Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி
Page 1 of 1
திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி
திருச்சி, ஏப். 22-
சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் பூமிநாதன் ஓட்டிவந்தார். கண்டக்டராக மதுரையை சேர்ந்த தங்கவேல் (வயது 40) என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்தநிலையில் அந்த பஸ் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திருச்சி நகர் பகுதியான மன்னார்புரம் காந்தி நகர் அருகே ராணுவ பயிற்சி மையம் அருகே வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற சிமெண்ட் கலவை ஏற்றிய லாரி திடீரென நடு ரோட்டில் நின்றது. அந்த சமயம் லாரி மீது பின்னால் வந்த அரசு விரைவு பஸ் வேகமாக மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி அடையாளம் காண முடியாத அளவுக்கு அப்பளம் போல நொறுங்கியது. அத்துடன் முன்வரிசை இருக்கைகள் முற்றிலும் சிதைந்து உருக்கு லைந்தது. இந்த கோர விபத்தில் கண்டக்டர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
அவர்கள் பெயர், விபரம் வருமாறு:-
1.தங்கவேல், கண்டக்டர்.
2.செந்தில்ராணி (45), க/பெ. கணேசன், திருகோணம், மதுரை.
3.சரோஜினி (40), மதுரை.
மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த சீனிவாசன் (42), சென்னை குரோம் பேட்டையை சேர்ந்த தனபால் (37), திருப்பூரை சேர்ந்த ஷீலாதேவி, சிவகாசியை சேர்ந்த பாக்கியலட்சுமி, தண்டபாணி மகன் பிரபாகரன் (11) உள்பட 9 பேர் பலத்த காயமும், 7 பேர் லேசான காய மும் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் இறந்த கண்டக்டர் மற்றும் 2 பெண்கள் உடல்கள் பஸ்சின் இருக்கைக்குள் சிக்கிக்கொண்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்திற்கு காரணமான லாரி கடலூரில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு வந்தது. லாரியின் டிரைவராக விருதாச்சலத்தை சேர்ந்த வீரமணி (23) என்பவரும், கிளீனராக செல்வராஜும் இருந்தனர்.
அதிகாலை நேரத்தில் பாதை தெரியாமல் திருச்சி நகருக்குள் நுழைந்த அந்த லாரியின் டிரைவர் வீரமணி எந்த பாதையில் செல்வது என்று குழம்பியபடி வந்துள்ளார். அப்போது வழிகேட்பதற்காக பின்னால் வந்த வாகனத்தை கவனிக்காமல் நடுரோட்டில் லாரியை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில்தான் அரசு விரைவு பஸ் மோதியுள்ளது.
இதையடுத்து உடனடியாக டிரைவர் வீரமணி எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். விபத்தில் சிக்கிய அரசு விரைவு பஸ்சின் கண்டக்டர் தங்கவேலுவுக்கும், பயணிகளுக்கும் சென்னையில் பஸ் புறப்பட்டதில் இருந்தே வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.
இதுபற்றி சிலர் பஸ் டெப்போவில் புகார் கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இறுதியில் இந்த விபத்தில் கண்டக்டர் பலியாகி விட்டார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum