Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓசூர் நகருக்குள் புகுந்த யானை கூட்டம் விவசாயியை மிதித்து கொன்றது
3 posters
Page 1 of 1
ஓசூர் நகருக்குள் புகுந்த யானை கூட்டம் விவசாயியை மிதித்து கொன்றது
ஓசூர், மே. 12-
ஓசூர் நகருக்குள் புகுந்த யானை கூட்டம் இன்று அதிகாலை விவசாயி ஒருவரை மிதித்து கொன்றது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
கர்நாடக- ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம். 3 மாநில வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் யானை கூட்டம் அடிக்கடி விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்று விடுகிறது. இது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் 100-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் அணி திரண்டு விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து வாழை, கரும்பு, சோளப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
பின்னர் வனத்துறையினர் போராடி அந்த யானை கூட்டத்தை விரட்டியடித்தனர். தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவிவருவதாலும் அங்கு தேவையான உணவு கிடைக்க வில்லை என்பதாலும் யானைகள் வழி தெரியாமல் அங்கும், இங்குமாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் 4 யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறியது.
பின்னர் அந்த யானை கூட்டம் சூளகிரி அடுத்த ஏ.செட்டிப்பள்ளி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தது. பின்னர் திடீரென அந்த யானை கூட்டம் நேற்று அதிகாலை அங்கிருந்து வெளியேறி கர்நாடக மாநிலம் மாலூர், சிக்க திருப்பதி வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாகூர், வழியாக ஓசூர் நகருக்குள் நுழைந்தது. சர்வசாதாரணமாக திடீரென யானை கூட்டம் பஸ் நிலையத்திற்குள்ளும் சென்றது. அங்கு இருந்த பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்தது. அங்கிருந்து வெளியேறிய யானைகள் தொடர்ந்து பஸ்நிலையம், ராம்நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளில் ஜாலியாக நடந்து சென்றது.
திடீரென ஊருக்குள் யானைகள் வந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றனர். அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். சில இளைஞர்கள் யானை கூட்டத்திற்கு பின்னாலேயே செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டு சென்றனர். இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் யானை அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டனர்.
இதையடுத்து நீண்ட போராட்டத்துக்கு பின்னர் ஓசூர்- தளி ரோட்டில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று யானைகள் பதுங்கியது. காலை 10 மணிக்கு மேல் கடுமையான வெளியில் நிலவியதால் யானை விரட்டும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் மாலை முதல் யானை விரட்டும் பணி தொடங்கியது. பட்டாசு வெடித்து விரட்டப்பட்டது. அப்போது மிரண்டு ஓடிய யானைகள் இரவு ஓசூர்- தளி சாலையில் சென்றது.
அப்போது திடீரென கனமழை பெய்ததால் யானை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மழை நின்றதும் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து யானைகள் பூனாப்பள்ளி, மதகண்ட பள்ளி ஆகிய இடங்களில் பதுங்கியத. தொடர்ந்து விடியவிடிய விரட்டும் பணி நடந்தது. யானை கூட்டத்தை தளி காட்டுப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை யானைகள் தளி அருகே வந்தபோது சாத்தனூரை சேர்ந்த விவசாயி அப்பண்ணா (42) என்பவர் விவசாயி தோட்டத்திற்கு சென்றார். யானைகள் வருவதை அவர் கவனிக்கவில்லை. அப்போது யானைகள் அவரை தூக்கிப்போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தொடரும் யானைகள் அட்டகாசத்தால் உயிரிழப்புகள் அதிகரித்ததால் அந்த பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இன்று இரவுக்குள் நிச்சயமாக இந்த யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என்று வனத்துறையினரும் கூறிவருகிறார்கள். பலியான அப்பண்ணாவின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஓசூர் நகருக்குள் புகுந்த யானை கூட்டம் விவசாயியை மிதித்து கொன்றது
சோகமான நிகழ்வு ஆனால் நாம் அவைகளின் நிலங்களை ஆக்கிரமித்ததால் வந்த வினை இது
Re: ஓசூர் நகருக்குள் புகுந்த யானை கூட்டம் விவசாயியை மிதித்து கொன்றது
@.Muthumohamed wrote:சோகமான நிகழ்வு ஆனால் நாம் அவைகளின் நிலங்களை ஆக்கிரமித்ததால் வந்த வினை இது
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum