சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Khan11

கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

4 posters

Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by veel Tue 30 Apr 2013 - 23:16

கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்


தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின் சீக்ரெட் சாக்லேட்ஸ்.....

திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.

வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை, சில்க்காக இருந்தால் சந்தன நிறம், இவை தவிர வேறு விருப்பம் இல்லை!

`பொய்க்கால் குதிரை, `சத்யா’, `பாத்தாலே பரசவம்’, `ஹே ராம்’, என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!.

`எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’ –கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!

அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார். சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!

எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கு சென்றதில்லை கவிஞர் வாலி, பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!

வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தத் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும் ரமணத்திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப்பிள்ளையின் மாணவிகள். சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!

வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்பொடி ரொம்ப்ப் பிரபலம். `இன்று தோசை, மிளகாய்ப் பொடிக்கு வழியிருக்கா’ என்று அடிக்கடி எம்.ஜி.ஆர்.வந்துவிடுவாராம்!

வாலி இது வரை திரையிசைப் பாடல்களாக 15, 000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப்பாடல்கள் கணக்கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால், கணக்கு இன்னும் மேலே போதும்!

1966 –ல் வாங்கிய எம்.எஸ்.கியூ 1248 பியட் இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக் கொள்ளத் துணியாமல் வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார் வாலி!

சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.செளந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்ஸீக்கு எழுதி அனுப்பியது தான் மிகவும் வெற்றி பெற்ற `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ பாடல் இதை அனுபவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!

ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை அணிந்திருக்கிறார்!

17 திரைப்படஙகளுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலி, அவற்றில் கலியுகக் கண்ணன். காரோட்டிக் கண்ணன், ஒரு செடியின் இரு மலர்கள். சிட்டுக் குருவி ஒரே ஒரு கிராமத்தில் இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!

1966 –ல் `மணிமகுடம்’ படப்பிடிப்பின் போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. `அவதார புருஷ்ன்’ விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!


எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர்.எப்பவும் `என்ன ஆண்டவனே’ என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி `என்ன வாத்தியாரே’!
பத்மஸ்ரீ, பாரதி விருது முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத்தமிழ் மாநாடு போன்றவற்றின் இவரது பங்கும் உண்டு!

ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம்,ஏ.எல்.ராகவன்,ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன்ம் பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!

வாலி தனிமை விரும்பி அல்ல, எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக் கொடுத்தால் கவிதை வந்து விடும்!

வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தை விட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!

வாலியின் இஷ்ட தெய்வம் முருகன், எப்பவும் அவரின் உதடுகள் `முருகா’ என்று தான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!

வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு , அவர்களின் திறன்,ஸ்டைல் எல்லாவற்றைப் பற்றியும் விலாவாரியாகப் பேசுவார், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!

எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான், இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!

2005 –ல் ராஹ் டி.வி.வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக `என்றென்றும் வாலி’ என விழா எடுத்து 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள், வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணி விடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!

வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!

ஸ்ரீரங்கத்தில் `பேராசை பிடித்த பெரியார் என்னும் சமூக நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by நண்பன் Wed 1 May 2013 - 9:52

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 200px-11_kavinjar_vali
டி. எஸ். ரங்கராஜன் என்ற இயற்பெயருடைய கவிவேந்தர் வாலி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
எழுதிய காலம் 1958 களிலிருந்து – இன்றுவரை


வாலி பற்றிய அரிய தகவலுக்கு மிக்க நன்றி வேல் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by நண்பன் Wed 1 May 2013 - 10:01

வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by Muthumohamed Wed 1 May 2013 - 10:08

வாலி பற்றிய தகவல்கள் :/ :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by kalainilaa Wed 1 May 2013 - 10:12

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by veel Wed 1 May 2013 - 15:14

நண்பன் wrote:கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 200px-11_kavinjar_vali
டி. எஸ். ரங்கராஜன் என்ற இயற்பெயருடைய கவிவேந்தர் வாலி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
எழுதிய காலம் 1958 களிலிருந்து – இன்றுவரை


வாலி பற்றிய அரிய தகவலுக்கு மிக்க நன்றி வேல் கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 517195

நன்றி,,நண்பா..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by veel Wed 1 May 2013 - 15:16

Muthumohamed wrote:வாலி பற்றிய தகவல்கள் கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 800522 கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 517195

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 930799
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by veel Wed 1 May 2013 - 15:16

kalainilaa wrote: கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 517195

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 930799 கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் 331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர்  வாலி பற்றி  குறிப்புகள் Empty Re: கவிஞர் வாலி பற்றி குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum