்களைக் கூப்பிடணும். கட்சின்னா, நமக்கு
தி.மு.க-வும் வேணும். அ.தி.மு.க – வும் வேணும். கலைஞரய்யாவைக் கூப்பிட்டா,
ஜெயலலிதா அம்மாவையும் கூப்பிடணும். அப் புறம் ரசிகர்களையும் கூப்பிடணும்.
தாக்குப் பிடிக்குமாய்யா? அதனாலதான் யாரையும் கூப்பிடலை. மக கல்யாணத்தை
சிம்பிளாதான் வைக்கிறேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். சினிமாவுல
அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சாச்சு. மகன் கல்யாணத்தைத் தடபுடலா வெச்சி
அசத்திப்புடலாம்!” என்று பாந்தமாகச் சிரிக்கிறார் அப்பா வடிவேலு.

- விகடன்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Empty Re: வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 13:05

ரொம்பவே கசப்பான அனுபவத்தை உணர்ந்திருக்கிறார் ...

அருமையா கல்யாணம் பண்ணிட்டிங்க... மணமக்களுக்கு எனது வாழ்த்துகள் ):
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Empty Re: வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

Post by நண்பன் Thu 11 Apr 2013 - 17:03

மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Marriage-life


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Empty Re: வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

Post by எந்திரன் Thu 11 Apr 2013 - 17:53

நண்பன் wrote:மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Marriage-life
எனது வாழ்த்துக்களும் கைப்புள்ள :{ :{ :{
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Empty Re: வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

Post by பானுஷபானா Thu 11 Apr 2013 - 20:53

):
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Empty Re: வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

Post by Muthumohamed Thu 11 Apr 2013 - 21:31

நண்பன் wrote:மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Marriage-life

எனது சார்பாகவும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வடிவேலு வீட்டுக் கல்யாணம்..! Empty Re: வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum