சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முத்துப்பிள்ளை கர்ப்பம். Khan11

முத்துப்பிள்ளை கர்ப்பம்.

Go down

முத்துப்பிள்ளை கர்ப்பம். Empty முத்துப்பிள்ளை கர்ப்பம்.

Post by *சம்ஸ் Sun 21 Apr 2013 - 7:58

முத்துப்பிள்ளை கர்ப்பம். 24928082-d7bf-4119-8ae2-8de08689b2d6_S_secvpf
கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிராமல், குட்டி-குட்டி உருண்டைகளாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் `முத்துப் பிள்ளை' கர்ப்பம். இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம்.

`பெலோப்பியன் குழாய் கர்ப்பம்'........ முதலில் ஒரேயொரு முழு `செல்'லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு-இரண்டாக பிரியும். அதேநேரம் இது பெலோப்பியன் குழாய் வழியாக, மெல்ல-மெல்ல கருப்பையை நோக்கி நகரும். இவை கடைசியாக கருப்பையில் போய் உட்காரும்போது, கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்.

இது ஆரோக்கியமான கர்ப்பம். ஆனால் சில நேரங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், பெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பித்து விடும். இதுதான் `பெலோப்பியன் குழாய் கர்ப்பம்' பெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. பெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது.

நோய்தொற்று காரணமாக சேதமடைந்திருந்தால், பெலோப்பியன் குழாய் சுருங்கி விரியாது. இதுதவிர பெலோப்பியன் குழாய் மேலும் சுருங்கி, கருவின் இயக்கத்தை தடுக்கலாம். ஒருசில பெண்களுக்கு பெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து-நெளிந்தநிலையில்தான் இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் `கரு'வின் இயக்கம், நிச்சயம் தடைபடும். அதுமட்டுமல்ல, இதனால் தாய்-சேய் உயிருக்கே ஆபத்து வரலாம்.

ஊசி நுழையும் அளவு மெல்லிய பெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்? முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். அடுத்தகணமே தாய்க்கு கடும் வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது.

கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால், `முத்துப்பிள்ளை-பெல்லோபியன்' கர்ப்பங்களை ஆரம்பத்திலேயே தவிர்க்கலாம். முதல் ட்ரைமெஸ்டரில் கருவானது, கருப்பையில் அழுத்தமாக தங்கியிராது என்பதால், உடம்பில் அதிர்வுகள் கொஞ்சம் அதிகரித்தாலும், கரு கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆகவே, இந்த காலகட்டத்தில் வெகுதூர பயணம் என்பது, கூடவே கூடாது.

இரண்டாவது ட்ரை-மெஸ்டர்........ இது 4-6 மாதம் வரையிலான காலகட்டம். கர்ப்பிணிக்கு இரண்டாவது ட்ரை-மெஸ்டர் தொடக்கத்தில், அதாவது 4-ம் மாதத்தில் வயிறு சற்றே மேடிட தொடங்கும். தாயின் வயிற்று தசைகளும், தோலும், மார்பகங்களும் கருவின் வளர்ச்சிக்கு உகந்தமாதிரி விரிவடைவதால், இப்படி ஆகிறது.

விரிவடைந்த தோல் பிரசவத்துக்கு பிறகு, மறுபடியும் சுருங்கிவிடும். இப்படி எலாஸ்டிக் போல சுருங்கி விரிவதால்தான், குழந்தை பெற்றுகொண்ட பெண்களுக்கு, மார்பகம்-அடிவயிற்றில் வரி-வரியாக கோடுகள் விழுகின்றன. `குழந்தை ஆணா, பெண்ணா?' என்பதை தீர்மானிக்கும் பிரத்யேக உறுப்புகள் வளர ஆரம்பிப்பது, நான்காம் மாதத்தில்தான்!

ஐந்தாவது மாதத்தில் கரு கிட்டத்தட்ட அரை குழந்தையாகிவிடும். இதனால் உடம்பை அசைத்து, தன்னை சுற்றியுள்ள பனிக்குட நீரில் சுகமாக நீச்சலடிக்க ஆரம்பிக்கும். 5-ம் மாதத்துக்கு மேல் கருவின், ஸாரி.. குழந்தையின் உருவ-உள்ளுறுப்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இதுதவிர புருவ முடி முதல் ஒட்டுமொத்த முகம் வரை, முழுமையாக உருப்பெறும்.

ஆறாவது மாதத்தில் அந்த குழந்தைக்கு மட்டுமே ஆன, தனித்தன்மையுடன்கூடிய கை விரல்களில் ரேகைகள் அமையும். `தொல்லைகளற்ற கர்ப்பகாலம்' என்றால், அது இரண்டாவது ட்ரை-மெஸ்டர்தான். இந்த காலகட்டத்தில் மசக்கை நீங்கி, நன்றாக சாப்பிட முடியும். இதுதவிர உற்சாகமாக சுழலவைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள், அப்போது கர்ப்பிணிக்கு நன்றாக சுரக்கும். இதனால்தான், அந்த பெண்ணின் முகம் பளீரென்று புதுப்பொலிவுடன் பிரகாசிக்கிறது.

மூன்றாவது ட்ரை-மெஸ்டர்.......... இது ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரையிலான காலகட்டம். கர்ப்பிணிக்கு மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்கத்தில் அதாவது, ஏழாம் மாதத்தில் வயிறு பெருத்து விடுவதால் சுலபமாக உட்கார்ந்து எழ முடியாது. மூச்சு வாங்கும். படுத்து எழுவதுகூட, சிரமமாக தோன்றும்.

இதுதவிர இடுப்பு-முதுகில் அவ்வப்போது வலிக்கிற மாதிரி தோன்றும். நேரா-நேரத்துக்கு சாப்பிட்டு, வாக்கிங் போய் வருவது நல்லது. எட்டாவது மாதத்தில் லேசான அசதி இருக்கும்தான். அதேவேளையில் கை-கால் வலி, தலைசுற்றல், கண் இருட்டிக்கொண்டு வருவது மாதிரி பிரச்னைகள் இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும்.

ரத்தப்போக்கு இருந்தாலோ, வலி அதிகம் இருந்தாலோ, வயிற்றில் நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போல உணர்ந்தாலோ, உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. ஒன்பதாவது மாதத்தில், குழந்தை வெளியே வர ஏதுவாக, தலை பாகம் கீழே இருக்கும்படி பொசிஷன் மாறுகிறது. அடுத்தபடியாக பிரசவம்தான்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum