Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
4 posters
Page 1 of 1
கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரவக்குறிச்சி, ஏப். 28-
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சூரிப்பாலி கிராமத்தில் சக்திவேல் என்பவரது விவசாய தோட்டத்தில் சில மாதங்களுக்கு முன் ஆழ் குழாய் கிணறு போடப்பட்டது. 700 அடி தோண்டியும் தண்ணீர் கிடைக்காததால் அது கைவிடப்பட்டது. அதன் மேல் இருந்த குழாய்களை உருவி எடுத்து விட்டு கோணிப்பையால் மூடி இருந்தனர்.
இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் குடும்பத்துடன் தங்கி விவசாய வேலைகள் செய்து வருகிறார். இன்று காலை 9 மணியளவில் பாண்டியனின் மகள் 7 வயது சிறுமி முத்துலட்சுமியும் 2 சிறுமிகளும் அங்கு விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சிறுமி முத்துலட்சுமி குழாய் கிணறை மூடி இருந்த கோணிப்பையில் கால் வைத்தார். இதில் கோணிப்பை கிழிந்து குழாய் கிணற்றுக்குள் சிறுமி விழுந்து விட்டாள். சிறுமி அலறியவாறு உள்ளே விழுந்தாள். சத்தம் கேட்டு தந்தை பாண்டியன் ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
3 பொக்லின் எந்திரங்கள் உதவியுடன் சிறுமி விழுந்த குழியைச் சுற்றிலும் பக்கவாட்டிலும் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அந்த இடம் பாறைகள் நிறைந்த பகுதி என்பதாலும், குழிக்குள் குழாய்கள் இல்லாததாலும் மண் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் மீட்பு பணி மெதுவாக நடந்தது. 108 ஆம்புலன்சும் மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
600 அடி ஆழ கிணற்றில் 12 அடி ஆழம் வரை 12 இன்ச் அகலத்திற்கும், அதற்கு கீழே 6 இன்ச் அளவில் குழி போடப்பட்டிருப்பதால் சிறுமி 12 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டாள். அதற்கு கீழே அகலம் குறைவாக இருப்பதால் சிறுமி அதற்கு கீழே போக முடியாமல் சிக்கியுள்ளாள். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதிலிருந்து நீண்ட குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் போர்வெல் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.
சுமார் 16 மணி நேரம் போராடிய மீட்புப் படையினர் இன்று இரவு 10.45 மணியளவில் முத்துலட்சுமியை உயிருடன் மீட்டனர். ஆழ்துளை குழாய்க்குள் இருந்து மீட்கப்பட்ட முத்துலட்சுமி, அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள்.
மயக்க நிலையிலிருந்த முத்து லட்சுமிக்கு செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி டாக்டர்கள் முதல் உதவி செய்தனர். இருப்பினும், சுமார் 1 மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.
மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சோகமான நிகழ்வு என்று தான் முடியுமோ இந்த கொடுமை
Re: கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இவ்வளவு கவனக் குறைவாகவா அந்தக் குழியை மூடி வைப்பார்கள்
ரொம்ப பரிதாபமாக உள்ளது
ரொம்ப பரிதாபமாக உள்ளது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கரூர்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
:!#: :!#:பானுகமால் wrote:இவ்வளவு கவனக் குறைவாகவா அந்தக் குழியை மூடி வைப்பார்கள்
ரொம்ப பரிதாபமாக உள்ளது
இதற்க்கு உடனுக்குடன் சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum