Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
3 posters
Page 1 of 1
பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
நெல்லை, ஏப். 23-
கடந்த 17-ந்தேதி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் பாரதீய ஜனதா தலைமை அலுவலகம் அருகே மோட்டார்சைக்கிள் குண்டு வெடித்து 16 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
இவற்றை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த குண்டு வெடிப்பு அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குண்டு வெடிப்பில் போலீஸ் வாகனமும் எரிந்து 11 போலீசார் காயம் அடைந்தனர். எனவே போலீசுக்கு சவால் விடும் வகையில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
இதில் துப்பு துலக்க போலீசுக்கு கிடைத்த ஒரே துருப்பு சீட்டு மோட்டார் சைக்கிள்தான். குண்டு வெடிப்பில் மோட்டார்சைக்கிள் சிதைந்து போனாலும் அதன் பதிவு எண்ணும், என்ஜின் எண்களும் சேதம் அடையாமல் இருந்தது. இதன் மூலம் அது தமிழ் நாட்டு பதிவு எண் என்றும், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது அது போலி எண் என தெரிய வந்தது. அடுத்து என்ஜின் சேசிஸ் எண்ணை வைத்து விசாரித்தபோது அது ஓசூரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் தொழிற் சாலையில் தயாரிக்கப்பட்டதும் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு டீலர் வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
ஒருவர் மாற்றி ஒருவர் விற்று பல கை மாறியதும் கடைசியில் அது தீவிரவாதிகள் கையில் சிக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. சமீப காலமாக இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்த குண்டு வெடிப்பில் இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகள் கை வரிசை காட்டி வந்தனர். பெங்களூர் குண்டு வெடிப்பிலும் இந்த இயக்கத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
பெங்களூர் போலீசாரும், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் முதலில் இந்த கோணத்தில் தான் விசாரித்தனர். ஆனால் தமிழ் நாட்டு பதிவு எண் கொண்ட மோட்டார்சைக்கிள் சிக்கியதால் போலீஸ் கவனம் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பியது.
மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது பைப் வெடிகுண்டு ஆகும். இந்த வகை வெடிகுண்டுகளை அல் உம்மா இயக்க தீவிர வாதிகள்தான் கையாள்வார்கள். ஏற்கனவே அத்வானி வருகையின்போது மதுரை அருகே வைக்கப்பட்டிருந்தது இந்த வகை பைப் வெடிகுண்டு என்பதால் போலீசார் அல் உம்மா இயக்க தீவிரவாதிகள் பற்றி விசாரிக்க தொடங்கினர்.
இதற்காக பெங்களூரில் இருந்து 2 தனிப்படை தமிழகம் வந்தது. ஒரு தனிப்படை நெல்லையிலும் இன்னொரு தனிப்படை சென்னையிலும் முகாமிட்டு உள்ளூர் உளவு பிரிவு போலீசாருடன் இணைந்து ரகசிய விசாரணை நடத்தியது. அல்உம்மா இயக்க தீவிரவாதிகள் பட்டியலை தயாரித்து அவர்கள் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இதில் சந்தேகப்படும் வகையில் பலர் சிக்கினார்கள். அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு பெங்களூர், சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து போன் கால்கள் வந்திருப்பதும், குண்டு வெடித்த அன்றும் உரையாடல் நடந்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
செல்போன் நம்பர்கள் மூலம் அவர்களை போலீஸ் படை பின் தொடர்ந்தது. அப்போது சென்னை பூக்கடையில் பதுங்கி இருந்த 2 பேர் சிக்கினர். ஒருவன் பெயர் பீர்முகமது. மற்றொருவன் பசீர். இருவரும் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அல்உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்றும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடினார்கள்.
இதில் நேற்று இரவு சென்னையில் 2 பேரும், நெல்லையில் 2 பேரும் சிக்கினார்கள். சென்னையில் பிடிபட்ட மேலும் 2 பேர் பெயர் ரசூல் மைதீன், சலீம். இவர்களும் அல்உம்மா இயக்கத்தில் நேரடி தொடர்பில் உள்ளவர்கள். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அடுத்து நெல்லையில் 2 பேர் சிக்கினார்கள் அதில் ஒருவன் கிச்சான் புகாரி. மற்றொருவன் முக மதுசாலி. கிச்சான் புகாரி அல்-உம்மா இயக்க முன்னாள் தீவிரவாதி. கோவை குண்டு வெடிப்பு உள்பட 20-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவன். பலமுறை சிறை சென்றவன்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயிலில் இருந்து விடுதலையானான். சிறுபான் மையினர் உதவி அறக்கட்டளை தொடங்கி நன்கொடை திரட்டி குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்களின் குடும்பத்துக்கு உதவி வந்தான். இவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவன் என்று கூறப்படுகிறது.
கிச்சான் புகாரியும், முகமது சாலியும் நேற்று வெளியூரில் இருந்து நெல்லை வந்த போது போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரையும் போலீசார் பெங்களூர் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கும் மற்ற தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா? வெடி பொருள்கள் எப்படி சப்ளையாகிறது? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடக்கிறது.
மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
அப்பாவிகள் மீது குற்றம் சுமத்துவார்கள் பொறுத்திருந்து பாருங்கள் #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
வெடிகுண்டு தீவிரவாதம்னா முஸ்லிம் தானா #.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெங்களூர் குண்டு வெடிப்பு: சென்னை-நெல்லையில் 6 பேர் பிடிபட்டனர்
எனக்கும் புரியாத புதிரி அதுதான் அக்கா #.பானுகமால் wrote:வெடிகுண்டு தீவிரவாதம்னா முஸ்லிம் தானா #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum