சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

*** உயிர் வலி *** Khan11

*** உயிர் வலி ***

3 posters

Go down

*** உயிர் வலி *** Empty *** உயிர் வலி ***

Post by Muthumohamed Sun 28 Apr 2013 - 9:24

பொழுதுபுலர்ந்தது... பூக்கள்மலர்ந்தன!

காலைவேளை,

பலருக்கும் இன்பம் ததும்பி இருக்க " குரு" மட்டும் மனம் வெதும்பி துவண்டான் !

கண்கள்இருண்டனகாட்சிகள்சுருங்கின...

வெளிச்சம் விரிந்தும் ஒளிமட்டும்தெரியவில்லைஅவனுக்கு!

எல்லாம்இருந்தும்ஏதும்இல்லாதவண்ணம்இருந்தான்!

பெற்றோரும்தங்கையும்முன்வாழ்த்துக்கூறிதத்தம்வேலைகளுக்குசென்றிருந்தனர்!

வீடேமயானம்போல்தோன்றியதுஅவனுக்கு!

நிஜமாய்மயானபூமியாய்மாற்றிடஎண்ணினான்!

எவ்வாறு... ?

எதிலும் வலி இருக்கும் அதில்லாமல் வீழ்ந்திட நினைத்தான் ...

பலவாறு யோசித்து முடிவுடன் பால் குடித்து மீண்டும் படுக்கையில் படுத்தான் !


மாலைவேளை ,

பெற்றோர் மற்றும் தங்கை அவனுக்கு ஆச்சரியப் பரிசு ஒன்று வாங்கி வந்திருந்தனர் ...

அதனை அவனாக எழுந்து அதைப் பார்த்து மகிழ்ச்சிக் கொள்ளட்டும் என அவன் முன்னே வைத்து

அவன் படுக்கையறையில் இருந்து வெளி வந்தனர் .

பெற்றோருக்கு தங்கள் மகனை நினைத்துப் பெருமிதம் ... தங்கைக்கு பெருமை !

மூவரும் மிகுந்த மகிழ்வோடு குருவின் முழிப்பிற்காகக் காத்திருந்தனர்.

மாலைவேளை கடந்து இரவைத் தொட்டது ... இதற்கு மேலும் பொறுமை கொள்ள முடியாமல்

அண்ணனை எழுப்ப அவன் படுக்கையறைக்கு சென்றாள் ...

அண்ணா ... அண்ணா ... (சத்தமில்லை)

அண்ணா ... எழுந்திரு அண்ணா ! (அசைவில்லை)

அம்மா அண்ணா எழுந்திருக்க மாட்டேங்கிறான் ...

அம்மா உள்ளே வந்தாள் !

டேய் குரு, எழுந்திரிடா ... என்ன இவ்ளோ நேரம் தூங்கற ... ?

அவன் கைகளைத் தொட்டு எழுப்ப முயற்சித்தாள் ... அவனது கைகள் ஜில்லிட்டிருந்தன ...

பதில், உடல் அசைவு, எதுவும் இல்லை ... மூச்சும் வெளிப்படவில்லை !


பதறினாள் ... என்னங்க இங்க வந்து பாருங்க எனக் கதறினாள் ...

அம்மாவின் கதறல் தன்னையும் தாக்க தானும் சேர்ந்து அழுதாள் குருவின் தங்கையவள் ...

கணவன் அலறி அடித்து வந்து குருவை எழுப்ப முயல

எவ்வித உணர்ச்சியும் இல்லாத அவன் உடலைக் கண்டு ஆடிப்போனான் ...

குருவின் உடலைத் தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று

சோதித்துப் பார்க்கையில் தான் தெரிந்தது

குரு சில மணி நேரங்களுக்கு முன்பே இறந்து விட்டான் என்பது !!!

இறப்பு என்னவோ அவனுடையது தான்

ஆனால் ,

அந்த மரண வலி அவன் குடும்பத்தைத் தாக்கியது ... உருக்குலைந்துப் போயினர் !

மேலும் அதிர்ச்சித் தரும் விதமாக அந்தத் தகவலை மருத்துவர் சொன்னார் ...

உங்கள் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் !

அந்தத் தகவலால் மேலும் குடும்பத்தினருக்குத் தாங்க முடியாத வேதனை !

மனதில் குழப்பம் !

எதனால் குரு தற்கொலை செய்து கொண்டான் ... என்னக் காரணம் ... ?

ஒன்றுமே புலப்படவில்லை அவர்களுக்கு !

குருவின் இறுதிச்சடங்கு முடித்து வீட்டிற்கு வந்தனர் அவனது குடும்பத்தினர்.

வீட்டில் மயான அமைதி !

எல்லாம் முடிந்தாகி விட்டது இனி எதற்காக இந்த வாழ்க்கை எனப் பெற்றோர்கள்

வருந்திக் கொண்டிருந்தாலும் தங்கள் மகளுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று

மனதைத் தேற்றிக் கொண்டிருந்தனர் !

வீட்டின் இருக்கையில் அமர்ந்து வெறிச்சோடிக் கிடந்த அவனது படுக்கையைக் கண்ட

அப்பாவிற்கு அது புலப்பட்டது !

எடுத்துப் பார்த்தார் பிரித்துப் படித்தார் ...

காரணம் புரிந்தது ! கண்ணீர் மிகுந்தது ! அதனினும் மீறி ஆத்திரம் பீறிட்டது !

உடனே கிளம்பினார் செய்தித்தாள் அலுவலகத்திற்கு ...

அங்கு மேலாளரைக் கண்டு கொதித்து ஆத்திரத்தில்

அவர் முன் இருந்த நாற்காலியின் மீது வீசினார் இரண்டு

நாட்களுக்கு முன்பு வெளிவந்த அந்த செய்தித்தாளை !!!

மேலாளர் அதனைக் கண்டு ஒன்றும் நடவாதது போல்

எழுத்துப்பிழை இயந்திரக்கோளாறு மன்னித்துக் கொள்ளுங்கள் என்று எளிதாகக் கூறினார் !

அவரது பதிலைக் கேட்டும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற குருவின் தந்தை

எவ்வளவு எளிதாக சொல்லறீங்க ... உங்களின் பிழையை இயந்திரப்பிழை என்று !

உங்களது கவனக்குறைவால் இன்று என் மகன் எங்களுடன் இல்லை

தற்கொலை செய்து கொண்டான் ... வாழ்க்கையில் உயரப் போக இருந்த அவனைக் கொன்ற

பாவிகள் நீங்கள் ... உங்களை விட மாட்டேன் ... சட்டம் உங்களை தண்டிக்கும் என்று சூளுரைத்து

நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார் !

(வழக்கின் சுருக்கம் :
அன்று வந்த செய்தித்தாளில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டிருந்தது ... அதில் குருவின் பரீட்சை எண் விடுபட்டிருந்தது ...
தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை என்று மனமுடைந்து தர்களை செய்து கொண்டான்
அந்த மாணவன் ! ஆனால்,
அன்று மாலையும் மறுநாளும் வந்த செய்தித்தாள்களில் விடுபட்ட எண்கள் என்று வெளியிடப்பட்டதில் அவனது எண்ணும் இடம் பெற்றிருந்தது !
அதனை காணும் முன்னரே அவசரமாய் தன் உயிரை மாய்த்துக் கொண்டான் மாணவன் !)


நீதிமன்றத்தில் தீர்ப்பு : இயந்திரக்கோளாறை மனிதனின் பிழை என்று சொல்ல முடியாது ...

எனவே இது ஒரு விபத்து எனக் கூறி வழக்கை முடித்தனர் !

தன் மகனை இழந்த அந்த தந்தை மனமுடைந்து நடைபிணமாய் எழுந்து நடந்தார் !

நீதி, நியாயம், தர்மம் ... நீதி தேவதை தராசில் தூக்கில் தொங்கியது !



வேண்டுகோள் :

பத்திரிக்கை நண்பர்களே !
இது போன்று தேர்வு முடிவுகளை வெளியிடும்பொழுது தயவுசெய்து பிழை இல்லாமல் வெளியிடவும் ... இல்லையெனில் பற்பல உயிரிழப்பு ஏற்படும் ...
மேலும் அம்மாணவரின் கனவு அவர்களது பெற்றோர்களின் கனவும் சிதைக்கப்படும் ...
அவற்றை எதைக் கொண்டும் ஈடுகட்ட இயலாது !

மாணவர்களே !
தேர்வு முடிவுகளில் உங்கள் பரீட்சை எண் விடுபட்டிருந்தால் பள்ளிக்குச் சென்று அது மெய்யா பொய்யா என முதலில் தெரிந்து கொள்ளுங்கள் !
அப்படியே தேர்ச்சிப் பெறவில்லை என்றாலும் மனமுடைந்து போகாதீர்கள் ... அதேத் தேர்வை மீண்டும் எழுதி தேர்ச்சிப் பெறுங்கள் ! அதைத் தவிர்த்து அவசரத்தில் தவறான முடிவு எதையும் எடுத்து விடாதீர்கள் ... உங்களது உயிர் உங்களைக் காட்டிலும் உங்கள் பெற்றோருக்கு விலைமதிப்பில்லாதது என்பதனை மனதில் நிறுத்துங்கள் !

பெற்றோர்களே !
தேர்வு முடிவுகள் வெளிவருகையில் உங்கள் பிள்ளைகளுடனே இருங்கள் அவர்கள் அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெறாவிடில் அவர்களை வசை பாடாதீர்கள் ... மாறாக இந்த முறை இலையெனில் அடுத்த முறை நீ நிச்சயம் தேர்ச்சி பெறுவாய் என நம்பிக்கை ஊட்டுங்கள் !
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

*** உயிர் வலி *** Empty Re: *** உயிர் வலி ***

Post by rammalar Sun 28 Apr 2013 - 9:31

விழிப்புணர்வு கதை நல்லாயிருக்கு *** உயிர் வலி *** 800522
-

மதிப்பெண் குறைவால் தந்தை கண்டித்தார் பிளஸ்-1 மாணவி தீக்குளித்து சாவு
-
http://www.maalaimalar.com/2013/04/19163810/mark-decrease-father-condemn-p.html
*** உயிர் வலி *** C037d65b-203b-4738-a7e7-dba2718861a9_S_secvpf
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

*** உயிர் வலி *** Empty Re: *** உயிர் வலி ***

Post by veel Sun 28 Apr 2013 - 13:27

மாணவர்கள் உண்மையில் தங்கள் பருட்ச்சை முடிவுகளை ஆராய்ந்து தெரிந்து கொள்ளல் வேண்டும்

எதற்க்கெடுத்தாலும் தற்கொலை முடிவாகாது

இது மற்றைய மாணவர்களுக்கும் ஒரு படிப்பினையை கொடுக்கும்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

*** உயிர் வலி *** Empty Re: *** உயிர் வலி ***

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum