சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Khan11

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

4 posters

Go down

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Empty கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Post by நண்பன் Tue 7 May 2013 - 10:11

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின் கழகம் ஆகியவை இணை ந்து இயக்குகின்றன.

இந்த அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே 'இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்' என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

உச்ச நீதிமன்றில் அணு மின் திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமுல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் முதல் முறையாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம் 'சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பாதுகாப்புதான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்' என கோர்ட் கூறியது.

தொடர்ந்து இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின் போது கூடங்குளம் அணு மின் நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது. தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகின்ற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது :

பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன.

இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Post by Muthumohamed Tue 7 May 2013 - 10:35

நல்ல முடிவு

விரைவில் இயங்கினால் நல்லது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Post by நண்பன் Tue 7 May 2013 - 10:38

Muthumohamed wrote:நல்ல முடிவு

விரைவில் இயங்கினால் நல்லது தான்
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Post by பானுஷபானா Tue 7 May 2013 - 14:03

:”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Post by ஜனநாயகன் Tue 7 May 2013 - 14:03

#.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Empty Re: கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum